Friday, September 23, 2011

ஜீனியஸ் என்பது கெட்ட வார்த்தையா?


இரண்டு நாட்களுக்கு முன் பிபிசி இல் ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது அது Is Genius a dirty word? என்பது.  ஒருவரை ஜீனியஸ் என்று அழைக்க வரையறுக்கப்படும் அளவு கோல் என்ன?  

தாமஸ் ஆல்வா எடிசன் நிறைய கண்டு பிடித்திருக்கிறார்  அதனாலே அவரை போன்ற கண்டு பிடிப்பாளர்கள்  தான் ஜீனியஸ் ஸா?

இல்லை ஐன்ஸ்டீன் போன்று பல செயல்களுக்கு ஒரு புது அறிவியல் விளக்கம் கொடுத்து புது புது தியரி கொடுப்பவர்கள் தான் ஜீனியஸ்ஸா?

இல்லை அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம், சில நேரங்களில் அழகாக இசை அமைத்து பாடல்களை பாடும் பாடகர்களையும் இசை அமைப்பாளர்களையும் கூட சில நேரம் ஜீனியஸ் என்கிறோமே? எதனை வைத்து சொல்கிறோம்.

வரலாற்றை புரட்டி பார்த்தால் அதில் நாம் தற்போது பலரை "ஜீனியஸ்ப்பா அவரு" என்று கூறுவோமே
அவர்களில் பலரை அப்போது வாழ்ந்த மக்கள் " இது நட்டு கழண்ட கேசு"  என்றே சொல்லி இருக்கிறார்கள். இந்த நிலை தற்போதும் உண்டு. அறிவியல் ஆராய்ச்சிகள் செய்து ஆய்வுக்கூடமே கதி என்று இருக்கும் பல அறிவியலார்களுக்கு வெளியில் கிடைக்கும் பட்டம் "அது ஒரு நட்டு கழண்ட கேசு " என்பதே.

ஏன் இந்த நிலை என்று யோசித்தால், பதில் ரொம்ப சிம்பிள்.. எப்போதும் ஒரே எண்ணம் ஒரே குறிக்கோள் என்று வாழும் அறிஞர்கள் பலர் பல நேரங்களில் அவர்கள் உலகத்தில் மட்டுமே வாழ்வார்கள், உலக நடப்பு அதிகம் அறிந்து கொள்ளவோ அதற்காக நேரம் ஒதுக்கவோ மாட்டார்கள். அதனாலேயே நல்ல அறிஞராக அறிவியலாராக இருந்து கொண்டு அதே நேரம் நல்ல பிசினஸ் செய்பவராகவும் இருப்பவர்கள்/இருந்தவர்கள் மிக மிக சிலரே.

உதாரணமாக எடிசன். எத்தனை பொருட்கள் கண்டு பிடித்தாரோ அத்தனை பொருட்களையும் பேடெண்ட செய்து விட்டார்.  சொந்தமாக ஒரு கம்பெனியும் வைத்து தன்னை பிசினேசிலும் நிலைப்படுத்தினார்.

தற்போதைய உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ஹுமன் ஜினோம் புகழ்
கிரேக் வெண்டேர் ஐ சொல்லலாம். அறிவியலிலும் சரி, பிசினேசிலும் சரி மனிதர் தன்னை நன்றாக நிலைபடுத்தி கொண்டுள்ளார்.

 ஆனால் எடிசன் போன்றோ, கிரேக் வெண்டேர் போன்றோ இருக்கும் ஜீனியாஸ்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மற்ற 
99 % ஜீனியஸ்கள் எல்லாம் பல நேரங்களில் சாதாரண மக்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை, அல்லது கவனிக்கபடுவதில்லை.

என்னை பொறுத்தவரை அறிவு என்பது 40 %ம் விளம்பர திறமை/பேச்சு திறமை  30 % ம் மீதி  தில்லாக முடிவெடுக்கும் திறமை/ரிஸ்க்
எடுக்கும் திறமை 30 % இருந்தால் போதும் நல்ல சக்செஸ்ஃபுல் அறிஞராகிவிடலாம்.

நல்ல சக்செஸ்ஃபுல் ஜீனியஸ் வரலாற்றில் மட்டுமல்ல தற்போது வாழும் மக்களிடையேயும் மதிக்க படுவார்கள். சக்செஸ்ஃபுல் ஆகாத வரையில் ஜீனியஸ் என்று ஒருவரை புகழ்ந்தாலும் அது வெறும் உதட்டளவில்  கூறப்படும் கெட்ட வார்த்தையே!

6 comments:

சேட்டைக்காரன் said...

நம்மூரில் கூட பெரும்பாலானாரால் ஜீனியஸ் என்று கருதப்பட்ட பாரதியாரை எக்ஸென்ட்ரிக் என்று அழைத்தவர்கள் இருந்தார்களே! :-)

நல்ல பகிர்வு.

Avargal Unmaigal said...

//என்னை பொறுத்தவரை அறிவு என்பது 40 %ம் விளம்பர திறமை/பேச்சு திறமை 30 % ம் மீதி தில்லாக முடிவெடுக்கும் திறமை/ரிஸ்க்
எடுக்கும் திறமை 30 % இருந்தால் போதும் நல்ல சக்செஸ்ஃபுல் அறிஞராகிவிடலாம்//

முகுந்தம்மா நீங்கள் ஒரு ஜீனியஸ்தான். குடும்பவாழ்கையில் இருந்து கொண்டே ஆராய்ச்சியும் செய்து கொண்டு பல நல்ல பதிவுகளையும் எழுதி கொண்டுவரும் நீங்களும் ஒரு ஜீனியஸ்தான்

ஹுஸைனம்மா said...

அறிவாளிகளைத்தான் ஜீனியஸ் என்கிறோம் (கிறார்கள்). நீங்க சொன்ன மாதிரி, ஜீனியஸ்களின் உலகமே தனி; வாழ்வியலில் அவர்கள் வெற்றிபெறுவது அரிதாகவே. ஏன், ஜீனியஸ்கள் பெரும்பாலும் அவர்கள் மனைவிகளுக்கே புதிரானவர்கள். இப்போவெல்லாம், ‘ஜீனியஸாக’ இருப்பதைவிட “ஸ்ட்ரீட் ஸ்மார்ட்டாக’ இருப்பதுதான் முக்கியம் என்று சொல்லப்படுகீறது.

முன்பு ஒரு சிறுகதை படித்த ஞாபகம்: இறந்துவிட்ட ஒரு பெரும் கணக்கு மேதைக்குப் பாராட்டு விழா எடுக்கிறார்கள். மேடையில் பலரும் பாராட்டி, சிலாகித்துப் பேசி, அவர் மனைவியிடம் விருதைக் கொடுத்துப் பேசச் சொல்கிறார்கள். அவர் மிகச் சுருக்கமாக, “இப்படிப் பலரும் பாராட்ட வாழ்ந்த அவரால், நான் பாராட்டும்படி என்னோடு வாழத் தெரியவில்லையே” என்ற அர்த்தத்தில் பேச, அனைவருக்கும் அதிர்ச்சி!!

முகுந்த் அம்மா said...

//சேட்டைக்காரன் said...
நம்மூரில் கூட பெரும்பாலானாரால் ஜீனியஸ் என்று கருதப்பட்ட பாரதியாரை எக்ஸென்ட்ரிக் என்று அழைத்தவர்கள் இருந்தார்களே! :-)

நல்ல பகிர்வு.
//

ஆமாங்க..நான் இதை எழுதும் போது கூட பாரதியாரை மனதில் வைத்தே எழுதினேன்..

நன்றிங்க..

முகுந்த் அம்மா said...

// Avargal Unmaigal said...
முகுந்தம்மா நீங்கள் ஒரு ஜீனியஸ்தான். குடும்பவாழ்கையில் இருந்து கொண்டே ஆராய்ச்சியும் செய்து கொண்டு பல நல்ல பதிவுகளையும் எழுதி கொண்டுவரும் நீங்களும் ஒரு ஜீனியஸ்தான்///

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...பயங்கரமா புல்லரிக்குதுங்க...

இதை எங்க வீட்டுக்காரர் படிச்சிட்டு பயங்கரமா ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிட்டார்.

நன்றிங்க..

முகுந்த் அம்மா said...

//‘ஜீனியஸாக’ இருப்பதைவிட “ஸ்ட்ரீட் ஸ்மார்ட்டாக’ இருப்பதுதான் முக்கியம் என்று சொல்லப்படுகீறது.
//

ஹுஸைனம்மா சரியா சொன்னீங்க..ஸ்ட்ரீட் ஸ்மார்ட் இஸ் பெஸ்ட்.

நீங்க சொன்ன/கேட்ட கதை அருமை..
வெளியில அறிவாளி ஆனா வீட்டுக்குள்ள எக்ஸென்றிக்..என்ன செய்ய பல ஜீனியஸ்கள் இப்படிதான் இருக்காங்க..

நன்றிங்க.