Saturday, June 27, 2015

10 ஆம் வகுப்பு தமிழ்நாடு அறிவியல் பாட நூலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிலையும்

TNPSC பரிட்சைக்காக என்று தயார் செய்து கொண்டிருந்தார்  என் சொந்தகார பெண் ஒருவர். 10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணித புத்தங்கங்களை வைத்து ரெபெர் செய்து  கொண்டு இருந்தார்.  தற்செயலாக  புத்தகங்களை படிக்க  நேர்ந்தது. அதுவும், துவக்க பாடமான, மரபும் பரிணாமமும் பார்த்த போது,  மெண்டல், டார்வின் என்று தமிழில் பார்க்க படிக்க ஆர்வமாக  இருந்தது.   அதுவும்   மரபு பொறியியல் என்று படிக்க, அட நம்ம சப்ஜெக்ட் ஆச்சே என்று சந்தோசமாக இருந்தது. பரவாயில்லையே, 10 ஆம்  வகுப்பிலேயே ஜெனெடிக் பாடங்கள் சொல்லி தராங்களே என்று சந்தோசப்பட்டேன். Biochip, Biosensor, alternative medicine என்று பலதும் சிறு சிறு பகுதிகளாக இணைக்க  இருக்கின்றன. இதனை பற்றியெல்லாம் விளக்க ஒரு பத்தாம் வகுப்பு ஆசிரியாரால் முடியுமா. அப்படி என்றால் என்ன என்று கூட இந்தியாவில் M.Sc படித்த பல மக்களுக்கு விளக்க, அறிந்து கொள்ள தெரியாதே..எப்படி 15-16 வயது பிள்ளைகள் அறிந்து கொள்ளும் என்று கேள்விகள்.
முக்கால் வாசி பேர் இதனை கடம் மட்டுமே செய்கிறார்கள், புரிந்து படிப்பது என்பது துளியும் இல்லை. 8ஆம் வகுப்பில் இருந்தே 10ஆம் வகுப்பு பாடத்தை ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்து செய்து ஒப்பித்து பழகி இருகிறார்கள். இப்படி கடம் அடித்து பின்னர் தேர்வில் வாந்தி எடுத்து 100-100 வாங்கி விட்டேன் என்று பெருமை வேறு.


ஒரு அறிவியலில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிய ஒரு பெண்ணை கூப்பிட்டு மெண்டல் அவர்களின் தத்துவம் பற்றி கேட்டேன். உடனே அவள் புத்தகத்தில் இருப்பதை ஒரு வரி விடாமல் ஒப்பித்தாள். அதில் குறுக்கு கேள்விகள் கேட்க விழிக்கிறாள்.  சரி ஜெனிடிக் வேண்டாம் மனித உடலில்  DNA எங்கு இருக்கும் என்று கேட்டால் விழிக்கிறாள். அறிவியல் பற்றிய ஒரு  basic அறிவு கூட இவர்களுக்கு இருப்பதில்லை. பின்னர் எப்படி 100-100 மார்க் வாங்கினார்கள் என்று தெரியவில்லை.

அப்படி நான் நினைத்து கொண்டு இருக்கும் போது, அறிவியல் புத்தகத்தில் ஒரு பாரா கண்ணில் பட்டது. அது மரபணு மருத்துவம் பற்றியது.புத்தகத்தின்  கூற்றுப்படி, "மரபணு மருத்துவத்தை பயன்படுத்தி நோய் குறைபாடுகளான புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான சேனை புதிய ஜீன் புகுத்தி சை செய்யும் முறையாம்". படித்தவுடன் புல்லரித்து விட்டது.எய்ட்ஸ் என்பது HIV என்னும் வைராசால் உருவாக்கபடுகிறது என்று அறிந்து இருந்தேன்..ஆனால் அதனை ஒரு ஜெனெடிக் டிசீஸ் என்று 10ஆம் வகுப்பு அறிவியல் பாட புத்தகம் தெரிவிக்கிறது. அதுவும் எயிட்ஸ் உருவாக்கும் ஜீனை இவர்கள் மரபணு மருத்துவம் மூலம் சரி செய்து விடுவார்களாம். எந்த ஊரில் இப்படி நடக்கிறது என்று தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கப்பா. நிறைய எயிட்ஸ் நோயாளிகள் காத்து  கொண்டு இருகிறார்கள். செய்வார்களா தமிழ் நாடு 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடநூல் தயாரித்தவர்கள்?.

