Wednesday, November 4, 2015

வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்த சுயநலவாதிகளும், மாட்டுக்கறி ஏற்றுமதியும்!

என்னுடன்  இளநிலை அறிவியல் படித்த தோழிகளுடன்  பேசும் வாய்ப்பு கிட்டியது. பலருடன் மறுபடியும் பல வருடங்களுக்கு பிறகு பேசும் போது உண்டான சந்தோசம் அதிகம் என்றாலும். கிட்ட தட்ட எல்லாருடைய கேள்வியும், நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக  "இந்தியாவில படிச்சிட்டு, இங்க இருக்கிற எல்லாத்தையும் உபயோகிச்சிட்டு, இப்போ வேற நாட்டுல இருந்துட்டு இருக்கீங்களே, இது அடுக்குமா?, ஏன் மா இப்படி பிறந்த நாட்டுக்கு  துரோகம் பண்ணுறீங்க?" என்ற ரீதியில் இருந்தது. இதே போன்ற கேள்விகளை நான் நிறைய சந்தித்து இருக்கிறேன் என்றாலும், இவர்கள் கேட்ட போது, மறுபடியும் மொதல்ல இருந்தா? என்று யோசிக்க தோன்றியது.

இவர்களை பொருத்தவரை, இந்தியாவில் படித்து அங்கிருக்கும் உதவிகளை பெற்று வளர்ந்து இப்போ இந்தியாவுக்கு சேவை செய்யாமல் வெளி நாட்டுக்கு சேவை செய்யறோம்?, ஏன் இது?, இது திரும்ப திரும்ப NRI மீது சுமத்தப்படும் குற்றம். 

உண்மையில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவை மறந்து விட்டனரா?..அவர்களால் இந்தியாவுக்கு என்ன பயன்? பலருக்கும் இந்த கேள்வி இருக்கலாம். 

இந்திய மக்கள் தொகையை பொருத்தவரை 1% இந்திய மக்கள் மட்டுமே வெளிநாட்டுக்கு சென்று வசிக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணம் மற்றும் முதலீடு மற்றும் சாரிட்டி என்று அனைத்தும் சேர்ந்து கிட்டத்தட்ட 250 பில்லியன் டாலர் அளவை 2014 இல் தாண்டி உள்ளது. இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவின் GDP அளவு ஆகும்.

 வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு என்று அனுப்படும் பணம் தான் உலகஅளவில் அதிக பணம் அனுப்படும் அல்லது பெறும் நாடு இந்தியா என்பது 2014 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட அல்லது, பணம் பெறப்பட்ட நாடுகளின் சர்வே பற்றிய வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் கட்டுரை தெரிவிக்கிறது. thanks to Wall Street Journal

70 பில்லியன் டாலர் பணத்தை NRI கள் இந்தியாவிற்கு 2014 ஆம் ஆண்டில் மட்டும் அனுப்பி இருக்கிறார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 4.2 லட்சம் கோடி 

இதனை தவிர எல்லா வங்கிகளும், நிதி நிறுவனங்களும், NRI மக்களை குறிவைத்து, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் நல்ல வட்டி தருகிறோம் என்று விளம்பரபடுத்துகிரார்கள். இதெல்லாம் ஏன், தற்பொழுது சிலிக்கன் வாலியில் இந்திய பிரதமர் மோடி கூவி கூவி அழைத்ததும் NRI களை, இவர்களை தான்.

அடுத்து கூறப்படும் குற்றச்சாட்டு, இந்தியாவுக்கு உழைக்காமல் வேறு நாட்டுக்கு உழைக்கிறோம் என்று. யாரெல்லாம் இதனை சொல்லுகிறார்களோ அவர்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான், நாங்க என்ன, இந்தியாவில  வேலை வச்சிட்டா இங்கே வந்தோம். வேலை கிடைக்காம வேற வழியில்லாம இங்க வந்தோம். நீங்க சொல்லுற மாதிரி இந்தியா திரும்பி நாங்க எல்லாரும் வந்துட்டாலும் எங்களுக்கு வேலை இருக்குமா?

