19ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதி, ஒரு ஜெர்மன் பயோகெமிஸ்ட் ஒருவர் நியூக்ளிக் ஆசிட் என்ற ஒன்றை கண்டுபிடித்தார். பின்னர், நிறைய நியூக்ளிக் ஆசிட் கொண்ட ஒரு செயின் கார்போஹைடிரேடாலும்,பாஸ்பாரிக் அமிலத்தாலும் நிறைய நைட்டிரஜன் அணுக்கள் நிறைந்த காரத்தாலும் நிறைந்திருப்பதை கண்டு பிடித்தார் அதற்கு, டி.என்.ஏ/ஆர்.என்.ஏ என்று பின்னர் பெயரிடப்பட்டது.
1943 ஆம் ஆண்டு Oswald Avery என்ற அமெரிக்க விஞ்ஞானி, இந்த டி.என்.ஏ அல்லது ஆர். என். ஏ என்பது, மரபுப்பொருட்களை கொண்டிருக்கலாம், அதன் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த நிகழ்வுகள் கடத்தப்படலாம், என்றும் கண்டுபிடித்தார்.
டி.என்.ஏ என்பது மரபுப்பொருளைக் கொண்டது என்று கண்டுபிடித்தாலும் அது எப்படி இருக்கும், எந்த தோற்றம் கொண்டது என்று யாரும் அறிந்திருக்கவில்லை.
1953 ஆம் ஆண்டு, ஜேம்ஸ் வாட்ஸன் & ஃபிரான்ஸிஸ் கிரிக் ஆகிய இருவரும் x-ray crystallography முறையை பயன்படுத்தி டி.என்.ஏ என்பது டபுள் ஹெலிக்ஸ் எனப்படும், முருக்கிவிட்ட ஏணி போன்ற ஒரு தோற்றம் கொண்டது என்று கண்டுபிடித்தனர்.
மேலே உள்ள படத்தில் இருப்பது போன்ற தோற்றம் கொண்டது தான் டி.என்.ஏ என்று கண்டுபிடித்ததற்க்காக, வாட்சன் அவர்களுக்கும் கிரிக் அவர்களுக்கும் 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.
சரி, இப்போது எப்படி, வாட்ஸனும் கிரிக்கும், டி. என். ஏ தோற்றத்தை கண்டுபிடித்தார்கள் என்று பார்க்கலாம்.
முதலில், டி.என்.ஏ வை, உயிரினத்திலிருந்து பிரித்து எடுக்க வேண்டும், இதற்காக, எச்சில், ரத்தம் போன்ற பல பொருள்கள் பயன்படுத்தபடுகின்றன.
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பது, சாம்பிளில் இருந்து பிரிக்கப்பட்ட டி.என்.ஏ.
டி. என். ஏவை மட்டும் பிரித்த பிறகு, அதனை படிமங்களாக்குகின்றனர்.
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பது, படிமங்களாக்கபட்ட டி. என்.ஏ ஆகும்.
அடுத்து, படிமங்களாக்கப்பட்ட டி.என்.ஏக்களை, x-ray crystallography, எனப்படும் x-ray ஒளிச்சிதறல் முறையை பயன்படுத்தி சிதறச்செய்கின்றனர்.
மேலே உள்ள படத்தில் இருப்பது சிதறடிக்கபட்ட டி.என்.ஏ ஒளி.
பின்பு, சிதறச்செய்த ஒளியை ஒன்று படித்தி, இது தான் டி.என்.ஏவின் தோற்றம் என்று கண்டு பிடிக்கிறார்கள்.