  இப்போது பாடம் சொல்லி கொடுப்பவர்களுக்கு இதனை பற்றி அறிந்திருக்குமா என்பதெல்லாம் எனக்கு கவலை இல்லை . பாட நூல் தயாரித்தவர்களுக்கு இதனை பற்றி எல்லாம் உண்மையில் தெரியுமா?, இல்லை யாராவது எழுதி கொடுத்ததை இவர்கள் பிரசுரித்து இருக்கிறார்களா? ரெபெர் செய்து உண்மையா இல்லையா என்று சோதித்தார்களா? நிறைய கேள்விகள்...என்னவோ போங்கப்பா.


நன்றி.

12 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மரபு பொறியியல் என்பது Genetic Engineering ஐ அல்லவா குறிக்கும்?
கல்லூரி வரை கூட மனப்பாடம் செய்தே பாஸ் செய்து விடுகிறார்கள்

முகுந்த் அம்மா said...

Yes it could mean genetic engineering. I was carried away by Poriyiyal for technology.

வருண் said...

It is a curse, lots of "fatal errors" in the books students were asked to study especially in India and in third-world countries. You need to keep in mind, when we are sitting here in US and telling that it is "wrong" will have a negative impact. Lately someone was mentioning in his blog that Glutamic acid is an essential amino acid. But it is NOT. Nobody dares to correct him. If I go and tell that "it is incorrect" the author might not take it easy. So, I let it go. See we need to fix the errors especially "scientific facts" and it is our responsibility. But lots of times it is not practicable because people have BIG EGO and lack "open mind" in our culture. If you correct someone, you might even become his/her enemy there after. This is the kind of mindset people generally have.

I always believe a teacher should not misguide the students by teaching "wrong facts". A book should have facts and not "lies". Well, it is a big world. I can not lecture how a teacher should teach carefully and responsibly.

Have you seen some religious morons criticizing "Darwin as a manipulator or thief"? I have seen that in Tamil blog world:-) This world is filled with religious morons, they hardly understand "unselfish attitude of scientists". It is hard to outfight them as they are in big numbers! I let it go..and being irresponsible lots of times! Because that is the wise thing to do unfortunately.

அன்புடன் நீலன் said...

எதற்கு எடுத்தாலும் குறை மட்டுமே சொல்லிப் பழகிவிட்ட நம்மவர்களுக்கு நிறைகளைக் கூட குறைகளாகக் காண்கின்ற காமாலைக் கண்கள் மட்டுமே மிஞ்சிக் கிடக்கின்றன போலும்.

இன்றுள்ள 10-ம் வகுப்பு பாடநூலை விட பல மடங்கு பின் தங்கிய பாடத்திட்டத்தையும், இப்போதுள்ள கற்கைமுறைகள் கூட அறியாத பல முறை மனனம் செய்யப்பட்டு ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட பாடங்களை கற்றுவிட்டு தான் பலரும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா வரை போய் காலத்தைக் கழிக்கின்றனர்.

ஆனால் அங்கு விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களுக்கு இறக்கை முளைத்துவிடுகின்றது, தாம் காலா காலமாக அந்த மண்ணிலேயே பழம் தின்று கொட்டை போட்டவர் போல பேசுவது எல்லாம் நகைமுரண்.

இந்த பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் மொழிபெயர்ப்பு இழப்பு காணப்படுகின்றதே ஒழிய, அதன் பொருட்குற்றம் என எதுவும் இல்லை.

மரபணு மருத்துவத்தின் கோட்பாட்டு ஆய்வுகளின் படி எய்ட்ஸ் நோயை தடுக்கவல்ல சாத்தியக் கூறுகள் உண்டு. இதை பென்சில்வானியா பல்கலைக்கழகத்தின் பெரேல்மேன் மருத்துவத்துறையின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதாவது எச்.ஐ.வி தாக்கப்பட்ட நபரது உடலில் இருந்து உயிரணுக்களை எடுத்து அதில் உள்ள மரபணுக்களின் ஜீன்களை ZFN மூலம் CCR5 புரத வாங்குவானை மாற்றிவிட்டு மீண்டும் உடலில் செலுத்திவிடுவதன் மூலம், எச்.ஐ.வி வைரஸ் பரவலை வெகுவாக குறைக்கலாம். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலமாக பல மடங்கு எய்ட்ஸ் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் ஒரு நபரிடம் பரிசோதைனை செய்யப்பட்டும் பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் முழுமையாக எச்.ஐ.வி தாக்கை நீக்கி பரிபூரண குணமடைய வழி வகுக்கவல்ல ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதாவது மருந்து கொடுக்க்கபடாமலே மரபணு மாற்ற சிகிச்சை மூலமாக எய்ட்ஸ் குணப்படுத்தலாம்.

