1984- ஜார்ஜ் ஆர்வெல் அவர்களின் மிக முக்கியமான நாவல் இது. டோடலிடோரியன் கவர்மெண்ட் எனப்படும் பொதுவுடமை தத்துவங்களை பின்பற்றும் ஒரு நாடு 1984 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று 1949 ஆம் ஆண்டு ஆர்வெல் எழுதியது. இவருடைய மற்றொரு பிரபல நாவலான Animal farm (
விலங்குகள் பண்ணை) ஐ விட இது மிக பிரபலம்.
இந்த நாவல் வெளிவந்த பிறகு, பல புதிய பதங்கள் நடைமுறைக்கு வந்தன..இப்போதும் கூட பல சொற்கள் நடைமுறையில் இருக்கின்றன..
உதாரணமாக..தற்போது உலகெங்கும் பிரபலமாக இருக்கும் “Big Brother" எனப்படும் ஒரு நிகழ்ச்சியின் கரு இந்த புத்தகத்தில் இருந்தே வந்தது (ஒரு வீட்டில் சில பிரபலங்கள் சில மாதங்கள் தங்க வேண்டும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் காமிரா மூலம் கண்காணிக்கப்படும்).
Double think, Thoughtcrime, Newspeak போன்ற பல பதங்கள் அந்த புத்தகம் வந்த பின்பே பிரபலமாகின.
மேலும் “Big brother is watching you" போன்ற சொற்றொடர்களும் இதன் மூலமே பிரபலமாகின.
பல முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் வேறு வேறு மாதிரி எண்ணங்கள் தோன்றும்.
நிறைய நாட்களுக்கு பிறகு கடந்தமாதம் மேலும் ஒரு முறை 1984 ஐ படிக்க நேர்ந்தது. தற்போதைய இந்தியாவிற்கும் 1984 நாவலுக்கும் எதோ தொடர்பு இருப்பது போல தோன்றுகிறது.
சரி இப்போது நாவலுக்குள் செல்வோம்.
அது ஒரு கற்பனையான நாடு, அதன் பெயர் ஓசோனியா. அதன் தலைவர் அனைவராலும் "பிக் பிரதர்" என்று அழைக்கப்படுகிறார்.
ப்ரோல்ஸ்
---------------
அந்த நாட்டில் வசிக்கும் மக்களில் எண்பத்திஐந்து சதவீதம் பேர் ப்ரோல்ஸ் என்றழைக்க படுகிறார்கள். இவர்கள் வறுமையில் வாடுபவர்கள். அவர்களுக்கு மாதமாதம் ரேஷனாக சில உணவு பொருள்கள்
வழங்கப்படுகின்றன. இந்த மக்கள் அனைவர்க்கும் எப்பொழுதும் சினிமா, கேளிக்கை
குடி, விளையாட்டு போன்றவை வழங்கப்படுவதால் தாம் வறுமையில்,அறியாமையில் இருக்கிறோம்
என்பதையே அறிந்து கொள்ளாமல் வாழ்பவர்கள்.
அவுட்டர் பார்ட்டி
------------------------
அந்த நாட்டில் வசிக்கும் பதிமூணு சதவீத மக்கள் அவுட்டர் பார்ட்டியை சேர்ந்தவர்கள். அவர்கள் மிடில் கிளாஸ் மக்கள். படிப்பறிவு கொண்டிருப்பதால் ஓசோனியாவின் கவர்மென்ட் வேலைகள் செய்பவர்கள்.
படிப்பறிவு கொண்டிருப்பதாலேயே, அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் புரட்சி ஏற்படுத்தி விடுவார்கள் என்று பயந்து எப்போதும் ஓசோனியா தலைவரான "பிக் பிரதர்" மற்றும் அவர்களின் "Ministry of Truth" அமைச்சரவையால் எப்போதும் கண்காணிக்கப்படுபவர்கள். இவர்கள்
செய்யும் அனைத்தையும் கண்காணிக்க அனைவர்
வீடுகளிலும் டெலிஸ்க்ரீன் வைக்கப்பட்டு இருக்கும். அதன் மூலம் ஒவ்வொருவரும் என்ன என்ன செய்கிறார்கள், என்பது உண்மை அமைச்சரகத்துக்கு அனுப்பப்படும்.
