Tuesday, October 27, 2015

அரபு நாட்டில் அடிமைகள் ஆகும் வேலைகார பெண்கள்?

வீட்டு வேலைக்கு என்று அரபு நாடுகளுக்கு அழைத்து செல்லப்படும் வேலைக்கார பெண்கள் பின்னர் எப்படி கொடுமை படுத்தப்பட்டு சில நே ரங்களில் கொல் லபடுகிறார்கள் என்றெல்லாம் அவ்வப்பொழுது கேள்வி பட்டு/படித்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சரி இன்னொரு வெளிநாட்டு வேலைக்கு சென்று கஷ்டபடுகின்ற பெண்ணின் இன்னொரு கதை, என்று கடந்து சென்று இருக்கிறேன்.

ஆனால், நேற்று அரபு நாட்டு வேலைக்கு சென்று தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகி அந்த நாட்டு அரசியல் சட்டப்படி கர்ப்பமானது தெரிந்தால் சாவை சந்திக்க நேரிடும் என்ற நிலையில் சொந்த நாட்டின் ரேடியோ ஸ்டேஷன் மூலம் தொடர்பு கொண்டு தப்பித்து பிலிப்பைன்ஸ் நாடு சென்ற மோனிகா என்ற பெண்ணின் கதையை Raped, pregnant and afraid of being jailed என்ற BBC செய்தி மூலம் படிக்க நேர்ந்தது. அதன் தொடுப்பு செய்தியாக நைஜீரியா நாட்டின் மற்றொரு பெண் Almaz என்றொரு பெண்ணின் கதையையும்  படிக்க நேர்ந்தது. அல்லது படங்களாக பார்க்க நேர்ந்தது . கண்ணீர் வரவழிக்கும் கதைகள் இவை எல்லாம்.

இதே போன்றொரு செய்தியையும் அதனை தொடர்ந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் முடிவான இனிமேல் வீட்டு வேலைக்கு என்று பெண்களை அனுப்புவதில்லை என்ற முடிவும் அதே போல எதியோபியா மற்றும் நேபால் போன்ற நாடுகள் லெபனான் நாட்டுக்கு வேலைக்கார பெண்களை அனுப்புவதில்லை என்ற முடிவு குறித்து பல செய்திகளும்  படிக்க நேர்ந்தது.எல்லா கதைகளும் கிட்டத்தட்ட எப்படி பெண்கள் வீட்டு வேலைக்கு என்று அழைக்கப்பட்டு அடிமைகளாக மாற்ற படுகிறார்கள் என்று தெரிவிக்கின்றன. இதனை படித்த பிறகு, வேலைக்கு சேரும் அரபு நாட்டினரால் இந்த நிலையை பெண்கள் அடைகிறார்களா? அல்லது அங்கே சென்ற  இந்திய குடும்பங்களும் இந்த கொடுமையை செய்கின்றனவா ? என்று பல கேள்விகள் என்னுள்ளே.

என்னெனில், எனக்கு தெரிந்து அரபு நாடுகளில் சென்று செட்டில் ஆன இந்தியர்கள் கூட டொமெஸ்டிக் ஹெல்ப் என்று சிலரை உதவிக்கு வைத்து கொண்டவர்களை பார்த்து இருக்கிறேன். சாப்பாடு, காப்பி எல்லாம் அவர்களுக்கு கிடையாது. ஒவ்வொரு மாதமும் இந்திய ரூபாயில் 15-20 ஆயிரம் பணம். ஷிபிட் முறையில் வேலை செய்வார்கள். காலையில் இருந்து மாலை வரை வேலை. இதற்க்கு வேலைக்கு பிடித்து தருவதற்கு என்றே சில எம்ப்லோய்மென்ட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. லோக்கல்இந்தியன்  கம்யுநிடியில் சொன்னால் போதும், வேலைக்கு ஆட்களை அனுப்பி விடுவார்கள்.
இன்னும்  பலர் எனக்கு தெரிந்து , தின வேலைக்கு இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வீட்டு வேலைக்கு என்று ஆட்களை வைத்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் இப்படி வேலைக்கு வரும் பெண்கள் பலரும் ஸ்ரீலங்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பதை காண நேர்ந்தது. அதே போல, பல அரபு பெண்களும் தங்களுக்கு உதவியாக பிலிப்பைன்ஸ் பெண்களை அழைத்து கொண்டு ஷாப்பிங் வருவதை பார்க்க முடிந்தது.