மேடமே, நான் இதுவரை வாசித்த வகையில் தற்சமயம் தமிழக பாடத்திட்டத்தில் காணப்படும் முக்கியமாக அறிவியல் பாடங்கள் சிறப்பாகவே உள்ளன. கனடாவின் பள்ளி பாடத்திட்டத்தையும் தமிழக பள்ளி பாடத்திட்டத்தையும் பல கோணங்களில் ஒப்பிட்டு நோக்கிய போது இரண்டுக்கும் பெரியளவில் வேறுபாடுகள் கிடையாது. செயல்முறை கல்வி மற்றும் தொழில்நுட்ப புகுத்துதல்களில் தமிழ்நாட்டுக்கும் கனடாவுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன என்பது உண்மை. என்ன தமிழ் வழியில் மொழி பெயர்ப்பு மேலும் எளிமையாக்கப்பட வேண்டும் அவ்வளவே. அது மட்டுமின்றி பல அரசு பள்ளிகளிலே கூட பல ஆசிரியர்கள் இதனை தெளிவாக கற்பிக்கின்றனர். இணையத்தின் வரவால் பாடதிட்டங்கள், கற்பித்தல் முறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. முழுமையான சீரான கற்பித்தல் முறையை அடைய இன்னம் சில ஆண்டுகள் ஆகலாம், குறிப்பாக உள்கட்டமைப்புக்கள் குறைந்த பின் தங்கிய நாட்டுப்புற பள்ளிகளில், ஆனால் அங்கும் கூட சில சிறப்பான ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதை மறுக்கவியலாது.

குறை மட்டுமே கண்டறிந்து எழுதுவதை குறைத்துக் கொண்டு பல முனைகளில் சீர்தூக்கி பார்த்து மதிப்பிடுவது சிறப்பு. நன்றிகள் !

Ref: http://www.niaid.nih.gov/news/newsreleases/2014/Pages/CCR5mutation.aspx

முகுந்த் அம்மா said...

அன்புடன் நீலன் said...

It seems you have great knowledge about genetic engineering being used as a medicine to treat AIDS. I appreciate your link for the reference. But for your kind information the link you sent is a news and it is published in 2014, and I have not seen much more progress and not many clinical trials going on towards that area.

Like any other viruses, HIV changes it shapes and constellation very quickly so designing vaccine for AIDS is very tough. So even if there is a reduction in HIV virus due to CCR5 mutation, it will quickly regain its power by introducing another mutation. BEcause it is survival for them.


I studied in India, raised in India, but when I go outside, the way teaching is done in other countries inspires me. They know what they are studying, not just pure mug up. Please stop criticizing NRIs who write and create awareness by learning about other countries cultures and the shortcomings of Indian society and culture.

I am not finding fault in everything, but raising awareness and concern is bothering you in anyway, then please dont come and read my blog. I will continue to do what I would like to do. And if it is disturbing you anyway, that is not my problem. "Truth always hurts"

thanks

வருண் said...

***இன்றுள்ள 10-ம் வகுப்பு பாடநூலை விட பல மடங்கு பின் தங்கிய பாடத்திட்டத்தையும், இப்போதுள்ள கற்கைமுறைகள் கூட அறியாத பல முறை மனனம் செய்யப்பட்டு ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட பாடங்களை கற்றுவிட்டு தான் பலரும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா வரை போய் காலத்தைக் கழிக்கின்றனர். ***

நீலன்!

இல்லைனு சொல்லவில்லை!

நீங்க புரிந்துகொள்ள வேண்டியது, இதே "அன்றைய மாணவர்கள்" இன்றைய அமெரிக்கவாசிகள், ஒரு சில பேசிக்கில்/அடிப்படை அறிவில் தவறான புரிதல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டு அவமானப்படுத்தவும் படுகிறார்கள். அதையும் நீங்க தெரிந்து கொள்ளுங்கள்.

சிலர் என்னடா இதைக்கூட நாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இவ்வளவுதூரம் வந்து இருக்கிறோமே? என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார்கள்.


