எனக்கு எப்போதும் அரசியல் புரிவதில்லை. எந்த நாட்டு அரசியல் என்றாலும் கூட. எனக்கு communisa திற்கும் capitalisa திற்கும் வித்தியாசம் தெரியாது. ஒரு நாள் என்னுடைய அலுவலக நண்பர் எனக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்தார். அது "Animal Farm" By George Orwell.
அது ஒரு விலங்குகளை அடைத்து வைத்திருக்கும் பட்டி. அதில் ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. பன்றிகள் தலைமை ஏற்று அந்த கூட்டத்தை நடத்துகின்றன. ஒரு கிழ பன்றி "Old Major" உரை நிகழ்த்த ஆரம்பிகிறது. அந்த உரையில் மனிதர்களை ஒட்டுண்ணிகள் என விவரிகின்றது. "மனிதர்கள் நம்மிடம் இருந்து பால், முட்டை, கம்பளி மற்றும் உழைப்பு அனைத்தையும் எடுத்து கொண்டு நமக்கு வெறும் புல் மற்றும் தீவனங்களை தருகிறார்கள். நம்மை கறிக்காக விற்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்" என்று
உரை நிகழ்த்துகிறது.
கூட்டம் நிகழ்ந்த சில நாட்களில் கிழ பன்றி இறந்து விட இரண்டு இளைய பன்றிகள் "Snowball & Napoleon" பொறுப்பை ஏற்று "Old Major" கனவை நனவாக்க முயல்கின்றன. அதன் முதற்கட்டமாக புரட்சி செய்து பட்டியை அதன் முதலாளியிடம் இருந்து தங்கள் வசப்படுத்தி அதற்கு "விலங்குகள் பண்ணை (Animal Farm)" என பெயரிடுகின்றன. விலங்குகள்துவம் உருவாக்க படுகிறது. அதன் 7 கட்டளைகள் பண்ணை சுவற்றில் பொறிக்க படுகின்றன. அவை
1. இரண்டு காலில் நடப்பவை எல்லாம் எதிரிகள்.
2. நான்கு காலில் நடப்பவை அல்லது இறக்கை உள்ளவை எல்லாம் நண்பர்கள்.
3. எந்த விலங்கும் ஆடை உடுத்த கூடாது
4. எந்த விலங்கும் படுக்கையில் படுக்க கூடாது
5. எந்த விலங்கும் மது அருந்த கூடாது
6. எந்த விலங்கும் பிற விலங்குகளை கொல்ல கூடாது
7. எல்லா விலங்குகளும் சமம்.
விலங்குகள்துவம் ஆரம்பித்த சிறிது நாட்களில் Snowball & Napoleon இடையே சண்டை மூளுகிறது. இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பண்ணையின் தலைவராக "Napoleon" செயல்படுகிறார். அவருக்கு என்று ஒரு ரகசிய நாய் படை நியமிக்க படுகிறது. அவர் செய்வது எல்லாம் சரி என்று சொல்ல "Squealer" என்ற பன்றி நியமிக்க படுகிறது. Squealer இன் பணி, பண்ணை மிகவும் சுபிட்சமாக இருப்பதாக பறை சாற்றுவது. மற்ற விலங்குகளும் அதை நம்பி பண்ணை சுபிட்சமாக இருப்பதாக நம்புகின்றன. நாட்கள் செல்ல செல்ல பன்றிகள் பண்ணையின் "முதலாளிகள்" ஆகின்றன. சில நாட்களில் பன்றிகள் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பிக்கின்றன.
கட்டளைகள் சிறிது சிறிதாக மாற்றி அமைக்க படுகின்றன.
" நான்கு காலில் நடப்பவை நன்று, இரண்டு காலில் நடப்பவை மிகவும் நன்று "
"எந்த விலங்கும் கூடுதலாக மது அருந்த கூடாது"
"எந்த விலங்கும் போர்வை போர்த்தி படுக்கையில் படுக்க கூடாது"
"எல்லா விலங்குகளும் சமம், ஆனால் சில விலங்குகள் மற்றவற்றை விட அதிக சமம்"
Animal Farm புத்தகம் "Russian civil war" ம் அதை தொடர்ந்து நிகழ்ந்த வரலாற்றையும் விலங்குகளை கொண்டு Orwell சித்தரித்து இருக்கிறார். அதில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இன்றைய இந்திய அரசியல் சூழலுக்கு பொருத்தமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.
4 comments:
படிப்பதற்கு உண்மையிலேயே சுவையான ஒரு படைப்பு. எழுத்திலே வடிக்கப்பட்ட கார்ட்டூன் என்றுகூட சொல்லலாம்.
இந்த நூலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைப்பாட நூலாக அறிமுகப்படுத்தியபோது இடதுசாரி மாணவர் இயக்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து, பின்னர் அது நீக்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்த நூலை தேடிப்பிடித்து படித்தேன்.
ஏற்கனவே கம்யூனிச ஆர்வலனாக இருந்த என்னை இந்தப் புத்தகம் சிறிதளவும் மாற்றவில்லை. ஆனால் கம்யூனிசத்தில் என்ன பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று எச்சரிக்கும் நூலாக தோன்றியது. அந்த எச்சரிக்கைகள் உண்மையாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. எனினும் இதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் முதலாளித்துவம் முழுமையாதோ, இறுதியானதோ அல்ல என்பதை காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
//படிப்பதற்கு உண்மையிலேயே சுவையான ஒரு படைப்பு. எழுத்திலே வடிக்கப்பட்ட கார்ட்டூன் என்றுகூட சொல்லலாம். //
உண்மை.
//இதற்கு மாற்றாக முன்வைக்கப்படும் முதலாளித்துவம் முழுமையாதோ, இறுதியானதோ அல்ல என்பதை காலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது //
இது யோசிக்கபட வேண்டியது. முழுமையான கம்யுனிசம் சாத்தியமில்லை என்பது George orwell போல என் கருத்தும். Totalitarian நிர்வாகத்தால் என்னவெல்லாம் ஆகலாம் என்பதை தன் அடுத்த நாவலான 1984 ல் அவர் குறிப்பிட்டு இருப்பார்.
ஜார்ஜ் ஓவெல் எழுதிய 1984 என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா? இது 1949இல் எழுதப்பட்டது, ஆனால் 1984இல் எவ்வாறு இருக்கும் என்பதை நாவலாக எழுதுகிறார்.
இதை பின்வரும் தளத்தில் வாசித்தேன்.
http://www.wsws.org/tamil/articles/2010/aug/100818_acomment.shtml
http://www.youtube.com/watch?v=hATC_2I1wZE
1984'
Post a Comment