இப்படி வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உண்மையில் பாதுகாப்பு கொடுக்க படுகிறதா? அல்லது மனித உரிமைகள் மறுக்கபடுகிறதா? இல்லை பிலிப்பைன்ஸ் பெண் மோனிகா போல அடிமை போல நடத்தப்பட்டு கொடுமை படுத்த படும் நிலை இருக்கிறதா? வெளியேற நினைத்தாலும் சட்டங்கள் அதற்க்கு துணை வருகிறதா?, இல்லை அவர்களின் சொந்த நாட்டின் உதவியை  சுலபமாகஅணுக முடியுமா?  அடுக்கடுக்கான கேள்விகள் தொக்கி நின்றாலும்.

அடி மனதில் கனமாக நிற்பது எப்படி ஒரு சக மனிதனை அடிமை போல் இப்படி  நடத்த இந்த மக்களுக்கு மனது வருகிறது? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


References

http://www.economist.com/node/16953469
http://www.bbc.com/news/magazine-34616879
http://www.bbc.com/news/magazine-29415876
http://www.huffingtonpost.com/josie-ensor/maids-made-into-slaves-in_b_397648.html9 comments:

Abdul Khader said...

Dear Mukunth Amma,
I have read your article on the status of Housemaids in Arab Countries. Upto a certain extent your comments are correct. Some 30-40%of the Arabs treat the maids in a bad manner. These rich people do not know the difficulty of poor. Even in India most of the rich are having the same attitude towards the poor, Correct?.
At the same time There are good Arabs they treat them with some dignity and they are helpful people also. They are not arrogant and have some soft corner for these maids. We cannot blame all. I know some Arab friends they are good and they treat the maids in a good manner.

I have been in Dubai UAE and I know this issue. I just share with you.
I read some of your articles and like the way you write.
Keep up the good work and continue writing.

Regards
Izzath, Dubai UAE.

ஹுஸைனம்மா said...


http://hussainamma.blogspot.com/2012/02/g-1.html
http://hussainamma.blogspot.ae/2012/02/g-2.html

ஹுஸைனம்மா said...

என் பதிவில்:

//என் சந்தேகம் இதுதான்: அரபிகள் கொடுமைப்படுத்துகிறார்கள என்று சொல்கிறார்கள். எவ்வளவுக்கு உண்மையோ. ஆனால், எந்தக் கொடுமைகளும் செய்யாத, பணிப்பெண்களைக் குடும்பத்து அங்கத்தினர் போலப் பாவித்துப் பழகும் எங்களைப் போன்ற சக நாட்டவரை ஏன் இப்பெண்கள் ஏமாற்றிக் கைவிடுகின்றனர்? சொந்தமாக விஸா எடுக்குமளவு வசதி இல்லாதவர்கள், ஃபிரீ விஸா பணிப்பெண்களை வைத்தால், திடீர் திடீரென நின்றுவிடுவது, அல்லது இருப்பதைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுவது போன்றவையில் ஈடுபடுவது; அதிகச் செலவு செய்து விஸா எடுத்தால், வீட்டில் ஆள் இல்லாததைப் பயன்படுத்தி, தவறான காரியங்களில் ஈடுபடுவது, திடீரென (காரணமேயில்லாமல்) ஊருக்குப் போகணும் என அடம் பிடிப்பது, தூதரகத்தில் பொய்யான புகார் கொடுப்பது - இவையெல்லாம் ஏன்? எங்களைப் போலவே நீங்களும் குடும்பத்திற்காக வருந்தி பணம் சம்பாதிக்க வந்திருக்கிறீர்கள் என்பதாலும், உறவுகளை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள் என்பதாலும், எங்களுக்கும் உங்கள் சேவை அவசியம் என்பதாலும் உங்களிடம் அன்போடு நடந்துகொண்டும் ஏன் இப்படி வஞ்சகம் செய்து எங்களை நோகடிக்கிறீர்கள்?//

முகுந்த் அம்மா said...