உங்களுக்கு ஒவ்வொரு இண்சிடெண்டாக சொல்லணும் என்றாலும் நான் தயார். படிச்சு அமெரிக்கா வந்துவிட்டால், அவர்கள் சாதனைவீரர்கள், அடிப்படை அறிவியல்ஞானம் பெற்றவர்கள் என்பதெல்லாம் கிடையாது.

மற்றபடி உங்க விமர்சனம், எதற்கெடுத்தாலும் இந்தியப் பாடதிட்டங்களை குறை சொல்வது தவறென்பது தவறு என்பதெல்லாம் உண்மைதான். ஆனால்..

Here is my problem..

Your article (NIH) says that, HIV's target cells like CD4 have a particular receptor proteins. Meaning HIV comes and binds on those binding sites of those receptor proteins to enter into the cells to multiply themselves. If one modifies the receptor proteins' binding sites/or the receptor proteins by genetically modifying the genes (artificially mutating them) which "codes" these proteins, then HIV's receptor proteins wont be there anymore. So, then HIV can not bind on those CD4 cells and there by we can make the HIV inefficient or impotent in infecting those CD4 cells.. is a beautiful approach. Thanks for citing that article!

Now here is my question..

What kind of knowledge a 10th grader in India has? You need to educate me here. Does she or he has any basic understanding or cells and the receptor proteins and the genes which code the proteins? Do they have basic knowledge of biochem or organic chem at this point? I believe their knowledge is very limited at this 10th grader level. Correct me if I am wrong. Or hook them up in my blog, let me have a chat with them on-line. There is no need to teach them genetic engineering at this point. Because they are only going to memorize the gene's name and the receptor protein's name without SEEING what is really going on. They are not going to understand the mechanism. If you dont understand then it will easily "evaporate" after they score a "high mark" in their exam. Trust me I am teaching biochem to some undergraduates here. Even they encounter difficulties when it comes to understanding genes, transcription and translation and how virus enter the cell as they lack proper basic knowledge.I think at this level (10th grader) we should teach the basic biology, biochem and orgo and strengthen their basic understanding of bio molecules like dna, rna, proteins, lipids. If you do, they will excel in the future when they study about immunology or genetic enggg as they will know the basics. That's my opinion! :)

அன்புடன் நீலன் said...

தங்களின் பதிலுக்கு நன்றிகள்.

மரபணு மருத்துமுறை என்பது வளரும் நிலையில் இருக்கின்ற ஒன்றாகும், குறிப்பாக எச்.ஐ.வி தொற்றுக்கான மருத்துவ ஆய்வுகள் என்பவை நிறைவடையவில்லை. தொடர் ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. 2014-க்கும் 2015-க்குமான கால இடைவெளி என்பது நீண்ட ஒன்றல்ல, அது மிக குறுகிய காலமே. உலகின் பல நாடுகளில் இதற்கான ஆய்வுகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆக, எடுத்த உடனே அதை நிராகரித்து விட இயலாது. மரபணு மருத்துவம் பல சாதக முடிவுகளை தந்திருப்பதால் உலகின் பல பாட திட்டங்களில் அவற்றை சிறியளவில் கற்பிக்கவும் செய்கின்றனர்.

எச்.ஐ.வி வைரசின் மரபணு அதிக மாற்றங்களை உள்வாங்கவல்லது, அதாவது mutation நடக்கும் என்பது உண்மை. CCR5 புரதத்தில் எந்தளவுக்கு mutation நடந்துள்ளது, அவை தோல்வியில் கண்டுள்ளனவா என்பதை தொடர் ஆய்வுகள் மூலமாகவே உறுதிசெய்ய முடியுமே ஒழிய, எப்போதும் அப்படித் தான் அதனால் இப்போதும் அப்படியே என புறந்தள்ளிவிட முடியாது. mutation-ஐ நிறுத்தவோ, குறைக்கவோ கூடிய marker-களை கூட நாம் பயன்படுத்தி நுட்பாய்வு செய்ய இயலும்.

தமிழக கல்வி என்பது மனனம் சார்ந்த ஒன்று என்பதில் ஐயமில்லை, இது தமிழகம் என்றில்லை கொரியா உட்பட பல ஆசிய நாடுகளின் நிலைமை. அதே சமயம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் மனன முறை குறைந்து செயல்முறை கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆசியா மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் கல்வி நிலைமைகளை மேலோட்டமாக ஒப்பிடுவதே தவறானது, புவியியல் சார் அரசியல் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே கல்வி கட்டமைக்கப்பட்டு பரிணமிக்கின்றன. ஆக, செயல்முறை கல்வி நிலையை முழுமையாக அடைய மேலும் பல ஆண்டுகள் ஆகலாம். தமிழகத்தில் கற்றுவிட்டு வந்த பலரும் அமெரிக்கா, ஐரோப்பாவில் சிறப்பான ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும் பார்க்க வேண்டும்.

