முதல் முதலாக நான் இங்கு பல்கலைகழகத்தில் சேர்ந்த போது என்னுடன் வேலை செய்த ஒருவரின் குடும்ப பெயர் Ramkissan. அட இந்தியர் பெயர் போல இருக்கே! என்று விசாரித்த போது அவர் westindies தீவுகளில் ஒன்றான Trinidad-Tobago நாட்டை சேர்ந்தவர் என்று தெரிந்தது. பார்த்தால் இந்தியர் போல அல்லாமல் கறுப்பினத்தவர் போல இருந்தார்.
அவருக்கு எப்படி இந்திய குடும்ப பெயர் வந்தது என்று கேட்ட போது அவர் தன்னுடைய மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து அடிமைகளாக, வேலைகாரர்களாக பிரிட்டிஷாரால் அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் ( 19th century ஆரம்பத்தில் ) அதன் பின் trinidad இல் settle ஆகி விட்டதாகவும். இந்தியாவுடனான தங்கள் தொடர்பு எப்போதோ அற்றுவிட்டதாகவும், இப்போது அவருக்கு இந்தியாவில் யாரையும் தெரியாது என்றும் கூறினார். ஹிந்தி யிலும் ஓரிரண்டு வார்த்தைகள் தவிர எதுவும் பேச தெரியவில்லை என்றாலும் பேசுவதை கொஞ்சம் புரிந்து கொள்ள முடியும் என்றார். தன்னுடைய சிறு வயதில் அமிதாப் பச்சன் படங்கள் பார்த்ததாகவும் சொன்னார்.
சுமார் 200 ஆண்டுகள் இந்தியாவை விட்டு புலம் பெயர்ந்து வேறு நாட்டை தனதாக்கி கொண்டாலும் இன்னும் இந்திய வம்சாவளியினர் தாங்கள் என்று சொல்ல பெருமை படுவதாகவும் சொன்னார். அதற்கு பின்னர் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற திரு V.S.நைபால் அவர்களும் Trinidad-Tobago வில் உள்ள இந்திய வம்சாவளியினர் என்றும் கூறினார். அவர் கூறிய நிறைய விஷயங்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
எதற்கு இப்போது இதனை நினைவு கூர்கிறேன் என்றால், நேற்று எங்களுடைய நெருங்கிய வடநாட்டு நண்பர் தன் புது மனைவியுடன் விருந்துண்ண எங்கள் வீட்டிற்க்கு வந்திருந்தார். எங்கள் நண்பரின் மனைவி மும்பையில் பிறந்து வளர்ந்த வடஇந்திய பெண் என்றாலும் ஹிந்தியை விட ஆங்கிலம் நன்றாக பேசினார். எங்கள் நண்பர் இங்கே சுமார் 25 வருடங்களாக படித்து வேலை பார்த்து வந்தாலும் அவர் சுத்தமாக ஹிந்தி பேசினார். மேலும் எங்கள் நண்பர் தன் மனைவி பேசும் ஹிந்தியை கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
இதனை பார்த்த போது வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் எப்படி தங்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாக்கிறார்கள் என்று எண்ணி ஆச்சரியமும், இந்தியாவில் அதுவும் மெட்ரோ நகரங்களில் வாழும் மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்கள் தாய் மொழியை கற்காமல் ஆங்கிலமும் தெரியாமல் ரெண்டும் கெட்டானாக இருப்பது குறித்து வேதனையும் அடைந்தேன்.
பி.கு : பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது.
என் நண்பர் ஒருவர் அனுப்பிய you tube video
http://www.youtube.com/watch?v=tgSienhtm3o
6 comments:
//இந்தியாவில் அதுவும் மெட்ரோ நகரங்களில் வாழும் மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்கள் தாய் மொழியை கற்காமல் ஆங்கிலமும் தெரியாமல் ரெண்டும் கெட்டானாக இருப்பது குறித்து வேதனையும் அடைந்தேன்.//
இது மாதிரி இன்னும் நிறைய கண்ணுறுவீங்க... நானும் அது போன்ற கர்ரீயிப்பியன் தீவு மக்களையும் கயானாவில் வாழும் இது போன்ற மக்களையும் சந்திச்சிருக்கேன், நம்மிடம் ரொம்ப நெருக்கமாக பழக பிரியப்படுவாங்க. இப்படியே எண்ணங்களை பதிஞ்சிட்டு வாங்க. அதுவும் நீங்க புதிசா இங்க வந்திருந்தீங்கன்னா நிறைய வித்தியாசங்கள் கண்ணுக்கு புலப்படும். அப்படியே இங்கும் தட்டி வைச்சிடுங்க.
130 வருசங்களுக்கு முன்னே ப்ரிட்டீஷாரால் ஃபிஜித்தீவுக்குக் கொண்டுபோகப்பட்ட நம் இந்திய மக்கள் அனைவரும் ஹிந்தியை விடாமல் பேசுகின்றனர். அது அங்கே ஒரு தேசீய மொழி.
நம்ம தமிழ்க்காரர்கள் 'ஹம் தோ மத்ராஸி' ன்னு சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்களே தவிர தமிழ் பேசத் தெரியாமல்தான் இருக்கிறார்கள்.
//கர்ரீயிப்பியன் தீவு மக்களையும் கயானாவில் வாழும் இது போன்ற மக்களையும் சந்திச்சிருக்கேன், நம்மிடம் ரொம்ப நெருக்கமாக பழக பிரியப்படுவாங்க.//
உண்மை தெகா.
தாங்கள் சொன்னது போல கருவிபட்டையில் இணைந்து விட்டேன். நன்றி தெகா.
வாங்க துளசி கோபால் அவர்களே.
//நம்ம தமிழ்க்காரர்கள் 'ஹம் தோ மத்ராஸி' ன்னு சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்களே //
உண்மை. ஹிந்திகாரர்களுக்கு இருப்பது போன்ற மொழி பற்று தமிழ் மக்களுக்கு இல்லை.
அதான் நாம் மொழியை மொழின்னு மட்டும் பார்க்காம தமிழ்த்தாய், தமிழ்க் கடவுள்ன்னு ரொம்பவே உசத்தி வச்சுருக்கோமுல்லே? கடவுள் ரேஞ்சுக்குப்போயிட்டா..... கடவுள் மறுப்புக் கொளுகை நாட்டில் பரவி இருப்பதால்..... வேணாமுன்னு விடத்தானே வேண்டி இருக்கு!
மொழி என்பது மனிதர்கள் தங்கள் இனத்துடன் கம்யூனிகேட் செஞ்சுக்க ஒரு கருவி. நம்ம மொழி பேசுபவரிடம் ஒரு பற்று, ஒரு கூடுதல் சிநேகம் இப்படி இருக்கு.
எங்காவது ஆங்கில அன்னை, ஃப்ரெஞ்சு தாய், ஜெர்மன் அம்மா, ஹிந்தி மா உண்டோ?
என்னவோ போங்க:(
//எங்காவது ஆங்கில அன்னை, ஃப்ரெஞ்சு தாய், ஜெர்மன் அம்மா, ஹிந்தி மா உண்டோ?//
இதை படிச்சவுடனே எனக்கு சிரிப்பு வந்தாலும் உண்மை வலித்தது. :(((
Post a Comment