@Hussain amma


Good posts about your personal experience in keeping domestic help, I just read all of them. From your point of view as a consumer you have given all the reasons of why workers deceit. But the point here is, how many times these kinds of deceitful nature of the domestic helpers causes physical abuse and death to the families who keep them for domestic help.

@Hussain amma
and @Izzath, Dubai UAE.

Nailing down on good/reliable person as a helper is always a problem, It is a double sided sword.
But when you compare the amount of tortures or problems the maids go through from the masters outgrows all the other domestic small issues that maids cause to the families. Because torture and death is the result here, which is sometimes blown out of proportion by media as well.

Anyway, thanks for sharing your opinion. I appreciate both comments.

nerkuppai thumbi said...

ஒரு தகவல் : குர்ஆனில் சொல்லியிருப்பது தம் மனைவியுடனும் தம் வலக்கரமான அடிமைப் பெண்களுடனே மட்டும் உடலுறவு கொள்ளலாம். வேறு பெண்டிருடன் கூடுவது ஹராம். ஆகவே, வேலைக்கு வரும் பெண்களை அடிமைகளாகக் கருதுவதும் அவர்களுடன் உறவு ஹராம் இல்லை என்ற எண்ணம் இஸ்லாமிய குறிப்பாக அரேபியர்களிடம் உள்ளது. வேதம் அனுமதிக்கிறது என்ற பலம்.

பின்னூட்டக்காரர்கள் சொல்வது இது போன்று நம் நடப்பது இல்லையா என்பது தான். இரண்டும் ஒன்றாகாது.

வேகநரி said...

அரபு நாடுகளுக்கு பெண்கள் வேலைக்கு செல்வதை தடைவிதிப்பதே ஒரே வழி.இந்தோனிசியா நாட்டிலும் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்களின் பல துயர கதைகள் உண்டு. இத்தனைக்கும் அவர்கள் அரபுகளுடன் மத ரீதியாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள்.

ராஜ நடராஜன் said...

Let me add a balanced comment.Check the expatriates women status of majority of the nationals like Indians, Sri lankans,Filipino, Napalesh, Ethiopians house maids and compare the crime numbers. May be many issues hidden or unnoticed.

Certain crimes which are come to light with media are written,shown and forgotten. The major players like embassy,human rights groups,the so called world police America all bow down to gulf oil and money.

Hussainamma got a valid point. There is a cultural clash and language barrier at both end. But who adjust the dress code,learn the language,soft approach succeed and go along with the tide. A few Arabs are not having seasoned behavior but is there is a society 100% flawless? Present internet world have given them an open minded attitude ,mind diversion.

Many are westernized and cultured too. Those who work in the office,shops,boutique,Ladies Saloon,Contract cleaning labours do not face human abuse but they have their own economical problems.

Do Syrians,Egyptian,Lebanese come under the banner of Arabs? No! but they are also part of the problem.

Media outcry,blog expression....solution? Do the Asian,African governments have the domination over the Arab world? Other side of the coin is why many flock the Arab world?

ராஜ நடராஜன் said...

நெற்குப்பை தம்பி:) தேன்கூட்டுல குளவிகளை விரட்டுறதுக்கு பதிலா கொசுவை ஓட்டுகின்றீர்களே! தனி மனித குண நலன்களுக்கு குர் ஆனை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? ஐந்து நேரம் தொழுது அமைதியாகவே இருக்கிறார்கள் அரபுகள்.

வேகநரி said...

ஸ்ரீலங்கன் அரசின் பாரட்டதக்க நல்ல முயற்ச்சி.
http://www.bbc.com/news/world-asia-35166951