தமிழக கல்வியின் கற்பித்தல் முறைகளில் குறைபாடுகள் உண்டென்றாலும் அதன் பாடதிட்டத்தின் ஆழம் என்பது நன்றாகவே உள்ளது. ஒரு தமிழக பள்ளிப் பாடநூலை முழுமையாக வாசித்தாலே அதில் சிற்சில பிழைகள் நீக்கி நோக்கினால் uptodate தகவல்கள் மற்றும் அறிவாழம் நிறைந்துள்ளதை காண இயலும்.

கற்பித்தல் முறைகளில் தாங்கள் கற்ற காலத்தை விடவும், நான் கற்ற காலத்தை விடவும் கூட பல மாற்றங்கள் கடந்த ஐந்தாண்டுகளில் வந்துவிட்டன. ஆனாலும் போட்டி மனப்பான்மை அதிக மதிப்பெண்கள் என்ற சந்தை நிலவரத்தினால் மனனம் சார்ந்த கல்வி ஒழியவில்லை. ஆனால் பல பள்ளிகளில் சில ஆசிரியர்கள் செயல்முறை கல்வியை சிறப்பாக பயிற்றுவிக்கவும் செய்கின்றனர். அவர்களின் முயற்சியையும் உழைப்பையும் புறந்தள்ளிவிட முடியாது.

கடல் கடந்து வாழ்கின்ற இந்தியரை குறை சொல்வதற்கே கோவம் வருகின்றதே, இந்த பாடநூல்களை குறைந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைந்த காலவேளையில் எழுதி வருகின்றவர்களை நாம் மிக குறைவாக மதிப்பிட்டுக் கொள்கின்றோம். ஆய்வக கட்டுரைகளை நேரடியாக பெற்றுக் கொண்டு முழு நேர இலவச இணையத்தைப் பெற்று அமெரிக்காவில் பாடநூல் எழுதுவோருக்கும், எங்கோ ஒரு சிறிய தமிழக நகரத்தில் இருந்து கொண்டு குறைவான ஆய்வுக் கட்டுரைகளை பெற்றுக் கொண்டு இணைய வசதி கூட செய்து தரப்படாத சிறிய அரசு பள்ளிகளில் இருக்கின்ற ஆசிரியர்கள் மிக அண்மையில் நடந்த ஒரு எச்.ஐ.வி ஆய்வினைக் கூட உள்வாங்கி பாடநூல் எழுதியுள்ளமை வியப்பான ஒன்று மற்றுமல்ல பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

பிறகு யாமும் கடல் கடந்து வாழும் இந்தியனே. கடல் கடந்து வாழ்கின்ற நம்மவர்களுக்கு இந்தியா மீது முக்கியமாக தமிழ்நாடு மீது அதிக அக்கறையும் ஆர்வமும் உண்டு என்பது உண்மை. இங்கு வந்த நம்மில் பலர் இங்குள்ளது போல அங்கு வளரவில்லையே என்ற ஆற்றாமையால் பல குறைகளைச் சுட்டி எழுதுகின்றோம். நான் கூட எழுதியுள்ளேன் முக்கியமாக பழக்க வழக்கங்கள், சுகாதார முறைகள், உள்கட்டமைப்புக்கள் சீராக இல்லையே என வருந்தி எழுதியிருக்கின்றேன். அதற்காக தமிழ்நாட்டில் எல்லாமும் குறை என்பதான பார்வையில் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக தமிழக கல்வி நிலைமை மற்றும் பாடநூல்களில் அதிக பரிச்சயம் கொண்டு அதைக் கவனித்து வருகின்றவன் என்ற வகையில் என்னால் அதை தெளிவாகச் சொல்ல முடியும்.

