இது நோர்தேன் ஹெமிஸ்பியர் இல் இருக்கும் பல நாடுகளில் பள்ளி இறுதி தேர்வு நடக்கும் காலம்.
ஒவ்வொரு நாட்டிலும் அதன் தட்ப வெப்ப நிலை பொறுத்து வேறு வேறு மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு நடக்கலாம். இந்தியாவில் பல பள்ளிகளில் முக்கால் வாசி நேரம் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு கோடை விடுமுறை மாதங்கள் ஆகும். ஏனெனில் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் கோடை காலம் ஏப்ரல் மே மாதங்கள் என்பதால்.
அமெரிக்காவில் பல மாகாணங்களில் மே, ஜூன் மாதம் தான் பள்ளி இறுதி தேர்வு அல்லது பள்ளி முடிவு ஆகி ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் விடுமுறை இருக்கும். ஏனெனில் அமெரிக்காவில் ஜூன் ஜூலை மாதங்கள் தாம் கோடை காலம். கனடாவில் செப்டம்பர் மத்தியில் பள்ளி திறக்கும் என்று நினைகிறேன்.
நிற்க, இந்த பதிவு கோடை காலங்கள் எப்படி நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன என்பதனை குறித்தவை அல்ல. மாறாக பள்ளி ஆண்டுவிழாக்கள் என்ற பெயரில் செய்யும் சில விஷயங்கள்/கூத்துக்கள் குறித்தவை.
இந்திய பள்ளி ஆண்டுவிழாக்கள்
இந்தியாவில் பல பள்ளிகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பள்ளி ஆண்டுவிழாக்கள் நடத்துகின்றன. அதில் நம் குழந்தைகளும் நடனம் ஆடட்டும் என்று பல பெற்றோரும் அதனை ஊக்க படுத்துகின்றனர். நான் சொல்வது எலிமெண்டரி ஸ்கூல் ஆண்டுவிழாக்கள் என்றாலும் பல உயர் நிலை பள்ளிகளும் இதனை நடத்துகின்றன என்று அறிய முடிகிறது. நம்ம குழந்தைகளுக்கும் ஒரு சான்ஸ் என்று நிறைய பெற்றோர் இப்போது நினைப்பதை பார்க்க முடிகிறது. இதனை சாக்காக வைத்து கொண்டு தனியார் பள்ளிகள் செய்வது சில நேரங்களில் ஓவர். முதலில், ஆண்டுவிழாக்களில் குழந்தைகளுக்கு டிரஸ் நாங்களே கொடுத்து விடுவோம், நீங்கள் எங்களுக்கு குறிப்பட்ட தொகை மட்டும் கொடுத்துடுங்க என்பார்கள். சரி நமக்கு தொல்லை விட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொடுக்க தொடங்கினால் பட்டியல் நீளும்.
டிரஸ்க்கு, உபயோகிக்கும்பொருட்களுக்கு, டான்ஸ் சொல்லி கொடுப்பவருக்கு என்று ஒவ்வொருன்றுக்கும் தனி தனியாக பணம் கேட்பார்கள். இதில் முக்கால் வாசி நேரம் வெளியில் இருந்து எந்த டான்ஸ் மாஸ்டரும் வர மாட்டார், மாறாக உள்ளுக்குளே இருக்கும் பள்ளி ஆசிரியர் நடனம் சொல்லி கொடுப்பார். அதில் காசு பார்பார்கள் பள்ளி நிர்வாகம். அடுத்து பிள்ளைகளுக்கு எடுக்கும் உடைகளுக்கு என்று குறைந்தது 1500 இல் இருந்து 2500 வரை வசூலிப்பார்கள். ஆனால் LKG, UKG, முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு என்று ஒரே மாதிரி டிரஸ் வாங்க எப்படியும் ஆகும் செலவு 600 இல் இருந்து 800 வரை மட்டுமே ஆகும். மீதி உள்ள பணம் எல்லாம் பள்ளிக்கு. அதே போல ப்ரோப்ஸ் அதற்க்கும் சேர்த்து காசு அடிக்கிறார்கள்.
இப்படி பெற்றோரிடம் அடிக்கும் காசிலேயே அவர்களின் தனியார் பள்ளிக்கு விளம்பரம் செய்து கொள்ளுகிறார்கள். முடிவாக பங்கு பெரும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் போன்ற பரிசுகள் கொடுத்து நல்ல பேரு வாங்கி கொள்ள முனைவது.