இதில ஜோக் என்னன்னா, இப்படி NRI மேல கம்ப்ளைன் பண்ணுறவங்க கிட்ட நீங்க வெளிநாடு போறீங்களா அப்படின்னு கேட்டு பாருங்க, உடனே ஓகே சொல்லிடுவாங்க.. உங்களுக்கு பொழுது போக, ஏன் இப்படி எங்க தலையை உருட்டுறீங்க..சும்மா, செக்கு மாட்டு சிந்தனை வைச்சிட்டு, ஒரே நேர் கோட்டுல..NRI எல்லாரும் குள்ளநரி, சுயநல வாதிகள் என்று ஏன் இப்படி கரிச்சி கொட்டுறீங்கள்?

முதல்ல, நீங்க ஒழுங்கா இருக்கீங்களா?, எத்தனை பேரு ஒழுங்கா வரி கட்டுறீங்க?, எத்தனை பேரு லஞ்சம் வாங்காம இருக்கீங்க, தலைமையில இருந்து கடை நிலை ஊழியர் வரை லஞ்சம் தலை விரித்து ஆடுது. சொல்ல போனா, லஞ்சம் வாங்க தெரியாதவன எல்லாம் பிழைக்க தெரியாதவன் ற நிலையில, தண்ணி எல்லா இடத்திலையும் ஆறா ஓடுது, தண்ணி அடிக்கதேன்னு பாட்டு பாடினா ஜெயில், மாட்டு கறி சாப்பிட்டா வச்சிருந்தா சிறையாம்..இதை படிச்சவுடன், எனக்கு ஞாபகம் வந்தது ஒன்னே ஒண்ணுதான் CNN ல நான் படிச்ச நியூஸ், அதில, உலகத்திலேயே இந்தியா தான் மாட்டுக்கறி எச்போர்ட் பண்ணுறதில நம்பர் 1 ஆம். அதாவது இவங்கள பொருத்தவரை...நம்ம நாட்டு மக்கள் சாப்பிட கூடாது..ஆனா, அடுத்த நாட்டுக்கு ஏற்றுமதி பண்ணலாம்?...கொன்னா பாவம் இல்ல..தின்னா தான் பாவம்?..


thanks to CNN 


என்னவோ போங்கப்பா!References
http://blogs.wsj.com/indiarealtime/2015/04/15/india-wins-the-remittance-race-again/

http://money.cnn.com/2015/08/05/news/economy/india-beef-exports-buffalo/

30 comments:

நந்தவனத்தான் said...

இந்தியாலிருக்கும் சிலர் இப்படியெல்லாம் கேட்க காரணமே பொறாமைதான். ஆகவே இவர்களிடம் என்ன லாஜிக் சொன்னாலும் எடுபடாது. நான் நாட்டை விட்டு கிளம்பிய போது இதே கேள்விகளை கேட்ட எனது நண்பன் ஒருவன் (பல வருடம் கழிந்த பின்பு), போன மாசம் கனடாவிலுள்ள இன்னொருவனிடம் கனடா வருவது ஈசியா, எப்படி வருவது என கேட்டிருக்கிறான். அவனிடம் வெளிநாடு செல்வது குறித்து பலமணி வாக்குவாதம் செய்திருக்கிறேன். வங்கியாளனான அவனுக்கு இப்போதுதான் கனடாவில் நுழைவது சாத்தியம் என தெரியவந்திருக்கிறதாம். இத்தனைக்கும் அவன் ஒரு நல்ல கேரக்டர்.

நந்தவனத்தான் said...

எருமைக் கறியையும் பசுமாட்டு கறியையும் போட்டு குழப்பி கொள்வது சரியல்ல. பசுமாட்டு கறியை வைத்திருந்தால் சில மாநிலங்களில் குற்றம். ஆனால் இந்தியா பீஃப் ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பது எருமைக் கறியால். எல்லாமே பொதுவாக beef என அழைக்கபடுவதால் வரும் குழப்பம். இந்தியாவில் பசு கொலை கேரளா மற்றும் சில (வடகிழக்கு) மாநிலங்களில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால் மேற்கிந்திய மாநிலங்களில் எருமை,காளை உட்பட எல்லாமே தடைதான்.

