கடந்த சில வாரங்களில் இரண்டு விஷயங்கள் பார்க்க நேர்ந்தது. ஒன்று நான் கல்லூரி படிக்கும் காலத்தில் வந்த "Kuch Kuch Hota Hai" படமும் நேற்று நான் சேட்டைக்காரன் அவர்களின் தளத்தில் வாசித்த சன்னி லியோன் இண்டர்வியு குறித்த பதிவும் அதனை தொடர்ந்து நான் பார்த்த அந்த யூ டுயூப் இண்டர்வியுவும்.
முதலில் Kuch Kuch Hota Hai பற்றி என் கல்லூரி காலத்தில் வந்த ஒரு கல்ட் படம் அது. பாடல்களும் சரி, ஷாருக்கான் மற்றும் கஜோல் இருவரிடம் இருந்த கெமிஸ்ட்ரி, கல்லூரி வாழ்க்கை என்று அனைவரையும் பைத்தியம் பிடிக்க வைத்தவை. எனக்கு ஹிந்தி அதிகம் தெரியாது என்றாலும், என் கல்லூரி தோழிகளிடம் பேச வேண்டும் அல்லது எனக்கும் தெரியும் என்று காட்ட வேண்டும் என்பதற்காகவே அதன் பாடல்களை காசெட் களில் கேட்ட காலம் அது. பின்னர் எங்கள் கல்லூரி தோழிகள் எல்லாம் சேர்ந்து அந்த படத்திற்கு வேறு சென்றோம். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் பாடல்களும் எனக்கு அத்துபடி.
அதே படம் கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து இப்பொழுது நெட்ப்ளிக்ஸ் புண்ணியத்தில் பார்க்க நேர்ந்தது. என்னுடைய தோழிகள் வேறு, "Kuch Kuch Hota Hai" netflix இல் வந்து இருக்கு பார்க்கலையா, என்று சொல்ல. என் காலேஜ் நாட்களை எண்ணியபடி அந்த படத்தை பார்த்தேன்.. ஆனால் இப்போது எனக்கு அந்த படத்தின் ஒவ்வொரு விசயமும் ஸ்டுபிட் ஆக இருந்தது. பின்னர் சில விசயங்களும் உரைக்க ஆரம்பித்தது.
முதலில் ஷாருக் கின் ராகுல் என்னும் கரெக்ட்டர் கல்யாண சந்தையில் அல்லது பொதுவாக பெண்ணை பற்றிய இந்திய ஆணின் எதிர்பார்ப்பின் மொத்த உருவமாக தெரிந்தது. அவரும் கஜோலும் நண்பர்களாக பழகுவார்களாம், ஆனால் இவர் அந்த பெண்ணை காதலிக்க மாட்டாராம், ஏனெனில் அந்த பெண் "ஆண் தன்மை உள்ளவாராக , பாஸ்கெட் பால் விளையாடி கொண்டு" திரிவதால் இவருக்கு காதல் வரவில்லையாம். ஆனால் தன்னுடைய கல்லூரியில் பெண்மையுள்ள
"ஹாட் சிக்" ஒரு பெண் வந்தவுடன் அவர் அந்த "ஹாட் சிக்" பின்னாடி சுற்றுவாராம், "காதலிப்பாராம்". ஆனாலும் அந்த "ஹாட் சிக்கை" அவர் "கல்யாணம் செய்ய " அந்த "ஹாட் சிக்" தனக்கு நம்முடைய கலாச்சாரமும் தெரியும் என்று "ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே" என்று சாமி பாட்டு பாடி பின்னர் தனக்கு கோயில் போகும் பழக்கம் எல்லாம் இருக்கிறது என்று காட்டிய பின்னர், இவர் கல்யாணமும் செய்து கொள்வாராம். ஒரு வேலை அந்த பெண்ணுக்கு நம்முடைய கலாச்சாரம் தெரியாது என்று வைத்து கொண்டால் இவர் அந்த பெண் பின்னால் சுற்றுவதோ அல்லது அந்த பெண்ணிடம் பேசுவதோ அல்லது அந்த பெண்ணை காதலிக்கவும் செய்யலாம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ள மாட்டோம். ஏனெனில் அந்த பொண்ணுக்கு இந்திய கலாச்சாரம் தெரியாது என்று புறக்கணித்து இருக்க வாய்ப்புகள் உண்டு.
