Saturday, February 6, 2016

Stinky லஞ்ச் ம், பாமாயிலும், அமேசான் காடுகளும்!

முகுந்துக்கு சில மாதங்களாக லஞ்ச் என்று எது கொடுத்தாலும், அது சாண்ட்விச் தவிர எதுவாக இருப்பினும் திரும்பி வருகிறது. அதுவும் இந்தியன் சாப்பாடு என்றால் சொல்லவே வேண்டாம். டிபன் திறக்க கூட படுவதில்லை. ஒவ்வொரு முறையும் நாம் இட்லி, சாப்பாடு என்று எது வைத்தாலும் அதனை திறந்து சாப்பிட்டால் மற்ற குழந்தைகள் stinky lunch என்று கேலி செய்வதாகவும் அதனால் தான் சாப்பிடாமல் வருவதாகவும் காரணம் வருகிறது. இது முகுந்த் மட்டும் தான் செய்கிறானா இல்லை மற்ற இந்தியன் குழந்தைகளும் செய்கிறதா என்று அறிந்து கொள்ள, முகுந்த் உடன் படிக்கும் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு பையனின் டாக்டர் அம்மாவிடம் கேட்டேன். அந்த அம்மா, இங்கே சிறு வயதில் வந்தவர்கள், மிடில் ஸ்கூல், ஹை ஸ்கூல், கல்லூரி எல்லாம் இங்கே படித்து கணவன் மனைவி இருவரும்  டாக்டர் ஆனவர்கள். அவர்களிடம் இது பற்றி கேட்ட போது அவர்கள் சொன்னது இது.

சிறுவயதில் தானும் சான்ட்விச் தவிர எதுவும் பள்ளிக்கு எடுத்து சென்றதில்லை. ஏனெனில், stinky லஞ்ச் என்று இந்தியன் சாப்பாட்டை அமெரிக்க குழந்தைகள் கிண்டல் செய்வதுண்டு. அது மட்டும் அல்லாமல் தானும் மற்ற குழந்தைகள் போல இருக்க வேண்டும் என்று கிட்ட தட்ட எல்லா குழந்தைகளும் எண்ணுவதுண்டு. அதுவும் 80 களில் எல்லாம் தற்போது போல இந்தியன் மக்கள் அதிகம் இல்லாததால், மற்ற குழந்தைகளிடம் இருந்து தான் மட்டும் தனித்து தெரிய விரும்பியதில்லை அதனால், எப்பொழுதும் என் அம்மாவிடம் சண்ட்விச் மட்டுமே அனுப்புங்கள் என்று சொல்லுவதுண்டு.

 ஏனெனில், நாம் நம்ம ஊர் சாப்பாட்டை கொடுத்தால் அதன் வாசத்தை வைத்து சாப்பிடும் குழந்தைகள்  தனித்து அறியபடுகிரார்கள், அதுவே அவர்களை தனிமை படுத்துகிறது. அதிலிருந்து தப்பிக்கவே, குழந்தைகள் இந்தியன் சாப்பாடு கொடுத்தால் டப்பாவை திறப்பது கூட கிடையாது. இதனை என் பையனும் செய்தான். இது ஒரு துவக்க கால பிரச்சனை மட்டுமே, போக போக குழந்தைகள் இதனை எதிர்த்து நிற்க பழகி கொள்ளுவார்கள். யாரேனும் கிண்டல் செய்தாலும் "இது என் சாப்பாடு உனக்கு பிடிக்க வில்லை எனில் வேறு பக்கம் திரும்பி கொள், அல்லது வேறு பெஞ்ச் சென்று விடு" என்று சொல்ல பழகி கொள்ளுவார்கள்.  என் பையனிடம் இதனை சொல்லி வருகிறேன். நீங்களும் சொல்லுங்கள், இதுவும் ஒரு வகையான புல்லியிங் தான், ஆனால், குழந்தைகள் எதிர்த்து நின்றால் மட்டுமே இது முடிவுக்கு வரும். இதனை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். சரியாகி விடும் என்று சொன்னார். எனக்கும் அதுவே சரி என்று படுகிறது. மெதுவாக சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறேன். பார்க்கலாம்.

என்றாவது ஒரு நாள் வீட்டு சாப்பாடு வேண்டாம், ஸ்கூல் கபே இல் சாப்பிடு என்று சொன்னாலும், அதுவும் பல நேரங்களில் ஒரே மாதிரியான சாப்பாடு மட்டுமே அங்கு கிடைக்கிறது. அதிலிலும் இருக்கும் நியூற்றிஷன் பார்த்தால் தலை சுற்றுகிறது.  நான் பார்த்த படித்த அடுத்த விஷயம் எல்லா பொருட்களிலும் இருக்கும் அப்படி பட்ட ஒரு நியூற்றிஷன் பற்றியது.

அமெரிக்காவில், கனடாவில் அல்லது ஐரோப்பா போன்ற எந்த மேலை நாடுளில், எந்த பொருள் நீங்கள் கடையில் வாங்கினாலும் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும்  நேரடியாக அல்லது மறைமுகமாக ஒரு ingredient கொண்டு இருக்கும்.  அது  பாமாயில். பல் துலக்கும் பேஸ்ட் முதல் திங்கும் சிப்ஸ் வரை அனைத்திலும் இந்த பாமாயில் சேர்க்க படுகிறது.அமெரிக்காவில்  தினமும் உபயோகிக்கும் கிட்டத்தட்ட 40-50% பொருட்களில்  பாமாயில் சேர்க்கபடுகிறது என்று புள்ளியியல் தெரிவிக்கிறது.  

