Saturday, September 10, 2011

இந்திய, மேற்கத்தைய கலாச்சாரம்: சில பார்வைகள்


நேற்று இரவு "As good as it gets" என்ற ஒரு ஆங்கில படம் பார்க்க நேர்ந்தது. பதிவுலகில் அப்பப்போ நடக்கும் லிவ்விங் டுகெதெர் கலாச்சாரம் குறித்த சண்டைகள் நினைத்து, எனக்கு அந்த படம் பார்த்தவுடன் எதோ தோன்றியது போல இருந்தது. அதன் விளைவே இந்த இடுகை.


அந்த படத்தில் ஒரு குழந்தையுடன் கஷ்டப்படும் Single mom ஆக "ஹெலன் ஹன்ட்" நடித்திருப்பார். (சிங்கிள் வுமன் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு திருமணம் ஆகி விவாகரதானவர்களோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்ற பின்பு பாய் பிரெண்ட் விட்டு விட்டு சென்றிருப்பான், அல்லது கணவன் இறந்திருப்பார், இப்படி எந்த பிரிவில் இருந்தாலும் தனியாக குழந்தையை கவனித்து கொள்ளும் அம்மா சிங்கள் மாம் அன்று அழைக்கப்படுகிறாள்)


தன் வயதான தாயையும் கவனித்து கொண்டு தன் நோயாளி மகனையும் கவனித்து கொண்டு ஒரு ஹோட்டலில் சர்வர் ஆக வேலை பார்பார் ஹெலன். தன் கஷ்ட நிலையை கொஞ்சமாவது புரிந்து கொள்ளும் ஒரு பாய் பிரெண்ட் கிடப்பானா என்று தன் தாயிடம் அவள் அழுவாள். ஆனால் அவளிடம் பாய் பிரெண்ட் ஆக வருபவர்கள் அவள் உடலுக்காக மட்டுமே வருவார்கள். கடைசியில் எப்படி அவள் ஜாக் நிகோல்சனின் அன்பை புரிந்து கொள்கிறாள் என்று படத்தில் காட்டி இருப்பார்கள்.


எனக்கு தெரிந்து, படிக்கும் காலத்திலும் சரி வேலை பார்க்கும்காலத்திலும் சரி நிறைய மேற்கத்திய கலாச்சாரத்தை சேர்ந்த பல தோழிகள் தனக்கு நல்ல பாய் பிரெண்ட் கிடைப்பதில்லை என்று கூறியதை கேட்டதுண்டு. அப்படியே நல்ல பாய் பிரெண்ட் கிடைத்தாலும் அவர் திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார் என்றும் கூறுவதுண்டு. மேற்கத்திய கலாசாரத்தில் commit செய்து கொள்ள அதாவது திருமணம் செய்கிறேன் என்று வாக்கு கொடுக்க ஆண்கள் தயங்குவதுண்டு. திருமண நாளில்e கூட நிறைய ஆண்கள் மனம் செய்து கொள்ளாமல் ஓடி விடுவதுண்டு அதனை cold feet என்று அழைப்பார்கள். என்னுடைய முந்தய பாஸ் ஒரு பெண், நல்ல தோழி போல பழகுவார், அவருக்கு கிட்டத்தட்ட நாற்பது வயதாகிறது. ஆயினும் இன்னும் வாழ்கையில் செட்டில் ஆக முடியவில்லையே என்று ஒரே கவலை அவருக்கு. என் என்றால் அவர் இஷ்டம் போல ஒரு பாய் பிரெண்ட் ம் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த ஒரு பாய் பிரெண்ட் ஒரு நாள் காலையில் எழுந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டான் என்று சொல்லி அழுது இருக்கிறார்.

நான் இதுவரை சந்தித்த பெண்கள் வாழ்கையில் ஒரு செக்யூரிட்டி தேடுபவர்கள். தனக்கும் ஒரு குடும்பம் குழந்தை என்று வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆயினும் பலருக்கு அது அமைவதில்லை. தெரிந்து திருமணம் செய்து டைவெர்ஸ் ஆன பல சிங்கள் மாம்கள் பலரை பார்த்திருக்கிறேன். அவர்கள் சாப்பிட, குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்றே தீர வேண்டிய கட்டாயம். தன் குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம்.