பிறகும், அந்த பெண் இறந்தவுடன் தன்னுடைய பழைய தோழியை சந்திக்க அவரின் மகளே வழி ஏற்படுத்தி கொடுப்பாராம், இவரும் தற்போது "பெண்மையாக" மாறி உள்ள தன்னுடைய தோழியை பார்த்ததும் "காதல்" வந்து விடுமாம். ஆனால் அந்த தோழியோ, இன்னும் பழைய காதலன் நினைவாகவே இருப்பதாகவும் பழைய காதலன் வந்து தன்னுடைய கல்யாண தினத்தில் வந்து "I love you" சொன்னவுடன் உருகி போய் திரும்ப சேருவதாகவும் ஒரு அப்பட்டமான அசிங்கமான இந்திய ஆணின் ஆணாதிக்க படமாக எனக்கு தெரிந்தது. அதாவது, ஆண் என்றால் எத்தனை காதல் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம், எத்தனை பேரையும் காதலிக்கலாம் ஆனால் பெண் என்றால், காதல் அல்லது கல்யாணம் என்றால் அது ஒரு முறை. இல்லை என்றால் அவள் ஒழுக்கமான பெண் இல்லை. அல்லது இந்திய norm ன் படி அவள் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவள் இல்லை. இது ஒரு எழுதபடாத சட்டம்.
இந்த படத்தை பார்த்து ஏற்கனவே புழுங்கி கொண்டு இருந்த எனக்கு சன்னி லியோன் அவர்களின் IBN இண்டர்வியு பார்க்க நேர்ந்தது. சன்னி லியோன் பற்றி ஒரு சில விஷயங்கள் கேள்வி பட்டு இருந்தாலும். அவரை பற்றி நான் முழுதும் அறிந்திருக்க வில்லை. என்ன ஒரு confident ஆன பெண் அவர் என்பதை அவரின் ஒவ்வொரு பதிலும் பறை சாற்றியது. அவரை பற்றி கேள்வி கேட்ட அந்த தொகுப்பாளார் ஒரு டிபிகல் இந்திய கிசுகிசு எழுத்தாளர் என்ன கேட்பாரோ அல்லது என்ன சென்செசனல் விஷயம் வேண்டும் என்று எதிர் பார்ப்பாரோ அந்த லெவலில் கேள்வி கேட்டு கொண்டு இருந்தார்.
"உங்கள் வாழ்கையில் நீங்கள் செய்த பெரும் தவறு என்ன?
உங்களின் பழைய வாழ்க்கை உங்களை எப்பொழுதாவது பாதித்தது உண்டா?
நீங்கள் உங்கள் வாழ்கையில் ஏதேனும் மாற்றி செய்ய நினைத்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?
உங்களுடன் என் மற்ற நடிகர்கள் நடிக்க தயங்குகிறார்கள் தெரியுமா?"
என்ன முட்டாள் தனமான கேள்விகள் இவை.
அவர் என்ன சன்னி இடம் இருந்து பதில் பெற விரும்புகிறார் என்று எல்லாருக்கும் புரிந்து இருக்கும். அதாவது தான் நீல படத்தில் நடித்தது ஒரு விபத்து என்னை அதில் பிடித்து தள்ளினார்கள் என்று அழுகை பிழிய பிழிய சொல்ல வேண்டும், இதை தான் அவர் எதிர்பார்க்கிறார்.
சன்னி கிளியர் ஆக ஒன்று சொல்லுகிறார் திரும்ப திரும்ப சொல்லுகிறார், இது என்னுடைய வாழ்க்கை, இது எனக்கு பிடித்து நானே செய்தது, என்னை யாரும் கட்டாய படுத்த வில்லை. எல்லாருக்கும் ஒரு தொழில் இருப்பது போல, இது என்னுடைய தொழில். என்னுடைய வாழ்க்கை இது, எனக்கு பிடித்ததை செய்கிறேன் என்னுடன் யாரும் நடிக்க தயங்கினால் அது என் பிரச்னை அல்ல.
என்ன மச்சுர்ட் ஆன பதில்கள் இவை.