மிகவும் சீப் ஆன எண்ணெய், குறைந்த செலவில் அதிக லாபம் அதனால் என்ன தீங்கு என்று கேட்பவர்களுக்கு. அனைத்திலும் நீக்கமற இது நேரடியாகவோ மறைமுகமாகவோ சேர்க்கபடுவதால் இதய நோய்கள் வரும் என்று புள்ளியியல் தெரிவிக்கிறது. பாமாயிலில் அதிக  saturated fat ம்குறைந்த   polyunsaturated fat ம் இருப்பதால் இதய நோய்கள் வரும் என்பது ஒரு பக்கம் என்றாலும் இந்த பாமாயில் உற்பத்தி செய்ய நடக்கும் சுற்றுப்புற சீர்கேடுகள் அளவிட முடியாதவை. முதலில் அதிக அளவில் பனை மரங்களை நட என்று  என்று அதிக அளவில் மற்ற மரங்கள் வெட்டபடுகின்றன. முக்கியமாக அமேசான் காடுகள். அதனால் பல காட்டு மிருகங்கள் தற்போது அழிந்தது மட்டும் அல்லாது பல மிருகங்கள் கிட்டத்தட்ட எச்டின்ச்ட் அல்லது அழியும் நிலைக்கு தள்ள பட்டு விட்டன. இது ஒரு புறம் இருக்க, பனை மரங்கள் தரும் ஆக்சிஜன் அளவை விட  இயற்க்கை  மரங்கள் வெட்டபடுவதால் அதிலிருந்து கிடைக்கும் ஆக்சிஜென் அளவு மிக குறைந்து அதிக நுரையீரல் மட்டும் சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் என்று பல பிரச்சனைகளை பிரேசில் போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் வசிக்கும் பல மக்கள் அனுபவிக்கிறார்கள்.

பல தானார்வ நிறுவனங்கள் பாமாயில் எப்படி இயற்க்கை வளங்களை சுரண்டுகிறது என்பதனை குறித்து ஒரு பக்கம் கத்து கத்து என்று கத்தி கொண்டு இருந்தாலும், Embrace the Serpent என்னும் கொலம்பியா நாட்டு படம் அமேசான் காடுகள் அழிக்க படுவதால் ஏற்படும் பாதிப்புகளை கதற கதற காட்டுகிறது. இந்த படம் இந்த வருட ஆஸ்கார் போட்டிக்கு தேர்ந்து எடுக்க பட்டு இருக்கிறது. 




எப்படி எல்லாம் இயற்க்கை வளங்கள் சூறை யாட படுகின்றன அவை எப்படி நமக்கே பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று பார்க்கும் பொது, மனிதனின் பணம் சேர்க்கும் சுயநலத்துக்காக எத்தனை எத்தனை உயிர்கள் பலியாகின்றன என்று கண்ணீர் விட தோன்றுகிறது. 

நன்றி.



3 comments:

ஜோதிஜி said...

பதின்ம வயதிற்குள் நுழையும் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகளின் எண்ணங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது? பொற்றோர்கள் எப்படி எதிர்கொள்வது? அமெரிக்காவில் உள்ள நிலைமை? அதே போல நீங்க கேட்ட அறிந்த தமிழ்நாட்டுகுழந்தைகளின் நிலைமை பற்றி எழுத முடியுமா?

? said...

குழந்தைகளின் லஞ்சுபாக்ஸில் எதற்கு கட்டாயமாக இந்திய உணவினை இந்த அம்மாக்கள் வைத்து அனுப்ப வேண்டும், அதை குழந்தைகள் எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டும் என புரியவில்லை. அமெரிக்காவில் வசிப்பது என்று முடிவு எடுத்த பின்பு அமெரிக்கனாக வாழ முயற்சிப்பது நல்லது என நினைக்கிறேன். சன்னி லியோன் என்டிடிவி பேட்டியில் தனது ஆலூ பராட்டா என தினமும் கையில் கிடைத்ததை பாக் செய்து - தினமும் smelly lunch கொடுத்தனுப்பியதாகவும் பிற குழந்தைகள் தன்னை படுத்தினார்கள் என்றும், இதனால் இந்திய உணவினை எடுத்து செல்வதை நிறுத்திவிட்டதாகவும் சொன்னார்.

அந்த அமெரிக்க ஊரில் ஒரே ஒரு இந்தியக் குடும்பம்தான் இருந்திருக்கிறது. தினமும் பள்ளியில் கலாய்க்கப்படும் போது வீட்டில் வந்து அழுத பெண்ணைப் பார்த்து அம்மா சொன்னாராம் - நீ வேறு என அவர்கள் உன்னை ஓட்டுகிறார்கள், ஆனால் நீ எப்படி அவர்களுடன் ஒத்தவளாயிருக்கிறாய் என புரியவை, எல்லாம் சரியாகிவிடும் என்று. அந்த பெண் (நிக்கி ஹாலே) இப்போது அம்மாநில கவர்னராக இருக்கிறார். இதுவே சிறந்த அணுகுமுறை என்பது எனது கருத்து.

valampuri said...

Palm oil ல் பற்றிய கருத்து மிகவும் தவறு்.