இங்கு ஒரு முக்கியமான விடயமிருக்கிறது - இது நம்மைப் போன்ற தென்னிந்தியருக்கு புரிவதில்லை. வட இந்தியாவில் இந்துக்களை முசுலிம் அரசர்கள் கட்டாய மதமாற்றம் செய்யும் போது செய்யப்பட்ட முக்கிய சடங்கு- கோவில் பீஃப் சாப்பிடுவதுதானாம். ஆகவே இது வடக்கிந்தியருக்கு ரொம்ப சென்சிடிவான விடயம். முசுலிம்களுடன் புவியியல் ரீதியான தொடர்பு அதிகமுள்ள மாநிலங்களான மேற்கிந்திய மாநிலங்களில் மாடு சாப்பிட கட்டுப்பாடு அதிகம் என்பதிலிருந்து இதை விளங்கிக்கொள்ள முடியும். இதே கிழக்கிந்தியாவில் பசுவை சாப்பிடவும் தடையில்லை. மாட்டு மாமிசம் சென்சிடிவ் விடயம் என்பதால்தான் முசுலிம்களை பொதுவாக ஆதரிக்கும் முலாயம் லல்லு பார்டிகளும் கம்மென்று இருக்கின்றன.இந்துகளுக்கு பசு புனிதம் என்று இந்துத்துவாக்கள் செய்யும் அக்கப்போர் என தட்டையாக விளங்கிக் கொள்வது சரியன்று.

நேர்கோடு said...

@நந்தவனத்தான் : I dont know where you get all these stories from. I myself am not a Hindu but I do have close relatives and even closer friends who are Hindus. Eating beef (none ever cared about what kind of beef it was) has never been an issue for any one of them. To project eating beef as non-Hindu activity is injustice even to majority of Hindus.

Finally, do you know the definition of Hindu in Indian constitution? Please do not spread ignorance.

Isaac said...

பலர் இப்படித்தான்...

டிஸ்கி இல்லாமல் ஒரு பதிவு :-)

வருண் said...

My mom says, unlike old days, all hindu community folks (those days only muslims used to go) go to middle east and send most of the money they make to India because their family live there. She says hard-working people, laborers are NOT POOR anymore. They demand more money for their work these days. And they mostly go abroad and make money and send that to India.

People understand that money is everything and they can LOSE anything for making money. So, you could see all kind so "mess up" in our culture these days. People have money and they spend money because it comes from "foreign" and it is made somewhat "easily".

The lifestyle of Indians (emigrated) to middle east is completely different from how we live here in US. Their thoughts also completely different- even the so-called educated too. It is even hard to "get along" with them in any discussions. Because we are ignorant about them and their mind-set. They are ignorant about our mind-set too!

---------------

So, killing buffalo and exporting is OK? But, killing "cow" is unholy?! That's hilarious! Human beings are funny and the "religious human beings" and their justifications are funnier! ROTFL

நந்தவனத்தான் said...

@நேர்கோடு
ஒரு தகவலை எழுதினால் உடனே இந்து யார் என திராவிடத்தனமாக கேட்டு வைக்க வேண்டியது! இந்து யார்? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார்யார்? புத்திசாலிதனமா கேட்டு மடக்குறாராம். முடியலடா சாமி!

மதமாற்றத்தின் போது முசுலிம்கள் மன்னர்கள் இந்துக்களை பீப் சாப்பிட வைத்தார்கள் என்பதை பல இந்திய வரலாற்று புத்தகங்கள் சொல்லும் (உம்- http://tinyurl.com/npvzbtg). திப்பு சுல்தான் இசுலாமிய ஆட்சியில் இறுதி கால மன்னராக இருந்த போதிலும் இந்த கட்டாய பீஃப் சாப்பிடும் வைபவத்தை பலதடவை அரங்கேற்றியுள்ளாராம். சமீபத்தில் இசுலாமிய தீவிரவாதிகளால் 1998-ல் 25 காஷ்மீரி இந்துக்கள் தலையறுத்து கொல்லப்பட்டனர் - காரணம் அவர்கள் மதம்மாறி பின் அதை உறுதி செய்ய பீஃப் சாப்பிட வேண்டும் என தீவிரவாதிகள் வலியுறுத்தியதை மறுத்தது(http://tinyurl.com/pz947xq).

பீப் சாப்பிடுவது ஒன்றும் இந்துகளுக்கு புதிய விடயமல்ல. வேதகாலத்திலிருந்து நடைபெற்ற விடயம்தான், பெளத்த சமண பாதிப்பாலும் விவசாய காரணங்களினாலும் மாடு கொலை குறைய அல்லது மறைய ஆரம்பித்தது. ஆனால் சில முசுலிம் மன்னர்களின் அழிச்சாட்டியத்திற்கு பிறகு மிகவும் சென்சிடிவான விடயமாகிவிட்டது என்பதுதான் நான் சொல்லியது.

