நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவரா?, இந்தியாவை அதிகம் மிஸ் செய்வதால் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வசிக்க விரும்பி அங்கு வீடு பார்ப்பவரா? எப்படி இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை கண்டுபிடிப்பது என்று குழம்புபவரா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!
நீங்கள் ஒரு அபார்ட்மென்ட் பார்க்க செல்லும் போது கீழ்க்கண்டவற்றை பார்க்க முடிகிறதா?
- நிறைய ஹோண்டா அல்லது டொயோட்டா கார்களை பார்க்க முடிகிறதா? அப்படியானால் அங்கு கட்டாயம் நிறைய ஆசிய மக்கள் குறிப்பாக இந்தியர்கள் வாழலாம்.
- எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருக்கும் பள்ளிகளில் எது சிறந்த பள்ளி என்று பெயர் பெற்றிருக்கிறது என்று பாருங்கள், அதற்கு அருகில் இருக்கும் எந்த அப்பார்ட்மெண்டிலோ அல்லது குடியிருப்புகளிலோ கட்டாயம் இந்தியர்கள் இருப்பார்கள், நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வீடு பார்க்கலாம்.
- நீங்கள் பார்க்கும் அபார்ட்மெண்டில் டென்னிஸ் கோர்ட் அல்லது புட்பால் கிரௌண்ட் இருந்து அதில் சிலர் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? அப்படியானால் சந்தேகமே வேண்டாம். அது நிறைய இந்தியர்கள் வசிக்கும்அபார்ட்மென்ட் தான்.
- நீங்கள் அபார்ட்மென்ட் ஐ சுற்றி பார்க்கும் போது சில ஆண்கள் கைலி அணிந்து கொண்டு அல்லது சில பெண்கள் நைட்டீ அணிந்து கொண்டு வாசலில் நின்று கொண்டு இருப்பதை பார்க்கிறீர்களா? அது கட்டாயம் நம் மக்கள் அதிகம் வாழும் பகுதியே.
- ஒரு காரில் பலர் சீட் பெல்ட் கூட அணியாமல் செல்வதை காண்கிறீர்களா?, அது இந்தியர்கள் வசிக்கும் பகுதியே.
சரி இப்போது அங்கு அதிக இந்திய மக்கள் வாழ்வார்கள் என்று தெரிந்தாயிற்று..இப்போது அங்கு வீடும் பார்த்தாகி விட்டது இப்போது அங்கு எப்படி சமாளிப்பது என்று சில survival டிப்ஸ் உங்களுக்காக.
- நீங்கள் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் அந்தந்த மொழி பேசும் மக்கள் குரூப் ஒன்று இருக்கும் அதில் ஐக்கியமாகி விடுங்கள், இல்லையேல் உங்களை அந்த மக்கள் ஒதுக்கி வைத்து விடுவர்.
- உதாரணமாக நீங்கள் தமிழ் மொழி பேசுபவர் என்றால் தமிழ் மக்கள் குரூப் இல்தான் சேர வேண்டும், உங்கள் பக்கத்து வீட்டு காரர் வடஇந்தியராக இருந்து உங்களுக்கும் இந்தி பேச தெரிந்திருந்தாலும் அவருடன் அதிகம் பேசாதீர்கள். அப்படி பேசி நீங்கள் அவர் நண்பராகி விட்டால், நீங்கள் தமிழ் மொழி பேசும் மக்கள் க்ரூபில் இருந்து விலக்கி வைக்கப்படுவீர்கள்.
- எப்போதும் அடுத்த வீட்டு குழந்தை என்னென்ன செய்கிறது என்று கவனமாக பார்த்து கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் அப்பொழுது தான் உங்கள்குழந்தையையும் அடுத்த வீட்டு குழந்தை செல்லும் வகுப்புகளுக்கோ, விளையாட்டுகளுக்கோ அனுப்ப முடியும்.
- இது பெண்களுக்கு மட்டும்: அடுத்த வீட்டு பெண்கள் உங்கள் வீட்டுக்கு வந்து பேசினாலோ அல்லது போனில் பேசினாலோ எந்த வேலை இருந்தாலும் அதனைவிட்டு விட்டு மறக்காமல் பேசி விடுங்கள் இல்லையேல் நீங்கள் தலைகனம் கொண்டவர், திமிர் பிடித்தவர் என்று அனைவருக்கும் அடுத்த நாளே பறைசாற்றப்படும் அதனால் ஜாக்கிரதை.
6 comments:
சிரிக்கத் தோன்றினாலும் சிந்திக்கும்படியான பதிவு உண்மையும் கூடா... இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமையம் மணம் தூக்கும்.. ஒரு மாலில் போய் நின்றுக் கொண்டு கண்ணை மூடினால் சமையல் வாசம் அடிக்கும் ..ஆஹா இந்தியர் இந்தியர் ...
அதே போல ஒரே மொழிக்காரர்களோடு கும்மியடிப்பது எனக்கு உடன்பாடில்லை. இதனால் என்னவோ தமிழ் குழுக்களிடம் இருந்து தனிமையாக இருக்கிறேன் இங்கு.. இருந்தாலும் பரவாயில்லை. உபத்திரவங்கள் மிகவும் குறைவு.. ஹிஹி ...
நகைச்சுவையுடன் கூடிய விழிப்புணர்வு!
சுலபமாக, சுவையாக சொல்லிட்டீங்க.
அவ்வ்வ் :(
super & 100 % true.
நன்றி இக்பால் செல்வன்
நன்றி அமைதி அப்பா
நன்றி தமிழ் உதயம்
நன்றி முத்துலெட்சுமி
நன்றி விஜி
Post a Comment