அமெரிக்க தமிழ் பள்ளி ஆண்டுவிழாக்கள்
சரி இந்தியாவில் நடக்கும் பள்ளி ஆண்டுவிழாக்கள் தாம் அப்படி இங்கெல்லாம் ஆண்டு விழாக்கள் நடக்குமா? என்று கேட்பவர்களுக்கு. ரெகுலர் பள்ளிகளில் ஒரு சில நேரம் பாடல்கள் அல்லது மியூசிக் ரீசைடல், கோரஸ் மியூசிக் போன்றவை நடக்கும். ஆனால் இந்திய அமெரிக்கா வார இறுதி நாள் மொழி பள்ளிகளில் எல்லாம் நம்ம ஊரில் நடப்பது போல குழந்தைகள் பங்கு பெரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடக்கும். இறுதியில் பள்ளி இறுதி வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும்.
இது போன்ற நிகழ்ச்சிகளை பள்ளிகள் நடத்துவது இல்லை, மாறாக உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களிடம் ஒரு குரூப் இருந்தால் நீங்களே பதிவு செய்து பங்கு பெறுங்கள் என்று விண்ணப்ப படிவம் பள்ளியில் இருந்து அனுப்புவார்கள். அதற்க்கு பிறகு யாரெல்லாம் விண்ணப்பம் அனுப்புகிறார்களோ அவர்களிடம் யார் யார் பங்கு பெறுகிறார்கள், குழந்தைகள் பெயர்கள் , யார் ஒருங்கிணைபாளர்கள் என்று பதிவு செய்கிறார்கள். பின்னர் பள்ளியின் சார்பில் எவென்ட் ஒருங்கிணைபாளர்கள் குழு நடன ஒருங்கினைபாளர்களை தொடர்பு கொள்ளுவார்கள். இதில் அனைவரும் தன்னார்வ தொண்டர்கள் என்பதால் பணம் என்னும் விஷயம் இருப்பதில்லை.
அமெரிக்காவில் மட்டும் பல பல தமிழ் பள்ளிகள் "கலிபோர்னியா தமிழ் அகாடமி" பாட திட்டங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்கின்றனர். நாங்கள் இருக்கும் ஜியார்ஜியாவில் தமிழ் ஒரு மொழி பாடமாக படிக்கலாம் கிரெடிட் வாங்கி கொள்ளலாம் என்பதால் ஒவ்வொரு வருடமும் நிறைய குழந்தைகள் பள்ளி இறுதி தெரிவு முடிந்து பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.
அடடா, பரவாயில்லையே வெளி நாட்டுக்கு சென்றும் தமிழை எப்படி எல்லாம் வளர்கிறார்கள். பணம் என்பதே இல்லை போல, எல்லாரும் எல்லாமும் சமம், என்று யாராவது நினைக்க ஆரம்பித்தால்..ப்ளீஸ் ஸ்டாப். ஏனெனில் நான் மேலே சொன்னவை எல்லாம் நல்ல விஷயங்கள் அல்லது அனைவராலும் பரப்பப்படும் விஷயங்கள் மட்டுமே.
இங்கும் பணம் என்ற ஒன்று உண்டு அது பள்ளிகளிடம் இருந்து கேட்கபடுவது இல்லை. மாறாக "தமிழ் சங்கங்கள்" இதனை கேட்கும். உதாரணமாக, தமிழ் பள்ளிகள் அனைத்தும் தமிழ் சங்ககளின் கீழ் இயங்குகின்றன என்பதால் ஆண்டு விழாக்கள் எல்லாம் தமிழ் சங்கங்கள் நடத்து கின்றன. ஒவ்வொரு ப்ரோக்ராமும் நடன குழுக்களை சார்ந்தது, அவர்களே குழந்தைகள் துணி மணி, ப்ரோப்ஸ், எல்லாம் கொண்டு வர வேண்டும்.