பீஃப் சாப்பிடுவதை தடுப்பது சரி என்பதல்ல எனது வாதம். அடிப்படை பிரச்சனை என்னவென எழுதினேன் அவ்வளவுதான். முதல் இந்திய சுதந்திரபோரின் அடிப்படை காரணமே இதுதான். சிலர் நம்புவது நமக்கு மடத்தனமாக தோன்றலாம். நாம் நம்புவது சிலருக்கு மடத்தனமாக தோன்றும்.இதெல்லாம் ரிலேட்டிவான விடயம். மற்றபடி நானே இந்துதான், ஆனால் ஒருகாலத்தில் அஜ்மீர் பிரியாணி கடையின் ரெகுலர் கஸ்டமர் - இப்போதும் டி-போன் ஸ்டேக்கை சப்புக் கொட்டியபடி சாப்பிடுபவன்தான். அதுவல்ல இங்கு பிரச்சனை.

வேகநரி said...

நந்தவனத்தான் சகோவின் தகவல்களுக்கு நன்றி.

நேர்கோடு said...

@நேர்கோடு
ஒரு தகவலை எழுதினால் உடனே இந்து யார் என திராவிடத்தனமாக கேட்டு வைக்க வேண்டியது! இந்து யார்? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார்யார்? புத்திசாலிதனமா கேட்டு மடக்குறாராம். முடியலடா சாமி!

Impressed. சரிங்க எல்லாம் தெரிந்தவரே....கேள்விக்கு முதலில் பதிலை சொல்லுங்க அப்புறமா திராவிடமா common senseaaன்னு முடிவு பண்ணுவோம்

வருண் said...

***நந்தவனத்தான் said...

எருமைக் கறியையும் பசுமாட்டு கறியையும் போட்டு குழப்பி கொள்வது சரியல்ல. பசுமாட்டு கறியை வைத்திருந்தால் சில மாநிலங்களில் குற்றம். ஆனால் இந்தியா பீஃப் ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பது எருமைக் கறியால்.***

Let us not worry about which is more and which is less? The way you are trying to justify looks as if ONLY buffalo meat is exported from India!

Anybody knows how many pounds of cow meat is exported?? Or all are buffalo meat??

I am sure it is more than few hundred pounds!

***ஆனால் ஒருகாலத்தில் அஜ்மீர் பிரியாணி கடையின் ரெகுலர் கஸ்டமர் - இப்போதும் டி-போன் ஸ்டேக்கை சப்புக் கொட்டியபடி சாப்பிடுபவன்தான். அதுவல்ல இங்கு பிரச்சனை. ***

I know though you are not under oath, IT IS 100% TRUTH!!! I am not sure everybody believes you as much as I do! lol

------------------

*** வேகநரி said...

நந்தவனத்தான் சகோவின் தகவல்களுக்கு நன்றி.***

வந்துட்டாரு "நன்றி" சொல்றதுக்கு!!

இஸ்லாமியப் பதிவர்கள் இல்லாமல் உங்க பொழைப்பு சாய்பாபா இல்லாத "நவீன புட்டப்பருத்தி" நிலையாயிடுச்சு. இல்லை?? :)))

Is that all you got to thank here. You know what? Seems like you are covering up buddy as if he ran into trouble here or something as you always do. Why are you guys trying too hard to justify "beef eating or exporting" is wrong??? Dont say, you are not doing it. WE KNOW what you do and why do!

I think you are a "vegetarian fox" who worships "holy cow"! Right?

நந்தவனத்தான் said...

@நேர்கோடு

என்னாத்தை சொல்ல? நீங்கதான் பெரிய அம்பேத்காருக்கு அடுத்த அரசியல் சட்டமேதைச்சே? வேணும்னா ஒரு அமென்ட்மென்ட் கொண்டாந்து யாரெல்லாம் இந்துன்னு வரையறை செய்ய வேண்டியதுதானே?

தமிழன் யார்? இந்து யார் என்பதெல்லாம் அனர்த்தமான கேள்விகள். தனக்கு பிடிப்பவன் தான் இந்து/தமிழன் எனவும் சொல்லாம் அல்லது இல்லை எனவும் சொல்லாம், அது அவனது உரிமை. மதசார்பற்ற நாட்டு அரசியல் சட்டத்திற்கு ஒரு தனிப்பட்ட மதத்தினை வரையறுக்கும் வேலை தேவையற்றது. இந்தியக்குடிமகன் யார் என்பதை வரையறுப்பது மட்டுமே அதன் வேலை. எனக்கு தெரிந்தவரை அமெரிக்க அரசியல் சட்டத்தில் கிறுத்தவம் என சொல்லே கிடையாது - அது உண்மையான மதசார்பற்ற நாடு. நம்மூர் போலிமத சார்பின்மை அமெரிக்க அரசியல் சட்டத்தில் இல்லை.

