Friday, October 7, 2011

ஒரு பசுவின் கண்ணீர் கதை”என் சோக கதையை கேளு மனிதகுலமே” என்று ஒரு பசு என் கனவில் நேற்று வந்து கண்ணீர் விட்டது.

”என்ன பசு?, என்ன பிரச்சனை உனக்கு?” இது நான்.

”என்ன பிரச்சனையா?, பிரச்சனையே நீங்க தானே!”

“என்னது..நானா?, நான் என்ன செஞ்சேன்”

”நீங்கன்னா...மனிதர்களை சொன்னேன்”

”என்னது மனிதர்களா?, நாங்களாம் எவ்வளவு நல்லவங்க, எப்படி உங்க குலத்தை கோமாதா எங்கள் குல மாதான்னு கும்பிடுறோம், மாட்டுப்பொங்கல்ன்னு ஒரு விழாவே உங்களை வச்சு கொண்டாடுறோம், நீ என்னடான்னா ரொம்ப தான் சலிச்சுகிறியே..இவ்வளவும் செய்யிற எங்களை போயி பிரச்சனைன்னு சொல்லுறியே”

“அடா, அடா..உங்க மக்கள் செய்யிற செயலை நீ தான் மெச்சிக்கணும்., எப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்த முடியுமோ அதை எல்லாம் செய்துட்டு..சாமியா கும்பிடுராங்களாம்..நல்ல கதைப்பா”

“என்னது நாங்க கொடுமை செய்யுரமா?..என்னா சொல்லுற”

”நீங்க சொய்யிற கொடுமை ஒன்னா, ரெண்டா...வரிசையா சொல்லுரேன் கேளு”

”நான் ஏன் தான் பசுவா பிறந்தேனோன்னு நோகாத நாளில்லை..பிறந்த கொஞ்ச நாளில அம்மா கிட்ட இருந்து என்னை பிரிச்சிட்டாங்க..அப்புறம், நான் இனப்பெருக்கத்துக்கு தயாரானவுடன் என்னுடைய சோதனை காலம் ஆரம்ப்பிச்சிடுச்சு”

“வருடம் முழுதும் புள்ளதாச்சின்ங்கிற கதையா..எப்போ பார்த்தாலும் செயற்கை முறையில விந்தனுவை செலுத்தி என்னை புள்ளதாச்சி ஆக்கிடறாங்க...அப்புறம் கன்று பிறந்தவுடன்..கன்றையா பாலை குடிக்க விடறீங்க?....நீங்க தானேப்பா பாலை கறந்து குடிக்கிறீங்க..அதுவும் இப்பொல்லாம் எதோ rBGH ஒரு ஊசியை போட்டு அதிக நாள் பால் கொடுக்கிற மாதிரி பண்ணுறீங்க” என்று கண்ணீர் விட்ட பசு...கொஞ்ச நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு தொடர்ந்தது.


“அந்த rBGH எங்களை என்ன பாடு படுத்துன்னு யாருக்காவது தெரியுமா? பால் மடியில எரிச்சல் ஏற்படுத்தி ஒரு பக்க பால்மடி பெருத்து வழி ஏற்படுத்துது. இதுவாவது பரவாயில்லை, இது எங்களை லேம்னெஸ் எனப்படும் நோயை தருகிறது. எங்களால் சரியாக நடக்க முடியாமல், நிற்க முடியாமல், செயல்பட முடியாமல் படும் பாடு இருக்கிறதே..அப்பப்பா!”

“சில நேரங்களில் இது எங்கள் கருப்பையில் கட்டிகளை ஏற்படுத்தி, அது கான்சேர் கட்டிகளாகும் அபாயத்தையும் தருகிறது, இதுவாவது பரவாயில்லை, எங்கள் கன்றுகுட்டிகளுக்கு ஏற்படும் நிலை இருக்கிறதே...அது இன்னும் பரிதாபம்”

 ”பிறந்த சில நாட்களில் எங்களிடம் இருந்து பிரிக்கப்படும் எங்கள் கன்றுகள், பசுங்கன்றுகளாக இருப்பின் என்னை போன்ற கதி அதற்கும் ஏற்படுகிறது..எருதுகளாக இருப்பின்...வெகு சீக்கிரமே அடிமாடுகளாக மாற்றப்படுகின்றன...,சில நேரங்களில் அவை நன்கு கொலுக்க என்று அதிக புரோட்டீன் கொண்ட உணவு கொடுக்க படுகிறது..அந்த உணவை செரிக்க முடியாமல் பல நேரங்களில் Mad cow disease போன்ற பலவும் எங்களுக்கு ஏற்படுகின்றன” என்று குலுங்கி குலுங்கி அழுத பசு...திடீரென்று எதோ நினைத்தாய் பலத்த ஒலியுடன் வில்லன் போல சிரிக்க ஆரம்பித்தது.

