Saturday, March 13, 2010

தண்ணீருக்காக ஒரு யுத்தம் வராமல் தடுப்போம்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
.



எண்ணெய் யுத்தம் கேள்வி பற்றிருக்கிறோம். அது கச்சா எண்ணைக்காக தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் தண்ணீருக்காக இதே போல் ஒரு யுத்தம் நடக்கும், இவ்வாறு நான் சொல்லவில்லை ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைப்படி பூமியில் தற்போது இருக்கும் நீரில் 2.5% நீரே குடிநீராக உபயோகப்படுத்தமுடியும். அவற்றிலும் ௦.0007% நீரே ஆறு,குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் இருக்கிறது. உலகத்தில் மக்கள்தொகை உயர உயர நீரின் தேவையும் அதிகம் ஆகும். ஆனால் இப்போது இருக்கும் நிலவரப்படி உபயோகிக்க கூடிய குடிநீர் அளவு ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் மிக மிக குறைந்து வருகிறது.





மேலே இருக்கும் புகைப்படத்தில்(1) ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் நாடுகளில் எல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது என்றும், மஞ்சள் நிறத்தில் இருக்கும் நாடுகள் தண்ணீர் தட்டுப்பாட்டின் விளிம்பில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது. அவற்றில் உலகில் மிகஅதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளான இந்தியாவும் சீனாவும் அடங்கும். இது தற்போதைய நிலை தான். இன்னும் சில ஆண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஆரம்பித்தால் என்ன ஆகும்? யோசித்து பாருங்கள். தற்பொழுது எண்ணைக்காக ஆக்கிரமிப்புகள் நடப்பது போல நாளை நீர்வளம் இருக்கும் நாடுகளை நோக்கி ஆக்கிரமிப்பு தொடங்கும். விளைவு போர்.



உலக புள்ளிவிவரங்கள் எல்லாம் இருக்கட்டும், தற்போது தமிழ்நாட்டுக்கும் அதன் அண்டை மாநிலங்களுக்கும் அடிக்கடி நடக்கும் உரசல்கள் எல்லாம் நதிநீர் சம்பந்தப்பட்டது. அது உள்ளூர் கலவரமானது அனைவரும் அறிந்ததே.

சரி! இதற்கு தீர்வு!

1. இருக்கும் நீர் நிலைகளை காப்பது
2. கழிவு கூடாரமாகி இருக்கும் ஆறு குளங்களை சுத்தபடுத்துவது
3. மேலும் கழிவு ஆறு குளங்களில் கலக்காமல் காப்பது.
4. நிலத்தடி நீரை அதிகப்படுத்துவது




மேலே இருக்கும் புகைப்படம் (2) ஒரு ஆலை கழிவு கங்கை ஆற்றில் கலக்க படும் புகைப்படம். ஆலை கழிவுகள் சுத்திகரிக்க பட வேண்டும் என்று எத்தனையோ சட்டம் இருந்தாலும் அதன் ஓட்டைகளை அறிந்து கொண்டு அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களே அதிகம். சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

கங்கை ஆற்றில் கலக்கும் கழிவுகளில் 20% கழிவுகளே ஆலை கழிவுகள், மீதமுள்ள 80% கழிவுகள் மனிதனால் உண்டாவது (3). இவற்றில் மக்கள் தூக்கி வீசுவது கொஞ்சம் தான், மாநிலங்களே அவற்றை என்ன செய்வது என்று அறியாமல் ஆறுகளிலும், ஏரிகளிலும் கலக்கிறார்கள் அல்லது தீயிட்டு கொளுத்தி காற்றை மாசுபடுத்துகின்றனர்.

இதனை தடுக்க ஒரே வழி மறுசுழற்சி முறையை மக்களிடம் கொண்டு செல்வது. கழிவுகளை பகுத்து எவை, மக்கும் கழிவுகள், எவை எல்லாம் மக்கா கழிவுகள், இவற்றை எல்லாம் எப்படி மறுசுழற்சி செய்வது என்பது போன்ற திட்டங்களை உருவாக்குதல். கழிவுகளை கொண்டு மின்சாரம் தயாரிக்கிறார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன். இவை எல்லாம் அரசாங்கத்தின் வேலை தானே நாம் நம் வேலைகளை கவனிப்போம் என்று எண்ணாமல் நாமும் நம் வீட்டில் மறுசுழற்சி முறையை தொடங்கலாம்.

எப்படி.