நந்தவனத்தான் said...

@ சகோ வேகநரி
நன்றி. இந்த மாதிரி விவாதம் நடந்து வருடக்கணக்கு ஆகுது. இன்னைக்கு 'நேர்கோடு' வாண்டடா வந்து வண்டியில ஏறிகிட்டாரு. :)

ஆனா அவுரே திராவிடமா common sense-ஆன்னு முடிவு பண்ணுவோம் சொல்லி ரெண்டும் antonym-தான்னு ஒத்துகிட்டாரு... அதுவரைக்கும் சந்தோசம்!

முகுந்த் அம்மா said...

@ நந்தவனத்தான் , @நேர்கோடு, @ வேகநரி and @ Varun

Although Its interesting to learn about different perception from all of you about Beef eating and Beef exporting and history. I request all of you refrain from personal comments/attacks. I always encourage healthy discussions and comments, because one can learn a lot through healthy discussions, but if the discussions become too personal attacks, then I might have to take the decision of not publishing them.

Hope you all understand.

thanks for all of your comments.


நந்தவனத்தான் said...

@சகோ வேகநரி

இந்த காமடி பார்த்து உங்களுக்கு ஒரு பழய 'நாய்சேகர்' ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை...

https://www.youtube.com/watch?v=1txHFKXfNS4


Adirai anbudhasan said...

ஒரு சிறு தகவல், முஸ்லிம்கள் எல்லோருக்கும் தெரியும், நிர்பந்தத்தால் செய்யும் காரியங்கள், மத நம்பிக்கைக்கு எதிரானதாக இருந்தாலும் அவர்களை மதம் மாற்றாது. முஸ்லிம் மன்னர்கள் தம் மதம் பற்றி நிச்சயமாக நன்கு அறிந்து இருப்பார்கள். முஸ்லிமாக மாறினால் மாட்டுக்கறி தின்ன வேண்டும் என்று எந்த முஸ்லிம் சொன்னார் ?

திப்பு சுல்தான் மாற்று மத சகோதரிகளின் மானம் காக்க சட்டமியற்றியது கேரளா வரலாற்றில் காணக்கிடக்கிறது !

முரளிமனோகர் ஜோஷியும் தான் புது ( புரட்டு ) வரலாறு எழுதுகிறார், இன்னும் அரை நூற்றாண்டு பின்னால் வரப்போகும் சந்ததி அதைத்தான் வரலாறென்று ஆதாரம் காட்டும்.

டிஜிடல் யுகத்திற்கு போக நினைத்தால் மட்டும் போதாது, தனிமனித உரிமை, மனிதன் மனிதனாக வாழ உரிமை வேண்டும் !!!! வளர்ந்த நாட்டுக்காரன் இதையெல்லாம் பார்த்தால், இங்கே முதல் போட வருவானா ?

கற்கால சிந்தனைகள் வளர்ந்தால் நாடு எங்கே உருப்படும் ? படித்தவர்களுக்கே சிந்திக்க தெரியவில்லை என்றால் நாடு எங்கே போகும் ?

ராஜ நடராஜன் said...

முதலில் பதிவரோடு ஒரு சின்ன சண்டை போட்டுக்கலாம். அமெரிக்க அன்னிய செலவாணியை விட மத்திய கிழக்கு நாடுகளில் சிறிது சிறிதாக ஆனால் பெரும் எண்ணிக்கையில் பணம் அனுப்புவர்களின் பணம் அதிகமாக இருக்கலாம் என்பது எனது ஊகம்.

பின்னூட்ட சண்டைக்கோழிகள் ஓடி விட்டதா நினைத்தால் இன்னும் ஒரு சில சுத்திக்கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சி:)

மாட்டுகறியை இந்தியாவிலேயே உரிச்சு சாப்பிட்டு விட்டு வெறும் தோலை மட்டும் உலக நாடுகளுக்கு அனுப்புவதால் இந்தியா தோல் ஏற்றுமதியில் முன்னிலையில் இருக்கலாம் என்பது எனது ஊகம். ஊகத்துக்கு அடிப்படையா மேலும் மத்திய கிழக்கு நாடுகளிலும்,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சுகாதார அடிப்படையில் மாட்டுக்கறியை ஊக்குவிப்பதில்லை என நினைக்கிறேன்.புள்ளி விபரம் அறிந்தவர்கள் சொன்னால் ஏற்றுக்கொள்வேன்.

