எனக்கு மட்டும் இப்படி தோன்றுகிறதா, இல்லை உண்மையில் இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. எங்கெங்கு காணினும் "ஷீரடி சாய்பாபா ஆலயங்கள்". இந்தியாவில் எல்லா ஊர்களிலும் சாய்பாபா ஆலயங்கள் காண முடிகிறது. வெளி நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் நீக்கமற சாய்பாபா நிறைந்து இருக்கிறார். எல்லா கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மதுரையில் புதிதாக ஆண்டாள்புரத்தில் சாய்பாபா கோயில் வந்திருக்கிறது. போகலாம் என்று அம்மா அழைத்த சென்றிருந்தார்கள். அப்பப்பா என்னவொரு கூட்டம். நீண்ட க்யூ வரிசை வேறு. பக்தி கானங்களும் , பிரார்த்தனைகளும் ஒரே பக்திமயம். இதே போன்ற நிறைய புதிய சாய்பாபா ஆலயங்கள் சென்னையிலும் காண நேர்ந்தது. நிறைய பேர் தற்போது " ஷீரடி" கோவிலுக்கு செல்வதை ஒரு பிரார்த்தனையாக செய்கிறார்கள். என்னிடம் கூட நிறைய பேர், " ஷீரடி
" போனோம், நீங்க போனீங்களா என்று கேட்டனர். 90 களின் இறுதியில் ஒரு சிலர் மட்டுமே சென்ற ஷீரடி தற்பொழுது , அடுத்த " திருப்பதி" போல அனைவரும் செல்லும் ஒரு இடமாகிவிட்டது.
நாங்கள் சென்று வந்தோம் என்று மக்கள் பெருமையாக சொல்லியும் கொள்ளுகிறார்கள்.
ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு சாமி கோயில் பிரபலமாகும், தற்போது "ஷீரடி" சீசன் போல என்று நினைத்து கொண்டேன்.
இந்திய பயணத்தில் என்னுடன் இளநிலை படித்த நெருங்கிய தோழிகளுடன் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பொதுவாக ஆண்கள் அவர்களுடைய நண்பர்களுடன் கெட் டுகெதர் வைத்தால் அது ஈசியாக முடியும் ஒன்று. பெண்கள்,திருமணமாகி குடும்ப பொறுப்பை ஏற்றவுடன் இது போன்ற தோழிகள் கெட் டுகெதர் என்றால் அது சுலபமாக நடப்பது யில்லை. அதுவும் நிறைய பெர்மிஸ்ஸன் வாங்க வேண்டும். குடும்பத்தார், கணவர் குழந்தைகள் என்று அனைவரும் ஒத்துழைத்த பின்னர் மட்டுமே இது சாத்தியமாகலாம். இப்படி பிரம்ம பிரயத்தன சாதனையை ஒரு வழியாக செயல் படுத்த முடிந்தது. 2 மாத திட்டமிடலும் பின்னர், ஒரு தோழியின் வீட்டில் முழு நாளும் தங்கி எங்கள் இளமை கால நினைவுகளை அசை போட முடிந்தது. இந்தியாவில் இருந்த அனைவரும் ஒரு வழியாக மதுரை யில் சந்திக்க வெளிநாட்டில் இருந்த ஒரு சிலர் ஸ்கைப்பில் வர என்று ஒரே கொண்டாட்டம்.
கிட்டத்தட்ட எல்லாரும் சந்திக்க முடிந்த இந்த நேரத்தில் ஒருவர் மட்டும் நேரிலோ அல்லது ஸ்கைப்பிலோ கூட வர முடியாத படி குடும்ப பொறுப்பு.
எல்லாரையும் திரும்ப சந்திப்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் எனக்கென்னவோ ஒரு வித அலைவரிசை வித்தியாசம் இருப்பதை போல உணர வைத்தது. அனைவரும் லோக்கல் பாலிடிக்ஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ், விகடன், நியூஸ், சீரியல் என்று பேசி கொண்டிருக்க அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க நேர்ந்தது. என் ரசனை மாறிவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் காண நேர்ந்தது, இளநிலை படிக்கும் போது ஏதாவது சாதிக்க வேண்டும் என்று வெறியுடன் இருந்த பலரும், குடும்பம், டிவி,பாலிடிக்ஸ் அல்லது சீரியல் என்று ஒரு கட்டத்துக்குள் தன்னை சுருக்கி கொண்டு விட்டனர் என்பது மட்டும் திண்ணம்.
நான் கவனித்த இன்னொரு விஷயம் இப்படி இளம் குழந்தைகள் சினிமா நடிகர்கள் பைத்தியமாக
இருப்பதை கவனிக்க முடிந்தது. அதுவும் அவர்களின் பிடித்த நடிகர்கள் பற்றி என்ன சொன்னாலும் சரி கேட்டாலும் சரி உடனே சண்டைக்கு வருகிறார்கள். அவர்களின் பாட்டை போட்டு பைத்தியம் போல நடந்தது பார்க்க நேர்ந்தது.
என்னவோ..மாறி வரும் ரசனைகளுக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் போல இருக்கிறது.
நன்றி.
டிஸ்கி
இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் எல்லாம் என்னுடைய அனுபவம் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

3 comments:
//என்னவோ..மாறி வரும் ரசனைகளுக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் போல இருக்கிறது.// தப்பு மாறவேண்டியது நாமல்ல, அவர்கள்!
ஷீரடி சாய்பாபா கோவில் கட்டுவது இப்போது ஒரு தொழில் ஆகிவிட்டது. நல்ல முறையில் பராமரித்தால் உங்களுடைய அடுத்த இரண்டு மூன்று தலைமுறைகள் நல்ல வசதியுடன் வாழ ஏற்பாடு செய்மு கொள்ளலாம்.
இந்தியாவில் இப்போது மூன்று தொழில்கள்தான் மிகவும் பிரபலமானவை.
1. அரசியல்
2 கல்வி நிறுவனங்கள்
3. கோவில்கள்
//சூப்பர் சிங்கர், டான்ஸ், விகடன் நியூஸ், சீரியல் என்று பேசி கொண்டிருக்க அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல்...//
அனுபவ அடிப்படையில் முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது.
Post a Comment