Friday, December 9, 2016

ஸ்டேட்டஸ் சிம்பல்!

ஒரு அனுபவமும் ஒரு செய்தியும் பார்க்க படிக்க நேர்ந்தது .

முதலில் ஒரு அனுபவம், பிளாக்  ஃப்ரைடே வியாபாரம் என்பது இங்கே காண ஜோராக நடக்கும். நம்ம ஊர் ஆடித்தள்ளுபடி போல இது. நிறைய கடைகளில் தள்ளுபடி கொடுப்பார்கள். எல்லா பொருட்களையும் வாங்கலாம். நான் ஊரில் இல்லாததால் எங்கும் ஷாப்பிங் செல்லவில்லை. அதனால், ஷாப்பிங் சென்ற என்னுடைய தோழி வந்து, "லூயிஸ் வுட்டன் பர்ஸ் ஒன்று, ரொம்ப சீப் ஆக சேல் போட்டு இருந்தான் ஓடி போய் அள்ளிட்டு வந்துட்டேன்" என்றாள். லூயிஸ் வுட்டன் என்பது மிக மிக அதிக விலை விற்கும் பர்ஸ். சின்ன கையடக்க பர்ஸ் கூட குறைந்தது 500$ இருக்கும். கைப்பை எல்லாம் குறைந்தது 1000-2000$ இருக்கும். என்ன தான் சேல் என்று அவர்கள் போட்டாலும் 300$க்கு குறைவாக அவர்கள் சேல் போட மாட்டார்கள்.  மற்ற பர்ஸ்களில் இல்லாத ஒன்றை அப்படி என்ன அந்த பர்சில் இருக்கிறதோ, தெரியவில்லை, ஆனால் அப்படிப்பட்ட பர்ஸ் வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்.

photo from www.andertoons.com

"சீனாவின் புதிய ஸ்டேட்டஸ் சிம்பல் இது!", என்ற பிபிசி செய்தி ஒன்று படிக்க நேர்ந்தது. அதாவது எப்படி மான்நேர்ஸ் உடன் இருப்பது, உக்காருவது, ஸ்பூன், போர்க் உபயோகிப்பது, வைன் கிளாஸ் பிடிப்பது, பேசுவது போன்ற விஷயங்களை சொல்லி கொடுக்க என்று கோர்ஸ் தற்போது சீனாவில் இருப்பதாக அந்த செய்தி தெரிவித்தது.  இதல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகி விட்டது.

90 களில் எல்லாம் மிடில் கிளாஸ் மக்களை பொறுத்தவரை, பைக் வாங்குவது என்பது ஒரு வகையான ஸ்டேட்டஸ் சிம்பல். அது வீடு வாங்குவது, நகை வாங்குவது என்பதை தாண்டி மூன்றாவதாக இருந்து வந்திருக்கிறது. "எனக்கு தெரிந்தே பைக் வாங்கி கொடு, எல்லார் கிட்டயும் பைக் இருக்கு என்னைய எவனும் மதிக்க மாட்டான்" என்று பெற்றோர் இடம் சண்டை போட்ட என் கிளாஸ் மெட் பசங்கள் உண்டு. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு எப்படியும் ஒரு பைக், ஸ்கூட்டர், அல்லது மொபெட் என்று ஏதாவது ஒன்று கட்டாயம் இருப்பது என்பது ஒரு வகை ஸ்டேட்டஸ் சிம்பல்.

 2000 களில் எல்லாம், காலேஜ் படிக்கும் பசங்கள் மத்தியில் பைக் என்பது, ஸ்போர்ட்ஸ் பைக் ஆக உருமாறி விட்டது. அதாவது, எத்தனை cc பைக் வைச்சிருக்கேன் பாரு என்று காட்டுவது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். ஆனால் மிடில் கிளாஸ் குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கார் பக்கம் திரும்ப ஆரம்பித்ததும் அந்த நேரம் தான். அதாவது 2000 தின் ஆரம்பத்தில் மாருதி என்று ஆரம்பித்த இந்த கார் கிரேஸ் பின்னர், மெதுவாக டாடா, ரெனால்ட், போர்ட், செவர்லெட், பியட், நிசான், டொயோட்டா, ஹோண்டா, போல்க்ஸ் வாகென் போன்ற மீடியம் வகை செடான் கார்கள் வாங்க ஆரம்பித்தனர். 