@நந்தவனத்தான்! நலமா? இந்தியாவில் பசுமாடுகளும்,காளைகளும் எருமை,போத்துகளை விட எண்ணிக்கையில் அதிகம். சொல்வதற்கு வேண்டுமென்றால் எருமைக்கடா மாதிரி நிற்கிறான் என சொல்லலாம்:) வரலாற்று அடிப்படையில் வடக்கில் இந்து மாமிச தீவிரவாதிகளாய் இருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம் போலதான் சொல்கிறீர்கள்.

முகுந்த் அம்மா said...

@ராஜ நடராஜன் said...
"முதலில் பதிவரோடு ஒரு சின்ன சண்டை போட்டுக்கலாம். அமெரிக்க அன்னிய செலவாணியை விட மத்திய கிழக்கு நாடுகளில் சிறிது சிறிதாக ஆனால் பெரும் எண்ணிக்கையில் பணம் அனுப்புவர்களின் பணம் அதிகமாக இருக்கலாம் என்பது எனது ஊகம்."

I never mentioned anywhere that the remittance to India is from "US" only, neither it was mentioned like that by WSJ. The article clearly mentioned remittance to India. Irrespective of where you live..whether you live in middle east or US or anywhere in the world, those whoever living outside of India are unanimously called "NRI:Non-Resisdent-Indian" and it doesn't represent "Indians living in US".

முகுந்த் அம்மா said...

Those whoever living outside of India are unanimously called as "NRI:Non-Resisdent-Indian" and it doesn't represent "Indians living in US only"

முகுந்த் அம்மா said...

@நந்தவனத்தான் said...
"எருமைக் கறியையும் பசுமாட்டு கறியையும் போட்டு குழப்பி கொள்வது சரியல்ல. பசுமாட்டு கறியை வைத்திருந்தால் சில மாநிலங்களில் குற்றம். ஆனால் இந்தியா பீஃப் ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பது எருமைக் கறியால். எல்லாமே பொதுவாக beef என அழைக்கபடுவதால் வரும் குழப்பம். இந்தியாவில் பசு கொலை கேரளா மற்றும் சில (வடகிழக்கு) மாநிலங்களில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால் மேற்கிந்திய மாநிலங்களில் எருமை,காளை உட்பட எல்லாமே தடைதான்.
"

I have a doubt.
If someone is coming to arrest you or torture you for the "Possession of beef meat ", do they do a test to confirm whether the meat is from buffalo or from cow.

Is there a test available that differentiates buffalo meat from cow meats?

Do India have lots of buffaloes? compared to cows. And do India have food for all people?.

I think, It seems India have enough "food" that they can share to all...otherwise they wont be number 1 in beef export

நந்தவனத்தான் said...

@ராசநட, ஞாபகம் வைச்சிருக்கீங்க போலயே, நன்றி. போன வார என்டர்டெயின்மென்டு நீங்களாம். இந்த வாரம் நானும் சகோவேகநரியுமாம். சிக்குவமா நாங்க!

இந்தியாவில் எருமைகளின் அளவு 2012 சென்ஸஸ்படி சுமார் 36%, வடக்கில் 75% எருமை வைத்திருக்கும் மாநிலங்கள் உண்டு-உதாரணமாக பஞ்சாப். எருமைகறி அதிகம் கிடைக்க ஒரு காரணம் பசு மாதிரி பால் வற்றும் வரை வைத்திருக்காமல், கொழுத்ததும் காசு கிடைக்கும் என்றால் அடித்துவிடுவார்களாம், அமெரிக்க ஸ்டைலில். ஒரு எருமை 4 வயதில் குட்டிபோட ஆரம்பித்தால் 8 வரை போடுமாம். அதிலும் ஆம்பளை எருமைகள் வளர்ந்தும் நேரா கசாப்பு கடைதான். இதனால் ஏற்றுமதி ஆவதில் பெரும்பாலும் எருமைதான்- குறைந்தபட்சம் பசு ஏற்றுமதிக்கு தடை என்பதால் இதுதான் official நிலை!

