இரண்டு படங்கள் பார்க்க நேர்ந்தது, ஒன்று "பிரிட்ஜெட் ஜோன்ஸ் பேபி" மற்றொன்று "பிங்க்".
இரண்டும் வெவ்வேறு ஜானேர், ஒன்று ரொமான்டிக் காமெடி மற்றொன்று ட்ராமா.
ஆனால் எனக்கு இந்த இரண்டும் பார்த்த பிறகு ஒரு ஒற்றுமை தட்டுப்பட்டது, அதோடு நிறைய பெண் சுதந்திரம் குறித்த விஷயங்கள், இந்தியாவில் பெண் சுதந்திரம் என்பது எப்படி பார்க்கப்படுகிறது போன்ற எண்ணங்கள் மனதுக்குள் வந்து போயின. அதன் விளைவே இந்த பதிவு.
முதல் படம் "பிரிட்ஜெட் ஜோன்ஸ் பேபி", கதாநாயகி பிரிட்ஜெட், தனது 43 ஆவது பிறந்த நாளை தனியே கொண்டாடுகிறாள், இன்னும் திருமணம் குழந்தை எதுவும் இல்லாமல் இருப்பது, ஒரு பாய் பிரென்ட் கூட இல்லாமல் இருப்பது குறித்து வருந்தி கொண்டு, இந்த பிறந்த நாளில் நான் வருந்த மாட்டேன், என்று முடிவெடுத்து, தனது தோழியுடன் ஒரு பாப்-ராக் அல்லது மியூசிக் பெஸ்டிவல் செல்கிறாள். அங்கே கண் மண் தெரியாமல் குடித்து விட்டு எங்கோ ஒரு டென்ட் க்குள் நுழைய, அங்கே இருக்கும் ஒருவன், உனக்கு கம்பெனி வேண்டுமா?, என்று கேட்க இவள் சம்மதித்து விடுகிறாள். மறுநாள் காலையில் அடித்து பிடித்து ஓடி வந்து விடுகிறாள். பின்னர் இன்னொரு சமயம், தன்னுடைய பழைய பாய் பிரென்ட் ஐ சந்திக்க, அங்கும் அவனுடன் ஒரு நாள் இரவு கழிக்கிறாள்.
பின்னர் அந்த மாத விலக்கு தள்ளி போக, யார் குழந்தையை வயிற்றில் சுமக்கிறோம் என்ற ஒரே குழப்பம். இரண்டு பேரிடமும் இந்து உங்கள் குழந்தையாக இருக்கலாம், ஆனால் ஒரு தகவலுக்காக மட்டுமே இதனை தெரிவிக்கிறேன், எனக்கு எந்த சப்போர்ட்டும் வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். இருவரும், குழந்தை பிறக்கும் வரை கூட இருந்து கவனித்து கொள்கிறார்கள். பிறகு, DNA டெஸ்ட் செய்து யாருடைய குழந்தை என்று முடிவு செய்கிறார்கள்.
அடுத்த படம் "பிங்க்" ஏற்கனவே நிறைய பேர் இந்த படத்தை குறித்து எழுதி விட்டதால், கதை என்ன என்று பலருக்கு தெரிந்திருக்கலாம். மிக சுருக்கமாக இங்கே, 3 பெண்கள் ராக் கான்செர்ட் செல்கிறார்கள், அங்கே ஒருத்திக்கு தெரிந்த பையன் மூலமாக 3 பேர் அறிமுகமாகி வாங்க டின்னெர் சாப்பிட்டு போகலாம் என்று அவர்கள் அழைக்க, அவர்களுடன் பார்ம் ஹவுஸ் செல்கிறார்கள். அங்கே ஒருவன் தப்பாக நடக்க அவனை தாக்கி விட்டு செல்கிறார்கள். தாக்கப்பட்டவன் ஒரு பெரிய ஆள் என்பதால், இவர்களை துரத்தி துரத்தி பழிவாங்குகிறான் அதோடு விபசாரி என்று பட்டம் கட்டி கோர்ட்டுக்கு இழுக்கிறான். அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பதே கதை.
