Tuesday, February 8, 2011

Researcher என்றொரு ஜந்து-2



ஏற்கனவே என்னுடைய முந்தய சில இடுகைகளில் ஆராய்ச்சி பட்டம் பெற முயற்சி செய்யும் பலர் படும் அவஸ்தைகளை பற்றி எழுதி இருந்தேன் பகுதி 1 , பகுதி 2, அந்த அவஸ்தைகளின் தொடர்ச்சியே இந்த இடுகையும்.

நேற்று நெடுநாளைக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. என்னுடைய ஜூனியர் அவர். இந்தியாவில் இருந்து இங்கு மேல்படிப்புக்காக வந்தவர். கிட்டதட்ட ஐந்து வருட இடைவெளியில் சந்தித்தால் எனக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்ததாக தோன்றியது. பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு பேசிகொண்டிருந்த போது "எப்போ கிராஜூவேட் ஆன? " என்று நான் கேட்டது தான் தாமதம் அவர் முகம் சுருங்கி எதோ போல ஆகி விட்டது. பின்னர் ஒருவாறு பேச்சை மாற்றி வேறு பேச்சு பேச ஆரம்பித்து விட்டோம்.

பின்னர் வேறு ஒரு நண்பர் மூலமாக நான் அறிந்தது இது தான். என்னுடைய நண்பர் படிப்பை தொடர்ந்த போது, அவருடைய பாஸ் அவருக்கு ஒரு புது உயிரினத்தை அதாவது அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஒரு உயிரினத்தை அவரின் ஆராய்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார். இது போன்று யாரும் ஆராய்ச்சி
செய்யாத உயிரினத்தை கொடுத்து ஆராய்ச்சி செய்ய சொல்லுவது ஒரு சூதாட்டம் மாதிரி. நல்ல ரிசல்ட் வந்தால் நல்ல மதிப்பு மற்றும் நல்ல ஜேர்னலில் ஆராய்ச்சி கட்டுரை என்று எல்லாம் நல்ல படியாக நடக்கும். மாறாக ஒன்றும் வரவில்லை என்றால் எல்லாமே ஆப்பு ஆகிவிடும்.

புது உயிரினம் அதனால் நல்ல எதிர்காலம் உனக்கு இருக்கிறதுஎன்று அவருடைய பாஸ் பிரைன் வாஷ் செய்து இருக்கிறார். இவரும் நம்பி இறங்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட உயிரினம் செயற்கையான லேப் சூழ்நிலையில் வளர மறுக்க.அவருக்குஅதனை எப்படி லேபில் வளர வைக்க என்று ஆராயவே அவருக்கு சில வருடங்கள் பிடித்திருக்கிறது. பின்னர் புது உயிரினத்தில் நடத்தப்படும் அடிப்படை சில டெஸ்டுகள் நடத்தி முடிக்க அவருடைய ஆராய்ச்சி காலமும் முடிந்திருக்கிறது, பின்னர் ஒரு வருடம் எக்ஸ்டென்ஷன் வாங்கி அவர் தொடர்ந்திருக்கிறார், சில பல புதிய ஆராய்ச்சிகள் செய்து முடிக்கும் தருவாயில் அவர் செய்தது போன்ற அதே ஆராய்ச்சிகள் வேறொறுவர் செய்து ஜர்னலில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனை காரணமாக காட்டி அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எங்கும் வெளியிட படவில்லை.

ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்படாததால் அவருக்கு முனைவர் பட்டமும் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து ஸ்டூடண்ட் விசாவில் வந்ததால் அதுவும் முடிந்து விட்டு இருக்கிறது, இப்பொதைக்கு அவர் 5 வருடங்களுக்கு முன் எந்த நிலையில் இந்தியாவில் இருந்து வந்தாரோ அதெ போல வெறுங்கையுடன் இந்தியா திரும்ப வேண்டிய நிலை. இடையில் திருமணம் வேறு.

ஒரு ஆராய்ச்சி மாணவன் நல்ல படியாக தீசிஸ் எழுதி பட்டம் பெறுவது என்பது முழுக்க முழுக்க அவனது ப்ரோபாசர் கையில் இருக்கிறது. அவர் நல்லவராக அமைந்து விட்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும், இல்லாவிட்டாலோ, எல்லாம் சர்வநாசம் ஆகிவிடும்.

10 comments:

Thekkikattan|தெகா said...