தமிழக பாடநூல்கள் பன்னாட்டு அளவிலான தகவல் செறிவைக் கொண்டுள்ளதோடு மட்டுமின்றி, உள்நாட்டில் மிகச் சிறிய சிற்றூர் பின்னணியில் கொண்ட மாணவன் அதை செறித்து உள்வாங்கும் அளவில் அவை எழுதப்படுகின்றன. அது மட்டுமின்றி ஏற்கனவே சொன்னது போல மிகக் குறைந்த செலவில் குறைவான வசதி வாய்ப்புகளில் இவற்றை எழுதுவதன் சிரமங்களையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் அதை சரிசெய்து திருத்திக் கொண்டும் இருக்கின்றார்கள். அந்த வகையில் வளரும் நாடுகளில் சிறப்பான ஒரு பாடதிட்டத்தை தமிழகம் கொண்டுள்ளது, கற்பித்தல் முறைகளில் அதிக மாற்றம் ஏற்பட்டால் மேன்மேலும் சிறப்படையும்.

முகுந்த் அம்மா said...

@அன்புடன் நீலன் said...

I concur what Varun said.

"நீங்க புரிந்துகொள்ள வேண்டியது, இதே "அன்றைய மாணவர்கள்" இன்றைய அமெரிக்கவாசிகள், ஒரு சில பேசிக்கில்/அடிப்படை அறிவில் தவறான புரிதல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டு அவமானப்படுத்தவும் படுகிறார்கள். அதையும் நீங்க தெரிந்து கொள்ளுங்கள்.

சிலர் என்னடா இதைக்கூட நாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இவ்வளவுதூரம் வந்து இருக்கிறோமே? என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறார்கள்."

He correctly said this. I myself is an example for this. For example, During my masters in Biophysics, I learnt a lot about X-crystallography but without any practical knowledge and experience I just mugged up all the fourier transform and equations. When I came outside for my PhD work, I was humiliated for not knowing the basics and practical inexperience. I was asked to retake the classes on these to complete my course work. That being said, I dont see much changes in curriculum in today syllabus for BSc and MSc,.

People are much overfed, and there is no need for them to learn this much stuff at this age.

Without knowing the basics strongly and hands on practical experience, if you stuff the kids it is useless.


@Varun

"What kind of knowledge a 10th grader in India has? You need to educate me here. Does she or he has any basic understanding or cells and the receptor proteins and the genes which code the proteins? Do they have basic knowledge of biochem or organic chem at this point? I believe their knowledge is very limited at this 10th grader level. Correct me if I am wrong. Or hook them up in my blog, let me have a chat with them on-line. There is no need to teach them genetic engineering at this point. Because they are only going to memorize the gene's name and the receptor protein's name without SEEING what is really going on. They are not going to understand the mechanism. If you dont understand then it will easily "evaporate" after they score a "high mark" in their exam. Trust me I am teaching biochem to some undergraduates here. Even they encounter difficulties when it comes to understanding genes, transcription and translation and how virus enter the cell as they lack proper basic knowledge.I think at this level (10th grader) we should teach the basic biology, biochem and orgo and strengthen their basic understanding of bio molecules like dna, rna, proteins, lipids. If you do, they will excel in the future when they study about immunology or genetic enggg as they will know the basics. That's my opinion!"

I concur each word of you. Even I have same questions to அன்புடன் நீலன்


அன்புடன் நீலன் said...

வருணின் சில தர்க்கங்களை ஒத்துக் கொள்கின்றேன். ஒவ்வொரு வயதினருக்கும் இத்தகையது என அளவிட்டு தான் கற்பிக்க முடியும். அதே போல என்ன தான் உயர்கல்வி நிலைக்கு வந்தவர் கூட சில அடிப்படை அறிவியலைக் கூட விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இங்கு முகுந்தம்மா வைக்கும் வாதத்திற்கு வருவோம். அவரது பதிவின் சாராம்சமே இந்த பத்தாம் வகுப்பு பாடநூலில் factual error இருக்கின்றது என்பதாக எழுதுகின்றார், எய்ட்ஸ் நோய்க்கு மரபணு மருத்துவத்தில் தீர்வில்லை என்பது தான் அவரது எண்ணம். பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் கீழ் basic level மரபியல் கற்பித்தல்கள் தான் இடம்பெற்றுள்ளன. இவை அடிப்படை அறிவியல் அறிவை மாணவர் மத்தியில் உண்டாக்க மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அப் பாடநூலில் மிகச் சிக்கலான மரபணுச் சூட்சுமங்களை எல்லாம் தரவில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