இந்த இரண்டு படத்திற்கும் இருக்கும் ஒற்றுமை, ராக் மியூசிக் கான்செர்ட் சென்று திரும்பும் பொது ஏற்படும் நிகழ்ச்சி/விபத்து. முதல் படத்தில் ஜோக், கேஸுயல் ஆக எடுத்து கொள்ளப்படும் இந்த நிகழ்வு அடுத்த படத்தில் பெரிய பிரச்சனையாக எடுத்து கொள்ள படுகிறது. அதோடு இந்தியாவில் பெண் சுதந்திரத்தின் நிலையை மிக விவரமாக விளக்குகிறது.
எனக்கு தோன்றிய விஷயங்கள் இங்கே.
ஒரு 15 வருடத்திற்கு முன் பெங்களூர்ரில் எனக்கு நேர்ந்த அனுபவம். கல்லூரி படிப்பு இறுதியாண்டு ப்ராஜெக்ட் க்காக பெங்களூரில் தங்க வேண்டி இருந்தது. அப்போது, என்னுடன் வந்த மற்ற ஸ்டுடென்ட்ஸ் இடம் எங்கே தங்கலாம் என்று கேட்டபோது, "நல்ல ஹாஸ்டல் அல்லது பேயிங் ரூம் பாருங்கள், ஆனா, நோர்த் இந்தியன் பெண்கள் இருக்கும் ரூம் வேண்டாம்" என்றார்கள்.
"நார்த் இந்தியன் பெண்கள் கேரக்ட்ர் சரி இருக்காது, தனியாக இருக்கும் போது பிரீ ஆக இருப்பார்கள், அதோடு பாய் பிரென்ட் கூட்டி வருவார்கள், அதனால் பார்த்து இருங்கள்", என்று கூறினார்கள். அதாவது, யாரேனும் ஒரு பெண் பிரீ ஆக பேசினாலோ அல்லது பிரீ ஆக பழகினாலோ நம்மூரில் கொடுக்கும் பட்டம் "கேரக்ட்ர் சரி இல்லை". பிங்க் படத்தில் இதே போன்ற ஒரு "பெயரை", வட கிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் பெண்ணுக்கு தருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இது பத்து, பதினைந்து வருடங்களுக்கு முந்தைய விஷயம் இல்லை, இது "சில நேரங்களில் சில மனிதர்கள்" காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்து இப்போது வரை தொடர்கிறது.
இந்தியா நிறைய முன்னேறி இருக்கிறது, நிறைய பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். தனியாக இருக்கிறார்கள். என்பதெல்லாம் ஒரு வித மாயையோ என்று என்ன தோன்றுகிறது. எல்லா தமிழ் சினிமா படங்களை எடுத்து கொள்ளுங்கள், பெண் என்பவள் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். பிங்க் படத்தில் சொல்வது போல, பெண் என்பவள், "விர்ஜின்" ஆக குடிக்காதவள் ஆக, ஆண்களிடம் பிரீ ஆக பேசாதவள் ஆக, இருந்தால் அவளுக்கு "நல்ல பெண்எ" ன்ற செர்டிபிகேட் கிடைக்கும். அவள் தான் எங்கள் "ஹீரோயின்" இல்லை எனில், அவள் ஆண்கள் மத்தியில் ஒரு "விபச்சாரி " அல்லது "ஐட்டம்" ஆக பார்க்கப்படுவாள், என்று "பிங்க்" தெரிவிக்கிறது. இது டெல்லி போன்ற இந்திய ஹை மெட்ரோ ஏரியாகளில் நடப்பதாக காட்டப்படும் போது மற்ற சிறு, குறு நகரங்களில் எல்லாம் இதனை குறித்து பேச கூட கூடாது "மூச்".
இதனை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்,
முன்பொரு சமயம் "இந்தியாவில் இருந்து வந்த பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்" என்ற பெயரில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதாவது அமெரிக்கா வந்த பிறகு பெண்கள் சந்திக்கும் மாற்றங்கள், அதே பழகிய பிறகு நாம் இந்தியா செல்ல நேரும் போது retune செய்ய வேண்டிய விஷயங்கள் என்று சில குறிப்பிட்டு இருந்தேன். அதில் குறிப்பிட்ட ஒரு சில விஷயங்கள் இங்கே.
