Thursday, March 11, 2010

அசோகா ஸ்வீட் ம் நானும்

திருமணமான புதிதில் ஒரு நாள் என் கணவர் ஆபீஸ் போவதிற்கு முன்

"அசோகா பண்ணி வச்சிடுமா, சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு!" என்றார்.

நானும் எல்லாம் தெரியும் என்பதை போல தலை ஆட்டி வைத்தேன்.

கல்யாணத்திற்கு முன் எனக்கு டீ கூட போட தெரியாது என்பது பாவம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆபத்பாண்டவணன் ஆக இருந்த சமையல் புத்தகங்களின் உதவியால் நான் ஓரளவு சமைத்து ஒப்பேத்தி கொண்டிருந்தேன். அதனால் பரவாயில்லையே நம்ம wife நல்லா சமைக்கிறாளே என்று நினைத்து கேட்டு இருக்க கூடும் என்று நினைக்கிறேன்.

அசோகா என்று அவர் சொன்ன போது அது ஸ்வீட் ஆ காரமா என்று கூட தெரியாது. எனக்கு தெரிந்த அசோகா எல்லாம் அசோகர் சாலை ஓர மரங்களை நட்டது, அப்புறம் அசோகர் ஒரு போருக்கு பின் புத்த மத துறவியானது இவை போன்ற அசோகா சக்கரவர்த்தி பற்றிய விஷயங்கள் தான்.

என்ன பெரிய அசோகா நம்ம cook book ல இல்லாததா என்று எனக்கு ஒரு நினைப்பு இருந்ததாலே "கட்டாயம் பண்ணி வைக்கிறேங்க" என்று அவர் கேட்கும் போது தலை ஆட்டி வைத்தேன். ஆனால் என் கேட்ட நேரம் அதை பற்றி ஒரு விசயமும் என் புக் ல இல்ல.

சரி நம்ம கிட்ட தான் Trusty Survival manual ஆன Google இருக்கே என்று asoka என்று type செய்து தேட விட்டேன். அதிலும் சனி வந்து ஆட்டி வைக்க, வந்தது எல்லாம் King Asoka, Asoka chakra.....இப்படி எல்லாம் அசோகா சக்கரவர்த்தி பற்றிதான்.

சரி அடுத்து என்ன பண்ணலாம் என்று நினைத்து , அசோகா எப்படியும் ஒரு ஸ்வீட் ஆவோ காரமாவோ தான இருக்கணும், "அசோகா காரம்" அப்படின்னு ஒரு கூகிள் ல தேடலாமேன்னு தேட விட்டேன். அதுக்கும் பதில் நஹி.

அடுத்து அசோகா ஸ்வீட் அப்படின்னு ஒரு google search. ஒரு சில Recipe வந்தது. அப்பாடா ஒரு வழியா அசோகான்னு ஏதோ ஒரு recipe இருக்கு ஆன எது அவர் சொன்னது என்று குழம்பினேன்.

முதல்ல நான் பார்த்தது அசோகா அல்வா அப்படின்னு ஒரு அல்வா. அது தஞ்சாவூர் ஸ்பெஷல் என்று இருந்தது. இவர் தூத்துக்குடி காரர் ஆச்சே இவருக்கு எப்படி தஞ்சாவூர் ஸ்வீட் பற்றி தெரியும் என்று நினைத்து, செய்ய ஆரம்பித்தேன்.

"செத்தா தானே சுடுகாடு தெரியும்" என்று என் பாட்டி அடிக்கடி சொல்வார்கள். நானோ அல்வா எல்லாம் லாலா கடையில வாங்கி சாப்பிடதோட சரி. அதுவும் திருநெல்வேலி அல்வா தான். எங்கம்மாவும் எனக்கு வீட்டுல எல்லாம் அல்வா கிண்டி கொடுத்ததில்லை.
அது பெரிய வேலை அப்படின்னு சொன்னது மட்டும் ஞாபகம்.