ஏற்கனவே ரகளை, இந்த லட்சணத்தில் ஆடு, மாடு, பன்னி சாப்பிட்டால் கான்சர் வரும் என இந்த வாரம் பீதியை கிளப்பிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

நந்தவனத்தான் said...

//I have a doubt.If someone is coming to arrest you or torture you for the "Possession of beef meat ", do they do a test to confirm whether the meat is from buffalo or from cow.//

Meat must be tested in a laboratory to prove the case in court. Even in UP barbaric lynching death case, police tested meat in a laboratory and found that it was mutton.

//s there a test available that differentiates buffalo meat from cow meats?//

come on, A simple PCRs can do the job, I guess. There are commercial tests available, not only to differentiate the species, but even to trace back individual animal. Thus, these tests can detect species, gender and geographical location of the animals. Govt of India has labs (especially at meat export hub Mumbai) to test meat exported out of the country. They suppose to monitor illegal export of cow meat along with other quality issues. However, we all very well aware, how Indian officials function.

//I think, It seems India have enough "food" that they can share to all...otherwise they wont be number 1 in beef export//

India ranks fifth in beef production, seventh in domestic consumption and first in exports.

வேகநரி said...

@ முகந்தனின் அம்மா, தனிமனித தாக்குதல்களை தவிர்க்கும் படி வேண்டுகோளில் என்னையும் சேர்த்திருந்தீர்கள். நான் யாரை தாக்கினேன்! தகவல்கள் தந்ததிற்காக சகோதரன் நந்தவனத்தானுக்கு நன்றியை தெரிவித்தேன். அதை கூட பொறுத்து கொள்ள முடியாமல் சகிப்பு தன்மையற்ற அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். நானும் ரவுடி தான் என்று காட்ட தமிழ் பதிவர்களோடு, தமிழில் கம்மெண்டு போடுபவர்களோடும் சண்டை போட்டு திரிபவனல்ல நான்.
------------
சகோ நந்தவனத்தான் காமடி வீடியோவுக்கு நன்றி.
------------
//ராஜ நடராஜன் said...
அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சுகாதார அடிப்படையில் மாட்டுக்கறியை ஊக்குவிப்பதில்லை என நினைக்கிறேன்.//
அமெரிக்கா பற்றி எனக்க எதுவும் தெரியாது. ஆனா வேறு எந்த நாட்டு ஹெல்த் டிப்பார்ட்மெண்ட்டாவது மாட்டுக்கறி சாப்பிடுவதை ஊக்குவிக்கிறதா தமிழகத்தில் சிலர் ஊக்குவிப்பது போல்.

வருண் said...

Yeah, let us do a PCR on every piece of meat (they may have mixed up buffalo and cow meat). ROTFL

A PCR might couple of rupees, I suppose???!

Moreover it is worth doing it with all the biotechnolgy experts we got! This is hilarious!

வருண் said...

Let us first understand, "the paarppaan-manipulated Hindu dharma"! And that how it works?

It is sort of like "Killing buffalo is more like killing a dravidian or a sudra". Their life is cheap according to hindu dharma! On the other hand killing a "holy cow" is more like killing a "parppaan"! Paarpaan lives are always worth more than a cheap dravidan life! That's how hindu dharma works! Or not?!!

BTW, Mukundamma: Please dont say I am attacking people personally. Let me remind you did allow a comment which say "திராவிட்டத்தனம்"! That's a racist comment made by a steak-eating paappaan!

முகுந்த் அம்மா said...

"Meat must be tested in a laboratory to prove the case in court. Even in UP barbaric lynching death case, police tested meat in a laboratory and found that it was mutton"

"come on, A simple PCRs can do the job, I guess. There are commercial tests available, not only to differentiate the species, but even to trace back individual animal. Thus, these tests can detect species, gender and geographical location of the animals. Govt of India has labs (especially at meat export hub Mumbai) to test meat exported out of the country. They suppose to monitor illegal export of cow meat along with other quality issues. However, we all very well aware, how Indian officials function."

According to your comment, It seems as if, whoever is coming to kill you for the possession of meat will carry a "PCR theromo cycler and have probes designed for both Buffalo and Cow and extract a tissue and run a centrifuge to extract DNA and then run a PCR reaction , wait for 45 minutes until the reaction is done and confirm it and then kill /arrest/torture the person"

According to them.. they have more rage because of the "person" than of the "meat"

முகுந்த் அம்மா said...