ம்ம்ம்... அன்பருக்கு எனது ஊக்கங்கள் உரித்தாகட்டும். முனைவர் பட்டம் பெருவது என்பது கத்திமேல் நடப்பதனைப் போன்றது, ஒருங்கே பெருமையும், ஒன்றுமற்ற வெறுமையும் ஈட்டித் தர தக்கது.

இந்த சீரிஸ் தொடர்ந்து பதிந்து வாருங்கள். நிறைய பேருக்கு பிரயோஜனமாக இருக்கலாம்.

shanmugavel said...

உலகம் முழுக்க அப்படித்தான் போலிருக்கிறது.

Chitra said...

உங்கள் நண்பரின் கதையை கேட்க பாவமாக இருக்கிறது.... He could have gone for Dept. counseling to get advice. Usually, he gets proper guidance to move on further.

வருண் said...

What I dont understand he (your friend) came here in a student visa (F1 and NOT J1?) without earning a PhD degree with some research experience?

* Why did not he try join into a PhD program and try get a PhD degree from one of the "mediocre universities" here?

* What was he doing using his "student visa" for the past five years-not doing an MS or PhD?? I find that odd!

Anyway, you don't have to answer my questions. They just popped up in my mind when I read your friend's sad story.

Finally, I know people earned a PhD degree and came to US using that degree got their green card using that degree then did MS (computer science) or some software courses, and then quit doing science for EVER! I have seen so many "motivated young scientists" quit science for "making money" and to have a "comfortable" life!

Only very few are doing science in their life because they ENJOY doing it! :)

Unfortunately for some people it takes lifetime for wounds they got from these "moronic bosses" (ADVISERS) to get healed! Seems like your friend falls in this category. :(

Anyway your friend should know that it is not the end of the world if he could not earn a PhD. There is a big world out there with lots of other opportunities!

வருண் said...

I am sorry, I think I misunderstood your post. So, ignore posting my last reply.

Your friend was doing PhD here in US and not able to get the degree??

He could have got an MS at least. Right? :)

I never heard of people not able to earn a PhD because of lack of publications in the US? Something fishy here!

Anna said...

Wow! that's really sad. I know quite a number of people who have been let down by their supervisors as well.

"ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்படாததால் அவருக்கு முனைவர் பட்டமும் கொடுக்கப்படவில்லை."

Didn't realise that it is obligatory. It is certainly recommended but shouldn't be obligatory, right? அவர் செய்த வேலையின் அளவும் தரமும் யாராலும் பார்க்கக் கூடியதாக இருக்குமே. And the examiners should be able to judge further in orals right?

"சில பல புதிய ஆராய்ச்சிகள் செய்து முடிக்கும் தருவாயில் அவர் செய்தது போன்ற அதே ஆராய்ச்சிகள் வேறொறுவர் செய்து ஜர்னலில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனை காரணமாக காட்டி அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எங்கும் வெளியிட படவில்லை."
mmm. But surely whether the data affirms the previous study or not he should be able to publish it somewhere, shouldn't he?

I really don't think he should leave it as it is. I hope somebody guides him.

ஹுஸைனம்மா said...

வருத்தமான நிகழ்வு. ஆராய்ச்சிக்காக ஒரு சப்ஜெக்டை எடுத்துக் கொள்ளும்போது, அதுகுறித்து வேறு ஆராய்ச்சிகள் ஏற்கனவே நடந்திருகிறதா அல்லது நடந்து கொண்டிருக்கிறதா என்று counter-verify செய்யும் வசதி கிடையாதா? அதற்கென கவுன்ஸில் ஏதும் இல்லையா (கண்டுபிடிப்புகளை உடனுக்குடன் பேடண்ட் செய்ய வேண்டுமென சொல்வார்களே அதுபோல)?

கையேடு said...

ம்ம்.. என்ன சொல்வது. உங்கள் நண்பர் சோர்வடையாமல் இருக்க வாழ்த்துகள்.

Thekkikattan|தெகா said...

Didn't realise that it is obligatory. It is certainly recommended but shouldn't be obligatory, right? //

I don't think it is obligatory publishing a paper or two a MUST prior to submission of your thesis/ defense is done. The publication is a definite plus when we look for a job. But I am sure it is not a prerequisite to finish our Ph.D. Anyway, he will be just fine if he moves back to India.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

I too heard like this from my friends. 10 years before I heard about one of my teacher's son killed himself as his guide cheated him on some research...remba kodumai idhellaam...