என் நல்ல தோழி ஒருத்திக்கு ஒரு பழக்கம் உண்டு, எதாவது துணி வாங்க போனால் எல்லா துணிகளையும் போட்டு பார்க்கும் பழக்கம் உள்ள அவள் திருமண உடை போன்று இருக்கும், வெள்ளை ஆடைகளை மட்டும் அணிந்து பார்க்க மாட்டாள். அவளை பொறுத்த வரை திருமண ஆடைகளை ட்ரை செய்தால் திருமணமே நடக்காது நல்ல பாய் ஃப்ரெண்ட் கிடைக்காது என்ற மூட நம்பிக்கை அவளுக்கு.

நான் சந்தித்த இவர்கள் எல்லாம் எனக்கு அந்த திரைப்படம் பார்த்தவுடன் ஞாபகம் வந்தனர். அவர்கள் இவ்வாறுசொல்லும் போதெல்லாம் பரவாயில்லை நம்ம கலாசாரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் இல்லைப்பா, “அம்மா அப்பா பார்த்து ”வைப்பாங்க என்று ஏனோ எனக்கு தோன்றி தொலைக்கும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல.


6 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Thekkikattan|தெகா said...

அம்மா அப்பா பார்த்து ”வைப்பாங்க ///

ஆமா, அது ஒரு லோட்டோ விளையாடு மாதிரி :) ...

ஃபுல்லானாலும் புருஷன், கல்லானாலும் அவருன்னோ - இல்ல, பிசாசா இருந்தாலும் பொண்டாட்டி, மக்கு கோழியா இருந்தாலும் மவராசின்னு வாழ்ந்து முடிச்சிர வேண்டியதுதான். :)) அட ஏங்கங்க...

பதிவில புடிச்சது - இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்.. கல்யாணம் செய்துக்க ஒரு பையன் கிடைக்கல .. லவ் செய்து தான் கல்யாணம் என்ற நிலையில்..லவ் ஏற்படும் அளவுக்கு ஒருத்தரையுமெ பாக்கலன்னு வருத்தப்படுவாங்களாம்..

நம்ம ஊருல மாதிரி முட்டினா இடிச்சா பாத்துக்கிட்டால்லாம் அங்க லவ் வராது போல..:)

முகுந்த்; Amma said...

//Rathnavel said...
நல்ல பதிவு.//

நன்றிங்க..

முகுந்த்; Amma said...

//ஆமா, அது ஒரு லோட்டோ விளையாடு மாதிரி :) ...

ஃபுல்லானாலும் புருஷன், கல்லானாலும் அவருன்னோ - இல்ல, பிசாசா இருந்தாலும் பொண்டாட்டி, மக்கு கோழியா இருந்தாலும் மவராசின்னு வாழ்ந்து முடிச்சிர வேண்டியதுதான். :)) அட ஏங்கங்க...

பதிவில புடிச்சது - இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல.

//


தெகா..நம்ம ஊரு முறைப்படி கல்யாணம் முடித்தா பல நேரங்களில் குடும்ப சண்டை வந்தா சொந்த பந்தங்கள் சேர்ந்து சமாதானம் செய்வாங்களே..அதெல்லாம் இருக்குங்க..

பல நன்மைகளும் இருக்குங்க..அதையும் யோசிக்கனும்ல்ல

முகுந்த்; Amma said...

//நம்ம ஊருல மாதிரி முட்டினா இடிச்சா பாத்துக்கிட்டால்லாம் அங்க லவ் வராது போல..:)//

முத்து, இவங்க சின்ன வயசிலயே..எல்லாத்தையும் முடிச்சிடறாங்க...அதனால மிடில் ஏஜில வாழ்க்கையில செட்டில் ஆகனும்னு தான் நினைக்கிறாங்க..

முட்டினா எல்லாம் காதல் வர்ரமாதிரி காட்டுரதெல்லாம் நம்ம ஊரிலதான்.