1. வீட்டில் சமையல் கழிவுகளை பகுத்தல். இதனை மற்ற கழிவுகளுடன் கலக்காது மண்ணில் மக்க செய்தால், இது இயற்கை உரமாகலாம்.

2. பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் இவற்றை முடிந்தவரை பயன்படுத்தாது இருத்தல்.

3. எங்கு சென்றாலும் துணிப்பை எடுத்து செல்லுதல், இது பிளாஸ்டிக் பை உபயோகத்தை குறைக்க உதவும்.

4. கண்ணாடி, பேப்பர் போன்ற கழிவுகளை, பழைய பேப்பர் காரனிடம் மட்டுமே போடுதல்.

மேலே நான் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் எனக்கு தெரிந்த சில வழிகள் மட்டுமே. இன்னும் நெறைய வழிகள் கட்டாயம் இருக்கும்.

"You must be the change you wish to see in the world" என்ற அண்ணல் காந்தியடிகளின் வார்தைக்கிணங்க ஒவ்வொருவரும் இதனை ஆரம்பிப்போம்! உலகத்தை காப்போம்!


இதனை போன்ற மனநிறைவு தரும் ஒரு பதிவை தொடர் பதிவாக எழுத என்னை அழைத்த சிறுமுயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கும், இது போன்ற ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அனைத்து பதிவர்களையும் அழைத்த மண், மரம், மழை, மனிதன் வின்சென்ட் அவர்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.


References
1. www.un.org/waterforlifedecade
2. www.danielbachhuber.com/tag/photography/
3. www.cag.gov.in/reports/scientific/2000_book2/gangaactionplan.htm

24 comments:

Thekkikattan|தெகா said...

Arumaya Vanthirukku, post! keep going... thanks!

ராமலக்ஷ்மி said...

மிகுந்த சிரத்தையும் விவரங்கள் சேகரித்து அழுத்தமாய் சொல்லியிருக்கிறீர்கள். நன்று.

//மேலே இருக்கும் புகைப்படம் (2) ஒரு ஆலை கழிவு கங்கை ஆற்றில் கலக்க படும் புகைப்படம். ஆலை கழிவுகள் சுத்திகரிக்க பட வேண்டும் என்று எத்தனையோ சட்டம் இருந்தாலும் அதன் ஓட்டைகளை அறிந்து கொண்டு அதனை செயல்படுத்தாமல் இருப்பவர்களே அதிகம். சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.//

சுத்தகரிப்புக்கு ஆகும் பெரும்செலவைத் தவிர்க்க இப்படி சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தும் ஆலை நிர்வாகிகள் தங்கள் தவறினை எப்போது உணர்வார்கள்? அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தண்டனை கடுமையாக்கப் படவேண்டும். சரியாகச் சொன்னீர்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் மற்ற எல்லா உணர்வுகளையும் விட பய உணர்வுக்கு கொஞ்சம் அடிபணிவோமில்லை.. புள்ளிவிவரமெல்லாம் விஜகாந்த கணக்கா கொடுத்து .. நல்லா சொல்லி இருக்கீங்க்.. :)
நன்றி.

கோமதி அரசு said...

அருமையான பதிவு.

//ஒவ்வொருவரும் இதனை ஆரம்பிப்போம்,
உலகை காப்போம்//

நானும் வழி மொழிகிறேன்.

ஹுஸைனம்மா said...

ரொம்ப பயனுள்ள இடுகை முகுந்தம்மா.

முகுந்த்; Amma said...

//Arumaya Vanthirukku, post!//

ரொம்ப நன்றி தெகா.

//keep going//

தங்களின் தொடர்ந்த ஊக்குவிப்புக்கு என் நன்றி

முகுந்த்; Amma said...

//மிகுந்த சிரத்தையும் விவரங்கள் சேகரித்து அழுத்தமாய் சொல்லியிருக்கிறீர்கள்//

நன்றி ராமலெட்சுமி அவர்களே.

//ஆலை நிர்வாகிகள் தங்கள் தவறினை எப்போது உணர்வார்கள்?//

பணத்தை நீராக குடிக்க முடியாது என்ற நிலை வரும் முன் இவர்கள் உணர்ந்தால் நல்லது.

முகுந்த்; Amma said...

//எல்லா உணர்வுகளையும் விட பய உணர்வுக்கு கொஞ்சம் அடிபணிவோமில்லை//

கட்டாயம்.

//புள்ளிவிவரமெல்லாம் விஜகாந்த கணக்கா கொடுத்து .. நல்லா சொல்லி இருக்கீங்க்//

நாங்களும் மதுரைகாரங்க தானே, இது கூட செய்யாட்டி எப்படி?

