Femme Fatale, என்றால் என்ன என்று கூகிளில் தேடவும்: An attractive and seductive woman, especially one who will ultimately bring disaster to a man who become involved with her.
நீங்கள் தமிழில் இதற்க்கு அர்த்தம் தேடினால், விவகாரமான பெண், கவர்ச்சியான பெண் என்பது போன்ற அர்த்தங்கள் வருகிறது. ஆனால் இவை இரண்டும் பொருந்தாது என்பது என் எண்ணம். இப்படி பட்ட பெண்கள், கவர்ச்சியாகவும் இருப்பார்கள், கனவு கன்னிகளாகவும் இருப்பார்கள், ஆனால் பயங்கரமான உள்நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தமிழ் சினிமாவில், முதன் முதலில் கனவு கன்னியாக பார்க்கப்பட்ட பேசப்பட்டவர் T.R. ராஜகுமாரி என்று சொல்வார்கள். அவரின் "மன்மத லீலையை வென்றார் உண்டோ" பாடலில் "பறக்கும் முத்தம்" அந்த காலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பார்கள். ஒரு seductress அவர். பார்வையில் ஒரு மயக்கம் கிறக்கம் இருக்கும். அந்த கால இளைஞர்களை அவரின் bold மூவ்ஸ் பாடாய் படுத்தியது என்று சொல்லலாம். அந்த நாட்களில் பின்னர் எத்தனையோ பேர் வந்தாலும், T.R.ராஜகுமாரி அளவு கவரவில்லை எனலாம். 1940-50 களில் கோடி கட்டி பறந்தவர்.
பின்னர் 60-70 களில் , நிறைய கிளப் டான்சர்ஸ் ரோல்களில் நிறைய பேர் அறை குறை ஆடையுடன் ஆடுவது போல நிறைய பாடல்கள் வந்தாலும், மனதில் நிற்பது போல Femme Fatale ரோல்கள் செய்தவர்கள் என்றால் ஜெயமாலினி, ஹிந்தி நடிகை ஹெலன், அனுராதா என்ற ஒரு சிலர். ஆனாலும், இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டவர், சில்க். தன்னுடைய கண்ணசைவில், கவர்ச்சியில் 80 களின் இளைஞர், முதல் முதியவர் வரை ஆட்டி படைத்தவர். என்ன படம் என்று நினைவில்லை, ஆனால் ஒரு படத்தில் பாடலின் ஒவ்வொரு பத்தியில் தன்னுடைய ஒவ்வொரு உடையின் லேயர் அவிழ்ப்பார். ரொம்ப பேமஸ் பாடல் அது.
முன்பெல்லாம் இது போன்ற Femme Fatale ரோல் செய்வதற்கு என்று சிலர் இருந்தனர். ஆனால் இப்போது பல ஹீரோயின்களே அந்த ரோல்கள் செய்து விடுகிறார்கள். ஆடை அவிழ்ப்பு மற்றும் அரைகுறை ஆடை, நீச்சல் உடை போன்றவை உடை அணிந்தால் Femme Fatale அல்ல,
என்னை பொறுத்தவரை, Femme Fatale ரோல் செய்வதென்றால் உங்கள் மேல் நெகடிவ் இமேஜ் இருக்க வேண்டும். பெண்களுக்கு உங்களை பிடிக்க கூடாது, ஆனால் ஆண்கள் கனவு காண வேண்டும். நல்ல அறிவாளியாக இருக்க வேண்டும், எதிராளியை எப்படி கவிழ்க்க முடியும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அனைத்தையும், அனைவரையும், உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த வளைக்க தெரிந்திருக்க வேண்டும். வெரி வெரி போல்ட். ஜேம்ஸ் பாண்டு படங்களில் எல்லாம் ஒரு Femme Fatale ரோல் கட்டாயம் இருக்கும், இவர்கள் எல்லாருமே டபிள் ஏஜென்ட் ஆக இருப்பார்கள்.