அசோகா அல்வா பாசிப்பருப்புல செய்றது. முதல்ல பாசிபருப்பை தேங்காய் பாலில வேக வச்சு, எடுத்து மசிச்சு அதில சீனி போட்டு நெறைய நெய் ஊத்தி அடி பிடிக்காம பதமா கிண்டிட்டே இருக்கணும் அப்புறம் பாத்திரத்தில ஒட்டாம வரும் போது எறக்கி வைக்கணும். ரேசிபே படிக்கும் போதே எனக்கு தலை சுற்றியது. சரி நாம வேற வேலை இல்லாம வெட்டியா தானே இருக்கோம் அப்படின்னு ஒரு வழியா கஷ்டப்பட்டு கிண்டி முடிச்சேன்.

ஒரு வெற்றி களிப்போட, ரொம்ப சந்தோசமா சாயங்காலம் அவர் வந்ததுமே, "இதோ பாருங்க அசோகா" அப்படின்னு நீட்டினா மனுஷன் என்னை ஒரு மாதிரி பாக்குறாரு. இதுவா அசோகா! அது கேக் மாதிரில்லா இருக்கும் என்றாரே பாக்கணும். இன்னைக்கு வரை அசோகா கேக் ரேசிபே தேடிட்டு இருக்கேன். யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

20 comments:

பத்மா said...

hahaha neenga senjathu thaan sari.avarukku yaro thappa sollirukanga ,thanjavur kari na solren .anaalum bayangara thairiyam thaan ungalukku.recipe paathu sweet seiyya

சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க முகுந்த் அம்மா..நல்ல ஃப்லோ!

ராமலக்ஷ்மி said...

:)))!

விவரித்த விதம் அருமை. ரசித்தேன்.

Thekkikattan|தெகா said...

so, you have proved times and again that you are a re-searcher :)) ... try arusuvai.com :-)

மணிஜி said...

தஞ்சை திருவையாறில் ஆண்டவர் பலகார கடையில் அசோகா அட்டகாசமாக இருக்கும்..

ஆயில்யன் said...

//இதோ பாருங்க அசோகா" அப்படின்னு நீட்டினா மனுஷன் என்னை ஒரு மாதிரி பாக்குறாரு. இதுவா அசோகா! அது கேக் மாதிரில்லா இருக்கும் என்றாரே பாக்கணும். //

ஆஹா எதையோ இது நாள் வரைக்கும் அசோகான்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க :)

நீங்க செஞ்சதுதான் கரீக்ட்டுன்னு சொல்லமாட்டேன் - பர்ஸ்ட்டு டைம் செய்யிறீங்க கண்டிப்பா டெரரிசம்தானே - பட் நீங்க படிச்ச ரெசிப்பி கரீக்க்ட்டு :)

//தண்டோரா ...... said...

தஞ்சை திருவையாறில் ஆண்டவர் பலகார கடையில் அசோகா அட்டகாசமாக இருக்கும்..
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

எம்புட்டு தின்னுருக்கேனாக்கும் :) + அதுக்கு கூட கம்பெனி கொடுக்கிற அந்த மிக்சரும் சூப்பரேய்ய்ய்ய்!

கண்மணி/kanmani said...

அசோகா ன்னா பாசிப்பயறு அல்வாதான்.
அதென்ன கேக் போல...

//தஞ்சை திருவையாறில் ஆண்டவர் பலகார கடையில் அசோகா அட்டகாசமாக இருக்கும்..//

கேக்கா?அல்வாவா?

முகுந்த்; Amma said...

//neenga senjathu thaan sari//

உண்மையாவா :))

//anaalum bayangara thairiyam thaan ungalukku//

நான் முதல்ல சாப்பிட போறதில்லைல ;-))

நன்றி பத்மா.

முகுந்த்; Amma said...

//நல்லா எழுதியிருக்கீங்க முகுந்த் அம்மா..நல்ல ஃப்லோ!//

வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி சந்தன முல்லை அவர்களே.