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி கோமதி அரசு அவர்களே!

//நானும் வழி மொழிகிறேன்//

நன்றி

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி ஹுஸைனம்மா அவர்களே!

//ரொம்ப பயனுள்ள இடுகை முகுந்தம்மா//

நன்றி

Muruganandan M.K. said...

மிகுந்த பயனுள்ளதும், சமூக மேம்பாட்டை நோக்காகவும் கொண்ட நல்ல பதிவு.

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை முகுந்த அம்மா - புள்ளிவிவரங்கள் கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்யுது!

settaikkaran said...

மிகவும் தேவையான சமகால அக்கறையுடனும், எதிர்காலம் குறித்த கவலையுடனும் எழுதப்பட்டுள்ள ஒரு அருமையான பதிவு. பாராட்டுக்கள்!

Ananya Mahadevan said...

மிகவும் சிரத்தையுடன் மெனக்கெட்டு நிறைய தகவல்கள் தந்துள்ளீர்கள். எல்லோரும் பின்பற்றுவோமாக! அருமை, பாராட்டுக்கள்.

வின்சென்ட். said...

பதிவை புள்ளிவிபரங்களோடு தந்தமைக்கு நன்றி.

"தமிழ்நாட்டுக்கும் அதன் அண்டை மாநிலங்களுக்கும் அடிக்கடி நடக்கும் உரசல்கள் எல்லாம் நதிநீர் சம்பந்தப்பட்டது. அது உள்ளூர் கலவரமானது அனைவரும் அறிந்ததே."

அதனால் ஏற்படும் பொருள் இழப்பை கணக்கிட்டால் தலை சுற்றும்.

முகுந்த்; Amma said...

//மிகுந்த பயனுள்ளதும், சமூக மேம்பாட்டை நோக்காகவும் கொண்ட நல்ல பதிவு//


ரொம்ப நன்றி Dr.முருகானந்தன் அவர்களே.

முகுந்த்; Amma said...

/நல்ல இடுகை முகுந்த அம்மா //

ரொம்ப நன்றி சந்தனமுல்லை அவர்களே.

//புள்ளிவிவரங்கள் கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்யுது//

உண்மையான நிலவரம் ரொம்ப கிலி ஏற்படுத்ததாங்க செய்யுது.

முகுந்த்; Amma said...

//மிகவும் தேவையான சமகால அக்கறையுடனும், எதிர்காலம் குறித்த கவலையுடனும் எழுதப்பட்டுள்ள ஒரு அருமையான பதிவு//

ஏதோ என்னால ஆனது :)

//பாராட்டுக்கள்//

ரொம்ப நன்றி சேட்டை அவர்களே

முகுந்த்; Amma said...

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அநன்யா மஹாதேவன் அவர்களே

முகுந்த்; Amma said...

//பதிவை புள்ளிவிபரங்களோடு தந்தமைக்கு நன்றி.//

எல்லாம் நீங்கள் தொடங்கி வைத்தது.

//அதனால் ஏற்படும் பொருள் இழப்பை கணக்கிட்டால் தலை சுற்றும்//

உண்மை.

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வின்சென்ட் அவர்களே.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான இடுகை முகுந்த் அம்மா..

"You must be the change you wish to see in the world" மக்கள் விழித்துக்கொள்வார்களா??

கபீஷ் said...

ரொம்ப அக்கறையா நிறைய புள்ளிவிவரங்களுடன் எழுதியிருக்கீங்க. நிறைய புதிய தகவல்கள், எனக்கு. நன்றிங்க, இவ்வளவு தகவலுக்கு, இது சம்பந்தமாக செமினார் நடத்தினால் உபயோகப்படும். கேப்ஸ்யூல் மாதிரி கொடுத்திருக்கீங்க

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
அமைதிச்சாரல் அவர்களே!

//மக்கள் விழித்துக்கொள்வார்களா?//

இப்போதாவது விழித்துகொண்டால் நல்லது

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கு நன்றி கபிஷ் அவர்களே

//ரொம்ப அக்கறையா நிறைய புள்ளிவிவரங்களுடன் எழுதியிருக்கீங்க. நிறைய புதிய தகவல்கள், எனக்கு//

ரொம்ப மகிழ்ச்சிங்க :))

//இது சம்பந்தமாக செமினார் நடத்தினால் உபயோகப்படும். கேப்ஸ்யூல் மாதிரி கொடுத்திருக்கீங்க//

பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க.