இவை எல்லாம் சாதாரண விஷயங்கள். இங்கே கம்பெனிகளில் இதெல்லாம் சகஜமாக இருக்கும்.
இங்கே இருந்து பழகிய பெண்கள், அங்கே விடுமுறைக்கு செல்லும் போது அல்லது வேலை செய்ய நேரிடும் போது இதே போன்ற பழக்க வழக்கங்கள் மாற்ற வேண்டி வரும். இந்தியாவில் MNC களில் வேலை பார்க்கும் பெண்கள், இங்கே ஆன் சைட் வந்து செல்லும் போது, இங்கே இருக்கும் கலாச்சார தாக்கத்தால், அதே போல சகஜமாக இருக்கலாம் என்று நினைத்தால் அவர்களுக்கு கிடைக்கும் பட்டம் "கேரக்ட்டர் சரி இல்லை" என்பது.
இங்கே பிரிட்ஜெட் ஜோன்ஸ் படத்தையும், பிங்க் ஐயும் குறிப்பிட்டதுக்கு காரணம். பிரிட்ஜெட் ஜோன்ஸ் இல், ஒரு பெண் 43 வயதிலும், யார் தகப்பன் என்று தெரியாமல் குழந்தை பெற்றுக்கொண்டு, எந்த சப்போர்ட்டும் இல்லாமல் தனியாக சிங்கிள் மாம் ஆக குழந்தையை வளர்க்க முடியும். தனியாக வாழ முடியும். இந்தியாவில், நீங்கள் எவ்வளவு படித்து, எந்த நிலையில் இருப்பினும், பெண்களுக்கு என்று சில வட்டங்கள் உண்டு, அதனை தாண்டி நீங்கள் வெளியே வர முடியாது. வந்தால், நீங்கள் தவறான நடத்தை உள்ள பெண்ணாக பார்க்க படுவீர்கள். இந்தியாவின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் இந்த நிலை தான். இது தான் நிதர்சனம்.
இதனை பார்த்த பிறகு, அடிக்கடி தலை தூக்கும், பெண் சுதந்திரம், தீபிகா படுகோன் போன்ற பெண்ணியவாதிகளின் "மை சாய்ஸ்" போன்ற விஷயங்களை பார்க்கும் போது, புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிறமாதிரி, மேலை நாடுகளை பார்த்து, நாமும் அப்படிதான் இருக்கணும்னு/இருக்க நினச்சு "ஏன் மா இப்படி பிள்ளைகளை தூண்டி விடுறீங்க. நீங்க பேசாம தூண்டி விட்டுட்டு போயிடுவீங்க, கஷ்டப்படுறது அதுங்க தானே மான்னு" கேட்க தோணுது. என்னவோ போங்கப்பா!!
டிஸ்கி
இது பெண்சுதந்திரம் குறித்த என்னுடைய எண்ணங்கள் மட்டுமே. யாரையும், எந்த கலாச்சாரத்தையும் குறிப்பிடவோ, விமர்சிக்கவோ, ஆதரிக்கவோ இல்லை.
புரிதலுக்கு நன்றி.

- வாக்கிங் செல்லும் போது அல்லது பொது இடத்தில் நடக்கும் போது ஒருவர் சிரித்தால் நாமும் சிரிக்க அல்லது புன்னகைக்கவாவது வேண்டும். இல்லையெனில் ரூட் அல்லது unfriendly.
- அடுத்து, ஆஃபிஸில் எப்போதும் உம் என்று இருக்க முடியாது, அல்லது தனிமையாக இருக்க முடியாது என்பதால், பக்கத்தில் இருப்பவர்களிடம் பொது விஷயம் பேச வேண்டி வரும், அதுவும் சகஜமாக பேச வேண்டி வரும்.
- அதே போல, ஆபீஸ் பார்ட்டி எனில் ஷாம்பெய்ங் ஓபன் செய்வார்கள், அதில் நீங்களும் சில நேரம் பங்கேற்க வேண்டி இருக்கும்.
- ஏதெனும் விசேஷம் என்றால், ஹக் செய்து கொள்வார்கள், மகிழ்ச்சியை தெரிவிக்க.
இவை எல்லாம் சாதாரண விஷயங்கள். இங்கே கம்பெனிகளில் இதெல்லாம் சகஜமாக இருக்கும்.