பசுவுக்கு என்னாயிற்று என்று நான் நினைத்த தறுவாயில், பசுவே பேச ஆரம்பித்தது....

“இப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்திய மனித குலத்துக்கு நாங்கள் தரும் பரிசு என்ன தெரியுமா, பழிக்கு பழி”

“எங்களை கொடுமை படுத்தி எடுக்கபடும் பாலை குடிப்பதால் அவர்களுக்கும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தியாகி.. சிறுமிகள் சீக்கிரம் பூப்படைவது, தேவையில்லாத அதிக முடிவளர்ச்சி..பெண்களுக்கு Male pattern வருவது...சில நேரங்களில் மார்பு புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்படுத்துவது,... ஹாஹாஹா, எப்பூடி”

”ஹாஹாஹா” என்று பசு சிரித்தது நாலாபக்கமும் எதிரொலித்து...என் காதுகளை அடைத்தது....சடாரென்று தூக்கத்திலிருந்து எழுந்தேன்...

9 comments:

வருண் said...

கோமாதா என் குலமாதா னு ஃபீப் சாப்பிடுவதைப்பற்றி ஒரு பதிவு வந்திருக்கு. Ironically, நீங்க இங்கே பசுவோட கண்ணீர் பத்தி எழுதி இருக்கீங்க!

என்ன சொல்றது? மனிதன் விலங்குகளுக்கு செய்யும் தீங்குகளுக்கு அளவே இல்லை!

பசு/மாடு பத்தி ஏற்கனவே ஒரு தளத்தில் பின்னூட்டங்களில் விவாதிச்சாச்சு..

I wish Cows know how to read and can get internet access to visit your blog. They will be happy see human beings like you do exist.

Check out this link, to see what is going on in US regarding rBGH

http://www.sustainabletable.org/issues/rbgh/

Avargal Unmaigal said...

very good thought.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திகிலா இருக்கு முகுந்த் அம்மா.. பால் குடிக்கவே கூடாதுன்னு இருந்துடலாம் போல..

கொஞ்ச நாள் முன்ன.. ஒரு புது சிற்றிதழ் வாசித்தேன். க ந்னு பேரு அதுக்கு.. அதில முழுக்க முழுக்க பசுவினைப்பற்றிய இது தான். அதுல பசு இப்படி சிரிச்சி தன்னை அழிக்கிறதால் உலகை அழியரதா ஒரு கட்டுரை வாசிச்சேன்..

Avargal Unmaigal said...

நல்ல பதிவு...சிந்திக்க வைத்தது.. அப்ப அப்ப ஒரு பதிவு போட்டாலும் மிக நல்ல பதிவாக போடுகிறீர்கள். பாராட்டுக்கள்

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு முகுந்த் அம்மா. மனிதனின் தன் சுயநலத்துக்காக இயற்கைக்குப் புறம்பாக செய்வதெல்லாம் அவனுக்கே பிற்பகல் விளைந்தாலும், வாயில்லா ஜீவன்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை என்னவென சொல்ல.

எங்கள் வீட்டில் நாங்கள் எல்லோரும் கல்லூரி முடிக்கும் வரை வீட்டில் பசு வளர்த்தே பால். ரொம்பப் பாசமான விலங்கு.

துபாய் ராஜா said...

பசுவை மட்டுமல்ல நம்மையும் சுடும் இந்த பதிவின் உண்மைகள்.

Thekkikattan|தெகா said...

it is a boomarang; what goes around, comes around :)

பசு சிரிக்கிறதிலும் நியாயமிருக்கில்ல. இப்போ யூ.எஸ்_ல மார்பக/கர்ப்பப் பை தொடர்பான புற்றை விட தைராய்ட் தொடர்பான புற்று அதிகமாமே...

சீக்கிரம் ஒரு பதிவு போடலாம்... நீங்க முந்திக் கொண்டாலும் சரிதான். :)

பகிர்விற்கு நன்றி!

The Analyst said...

நன்றாகக் கூறியுள்ளீர்கள் முகுந்த் அம்மா. இவற்றோடு இன்றைய fast food industries ஆல் மிகக் கூடியளவு நடத்தப்படும் factory farming ஜயும் சேர்க்கலாம். பேசாமல் vegan ஆக மாறி விடலாமா எனப் பல தடவை யோசித்துள்ளேன்.

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு