Monday, January 18, 2016

தொலைந்த ஏரியும், ராஜாவின் ஆளுமையும்!

முதலில் நான் பார்த்த குழந்தைகள் நிகழ்ச்சி பற்றியது.

எப்பொழுதும் நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. சில நேரங்களில் முகுந்துடன் அவனுடைய சேனல் பார்ப்பதை தவிர. PBS எனப்படும் பப்ளிக் தொலைக்காட்சி (நம்மூர் தூர்தர்ஷன் போல) ஒன்றே ஒன்று மட்டுமே பார்க்க அதுவும் வார இறுதி நாட்களில் பார்க்க அனுமதி உண்டு. அப்படி ஒரு நாள் தொலைக்காட்சி நேரத்தில் பார்த்த ஒரு நிகழ்ச்சி "ப்ளம் லேன்டிங்" எனப்படும் ஒரு குழந்தைகள் நிகழ்ச்சி. 

அந்த நிகழ்ச்சியின் மெயின் கேரக்ட்டர் "ப்ளம்" எனப்படும் ஒரு ஏலியன். வெளி உலகில் இருந்து வந்து பூமியின் ஒவ்வொரு விசயத்தையும் இயற்கையையும் பார்த்து அதிசயிக்கும் ஒரு பிராணி ப்ளம். அப்படி ஒரு நாள் வந்த நிகழ்ச்சி, "லாஸ்ட் லேக்" எனப்படும்  ஆஸ்திரேலிய பாலைவனத்தில் தொலைந்த ஏரி பற்றியது.

எப்படி ஒரு 3 மாத இடைவெளியில் ஒரு பெருமழை பெய்து, ஒரு பாலைவனம் சோலைவனமாக மாறுகிறது பின்னர் மறுபடியும் பாலைவனமாக மாறுகிறது. என்பதனை ஒரு 5 நிமிட நிகழ்ச்சியில் பொருத்தி மிக மிக இன்றேஸ்டிங் ஆக அளிக்கிறார்கள் என்று நினைத்தால் அதிசயமாக ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் தண்ணீர், மழை. அதனை கொண்டு ஆக்காவும் முடியும் அழிக்கவும் முடியும் என்று ஒரு 5 நிமிட ப்ரோக்ராமில் கற்று கொடுத்தது அமேசிங்.

என்னுடைய ஆறாவது அல்லது ஏழாவது படிக்கும் போது என்று நினைக்கிறன். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பற்றி புவியியலில் மனபாடம் செய்தது. ஆஸ்திரேலியா நிறைய பாலை வனங்கள் கொண்டது என்று அறிந்தது /மனபாடம் செய்தது ஆறாவது படிக்கும் போது. அதன் பின்னர் எதுவும் நான் படித்தது இல்லை. ஆனால் ஒரு 1 வது படிக்கும் முகுந்த், நான் ஆறாவதில் படித்ததை விட நிறைய தெரிந்து கொண்டு இருக்கிறான். அதை போலவே, மாங்கரூவ் காடுகள் எனப்படும் சதுப்பு நில காடுகள் எப்படி சிறு கடல் மீன்கள் வளர, மீன்களுக்கு டே கேர் போல இருக்கின்றன என்று பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் தற்போது இருக்கும் குழந்தைகள் நிறைய விசயங்களை விளையாட்டாக கற்று கொள்ளுகிறார்கள். சில நேரங்களில் பொறமை கூட பட தோன்றுகிறது.

சில "ப்ளம் லேன்டிங்" வீடியோக்கள் இங்கே






அடுத்த விஷயம் இசைஞானி இளையராஜா பற்றியது. 

எங்கள் தமிழ் பள்ளியில் வருடாவருடம் பொங்கல் திருவிழா நடக்கும். ஒவ்வொரு வருடமும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் தன்னார்வ தொண்டர்களும் பொங்கல் குறித்து அதனை சார்ந்த விசயங்களை ஆடல் பாடல் நடிப்பு மற்றும் கவிதை கட்டுரை என்று அரங்கேற்றுவது உண்டு. அப்படி நிறைய நிறைய ஆட்டங்கள் பாட்டங்கள் என்று இந்த வருடமும் கலை கட்டியது.

பொங்கல் பண்டிகையை பற்றியதல்ல இந்த பதிவு..ஆனால் எப்படி இளையராஜா என்னும் ஒரு ஆளுமை நம்மில் கலந்து இருக்கிறார் என்பதனை பற்றியது. உதாரணமாக, நீங்கள் எந்த கிராமியம் சம்பந்தமான ஒரு விஷயம் யோசித்தாலும் அல்லது பாட்டை நினைத்தாலும் உடனே நமக்கு ஒரு இசை ஞாபகத்திற்கு வரும் என்றால் அது இளையராஜா இசை என்பதை யாரும் மறுக்க முடியாது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தற்போது ஹாட் ஆக இருக்கும் தாரை தப்பட்டை தீம் மியூசிக் இல் பொங்கல் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அய்யா..என்ன ஒரு மியூசிக். கேட்கும் அனைவரையும் எழுந்து ஆட வைக்கும் மியூசிக்..


அதனை தொடர்ந்து "பச்சைக்கிளி பாடும் பாட்டு", "மாரி மழை பெய்யாதோ!! "சில பாடல்கள் சில ரஹ்மானின் பிறரின் அதிக இரைச்சல் இசையிலும்,இசை என்று ஒன்று இசைத்தாலும்  இரைச்சலே மிச்சம் இருந்த மாதிரி ஒரு உணர்வு.,ஆனால் அடுத்து  வந்த "பூமியே எங்க சாமியம்மா" . என்ன ஒரு பாட்டு..அதற்க்கு மழலைகளின் அருமையான ஆட்டம். அருமை அருமை. மொத்த அரங்கமும் ஆரவாரமாக ரசித்தது.



ஒன்று மட்டும் நிச்சயம். எத்தனை எத்தனை கத்து குட்டிகள் வந்து நாங்களும் இசை அமைகிறோம் என்று பீற்றி கொண்டாலும். ராஜா என்னும் ஒரு ஆளுமையை அசைத்து கூட பார்க்க முடியாது.

டிஸ்கி 

இது என்னுடைய பார்வையில் இருந்து எழுதியது மட்டுமே..மற்ற இசை கலைஞர்கள் இசையை குறை கூற இல்லை இங்கு.






4 comments:

வேகநரி said...

நல்ல பதிவு.
இளையராஜாவின் ஆளுமை எந்தளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதை வெளிநாடுகளில் உள்ள சிறுவர்களை பார்த்தே நானும் அறிந்து இருக்கிறேன்.

காரிகன் said...

உங்களுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களே இளையராஜாவின் ஆளுமையை "மிகத் தெளிவாகச்" சொல்லிவிட்டது.

முகுந்த்; Amma said...

@காரிகன் said...

'உங்களுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களே இளையராஜாவின் ஆளுமையை "மிகத் தெளிவாகச்" சொல்லிவிட்டது."

I am not sure you meant this comment in a sarcastic way. If you meant that way, I got one of the highest viewing stats for this post.

Whatever way you meant it, as far as south indian country music is concerned, Ilayaraja is still the king.

thanks for the comment though





வேகநரி said...

இளையராஜா தென் இந்திய இசை கிங் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அந்த உண்மை சிலருக்கு ஏன் வயிற்று வலியை உண்டாக்குகிறது என்பது தான் புரியவில்லை!