Tuesday, September 29, 2015

மோடி என்னும் ஒரு ராக் ஸ்டார்..


மறுபடியும் ஒரு அரசியல் பதிவு.

என்னதான் எழுத கூடாது என்று நினச்சிட்டு பேசாம இருந்தாலும் இந்திய பிரதமர் மோடி ஒரு ராக் ஸ்டார் பெர்பார்மன்ஸ் கொடுத்து நம்மள வாய திறக்க வச்சிடுவார் போல.

FB தலைமையகத்தில எப்படி பேசினார் தெரியுமா எங்க மோடி? என்று மோடி ஜால்ராக்கள் சத்தம் தாங்க முடியவில்லை. அதோட FB யின் டிஜிட்டல் இந்தியாவில் வெரி பலரும் சேர்ந்து தங்களுடைய ப்ரொபைல் படத்தை மாற்றி வைத்து இருந்தார்கள்.

அதுமட்டும் அல்ல, அவர் எத்தனை உடைகள் மாற்றினார். எப்படி ஒரு முறை உடுத்தினதை இன்னொரு முறை உடுத்தவில்லை என்று பெருமை வேறு. இதில இன்னும் சிலர் அவரின் கேமரா மோகத்தை அவர் மார்க் ஜுகேர்பெர்க் ஐ இழுத்து காமெராவை மறைக்காதே என்பது போல போஸ் கொடுப்பது எல்லாம் போட்டு இருந்தனர்.  


எனக்கு தெரியாம தான் கேட்குறேன், இவரு பிரதமரா, இல்ல ராக் ஸ்டார் ஆ. பொதுவா, கேமரா மோகம், உடை மோகம் கொடண்டவங்க எல்லாம் பொண்ணுங்க அப்படின்னு சொல்லுவாங்க..இல்லாட்டி ராக் ஸ்டார்ஸ் அல்லது சினிமா பிரபலங்கள் இப்படி செய்யலாம். ஆனா, ஒரு நாட்டுக்கு பிரதமர், இப்படி கேமரா மோகம் பிடித்து ஆட்டுவது சிரிப்பாக இருந்தது. இதில எப்படி டீல்  போட்டு இருக்கார் தெரியுமா என்று ஜால்ரா சத்தம் தாங்க வில்லை.

அதோட, FB தலைமையகத்துல ஹிந்தில பேசுறாருப்பா...உடனே இந்தி தேசிய மொழி அப்படின்னு ஆடாதீங்க..பேசுங்க இந்தியாவில பேசுங்க..ஆனா வெளி நாட்டுக்கு வந்து பேசும் போது எல்லாருக்கும் புரியிற மாதிரி பேசினா, எங்கள போல ஹிந்தி தெரியாதவங்களும் புரிஞ்சிகிரலாம்ல..

நம்ம பக்கத்து நாடு சீனா, Baidu, Qihoo அப்படின்னு சத்தம் இல்லாம கூகிள் ஐ மாத்திட்டு இருக்கான். அதே போல, அலிபாபா அப்படின்னு ஒன்ன வச்சிட்டு அமேசான் ஐயும் மாத்திட்டு இருக்கான். இப்படி எல்லாத்திலையும் தன்னிறைவு பெறுவதோட அல்லாம, அமெரிக்கா கண்ணுல விரல விட்டு பொருளாதாரத்துல ஆட்டிட்டு இருக்காங்க..இவரு என்னடான்னா, ராக் ஸ்டார் ஆகி கூத்தாடிட்டு இருக்காரு. 

ஆனா சரியான பாலிவூட் பெர்போர்மான்ஸ்..எந்த நாட்டு பிரதமரும் கொடுக்காத ஒரு பெர்போர்மான்ஸ் கொடுத்துட்டு போய் இருக்கார். அதுக்கு எல்லாரும் ஜோரா கை தட்டுங்கப்பா.

நன்றி.

டிஸ்கி.

என் வீட்டுக்கு ஆட்டோ வரப்போவது நிச்சயம். 

14 comments:

நேர்கோடு said...

exactly my feelings.

BJP in TN (or Tamil reading community) is not strong enough to send autos.

boopathy perumal said...

This Rockstar done same thing in Dubai. He spent 8 minutes with 300 labors at Abudhabi labor camp as usual taken with SELFI

நந்தவனத்தான் said...

அவரின் விளம்பர மோகம் ஊரறிந்த ஒன்றுதான். ஆனால் என்னை ஆச்சர்யப்படுத்தியது அமெரிக்கவாழ் இந்தியர்கள் 'ஆஊ' என்று கத்தியபடி அவருக்கு கொடுத்த வரவேற்ப்புதான். இசை கச்சேரிகளில் டீன் ஏஜ் ரசிகர்களைப்போல் அமெரிக்காவில் அதிக சம்பாதிக்கும் - படிப்பறிவுள்ள இனத்தவர் நடந்து கொண்டது வியப்புக்குரியது.