மற்றபடி மதிப்பெண் சார்ந்த கல்விமுறையால் அடிப்படை அறிவை நோக்கிய மாணவர் பயணம் தடைபடுகின்றது என்பதை நானும் ஒத்துக் கொள்கின்றேன். அதற்காக மொத்தக் பாடநூலையே கேள்விக்கு உள்ளாக்குவது நகைமுரண். முகுந்த் அம்மா இதை அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டோ அமச்சிக்கரையில் உட்கார்ந்து கொண்டோ எங்கிருந்து கேட்டாலும் நான் சொல்ல விழைவது. கடந்த பத்தாண்டுகளில் தமிழக கல்வி நிலை பாரிய மாறுதலைச் சந்தித்து வந்துள்ளது. மிக முக்கியமாக பாடநூல் தரம் வெகுவாக உயர்ந்துள்ளது. கற்பித்தல் முறை, மதிப்பெண் சார்ந்த கல்வி முறையில் பல மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே பலரது அவாவும். இந்தியாவின் வாழ்வியல் பொருளாதார அரசியல் சந்தைமுறையும், மக்கள் தொகை பெருக்கத்தின் போட்டி மனப்பான்மையும் செயல்முறை கல்வியை நோக்கிய கல்வித் தரப் பயணத்தை தடுத்துக் கொண்டிருக்கின்றன.

பாடநூல்களில் பல அமெரிக்கப் பள்ளிகளில் கூட தவறுகள், பிழைகள் காணப்படுகின்றன. அமெரிக்கப் பள்ளிகளில் கணிசமான மாணவருக்கு அடிப்படை அறிவியல், கணிதம் மற்றும் அமெரிக்க வரலாற்று ஞானம் கூட மிகக் குறைவாக இருப்பதை சில ஆய்வுகளும், சர்வேக்களும் நிரூப்பிக்கின்றன. அதனால் இந்தியாவின் பாடநூல்கள் மட்டம், அமெரிக்கப் பாடநூல்கள் ஒசத்தி என்பதாகவோ, அல்லது இந்தியாவின் பாடநூல்களே ஒசத்தி என்பதாகவோ பேசுவது எல்லாம் நியாயமற்ற விஷமத்தனமான ஒன்றாகும்.

மற்றது தயவுடன் தமிழ் பதிவுகளில் தமிழில் விவாதிக்கவும். அமெரிக்காவில் உள்ளதால் ஆங்கிலத்தில் விவாதித்து நிரூபிக்கத் தேவையில்லை, கனடாவில் இருப்பதால் எம்மாலும் ஆங்கில விவாதத்துக்குள் போக இயலும் என்றாலும் தமிழ் பதிவுகளில் கூடுமானவரை தமிழில் விவாதிக்கலாமே ! நன்றிகள்.

அன்புடன் நீலன் said...

தமிழகத்தின் நகர்ப்புற இடைநிலை பள்ளி மாணவர்களுக்கு அதாவது சராசரி மாணவர்கள் பலருக்கும் உயிர்வேதியல் மற்றும் உயிரியல் சார்ந்த அறிவுப்புலம் நல்ல நிலையிலேயே தென்படுகின்றன. நான் ஒருமுறை பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்குப் போன போது, ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பலரும் மரபணு மற்றும் உயிரியல் சார்ந்த பல தெளிவான விளக்கங்களைக் கொண்டிருப்பதை நேரில் கண்டு வியந்தேன். மிக முக்கியமாக மரபணு மாற்றங்கள் குறித்த அறிவு அதன் பாரதூர பக்கவிளைவுகள், புற்றுநோயில் மரபியல் தொழில்நுட்பம் ஊடாக சிகிச்சையளிக்கவல்ல உத்திகள் போன்றவற்றை விளக்கினார்கள். ஆக ! தமிழக மாணவர்கள் ஒன்றும் முட்டாள்களோ, தமிழக பாடநூல்கள் மட்டமானதோ, அல்லது ஆசிரியர்கள் தகுதியற்றவர்களோ என எடை போடக் கூடாது. பொது சமூகமும் அரசியல் ஆட்சியரும் வளரும் தமிழகத்தின் கல்வித் தேவையை முன்னிட்டு அதற்கான வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்க அதிக முதலீடுகளை கல்வித் தர மேம்பாட்டுக்கும் கல்வித் தொழில்நுட்ப புகுத்தல்களுக்கும் தர வேண்டும்.

முகுந்த் அம்மா said...

@Neelan
I will try to reply to your other comments, but for your comments about not writing my replies in tamil, and discussing in tamil. I want to give some replies.

I never reply to my blog post comments, because first I don't find time to reply to comments, and if I reply I will do it using my mobile phone and i don't have tamil font in my mobile phone.

