வாழ்கையில் எது முக்கியம், பணமா? மன அமைதியா? . இந்த கேள்வி எல்லாருக்கும் அடிக்கடி வரும். தற்போது அனைத்தும் பணம் என்றாகிவிட்ட நிலையில் எது முக்கியம் என்ற கேள்வி எனக்கும் பல முறை தொக்கி நிற்கிறது. இன்னும் முடிவெடுக்கவில்லை.
சில மாதங்களாக எங்கும் பிரச்சனைகள். எது சொன்னாலும் செய்தாலும் பிரச்சனைகள்...எது முக்கியம் எனக்கு என்ற மன குழப்பங்கள்..முடிவாக மன நிம்மதி மட்டுமே சரியானது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
இந்த நேரத்தில் ஒரு டாகுமெண்டரி பார்க்க நேர்ந்தது. "ஹாப்பி" என்பது அதன் தலைப்பு. ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரைக்க பட்ட இந்த டாகுமெண்டரி ன் அடி நாதம். எது சந்தோசம் என்பதே. பலரிடம் எது சந்தோசம் என்ற கேள்விக்கு "பணம்" என்ற பதில் கிடைத்ததாக கூறினார் சிலர். யார் சந்தோசமாக இருக்கிறார்கள் என்ற சர்வேயில் ஜப்பான் மக்கள் மிகவும் சந்தோசம் இல்லாமல் வாழ்க்கை வாழ்வதாக கூறப்படுகிறது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு பாதி அழிந்த நிலையில் நாட்டை திரும்ப மீட்டெடுக்க வேண்டிய நிலையில் சுறு சுறுப்பாக வேலை பார்க்க ஆரம்பித்த ஜப்பானிய மக்கள், பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்கை என்று ஆரம்பித்து கடைசியில் யந்திரமாக மாறி சரியான தூக்கம் "கரோஷி" எனப்படும் overwork death மக்களாக மாறி இறப்பதாக இந்த டாகுமெண்டரி அறிவிக்கிறது. அதிக வேலை பளு காரணமாக ஸ்ட்ரெஸ், ஹார்ட் அட்டாக் போன்ற இதய நோய்கள் நெர்வஸ் பிரேக் டவுன் போன்ற அனைத்தும் நடப்பதாக அறிய முடிகிறது. இதனை தடுக்க இந்த "கரோஷி" என்னும் அமைப்பு உருவாக்க பட்டுள்ளது.
இது ஜப்பான் என்று மட்டும் அல்ல, இதனை போல பணம் மட்டுமே சந்தோசம் தரும் என்று பணத்தை தேடி ஓடி ஓடி உழைக்கும் மக்கள் இருக்கும் பல நாடுகளிலும் நடக்கும் ஒன்று.
இந்த டாகுமெண்டரியில் ஒரு மேற்கு வங்காளத்தை சேர்ந்த கை ரிக் ஷா இழுக்கும் மனிதர் பற்றியும் குறிபிடுகிறார்கள். இவர் வசிப்பது சேரியில் தினமும் காலையில் இருந்து மாலை வரை கை ரிக் ஷா இழுப்பது இவர் தொழில், ஆனால் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக இவர் கூறுகிறார். தன் குடும்பம், குழந்தை, பக்கத்து வீட்டு காரர்கள் அனைவரும் அன்புடன் இருக்கிறார்கள், நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல இருக்கிறோம்.. எனக்கு என்ன குறை என்று அவர் கூறுகிறார்.
இதே டாகுமெண்டரியில் எது மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற ஒரு செய்தியும் நமக்கு தருகிறார்கள். அதன் படி உலகின் மகிழ்ச்சியான நாடு "டென்மார்க்". எப்படி மக்கள் வாழ்கிறார்கள் எது அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது என்று பார்க்கையில். தற்போது கம்யுனிட்டி ஹௌசிங்க் எனப்படும் கூட்டு வாழ்க்கை முறை இவர்கள் வாழ்வதாக தெரிகிறது. ஒரு அபர்ட்மெண்ட்டில் இருக்கும் அனைவரும் ஒரு கூட்டு குடும்பம் போல வாழ்ந்து ஒரே சமையல் செய்து சாப்பிட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டு வாழ்வது என்பது அதிகரித்து இருப்பதாக அதில் தெரிய வருகிறது.
அதாவது, குடும்பம், நண்பர்கள் என்ற ஒரு நெருங்கிய வட்டம் இல்லை என்றால் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதில் மகிழ்ச்சி என்பது இருப்பது இல்லை. இதுவே இந்த டாகுமெண்டரியில் சொல்லப்படும் கருத்து.
எனவே..முடிவாக நான் உணர்ந்த ஒன்று எத்தனை பிரச்னை வந்தாலும் முடிவில் கடைசி வரை உங்கள் கூட இருப்பது உங்கள் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் லெட் இட் கோ ! லெட் இட் கோ! எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு இருப்பார்களோ தெரியவில்லை..ஆனாலும்..இது ஒரு கிரேட் சாங்..
நன்றி.

2 comments:
நன்றாகச்சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.
Good one. வெள்ளத்தனையது மலர் நீட்டம்..
Post a Comment