இந்தியர்களால் டிஜிடல் இந்தியா எனும் புராஜக்ட் மூலம் ஃபேஸ்புக் மேலும் இந்தியாவில் பரவ இருப்பது பற்றி ஒருவர் - விங்கிள்வாஸ் இரட்டையர்கள் இப்பத்தான் நிம்மதியாக சிரிப்பார்கள். அவனுங்கதான் உலக மகா இளிச்சவாயனுங்க என ஃபீல் பண்ணுகிட்டு இருந்தானுக. இப்பதான் மில்லியன் மக்களை முட்டாளாக்கிய மார்க்கின் திறமை பற்றி இன்னமும் தெரிஞ்சுகிட்டு இருப்பார்கள் என்று ஃபேஸ்புக்கிலேயே எழுதியிருந்தார்.

நந்தவனத்தான் said...

இதுவரைக்கும் மோடி ஆதரவாளர்கள் வரவில்லை ஆதலால் இந்த பின்னூட்டம்.

//நம்ம பக்கத்து நாடு சீனா, Baidu, Qihoo அப்படின்னு சத்தம் இல்லாம கூகிள் ஐ மாத்திட்டு இருக்கான்.//

சைனாக்காரன் சர்வதிகாரி. அவங்க நாட்டில் கூகிள், மூஞ்சிபுத்தகம் எல்லாத்தையும் தடை பண்ணீட்டு அவங்க நாட்டு வெப்சைட்டை விட்டுருக்கான். நம்ம நாட்டில் அமெரிக்க தளங்கள் எல்லாத்தையும் தடை செய்தால் நம்மூர் சாப்வேர்காரனுகளும் சைனாக்காரன் மாதிரி கூகிளையும் மூஞ்சிப்புத்தைகத்தையும் காப்பி அடித்து வெப்சைட் உருவாக்கீருவானுக. ஆனா இது இந்தியாவில் சாத்தியமா? போர்ன் சைட்டுகளை தடை செய்தற்கே நம்மூர் கருத்துரிமை கந்தசாமிகள் பொங்கிவிட்டார்கள்.

//அலிபாபா அப்படின்னு ஒன்ன வச்சிட்டு அமேசான் ஐயும் மாத்திட்டு இருக்கான்//

ஏங்க ஃபிலிப்கார்ட் பத்தி கேள்விப்பட்டதே இல்லையா? (சிங்கப்பூர் based என்றாலும் இந்திய கம்பனி)

நந்தவனத்தான் said...

//ஆனா வெளி நாட்டுக்கு வந்து பேசும் போது எல்லாருக்கும் புரியிற மாதிரி பேசினா, எங்கள போல ஹிந்தி தெரியாதவங்களும் புரிஞ்சிகிரலாம்ல..//

சைனாவை நீங்கள் இழுத்ததால்... சீன அதிபரிடம் எவனாது சைனாக்காரன் இங்கீலீசுல பேச சொல்லுவானா? நாம பலர் நினைக்குற மாதிரி இல்லாம சைனாவில் மாண்டிரின் கேன்டனீஸ் ன்னு 2 மொழி இருக்கே. சீன அரசு கேண்டனீஸ் பேசும் மக்களிடையே மாண்டிரின் மொழியை கட்டாயமாக திணிக்கிறது.கேண்டனீஸ் பேசுறவன் யாராவதுக்கு சீன அதிபரை அமெரிக்காவில் இங்கிலீசு பேசச் சொல்ல தில்லு இருக்கிறதா?

சைனா அதிபர் மாதிரியே மோடிக்கும் ஆங்கிலம் வராது என்ற நிலைமையும் இருக்கலாம் அல்லவா? சீன அதிபர் ஆங்கிலம் பேசாமல் வண்டி ஓட்டும் போது மோடி ஓட்டக்கூடாதா? ஏதோ சுமாரான ஆங்கிலத்தை வைத்து பர்னல் கான்வர்சேசன்களை ஓட்டிவிடலாம், ஆனால் மேடைப்பேச்சு? மேடையில் ஏதாவது விஜயகாந்த் மாதிரி மோடி ஆங்கிலத்தில் உளறி வைத்தால், அதை வைத்து டிவிட்டர் பேஸ்புக்கில் சிலநாள் ஓட்டத்தானே அவரை ஆங்கிலம் பேசச் சொல்லுகிறீர்கள்?

Avargal Unmaigal said...