அதிலும் தற்போதெல்லாம் முகநூலில் எந்த வகை கார்கள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கிறது என்று படம் பிடித்து போடுகிறார்கள். இரண்டு மாதத்துக்கு முன், எங்கள் கும்பத்துடன் தற்போது டொயோட்டா இணைந்திருக்கிறது என்ற செய்தியுடன் என்னுடைய தோழி குறுந்செய்தி அனுப்பி இருந்தாள். அதே போல நேற்று என்னுடைய சொந்த கார பெண், எங்கள் குடுமபத்துடன் செவெர்லெட் இணைந்திருக்கிறது என்று செய்தி அனுப்பி இருக்கிறார்.  அதாவது, தற்போதெல்லாம், வீட்டுக்கு குறைந்தது, ஒரு காராவது வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிவிட்டது. அதிலும், தற்போதெல்லாம், உங்கள் காரின் விலை எவ்வளவு என்பது பொறுத்து உங்களின் ஸ்டேட்டஸ் உயரலாம் அல்லது குறையலாம்.

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், எப்போதும் இல்லாமல் ஒருநாள் போன் செய்து நலம் விசாரித்தார். எனக்கோ, என்னது அதிசயமா, இவர் போன் பண்ணுறார் என்ற கேள்வி. என்னவென்ற விசாரித்த போது, தான் BMW வாங்கி இருப்பதாகவும், அதுவும், ஹை எண்டு மாடல் வாங்கி இருப்பதாகவும், இங்கே அசெம்பிள் செய்யும் இடத்துக்கு சென்று வாங்கி வந்ததாகவும் கதை விட்டு கொண்டு இருந்தார். என்ன எதிர் பார்க்கிறார் என்று தெரியாமல், நல்ல வேலை செய்தீர்கள் என்று சொல்லி போனை வைத்து விட்டேன். சரி வாங்கிட்டிங்க என்ன செய்யணும் அதுக்கு, என்று கேட்க தோன்றியது.

இன்னும் ஒரு சில ஸ்டேட்டஸ் சிம்பல் மிடில் கிளாஸ் மக்கள் இருக்கிறார்கள். எப்போதும் பிராண்டட் பொருள்கள் மட்டுமே வாங்குவார்கள். ரால்ப் லாரன் ஷர்ட், நிக்கே ஷு, ரோலெஸ் வாட்ச், ரேபன் கண்ணாடி என்று எப்போதும் பிராண்டட் மட்டுமே. இவர்கள் உடுத்தும் உள்ளாடைகள் கூட பிராண்டட் ஆக மட்டுமே வாங்குவார்கள். இவர்கள் ஒரு பிராண்டட் பிரியர்கள்.  அதே போல அவர்கள் வாங்குவது என்று மட்டும் அல்லாமல் பிராண்டட் மட்டுமே தரமானது, மற்றவை எல்லாம் தரமில்லாதவை என்ற எண்ணம் கொண்டவர்கள்.

உண்மையை சொன்னால் இவர்கள் பிராண்டட் வாங்குவது என்பது "நான் மிடில் கிளாஸ் இல்லை, ஹை கிளாஸ்" என்று மற்றவர்களுக்கு தெரிவிக்கவே தவிர பிராண்டட் மேல் உள்ள நம்பிக்கையினால் அல்ல.

நன்றி

4 comments:

ப.கந்தசாமி said...

நான் "ரோல்ஸ் ராய்" (ஸ்பெல்லிங்க் சரியா?) கார் வாங்கலாம் என்று இருக்கிறேன். அது சுமார் எத்தனை லட்சம் விலை இருக்கும்?

முகுந்த் அம்மா said...

:) Base model of Rolls Royce price starts at $200,000 -$250,000. But , What I have heard is this.
"The story is Rolls Royce, the Luxury Car maker located in Good Wood UK does not sell car to anyone who can buy, Rolls Royce sells their cars only to the customers they like. ... Generally they offer their cars to celebrities, businessmen and other famous personalities. You have to earn a Rolls Royce, you can't buy one."

Not sure whether this is true

Thanks for the comment sir.

ப.கந்தசாமி said...

எப்படியும் அடுத்த ஜன்மத்தில் ஒரு பெரிய VIP ஆகி இந்தக் காரைப் பரிசாகப் பெறப்போகிறேன்.

ஆரூர் பாஸ்கர் said...

BMW விசயம் உண்மை. உள்ளூர் அமெரிக்கர்களைவிட நம்மூர் ஆட்கள் செய்யும் பந்தா அடங்காது. எளிமையின் பிறப்பிடம் இந்தியா, காந்தி பிறந்த நாடு என வரலாற்றில் படிக்க நல்லா இருக்குது.

RICH DAD, POOR DAD புத்தகத்தில் இதுபோன்ற ஆடம்பரம் பற்றி ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார். மல்டி மில்லியனரான அவருடைய மனைவி தனக்கென வாங்கிய கடைசி விசயமாக அதைச் சொல்லுவார்.


மற்றபடி நல்ல பதிவு. புலம் பெயர்ந்த இந்தியர்களின் மனநிலை
ஒரு ஆச்சர்யம் தான்.