"லேட் நைட் ஷோ நடத்தும் கபில் உங்களை வைத்து நிகழ்ச்சி நடத்த தயங்கினாராமே"
"விருப்பம் இல்லாவிட்டால் சொல்லுங்கள் நான் சென்று விடுகிறேன்" இது பதில்.
ஒரு பெண் இது என்னுடைய வாழ்க்கை, அதனை முழுமையாக வாழுகிறேன் என்கிறார். தான் இந்தியா வந்தவுடன் தான் பார்த்த கல்டுரல் /கலாச்சார ஷாக் பெரியது என்கிறார். ஒரு பெண் நீல படங்களில் நடிப்பது என் தொழில் என்று சொல்லுவது இவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. அந்த தொழிலை வைத்து அவரின் கரெக்டேரை முடிவு செய்யும் உலகம் அது. எப்படி ஒரு பெண் இது என் தொழில் செய்யலாம். பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஒரு கோடு போட்டு வைத்து இருக்கிறோமே அதனை எப்படி இந்த பெண் மீறலாம். அப்படி மீறினால் நாங்கள் இப்படி தான் பப்ளிக் ஆக கேள்வி கேட்டு அவமான படுத்துவோம். என்பதை இருந்தது அந்த கேள்வி கேட்டவரின் நடத்தை.
இந்த பேட்டியை பார்த்தவுடன், நிர்பயா கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு கைதி, "அந்த பெண் எப்படி இரவு நேரத்தில் சினிமா பார்க்கலாம், அதற்க்கு தான் இந்த தண்டனை நாங்கள் தந்தோம்" என்று முட்டாள் தனமாக சொன்னானோ, அவனுக்கும், சன்னி லியோனை கேள்வி கேட்ட அந்த தொகுப்பாளருக்கும் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை.
டிஸ்கி
இது கன்றவேர்சியல் டாபிக் என்பதால் நிறைய விமரிசனங்கள் வரலாம். இங்கு குறிப்பிட்ட அனைத்த்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டோ சமூக பழக்க வழக்கங்களை சாடியோ இங்கு எழுதவில்லை. அப்படி யாரும் புண் படுத்தியதாக எடுத்து கொண்டால் அது என் பொறுப்பு அல்ல.
நன்றி.
முதலில் Kuch Kuch Hota Hai பற்றி என் கல்லூரி காலத்தில் வந்த ஒரு கல்ட் படம் அது. பாடல்களும் சரி, ஷாருக்கான் மற்றும் கஜோல் இருவரிடம் இருந்த கெமிஸ்ட்ரி, கல்லூரி வாழ்க்கை என்று அனைவரையும் பைத்தியம் பிடிக்க வைத்தவை. எனக்கு ஹிந்தி அதிகம் தெரியாது என்றாலும், என் கல்லூரி தோழிகளிடம் பேச வேண்டும் அல்லது எனக்கும் தெரியும் என்று காட்ட வேண்டும் என்பதற்காகவே அதன் பாடல்களை காசெட் களில் கேட்ட காலம் அது. பின்னர் எங்கள் கல்லூரி தோழிகள் எல்லாம் சேர்ந்து அந்த படத்திற்கு வேறு சென்றோம். அதில் வரும் ஒவ்வொரு காட்சியும் பாடல்களும் எனக்கு அத்துபடி.
அதே படம் கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து இப்பொழுது நெட்ப்ளிக்ஸ் புண்ணியத்தில் பார்க்க நேர்ந்தது. என்னுடைய தோழிகள் வேறு, "Kuch Kuch Hota Hai" netflix இல் வந்து இருக்கு பார்க்கலையா, என்று சொல்ல. என் காலேஜ் நாட்களை எண்ணியபடி அந்த படத்தை பார்த்தேன்.. ஆனால் இப்போது எனக்கு அந்த படத்தின் ஒவ்வொரு விசயமும் ஸ்டுபிட் ஆக இருந்தது. பின்னர் சில விசயங்களும் உரைக்க ஆரம்பித்தது.
