ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி பகுதி 1
ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி பகுதி 2
கணவன் மனைவிக்குள் சண்டை அல்லது ஆபிசில் மேனேஜர் கடுப்படிக்கிறார் அல்லது நமக்கு நெருங்கிய ஒருவர் தவறு செய்து விட்டார் அல்லது ஒரு வாய்ப்பை தவற விட்டுவிட்டோம் அல்லது பர்ஸ்/போன் தொலைந்து விட்டது, கால் சுளுக்கி விட்டது அல்லது உடைந்து விட்டது அல்லது ஒருவர் ஏமாற்றி விட்டார் ....இப்படி பல பல விஷயங்கள் நமக்கு பெரிய தலை போகிற விசயமாக இருந்து ஸ்ட்ரெஸ் கொடுக்கும்.
ஆனால் தற்போது பெரிய விசயமாக தெரியும் பல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெரிய விசயமாக இருக்காது அல்லது காலத்தின் ஓட்டத்தில் ம ற /றை ந்து விடும்.
அதனால் எந்த ஒரு விசயத்தையும் ரத்த கொதிப்பு வரும்வரை ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக யோசிக்காமல் "இன்றிலிருந்து ஒரு வருட காலத்தில் இந்த நினைப்பு இருக்குமா" என்று நினைத்து பாருங்கள்.
உங்கள் மேனேஜரிடம் நீங்கள் இன்று வாங்கிய திட்டு , அல்லது உங்களின் குழந்தை அல்லது நெருக்கமானவர் செய்த தவறு ஒரு வருடம் கழித்து நினைவில் இருக்குமா உங்களுக்கு? யோசியுங்கள். பர்ஸ் தொலைந்தது, போன் தொலைந்தது, கால் சுளுக்கு இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உதாரணமாக ஒரு வாரம்/ஒரு மாதம்/ சில மாதங்கள் , பெரிய விசயமாக இருக்கும் இருக்கும் பின்னர் அதனை பற்றி நினைவாவது இருக்குமா என்று யோசியுங்கள்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு உப்பு சப்பிலாமல் போக கூடிய விசயங்களை நினைத்து இப்போது ஸ்ட்ரெஸ் ஆகி என்ன பயன். பெரும்பாலான நம்முடைய ஸ்ட்ரெஸ்கள் இப்படி யோசித்தால் மறைந்து போகும்.
என்னுடைய சொந்த அனுபவத்தில் கண்டது இது , போன வருடம் பெரிய விசயமாக தெரிந்த பல இப்போது பெரிய விசயமாக தெரிவதில்லை. ஒரு வேலை தான் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன், ஆனால் இப்போது இது இல்லாவிட்டால் மற்றொன்று என்ற தோன்றுகிறது . மிகவும் முக்கியமான நபர் என்று நினைத்த பலர் இப்போது முக்கியமானவராக தெரிவதில்லை. காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும்.
ஸ்ட்ரெஸ் ஆகி ஒரு விஷயத்தை யோசிக்கும் போது தொடர்ச்சியாக அனைத்து நெகடிவ் விசயங்களும் நமக்கு தோன்ற ஆரம்பிக்கும். இதனை ஆங்கிலத்தில் "snowball effect " என்பர். அதுவும் சில நேரங்களில் இரவில் திடீரென்று ஒருவரை போனில் அழைக்க வேண்டும் என்று நினைப்பு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், உடனே மனம் அதோடு நின்றுவிடாமல் அதனை தொடர்ந்து அந்த நபரை பற்றிய அனைத்தும் ஞாபகம் வரும், பின்னர் அது மற்ற விசயங்களுக்கு தாவும், பின்னர் இது தொடர்கதையாகி முடிவில் தூக்கம் இல்லாமல் ஸ்ட்ரெஸ் ஆகி அடுத்த நாள் தூங்கி வழிவோம். அதனால் எப்போதும் எந்த ஒரு விசயத்தையும் அந்த விசயத்துடன் நிறுத்தி ஒரு புல் ஸ்டாப் வைத்து விடுங்கள். அல்லது முளையிலையே அந்த நினைப்பை கிள்ளி விட்டு அடுத்த வேலைலையை பாருங்கள். என்னுடைய உதாரண படி, ஒரு சிறு பேப்பரில் "அடுத்த நாள் இவரை போனில் அழைக்க வேண்டும்" என்று எழுதி வைத்து விட்டு தூங்கி விடுங்கள். அதனால் நீங்கள் மறந்தும் போக மாட்டீர்கள், அதே சமயம் snow ball effect இல் இருந்தும் தப்பித்து கொள்ளலாம்.
நன்றி