இங்கே இருந்து பழகிய பெண்கள், அங்கே விடுமுறைக்கு செல்லும் போது அல்லது வேலை செய்ய நேரிடும் போது இதே போன்ற பழக்க வழக்கங்கள் மாற்ற வேண்டி வரும். இந்தியாவில் MNC களில் வேலை பார்க்கும் பெண்கள், இங்கே ஆன் சைட் வந்து செல்லும் போது, இங்கே இருக்கும் கலாச்சார தாக்கத்தால், அதே போல சகஜமாக இருக்கலாம் என்று நினைத்தால் அவர்களுக்கு கிடைக்கும் பட்டம் "கேரக்ட்டர் சரி இல்லை" என்பது.
இங்கே பிரிட்ஜெட் ஜோன்ஸ் படத்தையும், பிங்க் ஐயும் குறிப்பிட்டதுக்கு காரணம். பிரிட்ஜெட் ஜோன்ஸ் இல், ஒரு பெண் 43 வயதிலும், யார் தகப்பன் என்று தெரியாமல் குழந்தை பெற்றுக்கொண்டு, எந்த சப்போர்ட்டும் இல்லாமல் தனியாக சிங்கிள் மாம் ஆக குழந்தையை வளர்க்க முடியும். தனியாக வாழ முடியும். இந்தியாவில், நீங்கள் எவ்வளவு படித்து, எந்த நிலையில் இருப்பினும், பெண்களுக்கு என்று சில வட்டங்கள் உண்டு, அதனை தாண்டி நீங்கள் வெளியே வர முடியாது. வந்தால், நீங்கள் தவறான நடத்தை உள்ள பெண்ணாக பார்க்க படுவீர்கள். இந்தியாவின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும் இந்த நிலை தான். இது தான் நிதர்சனம்.
இதனை பார்த்த பிறகு, அடிக்கடி தலை தூக்கும், பெண் சுதந்திரம், தீபிகா படுகோன் போன்ற பெண்ணியவாதிகளின் "மை சாய்ஸ்" போன்ற விஷயங்களை பார்க்கும் போது, புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிறமாதிரி, மேலை நாடுகளை பார்த்து, நாமும் அப்படிதான் இருக்கணும்னு/இருக்க நினச்சு "ஏன் மா இப்படி பிள்ளைகளை தூண்டி விடுறீங்க. நீங்க பேசாம தூண்டி விட்டுட்டு போயிடுவீங்க, கஷ்டப்படுறது அதுங்க தானே மான்னு" கேட்க தோணுது. என்னவோ போங்கப்பா!!
டிஸ்கி
இது பெண்சுதந்திரம் குறித்த என்னுடைய எண்ணங்கள் மட்டுமே. யாரையும், எந்த கலாச்சாரத்தையும் குறிப்பிடவோ, விமர்சிக்கவோ, ஆதரிக்கவோ இல்லை.
புரிதலுக்கு நன்றி.
2 comments:
பெண் சுதந்திரம் பற்றிய நல்ல பதிவு. உங்கள் கருத்து உண்மை. அதனுடைய அர்த்தம் கலாச்சாரத்திற்கு எற்றாபோல் மாறுபடுகிறது.
ஊரில் பெண்கள் சுதந்திரத்தின் நிலை என்ன என்பது பற்றி நீங்க சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. இதை தங்களது பாரம்பரியம்,கலாச்சாரம் என்றெல்லாம் பெருமிதம் கொள்வார்கள். சிறுகடம்பூர் நந்தினிக்கு அவரை காதலித்தவரால் கொடுமையான குற்றம் செய்யபட்டுள்ளது. ஆனால் நிர்மலா பெரியசாமி என்ற அதிமுக பிரமுகர் என்ன சொல்கிறார் என்றால், கொடுமைக்குள்ளாகி கொலை செய்யபட்ட நந்தினியின் பெற்றோர்களின் வளர்ப்பு சரியில்லை என்று குற்றம் சாட்டுகிறார். கொடுமையான குற்றம் செய்தவரின் பெற்றோர் வளர்பு பற்றி அவர் குற்றம் சொல்லவில்லை.
Post a Comment