அவர்கள் தங்க அரசாங்க இடம்/வீடு கொடுக்கப்படும். இவர்களுக்கும் மாதமாதம் ரேஷன் வழங்கப்படும் அதனை கொண்டு அவர்கள் வாழ வேண்டும் அரசாங்க ஊழியம் செய்ததற்கு அவர்களுக்கு சம்பளம் என்று சொற்ப தொகை கிடைக்கும்.
ஒரு அவுட்டர் பார்ட்டியை சேர்ந்தவர் இன்னொரு அவுட்டர் பார்ட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள். தங்கள் குழந்தை மீது எந்த உரிமையும் அவர்கள் கொண்டாட கூடாது.
இன்னர் பார்ட்டி
----------------------
ஒசோனியாவின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் இரண்டு சதவீதத்துக்கும் குறைந்தவர்கள். இவர்கள் மேல் மட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு என்று ரேஷன் இருப்பதில்லை. வீடு/சொத்து வாங்கிகொள்ளலாம். பிடித்ததை சாப்பிடலாம். இவர்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பதால் டெலி ஸ்க்ரீன் இருப்பினும் உபயோகப்படுத்துவதில்லை.
பிக் பிரதர்
--------------
எல்லாவற்றிக்கும் தலைவர் இவர். இவர் யார் என்று மிடில் கிளாஸ் மக்களுக்கோ ப்ரோல்ஸ் க்கோ தெரியாது. ஆனாலும் அவருடைய படம் எல்லா வீடுகளிலும், தெருக்களிலும் மாட்ட பட்டு இருக்கும்.
நாவலின் கதாநாயகன் வின்செண்ட் ஸ்மித் ஒரு மிடில் கிளாஸை சேர்ந்தவர். அவர் MiniTrue எனப்படும் ட்ருத் மினிஸ்ட்ரியில் வேலை பார்க்கிறார். இவரை போல மினிட்ருதில் வேலை பார்ப்பவர்களின் வேலை வரலாற்றை மாற்றி அமைப்பது. அதாவது, பிக்ப்ரதர்க்கு எதிராக எதேனும் வரலாற்றில் இருந்திருந்தாலோ அல்லது போராட்டம் செய்திருந்தாலோ அவர் unperson ஆக்கபட்டுவிடுவார், அதாவது கொல்லப்பட்டு அவர் இருந்ததற்கான சுவடுகள் அழிக்கப்பட்டு விடும்.
இவருக்கு அந்த நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் பிடிப்பதில்லை. அந்த ஆபிஸில் இருக்கும் ஜுலியாவை இவருக்கு பிடித்து போகிறது. இருவருக்கும் பிக் பிரதரின் மீதும் அவரின் அரசாங்கதின் மீதும் இருவருக்கும் வெறுப்பு, ஏனெனில் அவர்களுடைய பெற்றோரை அரசாங்கத்தை எதிர்த்ததற்காக unperson ஆக்கி இருப்பார்கள். ரகசியமாக காதலிக்கும் இவர்களை அரசாங்க அதிகாரியாக இருக்கும் ஓப்ரெயன் சந்தித்து அவருக்கு உதவுவதாக கூறுகிறார். சில நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாக கைது செய்யப்படுகிறார்கள்.
அவர்கள் இருவரும் பலமுறை எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு கொடுமைபடுத்தபடுகிறார்கள். ரூம் 101 எனப்படும் கொடுமை சேம்பரில் வைத்து மூளை சலவை செய்யப்படுகிறார்கள். முடிவாக அவர்கள் சிறையை விட்டு வெளியே வரும் போது பிக்ப்ரதர் அடிமைகளாக விசுவாசிகளாக வருகின்றனர்.
கதை முடிகிறது.
இந்த கதை ஒரு கற்பனை தான் என்றாலும் ரஷ்ய நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த பல சம்பவங்கள் இந்த நாவல் மூலம் மறைமுகமாக தெரிவிக்கப்படுன்றன.
உதாரணமாக..
கீழே காட்டப்படும் இரண்டு புகைப்படங்களும் unperson ஆக்கப்படுவதற்கான ஒரு உதாரணம்.