இந்த கேள்வியை நீங்கள் ஒவ்வொரு வயதினரிடம் கேட்டால் ஒவ்வொரு பதில் கிடைக்கலாம். உதாரணமாக சிறு குழந்தைகளிடமோ அல்லது பருவ வயதினரிடமோ கேட்டால், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் என்ற பதில் வரும். அதே காதலிப்பவர்களிடம் கேட்டால், பெற்றோர் அல்லது சமூகம் என்ற பதில் வரும். திருமணமான பின்னோ கணவன் தன்னை கண்ட்ரோல் செய்வதாக மனைவியும், மனைவி கண்ட்ரோல் செய்வதாக கணவனும் மாறி மாறி புகார் கூறி கொள்வர். ஆனால், வயதான பின்பு உடல்நிலை, குழந்தைகள் என்று சைக்கிள் மாறி விடும்.
ஆனால் நீங்கள் போனிலோ, அல்லது கம்ப்யூட்டரிலோ இன்டர்நெட் உபயோகிப்பவர் எனில் உங்களை கட்டுப்படுத்துவது எது என்ற கேள்வியை வயது வித்தியாசம் இல்லாமல் கேட்டு பாருங்கள்.
உதாரணமாக, நீங்கள் யூ-டியூபில் வீடியோ ஒன்று பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவோம், முன்பெல்லாம் நீங்களாக அடுத்த வீடியோவை கிளிக் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்பொழுதோ, அதுவே ஆட்டோ பிலே செய்கிறது. அதாவது, உங்களுடைய வேலையை மிச்சப்படுத்த என்று யூ-டியூப் உங்களுக்காக செலக்ட் செய்து பிலே செய்கிறது. அதாவது யூ-டூபின் நோக்கம் உங்களை அதிக நேரம் அதில் செலவழிக்க வைப்பது. தொடர்ந்து பிலே ஆகும் போது, பல நேரங்களில் உங்களுக்கு அதனை விட்டு வெளியே வர முடிவதில்லை. அதாவது உங்கள் நேரத்தை, நீங்கள் வேறு வகையில் செலவழிக்க விடாமல் உங்களை யூ-டியூப் கண்ட்ரோல் செய்து விடுகிறது.
அதே போல, நெட்பிலிக்ஸ் எடுத்து கொள்ளுங்கள், இதுவும் அதே பாணியை கடைபிடிக்கிறது. '
ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்தது, தானாகவே பிலே ஆகிறது.
இன்னொரு விஷயம். நீங்கள் எப்போது ஒரு விசயத்தை அதிகம் பார்ப்பீர்கள். உதாரணமாக, முகநூல் நியூஸ் பீட் எடுத்து கொள்ளுங்கள். அதில் எந்த விஷயங்கள் அதிகம் காட்டப்படுகிறது. நீங்கள் ஒரு செய்தியை படித்து மனம் வெதும்பி கமெண்ட் அடிக்கிறீர்கள் அன்று வைத்து கொள்ளுங்கள், உங்களுக்கு அதனை சார்ந்த பதிவுகள், திரும்ப திரும்ப காட்டப்படுகிறது, உதாரணமாக, என்னுடைய நண்பர் ஒருவர் கறுப்பினத்தை சேர்ந்தவர், அவர் நடந்து முடிந்த சார்லோட்ஸ்வில் தாக்குதலை குறித்து கமெண்ட் அடித்திருந்தார். இப்பொழுது விடாமல் அவரிடம் இருந்து அதே போன்ற பல பல செய்திகள் கமெண்ட் ஆக வந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே ரத்தத்தை கொதிக்க வைக்கிறது போன்ற செய்திகள். நடந்தது என்னவென்றால், அவரின் முகநூல் உபயோகிக்கும் நேரத்தை அதிகப்படுத்த என்று, அதனை சார்ந்த பல பல விஷயங்கள் அவருக்கு பரிந்துரைக்க படுகின்றன. அவரும் ஒவ்வொரு விஷயமாக வாசித்து, கமெண்ட் இட்டு அதனை மற்றவருக்கு அனுப்புகிறார்.
முதலில் 15 நிமிடம் மட்டுமே முகநூலில் செலவழித்த அவர், இப்போது அதுவே கதி என்று இருக்கிறார்.
நீங்கள் பிளிப்கார்ட் உபயோகிப்பவரா, இல்லை அமேசான் உபயோகிப்பவரா?, உங்களுக்கு ஏற்ற விடயங்களை, பொருட்களை அவர்களே பரிந்துரைக்கிறார்கள், உங்களுக்கு பிடிக்கும் என்று அடுத்த பொருட்களை பிளாஷ் செய்து உங்களை கிளிக் பண்ண செய்கிறார்கள். நீங்கள் செலவைக்கும் நேரத்தை அதிகரிக்க வைக்கிறார்கள்.
சரி, இப்போது, மறுபடியும் நான் முதலில் கேட்ட கேள்விக்கு வரலாம். உங்களை யார் கண்ட்ரோல் செய்கிறார்கள்.
"AI" எனப்படும் செயற்கை நுண்ணறிவு என்ஜினீர்கள். இவர்கள் டாப் 5-10 கம்பெனிகளில் இருக்கும் என்ஜினீயர்கள். கூகிள், முகநூல், யூடூப் , நெட்டபிலிக்ஸ், அமேசான், மைக்ரோ சாப்ட் என்றுஅனைத்து பெரிய கம்பெனிகளில் இருக்கும் அவர்களே உங்களை கண்ட்ரோல் செய்கிறார்கள். உங்களின் நேரத்தை எங்கே செலவழிப்பது, எப்படி செலவழிப்பது, என்ற அனைத்தையும் அவர்களே ப்ரோக்ராம் செய்து வைத்து விடுகிறார்கள். நீங்கள் அவர்கள் பரிந்துரைப்பது போல செயல்பட செயல்பட அதே போன்ற, அதனை சார்ந்தவை மட்டுமே உங்களுக்கு காட்டப்படும். உங்களின் சுயம் என்பது அவர்களால் நிர்ணயிக்க படுகிறது.
இப்போது எத்தனை பேர் டிவி, போன், ஐபாட், கம்ப்யூட்டர், யூடூப், அமேசான், பிளிப்கார்ட், நெட்டபிலிக்ஸ் என்று எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள், சொல்லுங்கள். விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இதுவே, டிவி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். எப்படி மக்களை அதிக நேரம் டிவி பார்க்க வைப்பது என்று உக்கார்ந்து உக்கார்ந்து யோசித்ததாலேயே, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகிறது. அதநை சார்ந்த பலவும் மற்ற எல்லா ஊடகங்களிலும் தெரிய செலவழிக்க வேண்டி உங்களுக்கு பரிந்துரைக்க படுகிறது.
அதுவே எத்தனை பேர் புத்தகங்களை வாசிக்கிறார்கள், இந்த இன்டர்நெட் தாக்கம் இன்றி சொந்தமாக ஏதாவது செய்கிறார்கள். நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள். நாமெல்லாம் சுயத்தை AI என்ஜினீர்களிடம் இழந்து வருகிறோம், இதுவே உண்மை.
நன்றி
Reference:
https://www.ted.com/talks/tristan_harris_the_manipulative_tricks_tech_companies_use_to_capture_your_attention/transcript?utm_campaign=social&utm_medium=referral&utm_source=facebook.com&utm_content=talk&utm_term=technology#t-873658