சரி, இப்போது தலைப்புக்கு வருவோம்,
இத்தனை கஷ்டப்பட்டு வாட்ஸனும், கிரிக்கும், கண்டுபிடித்த டி.என்.ஏ தோற்றத்தை, வெறும், சாதாரண மைக்கிராஸ்கோப் அடியில் சாம்பிளை வைத்து கொண்டு ஸ்ருதிஹாசன் 7 ஆம் அறிவு படத்தில் கண்டுபிடிக்கிறார். எப்படி பட்ட மைக்கிராஸ்கோப் அது?, டி.என்.ஏ ஸ்ட்ரெக்சரை, காட்டுகிறது என்று சொன்னால் x-ray crystallography செய்யும் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும், செய்வாரா Mr. A. R. முருகதாஸ் அவர்கள்?
தன்னுடைய தந்தை வெறும் டெலஸ்கோப் வைத்துகொண்டு, வைரஸ் பரவுவதை தசாவதாரம் படத்தில் காணுவதை விட ஸ்ருதிஹாசன் செய்வது பரவாயில்லை என்றாலும், எப்படி எல்லாம், அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.

19 comments:
//அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.//
எனக்கும் தான் பாஸ்,,,
அட போங்க முகுந்தம்மா 7 ஆம் அறிவு கொண்ட ஸ்ருதிஹாசனுக்கும் + தமிழ்மக்களுக்கும் புரிஞ்சு போச்சு. உங்க கடுப்புக்கு காரணம் 6 அறிவு உள்ள உங்களுக்கு புரியாம இருப்பதுதான். அடுத்த தடவை இந்தியாவிற்கு போகும் போது 7 ஆம் அறிவை ஒரு 5 கிலோ வாங்கி வாங்க அப்பறமா தமிழ் படம் பாருங்க எல்லாம் கடுப்பு இல்லாம சூப்பரா புரியும்
//தன்னுடைய தந்தை வெறும் டெலஸ்கோப் வைத்துகொண்டு, வைரஸ் பரவுவதை தசாவதாரம் படத்தில் காணுவதை விட ஸ்ருதிஹாசன் செய்வது பரவாயில்லை//
இதுவும் டி.என்.ஏ. பண்ணுற வேலைதான் போலிருக்குது! :-)
/வெறும், சாதாரண மைக்கிராஸ்கோப் அடியில் சாம்பிளை வைத்து கொண்டு ஸ்ருதிஹாசன் 7 ஆம் அறிவு படத்தில் கண்டுபிடிக்கிறார். எப்படி பட்ட மைக்கிராஸ்கோப் அது?, //
hahaha mukundamma, he is hilarious and amusing kind...
here you go...
மேட்டிமைத்தனம் + போலி அறிவியல் = ஏழரை அறிவு!
ரமணாவில் விஜயகாந்தை விண்டோஸ் மீடியா பிளயரில் டைப் அடிக்க விட்ட முருகதாஸிடமிருந்து இதுக்கு மேலயும் எதிர்பார்ப்பது உங்கள் தவறு.
ஆனா முருகதாஸுக்கும் வாட்சன்&கிரிக் இவுங்களுக்கும் ஒரு ஒத்துமை உண்டு. இரண்டு பேர்களும் கொஞ்சம்கூட கூச்சநாச்சம் இல்லாமல் அடித்தவனின்
ஐடியாவை சுடுபவர்கள் என்பதுதான் அது. (ரோசலண்ட் பிராங்க்லின் என்ற பெண் விஞ்ஞானியின் x-ray crystallography dataவை சுட்டுதான் வாட்சன்&கிரிக் DNA வடிவை கண்டறிந்தனர்.)
தசாவதாரம் படம் எடுக்கும் போது ஏதாவது சந்தேகம்னா உடனே கமல் அமெரிக்காவுக்கு தொலைபேசுவாராம். இத எப்படி அமெரிக்கா காரங்க சொல்லல.
அதேபோல, முருகதாஸ் கூட தானாவே யோசிச்சிருப்பார் போல :)) தமிழ் சினிமால மரபணுகூறுகள், அது கடத்தப்படும் விதம் பற்றி இப்புடி பேசினா தான் எடுபடுமின்னு யோசிச்சிருக்காரு வழக்கமான எல்லாரையும் போல.
நான் படம் பார்க்கல.
இதுவும் டி.என்.ஏ. பண்ணுற வேலைதான் போலிருக்குது! :-)
:-)))))))))))))))))))))
வாழ்த்துகள்
நன்றாகச் சொன்னீர்கள் முகுந்த் அம்மா. வெள்ளிக்கிழமை பார்த்ததிலிருந்து எழுதவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மிகக் கோபம் வந்தது. அறிவியலில் ஆலோசனை கூறக்கூடிய எவரிடமாவது ஆலோசனை கேட்கப்பட்டதா தெரியவில்லை. ஒரு undergraduate student ஜக் கேட்டாலே சொல்லியிருப்பர். DNA ஜ microscope இல் பார்த்தது மட்டுமன்றி நோய்கள் பரம்பரையாகக் கடத்தப்படுவது போது knowledge, martial arts skills உம் அதில் தேர்ச்சி பெற்றவரது DNA ஜப் பெற்றதும் எந்த வித பயிற்சியும் அறிதலும் இன்றி கிடைத்துவிடும் என்று சொன்னது அதற்கு மேல் எனக்குக் கடுப்பேற்றியது. அறிவியலைப் பற்றி அநேகமாக ignorant ஆக இருக்கும் ஒரு சமூகத்திடம் அதை ஒழுங்காக விளங்கப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை, இந்த மாதிரி மிகப் பிழையான கருத்துக்களைக் கொடுப்பது மிகவும் கெடுதலானது. There are so many kids science books they could have read. ARGHHH!
மூன்றாம் கோணம்
பெருமையுடம்
வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30
இடம்:
ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்
போஸ்டல் நகர்,
க்ரோம்பேட்,
சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )
11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து
எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்
அரசியலோ சினிமாவோ.. எரியர கொள்ளியில் எந்தகொள்ளி ரேஞ்சுலயே பார்க்கவேண்டியதா இருக்கு..
அப்பாவுக்கு மக பரவாயில்ல ரேஞ்சுக்கு
:(
அருமையான பதிவு. மரபணு பற்றி நன்றாக எழுதியுள்ளீர். வாழ்த்துகள்.
Very nice ----
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.
//தன்னுடைய தந்தை வெறும் டெலஸ்கோப் வைத்துகொண்டு, வைரஸ் பரவுவதை தசாவதாரம் படத்தில் காணுவதை விட ஸ்ருதிஹாசன் செய்வது பரவாயில்லை என்றாலும், எப்படி எல்லாம், அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.//
தசாவதாரத்தில், படம் பார்க்கும் சாமானிய மக்களுக்கு புரியவைக்க வைக்கப்பட்ட காட்சி. அபத்தம் என்றாலும், நீளமான படத்தில் சுருக்கமாக காட்ட பயன்படுத்தப்பட்ட உத்தி அது. ஆனால், அந்த அபத்தங்கள் எல்லாம் தமிழ் சினிமாவிற்கு மட்டுமே உரியது என்று நீங்கள் சொல்வது தான் இடிக்கிறது.
:-) பாவம் முருகதாஸ். இனிமே போஜ்புரி மொழில மட்டும்தான் படம் எடுக்கப்போறேன்னு சொல்லிருக்காராம்ல :-) . . நல்ல போஸ்ட்.
this is too much...dont expect a scientist from an artist. if you do, you may a fool and not an artist.
Excellent post. Highly informative. சில சமயம் கவிதைகளுக்கு இலக்கணம் தேவை இருக்காது. அது போல நம் தமிழ் சினிமாவுக்கு லாஜிக் எல்லாம் ஏது? முருகதாஸ் மற்றும் குற்றவாளி இல்லை, அவருக்காக ஸ்க்ரிப்ட் ரிசர்ச் வொர்க் (பண்ணினார்களா என்ன?) செய்த அசிஸ்டெண்ட் டைரக்டரின் கவனக் குறைவு.
கடுப்பைக் கிளப்புறாரு மைலார்ட் :-)
Post a Comment