@Varun and @வேகநரி

Since you both asked me about my comment about "Personal attacks" I am giving you the following reply.

I have been encouraging comments from all, as long as it is relevant to the post and it makes us one step closer to "understanding the reality". During this process...there might be some unintended personal attacks that comes as a flow.

I always maintain some standard in my blog, and I would try my best to keep it that way, by not allowing personal attack comments or calling someone names.

I have never pointed out anyone, and indeed, I just mentioned those whoever commented on the post or names mentioned in other comments to be cautious. I want to be as general as possible as I dont want to see people throwing stones at each other by the name of personal attacks.

Thanks for understanding.

முகுந்த் அம்மா said...

Blogger நந்தவனத்தான் said...
"ஏற்கனவே ரகளை, இந்த லட்சணத்தில் ஆடு, மாடு, பன்னி சாப்பிட்டால் கான்சர் வரும் என இந்த வாரம் பீதியை கிளப்பிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்!"

WHO mentioned only about eating processed meat and not all meat consumption.
http://www.bbc.com/news/health-34615621

It never mentioned anything about fresh meat.

It mentioned about the preservatives used in processed meats like Bacon, sausages, hotdogs.

வருண் said...

***Blogger நந்தவனத்தான் said...
"ஏற்கனவே ரகளை, இந்த லட்சணத்தில் ஆடு, மாடு, பன்னி சாப்பிட்டால் கான்சர் வரும் என இந்த வாரம் பீதியை கிளப்பிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்!"

WHO mentioned only about eating processed meat and not all meat consumption.
http://www.bbc.com/news/health-34615621

It never mentioned anything about fresh meat.

It mentioned about the preservatives used in processed meats like Bacon, sausages, hotdogs. ***

You need to understand that "things" getting manipulated with a purpose. This has been happening for years..

* "indian beef" will be manipulated and "mislabeled" as "buffalo meat" ON PURPOSE!!

* "Processed meat" will be manipulated as "meat" on purpose!

They are pretending as if they care about poor people life (who are starving because of lack food) and "suggesting" them not to eat beef because it gives you cancer!!

If meat is giving you cancer, why the hell a conservative vegetarian guy starts eating "steak"? He does not follow what he preaches others?? Why are you preaching others "beef-eating can cause" cancer?? You want to die sooner or you are lying for the "argument sake"?? Something fishy here or not???

முகுந்த் அம்மா said...

@All

I believe its better to stop the discussion about beef or meat eating..as it is becoming more of a discussion of personal preferences and experiences..

thanks a lot for the comments and suggestions.

நந்தவனத்தான் said...

//According to your comment, It seems as if, whoever is coming to kill you for the possession of meat will carry a "PCR theromo cycler and have probes designed for both Buffalo and Cow and extract a tissue and run a centrifuge to extract DNA and then run a PCR reaction , wait for 45 minutes until the reaction is done and confirm it and then kill /arrest/torture the person"According to them.. they have more rage because of the "person" than of the "meat"//


Sorry, Someone in Facebook commented that there was no test to detect cow meat. I confused that with yours. I meant that for law enforcement. Mob has no legal right to kill /arrest/torture anyone for possessing any meat, period!

//It never mentioned anything about fresh meat. //

Look at the WHO website...

http://www.who.int/features/qa/cancer-red-meat/en/

வருண் said...

****In its new evaluation, the IARC offered a different risk assessment: It concluded that eating about 1.8 ounces of processed meat daily will increase the risk of colorectal cancer by about 18 percent. We should note, we're talking relative risk here, and the chances of developing colorectal cancer are fairly low to begin with.***

--------------------------------

Moreover when we say "red meat", it includes GOAT/LAMB/BUFFALO.. It is not that only eating "holy cow" can cause cancer! The issue here is EATING BEEF! Let us not forget that!

Does it mean vegetarians will long life and cancer-free death?

May be they die earlier than meat-eating guys?? May be because they dont take enough protein from red meat. As they "leave" earlier, they dont have a chance to meet with cancer as much as long-live westerners do. What happens if they all live 100 years? YOu would see more cancer deaths among them too!They never die of cancer? That ain't true either. Japanese eat lost of fish and they live longer than an "indian vegan"

So, people use "scientific results" to spread rumors for their own advantage. This is one of those attempts! If one looks at the data carefully, this data has nothing to do with "beef-eating" or "killing holy cow". Killing and eating "holy lamb and holy goat and holy buffalo" also as bad as eating holy cow!