2 மணிக்கு ப்ரோக்ராம் ஆரம்பிக்கும் ஆனால் 1:30 கே பங்கு பெரும் அனைத்து நடன குழுக்களும் இருக்க வேண்டும் என்பார்கள். இதில் பங்கு பெற வரும் குழந்தைகள் அல்லது பெற்றோர்களுக்கு நாங்களே சாப்பாடு போடுகிறோம் வாங்கி கொள்ளுங்கள் என்பார்கள். சரி என்று நடன குழுக்களும் , பங்கு பெரும் குழந்தைகளும் அங்கு சாப்பாடு வேண்டும் என்று புக் செய்தால் நடப்பது கொடுமை. 8$, 6$ என்று கேட்பார்கள், ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாடு 1$ அல்லது 2$ மட்டுமே. எதோ பிரசாதம் போல இருக்கும். இதுக்கு போய் 8$ ஆ கொடுமை என்று தலையில் அடித்து கொள்ள வேண்டும்.
இதனை தவிர நிறைய நகை, இஷா யோகா அல்லது சாப்பாட்டு கடை என்று விளம்பர ஸ்டால்கல் வைக்க அந்த அந்த கம்பனிகளிடம் இருந்து பணம் வாங்கி கொள்ளுவார்கள். அதனை தவிர ப்ரோக்ராம் அறிவிக்க என்று பெரிய ஸ்க்ரீன் வைப்பார்கள் ஆனால் அதில் முக்கால் வாசி நேரம் விளம்பரங்கள் மட்டுமே ஓடும். அனைத்தும் அட்வேர்டிசிங் பணம்.
நடக்கும் ப்ரோக்ராம் எல்லாம் அந்த அந்த நடன குழுக்களை சார்ந்தது என்பதால் தமிழ் சங்கத்துக்கு எந்த செலவும் இல்லை. பணிபுரிபவர்கள் எல்லாரும் தன்னார்வ தொண்டர்கள், அதனால் சம்பளம் என்று எந்த செலவும் இருப்பதில்லை. விழா மேடை ஒலி ஒளி செட்டிங் போன்ற ஒரு சில செலவு விஷயங்கள் தவிர பெரிய செலவு என்று எதுவும் இருப்பதில்லை. அனைத்தும் கொள்ளை லாபம், தமிழ் சங்கத்துக்கு என்று சொல்லி கொள்ளுகிறார்கள். யாருக்கு செல்கிறதோ?
இது ஒரு புறம் இருக்க, பள்ளியில் இருக்கும் எவென்ட் ஒருங்கினபாளர்கள் அல்லது ஒருங்கிணைபாளர்கள் குழு செய்யும் பாரபட்சம், ஐயோ சாமி என்று இருக்கும். அதாவது, அவர்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் குழந்தைகள் பங்கு பெரும் நிகழ்சிகள் எனில் நல்ல டைம் ஸ்லாட் கொடுப்பது, அல்லது நிறைய நேரம் ஆட கொடுப்பது. அவர்களுக்கு தெரிந்த நடன குழுக்கள் மட்டுமே உற்சாக படுத்துவது மற்ற குழுக்கள் எனில், தற்பொழுது ஸ்லாட் இல்லை வேறொரு டைம் முயற்சி செய்யுங்கள், இல்லை இவ்வளவு நேரம் மட்டுமே கொடுக்க முடியும், இந்த பாட்டு நாங்கள் ஆட வைத்து இருக்கிறோம், வேறு ட்ரை செய்யுங்கள் என்று பாட்டை பாதியில் மாற்றுவது, வேறு குரூப் முதலிலேயே ஆட இருக்கிறார்கள், என்று பந்தா காட்டுவது.
ப்ரோக்ராம் நேரங்கள் எப்பொழுது நடக்கும் என்று தனக்கு தெரிந்த குழுக்களுக்கு மட்டும் அறிவிப்பது, மற்ற குழுக்களை கண்டு கொள்ளாமல் அல்லது செய்திகள் நிகழ்ச்சி நிரல்களை சொல்லாமல் விடுவது. என்ன டைம் எங்கள் ப்ரோக்ராம் என்று சென்று கேட்டாலும் எரிந்து விழுவது என்று..இந்த பந்தா பேர்வழிகள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாதவை.
உலகின் எந்த மூலை சென்றாலும் மக்களின் பணமும் பதவியும் அதிகார வேட்கையும் மாறாதவை என்பது திண்ணம்.
டிஸ்கி
5 டு 6 வயது சிறு குழந்தைகள் வைத்து GATS தமிழ் பள்ளிகள் நடத்திய தமிழ் பள்ளிகள் ஆண்டு விழாவில் குழு நடன ஒருங்கினைபாளாராக இருந்து நான் அனுபவித்த விடயங்களின் தொகுப்பே இது. இது என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே.