ஒரு படத்தை ரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்..எல்லாரும் அந்த படத்தை பத்தி ஆகா, ஓகோ, சான்சே இல்லை என்று ஏத்தி வேற விட்டு இருந்தார்கள். தியேட்டர் போயி பார்க்க முடியல, சரி, DVD வரட்டும் வீட்டிலேயே பார்க்கலாம்னு முடிவு பண்ணி வெயிட் பண்ணி DVD வாங்கி ஆசை ஆசையா படத்தை பார்த்தா, சாமி!! நம்ம ஊரு விஜயகாந்த், அர்ஜுன், விஜய் வகையறா படங்கள் கூட தேவலைப்பா...அப்படின்னு தோனுற அளவு ஒரு படமுங்க இந்த 'Salt', இதை போய் எப்படி மக்கள் நல்லா இருக்குன்னு சொன்னாங்கன்னு தெரியலப்பா.
அதில வர்ற ஆன்ஜெலினா ஜோலி அம்மா இருக்காங்க பாருங்க..நம்ம ஊரு தனுஷ் மாதிரி உடம்பை வச்சுகிட்டு என்னம்மா தாவி தாவி சண்டை போடுராங்க தெரியுமாப்பா! அதை விட நம்ம ஹீரோ எல்லாம் பண்ணுவாங்க பாருங்க ஒரு லாரி ல இருந்து இன்னொரு லாரிக்கு அப்படியே ரன்னிங்க ல தாவுவாங்களே, அந்த மாதிரி ஜிவ் ஜிவ் ன்னு ஹை வேஸ்ல தாவுதுப்பா அந்த அம்மா!
அதை விட சில நேரங்கள்ல அந்த அம்மாவை ரோட்ல ஓட விட்டு இருக்காங்க அது ஓடுறதை பார்த்தா என்னவோ உடம்புக்கு முடியாம இருக்கிற ஒரு பாட்டிய ஒடுங்கம்மா அப்படின்னு படுத்தினா எப்படி இருக்கும் அப்படி இருக்கு.
இதில என்ன ஜோக் ன்னா அந்த அம்மா எல்லா இடத்திலையும் சும்மா 'சர்' சர்' ன்னு வந்து சுட்டுட்டோ/கொலை செஞ்சுட்டு போகுமாம், போலிசு, CIA, FBI, அப்புறம் இவங்க secret agency எல்லாம் லொலிபொப் சாப்பிட்டு இருப்பாய்ங்களாம், யாருக்கையா காது குத்துறீங்க. அதுவும் அந்தம்மா வைட் ஹவுஸ்க்கு எலிவேட்டேர் மேல இருந்து சும்மா சிட்டாட்டம் பறந்து வரும் பாருங்க சூப்பர் சீனுப்பா அது, ஐயோ! ஐயோ, தலையில அடிச்சிக்க வேண்டியது தான்.
கதையாவது கொஞ்சம் நல்லா இருக்கா!..அதுவும் இல்ல...அதே ரஷ்ய உளவாளியாம்...டபுள் ஏஜெண்டாம்...அய்யா!!..இதெல்லாம் நாங்க நிறைய ஜேம்ஸ்பாண்டு படங்கள்ள நிறைய பார்த்தாச்சுங்கோ!!
இதுனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நம்ம ஊரு மக்களான விஜயகாந்த் படங்கள் எல்லாம் குப்பை, ஹோலிவூட் படங்கள் தான் சூப்பர்ன்னு நினச்சுட்டு, " We wont see tamil pictures, we only see english pictures" அப்படின்னு பீட்டர் விட்டுட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வார்த்தை..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ!”
3 comments:
இதுனால சகலமானவர்களுக்கும் தெரிவிக்கிறது என்னன்னா, நம்ம ஊரு மக்களான விஜயகாந்த் படங்கள் எல்லாம் குப்பை, ஹோலிவூட் படங்கள் தான் சூப்பர்ன்னு நினச்சுட்டு, " We wont see tamil pictures, we only see english pictures" அப்படின்னு பீட்டர் விட்டுட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு வார்த்தை..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ!”
..... ha,ha,ha,ha,ha.... right!
உங்க லேபில்ல உலகசினிமான்னு salt ஐ போட்டிருக்கீங்களே.....
சால்ட் அதிகமா போச்சுன்னாலும், சால்ட்டே இல்லைன்னாலும் பண்டம் குப்பைல.... அதாவது, இந்தமாதிரி படமும் வரணும்னு சொல்றேன்.
நீங்க இதை பார்கறதுக்குன்னே ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்... அப்ப பார்த்தீங்கன்னா ரொம்ப்ப்ப்ப்ப நல்லா இருக்கும்!!!
இப்படிக்கு
சால்டுக்கு சால்ட் போடும் சங்கம்
..”இங்கிலீஷ் ல யும் இந்த சால்ட் மாதிரி நிறைய குப்பை இருக்குதுங்கோ!”
கஷ்டம்.
Post a Comment