Saturday, June 30, 2012

அரசியலால் வில்லன்கள் ஆகும் காமெடியன்கள்!

அது 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம், அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க வில் இணைந்திருந்தார் காமெடி நடிகர் செந்தில். ஆனந்தவிகடன் பேட்டி ஒன்றில் “ஏய் கருணாநிதி!, ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?” என்று கேட்டு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த தேர்தலில் அ.தி.மு.க தோற்று தி.மு.க வென்றது..

அ.தி.மு.கா வுக்கு ஆதரவாக மு.க வை தாக்கிய அந்த ”ஒண்டிக்கு ஒண்டி” வார்த்தையை திட்டி பல பிரபலங்கள் பேட்டி கொடுத்தனர்.


 
ஏற்கனவே பட வாய்ப்புகள் குறைந்திருந்த செந்திலுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்க பயந்து பட அதிபர்கள் ஒதுக்க  ஆரம்பித்தனர்.  பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் ஒடுங்க ஆரம்பித்தார் செந்தில் அவர்கள்.
 
எந்த கட்சியையும் சாராமல் இருந்த வடிவேலுவும், விவேக்குக்கும் அதிக வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன.
 
 
சீன் மாறுகிறது.
 
இது 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம். அப்போது ஆளும்கட்சியாக இருந்த தி.மு.காவில் சேர்ந்திருந்தார் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர் வடிவேலு.
 
தி.மு.காவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக அவர், எதிர் கட்சி கூட்டணியில் இருந்த தே.மு.தி.கா தலைவரை தாக்கி பேசினார்.
 
 அந்த தேர்தலில் தி.மு.க தோற்று அ.தி.மு.க வென்றது..


தி.மு.கா வுக்கு ஆதரவாக விஜயகாந்தைவை தாக்கியதை, திட்டி பல பிரபலங்கள் பேட்டி கொடுத்தனர்.



ஆளும்கட்சியை பகைத்துகொண்டு  வடிவேலுவுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்க பயந்து பட அதிபர்கள் ஒதுக்க ஆரம்பித்தனர். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் ஒடுங்க ஆரம்பித்தார் வடிவேலு அவர்கள்.


எந்த கட்சியையும் சாராமல் இருந்த சந்தானத்திற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் பிரசாரம் செய்த இரண்டு காமெடியன்களும் அரசியல் செய்ய தெரியாமல் வாயில் வந்ததை பேசி வில்லன்கள் ஆக்கப்பட்டு வாய்ப்பை இழக்கின்றனர்.

 இதிலிருந்து என்ன தெரிகிறது, அரசியல்வாதிகளும், ஆளும் கட்சியும் தான் ஒரு நடிகனின் மார்கெட்டை தீர்மானிக்கிறார்கள். மக்கள் தீர்மானிப்பதில்லை!!

4 comments:

வவ்வால் said...

அட அரசியல்,சினிமா எல்லாம் அலச ஆரம்பிச்சுட்டிங்களே :-))

இது கறுப்பு வெள்ளைக்காலத்திலேயே உண்டு,

ஜெய்சங்கர், நாகேஷ், சந்திரபாபு, பி.எஸ்.வீரப்பா, அசோகன், ஆனந்தன் , எனப்பலரும் அரசியல் பலம் உள்ள எம்ஜிஆரை உரசியதால், பட வாய்ப்பு இழந்தனர். அது இன்றும் தொடர்கிறது.

Avargal Unmaigal said...

உங்களிடம் இருந்து ஒரு காமெடி அரசியல் பதிவா மிக ஆச்சிரியமாக இருக்கிறது கலக்கலாக இருக்கிறது

ப.கந்தசாமி said...

சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பிழைக்கத் தெரியாத காமெடியன்களின் நிலை காமெடி ஆனது துரதிர்ஷ்டம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாங்க அரசியல் பேசப்போய் வீட்டுல உக்காந்துட்டாங்க.. பாவமா இருக்கு..