I am not doing these things because I want to show others that I am in USA. FYI, I studied in tamil medium till 12th standard in mAdurai in a govt school. I am volunteering as a tamil teacher in Alpharetta tamil
School.

Don't be judgmental and be considerate before making such comments

வருண் said...

****எய்ட்ஸ் நோய்க்கு மரபணு மருத்துவத்தில் தீர்வில்லை என்பது தான் அவரது எண்ணம். பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின் கீழ் basic level மரபியல் கற்பித்தல்கள் தான் இடம்பெற்றுள்ளன.****

நீலன்: நீங்க "ஜீன் தெரப்பி" பற்றி வாசிச்சுப் பாருங்க. அது கொஞ்சம் இல்லை ரொம்பவே பக்கவிளைவுகள் உண்டாக்கும் ஒரு அனுகுமுறை. வேற வழியே இல்லை, அல்லது சாகப்போறவனுக்குத்தான் அதுபோல் அனுகுமுறையில் வைத்தியம் செய்றாங்க.

எச் ஐ விக்கு

* ரிவேர்ஸ் ட்ராண்ஸ்க்ரிப்டேஸ் இன்ஹிபிட்டர்ஸ் மற்றும்

* ப்ரோட்டியேஸ் இன்ஹிபிட்டர்ஸ்தான் இப்போது செயல்பாட்டில் உள்ள மருத்துவம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு ஏன் ஜீன் தெரப்பி பத்தி பேசுறாங்க என்றால். அதை எழுதுவது எளிது என்பதால். "மரபணுவை சரி செய்தல்" னு சொல்லிட்டுப் போயிடலாம். இப்போ மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளை சொல்லணும்னு வச்சுக்கோங்க.

முதலில் எச் ஐ வி, ஒரு ரெட்ரோ வைரச்னு சொல்லணும்? ரெட்ரோ வைரஸ்னா? என்னனு சொல்லணும்.அப்புறம் ரிவேர்ஸ் ட்ராண்க்ரிப்டேஸ்னா என்ன?னு சொல்லணும். அப்புறம் அது எப்படி வேலை செய்யுதுனு சொல்லணும்..ஒரு வார்த்தையில் இதை சொல்வது கடினம்.

அதேபோல்தான் ப்ரோட்டியேஸ் இன்ஹிபிட்டர்ஸ்.. ப்ரோட்டியேஸ்னா என்ன? அது எப்படி ஹை ஐ வி ரிப்லிக்கேசனுக்கு உதவுது. அதை எப்படி என்ஹிபிட் பண்ணனும்? அப்படி இன்ஹிபிட் பண்ணினால் எப்படி வைரஸ் மல்ட்டிப்ளிகேஷனை கண்ட்ரோல் செய்யலாம் என்றெல்லாம் ஒரு வரியில்சொல்வது எளிதல்ல..

நான் என்ன சொல்ல வர்ரேன்னா.. இன்று இருக்கும் மருந்தை விட்டுவிட்டு வரப்போகும் மருந்தைப்பற்ரி சொல்வதற்கு காரணம் என்னனா "மரபணு மாற்றியமைப்பது" "மரபணு திருத்துவது" என்று சொல்வது இரண்டே வார்த்தை கொண்டது என்பதே.. நீங்க நினைப்பதுபோல் எதுவும் இல்லை.

நான் ஏன் இப்படி சொல்றேன் என்றால், நம் மக்களின் மனநிலையை அனுபவித்துப் பார்த்து இருக்கிறேன்.

I talked to one of my relatives who goes to SRM to do his medical course. I started asking what he is studying. He said, "Biochemistry". Then I asked what book you follow?. He said, the book was prepared by the school itself.

I asked what is the difference between RNA and DNA. He answered, DNA has thymine and RNA has uracil. DNA is double helical and RNA is single helical. The answers are all correct only. Then I asked what is the difference between "D-ribose" and "L-ribose". He said it is mirror images. Again the answer is correct but..Here is where the problem starts. He can not write the structures of D-ribose" and L_ribose. He can only tell the answers. It is like you answer correctly without even knowing exactly what it is. I am talking about undergraduates here in India. You are talking about teaching "gene therapy" to 10th grader!

Here, in US, organic chemistry is a prerequisite for biochemistry. You need to learn and understand what is chirality and enantiomers before you learn about DNA. If one learnet organic, he/she will know exactly what she/he means when she/he says it is "mirror images"! :)