///சீனா, Baidu, Qihoo அப்படின்னு சத்தம் இல்லாம கூகிள் ஐ மாத்திட்டு இருக்கான். அதே போல, அலிபாபா அப்படின்னு ஒன்ன வச்சிட்டு அமேசான் ஐயும் மாத்திட்டு இருக்கான். இப்படி எல்லாத்திலையும் தன்னிறைவு பெறுவதோட அல்லாம, அமெரிக்கா கண்ணுல விரல விட்டு பொருளாதாரத்துல ஆட்டிட்டு இருக்காங்க.///

நல்லா சொன்னீங்க ஆனா சீனா தன்னிறைவு அடைய வேண்டு மெறு அப்படி செய்யுறாங்க ஆனால் நாம் மோடி இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக ஆக்க முயற்சிக்கிறார். அதுதான் மோடி செய்வது

Avargal Unmaigal said...

உங்களை மாதிரி உள்ள பெரிய ஆட்களுக்கு ஆட்டோ எல்லாம் அனுப்ப மாட்டாங்க விமானம் அல்லது ஹெலிகப்டர்தான் வரும் எதுக்கும் ஜாக்கிரதை

நந்தவனத்தான் said...

//ஆனால் நாம் மோடி இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக ஆக்க முயற்சிக்கிறார்.//

தான் மட்டும் அமெரிக்க குடியுரிமை வாங்கி அமெரிக்காரனுக்கு அடிமையாக இருக்கலாம். ஆனா தான் பொறந்த இந்தியா மட்டும் அமெரிக்க அடிமையாக இருக்க கூடாது... இப்படி சிந்திக்கும் பரந்த உள்ளங்கள் வாழும் அமெரிக்காவில் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போதே புல் மட்டுமல்ல.. எல்லாமே அரிக்கிறது!!!

வேகநரி said...

//சைனாவை நீங்கள் இழுத்ததால்... சீன அதிபரிடம் எவனாது சைனாக்காரன் இங்கீலீசுல பேச சொல்லுவானா? நாம பலர் நினைக்குற மாதிரி இல்லாம சைனாவில் மாண்டிரின் கேன்டனீஸ் ன்னு 2 மொழி இருக்கே. சீன அரசு கேண்டனீஸ் பேசும் மக்களிடையே மாண்டிரின் மொழியை கட்டாயமாக திணிக்கிறது.கேண்டனீஸ் பேசுறவன் யாராவதுக்கு சீன அதிபரை அமெரிக்காவில் இங்கிலீசு பேசச் சொல்ல தில்லு இருக்கிறதா?//

சகோ நந்தவனத்தான்,
இந்திய பிரதமருக்கு தமிழ் தெரிந்தா கூட அவர் தமிழில் பேசுவதை தமிழர்கள விரும்பமாட்டார்கள். பிரதமர் இங்கீலீஸுல பேசினா தமிழர்களுக்கு பெருமையாகவும், அழகாக இருக்குமில்லையா! அதனா தான் இதையெல்லாம், தமிழங்களின் அளப்பரிய ஆங்கில ஆசையை புரிஞ்சு கொண்டு ஜயமோகன் தமிழை எழுத்துகளை ஆங்கிலத்திலே எழுதலாமே என்றார்.இந்தாள் என்ன தமிழுக்கு அநீதி செய்கிறர் என்று அப்போ நினைச்சேன். சகோ நந்தவனத்தான் அப்போ சொன்னது பின்பு தான் புரிஞ்சது.

நந்தவனத்தான் said...

@சகோவேகநரி

மோடி ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட தமிழ்நாட்டு மாணவிக்கு இந்தியில் பதில் சொன்ன விவகாரத்தில் நானும் அந்தாள் மேல் கடுப்பில்தான் இருந்தேன்.ஆனால் பாப்புலாரிட்டி பிரியரான மோடி மார்க் ஜுகர்பர்குடன் நடந்த உரையாடலில் இந்தியில் மட்டும் பேசிய பின் அவருக்கு ஆங்கிலம் பேச வராததுதான் காரணமாக இருக்க முடியும் என்று ஊகிக்கிறேன். வடக்கில் இந்தி தெரியாதவன் பிரதமராக முடியாது என நினைக்கிறார்கள், ஆனால் நம்மாளுக பலர் ஆங்கிலம் தெரியாத மோடி எப்படி பிரதமரானார் என கிண்டலடித்து வருகிறார்கள்! அந்தாளு என்ன இங்கிலாந்து பிரதமராகவா ஆயிட்டாரு? என்னமோ போங்க!

முகுந்த் அம்மா said...

I found his English speech video that he delivered in Australia.

http://youtu.be/97xyM7BVcos

நந்தவனத்தான் said...

அவரு பேசுனது ஆங்கிலம்தானா? :)) ஹெவியான வடக்கு வாசம்.

பொதுவாக அரசியல்வாதிகளை உரைகளை நான் கவனிப்பதில்லை. ஆனால் இப்போது தேடியதில் அவர் நீயுயார்க்கின் Central Park-ல் Huge Jackman முன்னிலையில் ஆங்கிலமே பேசியிருக்கிறார். ஆனால் மனுசன் முடிந்தவரை இந்திதானாம்.வெளிநாட்டு அதிபர்களுடன் பேசும் போதும் சீன ரஷ்ய மாடலில் அவர்கள் ஆங்கிலம் பேச இவர் இந்தியில்தான் போலுவாராம்.

அநேகமாக இவருடைய ஆங்கிலப் பேச்சை கலாய்க்கும்
http://www.firstpost.com/india/lesson-modis-pslv-c23-speech-needs-stop-speaking-english-1595543.html - போன்ற கருத்துக்கள்தான் இவரது இந்தி பேருரைகளுக்கு காரணமாக இருக்க வேண்டும். இன்னொரு காரணம், அவர் அமெரிக்காவில் பேசினாலும், ஆஸ்திரேலியாவில் பேசினாலும் அவரது நிஜ டார்கெட் ஹிந்தி பெல்ட் மற்றும் ஹிந்தி தெரிந்த பிற மாநில மக்களேயன்றி, ஓட்டில்லாத NRIகளே அல்லது அவருக்கு ஓட்டுப்போடத+இந்தி தெரியாத தமிழக மக்களோ அல்ல. "ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே"

ஆயிரம் இருந்தும் தமிழகத்துக்கும் பிரதமர் என்கிற வகையில் அச்சிறுமிக்கு ஆங்கிலத்தில் பதிலளித்திருக்கலாம் மோடி!

முகுந்த் அம்மா said...

@ நந்தவனத்தான் said...
"அவரு பேசுனது ஆங்கிலம்தானா? :)) ஹெவியான வடக்கு வாசம். "All of us have indian accent. Even those who came here in 70- 80s and settled down here for good. Not only indians, I saw many europeans still have their accent while speaking english. Especially French and Russians. Unless you born and bought up here, for most of us English is still a foreign language. But the point here is, the effort they put in to make all the people understand what he meant.

If this person doesnt know how to speak english, thats a different case, but he does know how to communicate in english.


பொதுவாக அரசியல்வாதிகளை உரைகளை நான் கவனிப்பதில்லை. ஆனால் இப்போது தேடியதில் அவர் நீயுயார்க்கின் Central Park-ல் Huge Jackman முன்னிலையில் ஆங்கிலமே பேசியிருக்கிறார். ஆனால் மனுசன் முடிந்தவரை இந்திதானாம்.வெளிநாட்டு அதிபர்களுடன் பேசும் போதும் சீன ரஷ்ய மாடலில் அவர்கள் ஆங்கிலம் பேச இவர் இந்தியில்தான் போலுவாராம்.

"அநேகமாக இவருடைய ஆங்கிலப் பேச்சை கலாய்க்கும்
http://www.firstpost.com/india/lesson-modis-pslv-c23-speech-needs-stop-speaking-english-1595543.html - போன்ற கருத்துக்கள்தான் இவரது இந்தி பேருரைகளுக்கு காரணமாக இருக்க வேண்டும். இன்னொரு காரணம், அவர் அமெரிக்காவில் பேசினாலும், ஆஸ்திரேலியாவில் பேசினாலும் அவரது நிஜ டார்கெட் ஹிந்தி பெல்ட் மற்றும் ஹிந்தி தெரிந்த பிற மாநில மக்களேயன்றி, ஓட்டில்லாத NRIகளே அல்லது அவருக்கு ஓட்டுப்போடத+இந்தி தெரியாத தமிழக மக்களோ அல்ல. "ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே""


This one is the real reason, his targeted audience were hindi speaking company CEOs from Silicon Valley. And not us.

ஆயிரம் இருந்தும் தமிழகத்துக்கும் பிரதமர் என்கிற வகையில் அச்சிறுமிக்கு ஆங்கிலத்தில் பதிலளித்திருக்கலாம் மோடி!

I wish the same.

வேகநரி said...

சகோ நந்தவனத்தான்,
//வெளிநாட்டு அதிபர்களுடன் பேசும் போதும் சீன ரஷ்ய மாடலில் அவர்கள் ஆங்கிலம் பேச இவர் இந்தியில்தான் போலுவாராம்.//
சீன,ரஷ்ய வெளிநாட்டு அதிபர்கள் தொடக்கம் கடைகுட்டி நாடுகள் ஸ்ரீலங்காஅதிபர்கள்வரை தங்களது சொந்த பாஷையில் பேசியதையே செய்திகளில் பாத்திருக்கேன். இங்கீலீசுல அவர்கள் பேசவில்லை. இந்திய பிரதமர் தமிழக சிறுமிக்கு எதற்காக எலிசபெத் மகாராணியாரின் நாட்டின் பாஷையில் தான் பதிலளித்திருக்க வேண்டுமென்று நீங்க ஆசைபடுகிறீர்களோ புரியல்ல!!!