முகுந்த்; Amma said...

//விவரித்த விதம் அருமை. ரசித்தேன்//

முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி ராமலெட்சுமி அவர்களே.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அசோகா கேக் நான் சாப்பிட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.. விசாரிச்சி சொல்றேன்.. :)
இருந்தாலும் ரெசிபி தேடி செய்து காட்டிய உங்களை பாராட்டறேன்..

முகுந்த்; Amma said...

//you have proved times and again that you are a re-searcher//

இந்த ஒரு research ஆவது உருப்படியா பண்ணலாமேன்னுதான் :)))

// try arusuvai.com//

பார்த்தேன் சார் அருமையா இருக்கு. நன்றி தெகா.

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கு நன்றி தண்டோரா அவர்களே.

//தஞ்சை திருவையாறில் ஆண்டவர் பலகார கடையில் அசோகா அட்டகாசமாக இருக்கும்//

ஓ அப்படியா! அடுத்த தடவை அந்தபக்கம் போனா ஞாபகம் வச்சுகிறேன்.

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கு நன்றி ஆயில்யன் அவர்களே.

//ஆஹா எதையோ இது நாள் வரைக்கும் அசோகான்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க//

அசோகா கேக்குன்னு ஒன்னு இருக்குன்னு இப்பவும் சாதிக்கிறார்ங்க. :(

//பர்ஸ்ட்டு டைம் செய்யிறீங்க கண்டிப்பா டெரரிசம்தானே//

அசோகா அல்வா முன்னபின்ன சாப்பிட்டதில்லைங்க, அதனால டெரரிசம் ஆனதான்னு தெரியல.

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கு நன்றி கண்மணி அவர்களே.

//அசோகா ன்னா பாசிப்பயறு அல்வாதான்//

எல்லாரும் சொல்லீட்டங்க, இனிமேயாவது கேக்குறாறார்னு பார்ப்போம்.

முகுந்த்; Amma said...

வாங்க முத்துலெட்சுமி.


//அசோகா கேக் நான் சாப்பிட்டிருக்கேன்னு நினைக்கிறேன்//

அப்பாடா! ரெசிபி தெரிஞ்சா கட்டாயம் சொல்லுங்க.

//ரெசிபி தேடி செய்து காட்டிய உங்களை பாராட்டறேன்//

நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

தேங்காயப் பாலெல்லாம் வேண்டாம்..நான் எளிதாகச் சொல்கிறேன் பாருங்கள்..

அதிக நீர் இன்றி-அதற்காக அடிப்பிடிக்கும் அளவுக்கு நீரைக் குறைக்கக் கூடாது!-வேக வைத்த பாசிப்பருப்பு-பயறு அல்ல-நன்கு மசித்துக் கொண்டு,பாத்திரத்தில் சிறிது நெய்யில் ஒரு தேக்கரண்டி ரவை,இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு,மூன்று தேக்கரண்டி கோதுமை மாவு மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக் கொண்டு அதில் மசித்த பருப்பையும்-ஒன்றுக்கொன்று அல்லது ஒன்றரை-தேவைப்படுபவர்கள் மட்டும்-பங்கு சீனி கலந்து நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்..இடையில் நெய் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்,அவ்வப்போது..

பாத்திரத்தில் ஒட்டாத அளவில் வெந்த உடன் இறக்கி குங்குமப் பூ மற்றும் வறுத்த முந்திரி கலந்து கொள்ளலாம்...

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கு நன்றி அறிவன் அவர்களே.

//தேங்காயப் பாலெல்லாம் வேண்டாம்//

ஓ அப்படியா!

நீங்கள் சொன்ன ரெசிபி Try செய்து பார்க்கிறேன்.

பழமைபேசி said...

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! என்னோட மின்னஞ்சலுக்கு உங்க தொடர்பு எண் அனுப்புங்க....

pazamaipesi@gmail.com

தெய்வசுகந்தி said...

நல்லா இருக்குதுங்க.