சரி, என்ன திடீரென்று, Femme Fatale பற்றிய ஆராய்ச்சி. உண்மையில் இது Paulo Cohelho வின் "தி ஸ்பை" படித்த பிறகு ஏற்பட்ட ஆராய்ச்சி.
photos from google images
இந்த நாவலின் கதாபாத்திரம், "மாதா ஹரி"/ "Mata Hari" என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல. உண்மையில் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு Femme Fatale. மிக மிக கவர்ச்சியான, அறிவான, யாரையும் மயக்கக்கூடிய, ஒரு பெண். உண்மையான டபிள் ஏஜென்ட். முதல் உலகப்போரில் டபிள் ஏஜென்ட் ஆக செயல்பட்டவர் என்று பிரெஞ்சு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவர்.
ஆனால், யார் இந்த மாதா ஹரி. என்று Paulo, அவர் இறக்கும் முன்பு தன்னுடைய வக்கீலுக்கு எழுதிய கடிதங்களை வைத்து விவரிக்கிறார்.
சந்தேகப்படும், அடிக்கும் கணவனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து, அடிபட்டு சுதந்திரமாய் இருக்க என்று வீட்டை விட்டு ஓடி வந்த பெண் அவர். சிறு வயதில் கற்ற நடனம் உடன் இருக்க. எப்படியாவது பெரியாளாக வேண்டும் என்று கையில் ஒருபைசா இல்லாமல் பாரிஸ் நகரம் வந்திறங்கிய "மார்க்ரெட் ஸில்லே". எப்படி பெரியாளாவது என்று யோசனையில், தன்னுடைய பெயரை "மாதா ஹரி" என்று மாற்றி வைத்து கொண்டு, தான் கீழை நாடுகளில் வாழ்ந்தவர், அங்கிருக்கும் நடனம் பயின்றவர் என்று பரப்பினார். "கீழை நாடுகளில் மக்கள் நடனம் எப்படி இருக்கும் என்று தெரியாததால், என்னதான் இந்த பெண் காட்டுகிறார் என்று பார்க்க வந்த கூட்டத்தை, தன்னுடைய வித்தியாசமான அலங்காரம், எஸோட்டிக்மூவ்மெண்ட் என்று தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை, சரியாக பயன்படுத்திய மாதா ஹரி, அதனுடன் நிற்கவில்லை. தன்னுடைய ஷோ ஸ்டாப்பர், மூவ்மெண்ட், ஒவ்வொரு அசைவிலும் தன்னுடைய ஒவ்வொரு லேயர் துணியை உருவி விடுவது, முடிவில் முக்கால் வாசி ஆடை உருவி ஷோவை முடிப்பது என்று, முடித்து, 1904-5 களில், பாரிஸ் நகரை அலற வைத்தவர்.
photos from google images
பின்னால் நடராஜர் சிலை இருக்க, அலங்காரங்களும், தோரனைகளும் வேறு மாதிரி இருக்க, இவரின் நடனம், அந்த கால பத்திரிகைகள், பெரியமனிதர்கள், "யார் இவர்", இப்படி ஒரு டான்சர் பார்த்ததில்லை என்று அனைத்து பத்திரிக்கைகளும் எழுதின.
ஆனால், "கவர்ச்சி" சிறு ஆயுட்காலம் கொண்டது. சில ஆண்டுகளில் வெறுத்து. அதே பத்திரிக்கைகள், இவரை, வேறு மாதிரி விவரிக்க தொடங்க ஆரம்பிக்கும் போது , தன்னை ஒவ்வொரு முறையும் புதுப்பிக்க மறக்க வில்லை மாதா ஹரி. ஒவ்வொரு முறையும், வேறு வேறு கிழக்காசியா நாடுகளின் நடனத்தை புகுத்தி, புதுமை கொண்டுவர மறக்கவில்லை. ஒரு சூழலில், "இவரை யாரும் மதிக்கவில்லை, ஆனால் மறக்கவும் இல்லை".
படிப்படியாக, பெரிய மனிதர்கள் பலருக்கு இவரின் "சகாயம்" தேவைப்பட. இவரும், அந்த சூழலை நாசுக்காக பயன்படுத்தி, தன்னுடைய அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார். முதல் உலகப்போர் மூண்ட நேரம், பிரான்சும், ஜெர்மனியும், எப்படி போரை கையாள்வது, அடுத்தவர்களை பற்றிய துப்புகளை எப்படி அறிவது என்று ஒற்றர்களை பல திசைகளிலும் அனுப்ப எத்தனித்து கொண்டிருக்க. பல பெரிய மனிதர்களின், சர்கிளில், சுதந்திரமாக வாழ்ந்து வந்திருந்த "மாதா ஹரி" தயவை "ஜெர்மனி" அடைய ஒற்றர் H21 நியமித்தது. வயதாகிவிட்டது, இன்னும் டான்ஸ் ஆட முடியாது, என்று, இவரே சென்று, "பிரெஞ்சு" போர் அமைச்சரவையில், "இங்கே பாருங்கள், ஜெர்மனி என்னை அவர்களின் தூதரக நியமித்து இருக்கிறது, எனக்கு "ஜெர்மனி" பெரிய மனிதர்களும் பழக்கம். வேண்டும் என்றால், பிரெஞ்சு க்காக நான் ஒற்றரிகிறேன், எனக்கு பணம் கொடுங்கள்" என்று இரண்டு பக்கமும், "டபிள் ஏஜென்ட்" ஆக செயல்பட்டு, ஆனால், ஒரு பக்கமும், பயனுள்ள எந்த தகவலையும் தெரிவிக்காமல் இரண்டு நாட்டிற்கும் "பெப்பே" காட்டியவர். இரண்டு பக்கமும் எந்த தகவலும் சொல்லாமல் இவர் நழுவி கொண்டிருக்க, இவரை பிரெஞ்சு ஒற்றராக நியமித்த பிரெஞ்சு அதிகாரி, எப்படி ஒரு பெண் தன்னை ஏமாற்றி இருக்கிறார் என்று வெறுப்பாகி, அவரை கர்ணம் வைத்து மாட்டி விட்டிருக்கிறார்"
கடைசியில் பிரெஞ்சு தூதராகத்தால், சிறை பிடிக்கப்பட்டு சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். உண்மையில் யாராலும், அவர் செய்த எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பலியாடாக இவர் தலை உருண்டிருக்கிறது.
வழக்கமான, Paulo Coelho, புத்தகம் இது இல்லை என்றாலும், அங்கங்கே, சில தத்துவங்களை போலோ, தூவ தவறவில்லை. போலோ வின் கூற்றுப்படி, "ஆணாதிக்க சமுதாயத்தில், தனக்கு விரும்பிய வகையில் சுதந்திரமாக வாழ எத்தனித்த ஒரு பெண்ணின் முடிவு" என்று முடிக்கிறார்.
எது எப்படியோ, என்னை பொறுத்தவரை, "மாதா ஹரி", உண்மையான Femme Fatale.
நன்றி.
2 comments:
இது நீங்கள் வழக்கமாக எழுதும் ஒரு தலைப்பில்லை (நடிகைகள்). ஆனாலும், புத்தகம் குறித்த முழுமையான தகவல்கள் பதிவிட்டமைக்கு
நன்றி !!
Thanks.. yes this is not my cup of tea. But, I needed to establish a baseline for who Femme Fatale is, so used some actress examples to enhance my thoughts.. but the funny thing is, since I used a heading like “kavarchchi”, my post was never shown on Tamilmananam first page. Seems like they use some RegEx mapping to avoid posts that uses words like above. Thanks for the comment
Post a Comment