Saturday, October 22, 2011

கடுப்பை கிளப்பும் சிலர்!  • அவசர அவசரமாக ஆபிஸுக்கு போய் கொண்டிருப்போம்..மீட்டிங் வேறு இருக்கும். அந்த நேரம் பார்த்து.. எல்லா சிக்னலிலும் ரெட் விழுந்து சதி செய்யும். சிக்னலில் நிற்கும் போது,  நமக்கு முன்னால் இருக்கும் காரில் ஒரு கிழவி உக்கார்ந்து கொண்டு இடைவிடாது  மேக்கப் தலை சீவுதல் என்று படுத்தும் பாருங்க.., சிக்னல் விழுந்தபின்னும் காரை எடுக்காமல் கடுப்பை கிளப்பும்.

  • மாலையில் எப்படியாவது சீக்கிரம் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வந்துடனும்னு வேக வேகமா வர நினைப்போம். அப்போது சிங்கிள் லேன் ரோடுல  யார் கூடயோ செல்போனில் பேசி கொண்டு 45 மைல் ஸ்பீடு லிமிடில் வெறும் 15 மைல் ஸ்பீடில் உருட்டி கொண்டு செல்லும் சிலர்.


  • விழுந்து விழுந்து வேலை செய்து முடித்து இருப்போம், ஸ்டேடஸ் அப்டேட் மீட்டிங்கில் பெரிய தலை ஒருத்தர் வந்து ஒரு ஐடியா சொல்லுவார், நாம அந்த ஐடியாவை முதல்லயே சொல்லி இருப்போம்..ஆனா அப்போ , மேனேஜர் அதை ரிஜெக்ட் பண்ணி இருப்பார். இப்போ, பெரிய தலை நாம சொன்னதையே சொல்லுவார்.ஆகா, ஓகோ ஐடியா பிரமாதம்னு பெரிய தலைக்கு ஜால்ரா போடுவாரு பாருங்க நம்ம மேனேஜர்..அந்த ஜால்ரா சத்தம் காதை கிழிக்கும்.

  • நான் அடிக்கடி சந்திக்கும் நபர்கள் இவர்கள்.. முக்கியமாக இந்தியர்களாக இருப்பர். முதல் சந்தித்து ”ஹெல்லோ ஹவ் ஆர் யூ?”, என்று சொல்வதில் ஆரம்பித்து...வரிசையாக தன்னை பற்றி ஒரு அறிவுஜீவி  என்றெல்லாம் அடுக்க ஆரம்பிப்பார்கள். நானும் பெரிய ஆள் தான் போல இவரு என்று நினைக்க ஆரம்பித்து சப்ஜெட் சம்பந்தமாக ஒரு சாதாரண கேள்வி கேட்பேன்...அதற்கு கேனத்தனமாக எதாவது பதில் சொல்வார்கள். ”எதுக்கு இந்த பந்தா?” என்று கேட்க எனக்கு நாக்கு வரை வந்துவிடும்.
  • சப்ஜெட் ஒன்னுமே தெரியாட்டியும்...அதை தெரியும் இதை தெரியும், யானையை குதிரையாக்குவேன்..என்றெல்லாம் எல்லார் முன்னாலும் பிலிம் காட்டியே பிரமோஷன் வாங்கி பிழைப்பை நடத்தும் சிலர்.
  • மாங்கு மாங்குன்னு ரிசெர்ச் பண்ணி ஒரு டாபிக் பத்தி பிளாகுல எழுதி இருப்போம்...பத்து பேரு தான் வந்து நம்ம பிளாக்கை படிச்சு இருப்பாங்க... பரவாயில்ல பத்து பேராவது படிச்சிருக்கங்க அப்படின்னு சந்தோசமாகியிருப்போம்..ஆனா சுண்டியிழுக்கிற தலைப்பை வச்சு பிளாக் போஸ்ட் முழுக்க மொக்கை போட்டு இருப்பார் ஒருத்தர்..அவருக்கு கூட்டம் அள்ளும்..ஆனாலும் எனக்கு விசிடர்ஸ் கம்மியாயிடாங்க ஹிட்ஸ் கம்மியாயிட்டதுன்னு புலம்பு புலம்புன்னு புலம்புவார் பாருங்க.
  • எனக்கெல்லாம்,பத்து பேரு வந்து என்னோட பிளாக்கை படிச்சாலே பெரிசு..இதி்ல   ஓட்டு பெட்டி..தமிழ்மணம் ராங்கிங்கில் வருவதற்கு நடக்கும் அடிபிடி சண்டைகள் எல்லாம் பார்க்கும் போது கடுப்பு வரும் பாருங்க.

8 comments:

DrPKandaswamyPhD said...

என்னைய ஒண்ணுன்னு கணக்கில சேத்துக்குங்க.

சேட்டைக்காரன் said...

//எனக்கெல்லாம்,பத்து பேரு வந்து என்னோட பிளாக்கை படிச்சாலே பெரிசு..இதி்ல ஓட்டு பெட்டி..தமிழ்மணம் ராங்கிங்கில் வருவதற்கு நடக்கும் அடிபிடி சண்டைகள் எல்லாம் பார்க்கும் போது கடுப்பு வரும் பாருங்க.//

ஊசிபோடத் தெரியாதுன்னு சொல்லிப்புட்டு இப்படியா சுருக்குன்னு குத்துவீங்க டாக்டர்? :-))))

விச்சு said...

செம கடுப்பாயிருப்பீங்க போலயிருக்கு... நல்லா ரசிக்கும்படியான கடுப்பு!!

பத்மா said...

hahaha mukundamma .nice one

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்பத்தான் கடுப்பு போல..:) கூல் கூல்

Philosophy Prabhakaran said...

முதல் மேட்டரும் மூன்றாவது மேட்டரும் எனக்கு அடிக்கடி நடக்கிறது... மேனேஜரை பார்த்தாலே எரிச்சல் வருகிறது...

Avargal Unmaigal said...

என்னாச்சு உங்களுக்கு????

உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை...அது பொக்கிஷங்கள். நல்ல விஷயங்களை தேடி வருபவர்களுக்கு அது ஒரு பொக்கிஷம். இன்று மட்டுமல்ல என்றென்றும் அது அழியாத ஓவியங்கள். உங்களுக்கு வேண்டியது நல்லவர்களின் வரவு. அது என்றென்றும் உங்களைத் தொடரும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா said...

இந்த பதிவை எப்படியோ விட்டுருக்கேன். என்னாச்சு. ஸ்லோ டவுன் :)) ...

ஃபில்ம் காட்டியே புலமையடைந்தவர்களே நம்மை சுற்றிலும் கண்ணுரும் சாதா மனிதர்கள். இதையெல்லாம் பார்த்து உணர்ச்சி வசப்பட்டா கட்டுபடியாகுமா? :)

கடமையைச் செய்ங்க... பலனை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம்.