முதலில் ஷாருக் கின் ராகுல் என்னும் கரெக்ட்டர் கல்யாண சந்தையில் அல்லது பொதுவாக பெண்ணை பற்றிய இந்திய ஆணின் எதிர்பார்ப்பின் மொத்த உருவமாக தெரிந்தது. அவரும் கஜோலும் நண்பர்களாக பழகுவார்களாம், ஆனால் இவர் அந்த பெண்ணை காதலிக்க மாட்டாராம், ஏனெனில் அந்த பெண் "ஆண் தன்மை உள்ளவாராக , பாஸ்கெட் பால் விளையாடி கொண்டு" திரிவதால் இவருக்கு காதல் வரவில்லையாம். ஆனால் தன்னுடைய கல்லூரியில் பெண்மையுள்ள
"ஹாட் சிக்" ஒரு பெண் வந்தவுடன் அவர் அந்த "ஹாட் சிக்" பின்னாடி சுற்றுவாராம், "காதலிப்பாராம்". ஆனாலும் அந்த "ஹாட் சிக்கை" அவர் "கல்யாணம் செய்ய " அந்த "ஹாட் சிக்" தனக்கு நம்முடைய கலாச்சாரமும் தெரியும் என்று "ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே" என்று சாமி பாட்டு பாடி பின்னர் தனக்கு கோயில் போகும் பழக்கம் எல்லாம் இருக்கிறது என்று காட்டிய பின்னர், இவர் கல்யாணமும் செய்து கொள்வாராம். ஒரு வேலை அந்த பெண்ணுக்கு நம்முடைய கலாச்சாரம் தெரியாது என்று வைத்து கொண்டால் இவர் அந்த பெண் பின்னால் சுற்றுவதோ அல்லது அந்த பெண்ணிடம் பேசுவதோ அல்லது அந்த பெண்ணை காதலிக்கவும் செய்யலாம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ள மாட்டோம். ஏனெனில் அந்த பொண்ணுக்கு இந்திய கலாச்சாரம் தெரியாது என்று புறக்கணித்து இருக்க வாய்ப்புகள் உண்டு.
பிறகும், அந்த பெண் இறந்தவுடன் தன்னுடைய பழைய தோழியை சந்திக்க அவரின் மகளே வழி ஏற்படுத்தி கொடுப்பாராம், இவரும் தற்போது "பெண்மையாக" மாறி உள்ள தன்னுடைய தோழியை பார்த்ததும் "காதல்" வந்து விடுமாம். ஆனால் அந்த தோழியோ, இன்னும் பழைய காதலன் நினைவாகவே இருப்பதாகவும் பழைய காதலன் வந்து தன்னுடைய கல்யாண தினத்தில் வந்து "I love you" சொன்னவுடன் உருகி போய் திரும்ப சேருவதாகவும் ஒரு அப்பட்டமான அசிங்கமான இந்திய ஆணின் ஆணாதிக்க படமாக எனக்கு தெரிந்தது. அதாவது, ஆண் என்றால் எத்தனை காதல் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம், எத்தனை பேரையும் காதலிக்கலாம் ஆனால் பெண் என்றால், காதல் அல்லது கல்யாணம் என்றால் அது ஒரு முறை. இல்லை என்றால் அவள் ஒழுக்கமான பெண் இல்லை. அல்லது இந்திய norm ன் படி அவள் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவள் இல்லை. இது ஒரு எழுதபடாத சட்டம்.
இந்த படத்தை பார்த்து ஏற்கனவே புழுங்கி கொண்டு இருந்த எனக்கு சன்னி லியோன் அவர்களின் IBN இண்டர்வியு பார்க்க நேர்ந்தது. சன்னி லியோன் பற்றி ஒரு சில விஷயங்கள் கேள்வி பட்டு இருந்தாலும். அவரை பற்றி நான் முழுதும் அறிந்திருக்க வில்லை. என்ன ஒரு confident ஆன பெண் அவர் என்பதை அவரின் ஒவ்வொரு பதிலும் பறை சாற்றியது. அவரை பற்றி கேள்வி கேட்ட அந்த தொகுப்பாளார் ஒரு டிபிகல் இந்திய கிசுகிசு எழுத்தாளர் என்ன கேட்பாரோ அல்லது என்ன சென்செசனல் விஷயம் வேண்டும் என்று எதிர் பார்ப்பாரோ அந்த லெவலில் கேள்வி கேட்டு கொண்டு இருந்தார்.
"உங்கள் வாழ்கையில் நீங்கள் செய்த பெரும் தவறு என்ன?
உங்களின் பழைய வாழ்க்கை உங்களை எப்பொழுதாவது பாதித்தது உண்டா?
நீங்கள் உங்கள் வாழ்கையில் ஏதேனும் மாற்றி செய்ய நினைத்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?
உங்களுடன் என் மற்ற நடிகர்கள் நடிக்க தயங்குகிறார்கள் தெரியுமா?"
என்ன முட்டாள் தனமான கேள்விகள் இவை.
சன்னி கிளியர் ஆக ஒன்று சொல்லுகிறார் திரும்ப திரும்ப சொல்லுகிறார், இது என்னுடைய வாழ்க்கை, இது எனக்கு பிடித்து நானே செய்தது, என்னை யாரும் கட்டாய படுத்த வில்லை. எல்லாருக்கும் ஒரு தொழில் இருப்பது போல, இது என்னுடைய தொழில். என்னுடைய வாழ்க்கை இது, எனக்கு பிடித்ததை செய்கிறேன் என்னுடன் யாரும் நடிக்க தயங்கினால் அது என் பிரச்னை அல்ல.
என்ன மச்சுர்ட் ஆன பதில்கள் இவை.
"லேட் நைட் ஷோ நடத்தும் கபில் உங்களை வைத்து நிகழ்ச்சி நடத்த தயங்கினாராமே"
என்று கேட்கிறார் அந்த பேட்டியாளர். அதற்கும், அவர், "நீங்கள் சொல்லி தான் எனக்கு கபில் இப்படி சொன்னார் என்று தெரியும், நான் அவரின் பல லேட் நைட் ஷோவில் பங்கேற்று இருக்கிறேன்." என்று நறுக்கு தெறித்தார் போல ஒரு பதில்
"நான் உங்களை போன்ற பெண்ணிடம் ஏன் இப்படி பேட்டி காண வேண்டும் அது என்னுடைய நல்ல பேருக்கு இழுக்கு"
"விருப்பம் இல்லாவிட்டால் சொல்லுங்கள் நான் சென்று விடுகிறேன்" இது பதில்.
இந்த பேட்டியை பார்த்தவுடன், நிர்பயா கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு கைதி, "அந்த பெண் எப்படி இரவு நேரத்தில் சினிமா பார்க்கலாம், அதற்க்கு தான் இந்த தண்டனை நாங்கள் தந்தோம்" என்று முட்டாள் தனமாக சொன்னானோ, அவனுக்கும், சன்னி லியோனை கேள்வி கேட்ட அந்த தொகுப்பாளருக்கும் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை.
டிஸ்கி
இது கன்றவேர்சியல் டாபிக் என்பதால் நிறைய விமரிசனங்கள் வரலாம். இங்கு குறிப்பிட்ட அனைத்த்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டோ சமூக பழக்க வழக்கங்களை சாடியோ இங்கு எழுதவில்லை. அப்படி யாரும் புண் படுத்தியதாக எடுத்து கொண்டால் அது என் பொறுப்பு அல்ல.
நன்றி.
3 comments:
//அந்த பெண் எப்படி இரவு நேரத்தில் சினிமா பார்க்கலாம்,அதற்க்கு தான் இந்த தண்டனை நாங்கள் தந்தோம்//
அந்த கொடூர மிருகங்கள் போலவே சிலர் சிந்தித்த கொடுமையையும் பின்பு கண்டு கொண்டோம்.
//இது கன்றவேர்சியல் டாபிக் என்பதால் நிறைய விமரிசனங்கள் வரலாம்//
நான் அந்த இடுகை போட்ட இரண்டு நாட்களில் 32 பேர் எனது வலைப்பதிவை unfollow செய்திருக்கிறார்கள். :-))) சல்தா ஹை!
படித்த பதிவை இங்கே குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி!
என்னைப் பொறுத்தவரை ‘குச் குச் ஹோத்தா ஹை’ - ‘குச் பீ நஹீ ஹை’தான். :-)
இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. கடைசியில் இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்? இதை விட ஷோலே படம் எவ்வளவோ மேல் என்று நினைக்கிறேன்.
Post a Comment