Saturday, October 27, 2018

எது அழகானது? எது மனதுக்கு மகிழ்ச்சி தரும்? ஒரு அறிவியல் பார்வை!

எங்கே வெளியே சுற்றுலா சென்றாலும் இயற்கை காட்சிகள் கண்டு புகைப்படம் எடுப்பது என்பது  புகைப்பட கருவிகள் வந்த காலத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதே இடங்களை முன்பே பலர் பல பல விதங்களில் புகைப்படம் எடுத்திருப்பார்கள். நிறைய பத்திரிக்கைகள், இணைய தளங்களில் கோடிக்கணக்கில் பார்த்திருப்போம். இருப்பினும் அந்த இயற்க்கை காட்சியை  பார்க்கும் போது நமக்குள் ஒரு சந்தோசம், அதனை நாமும் புகைப்படம் எடுப்போம். ஏன் இப்படி?, என்று பலமுறை நான் யோசித்ததுண்டு.

என்னுடைய சமீபத்திய உதாரணம், கொலோராடோ சென்றிருந்தது, அங்கு க்ளென்வூட் என்னும் ஒரு ஊரில் ஹைக்கிங் சென்றது. 2.8 மைல் ஹைக்கிங் என்றாலும் ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி அங்கு சென்றதும், மெய் மறந்து ரசித்தது ஹாங்கிங் லேக் எனப்படும் தொங்கும் ஏரி.



மேலும் தொங்கும் ஏரி பற்றி தெரிந்து கொள்ள. https://www.tripadvisor.com/Attraction_Review-g33446-d146055-Reviews-Hanging_Lake-Glenwood_Springs_Colorado.html

இயற்கை காட்சிகள் அழகானவை என்று எப்படி நாம்/நம் மனம் தீர்மானிக்கிறது? அதே போல, அழகான ஓவியங்கள், கலை பொருட்கள் இவை எல்லாம் பார்க்கும் போது மனது மகிழ்கிறது? ஏன்?. அழகென்பது என்ன? , என்று பலமுறை யோசித்தது உண்டு. அதற்க்கான விடையாக ஒரு TED டாக் பார்க்க நேர்ந்தது. டெனிஸ் டட்டன் என்ற அறிவியலார் அவர்களின் ""A Darwinian theory of beauty" தமிழில்  "அழகிற்கான டார்வின் கோட்பாடு" என்பதாகும்.




டெனிஸ் அவர்களின் உரையின் படி, "எதனை நம் மூளை அழகென்று தீர்மானிக்கிறது?, என்பது, நம் மூதாதையர்களான கற்கால மனிதர்களிடம் இருந்து வந்தது. கற்கால மனிதர்கள் எதனை, எந்த நிலப்பரப்பை பாதுகாப்பானது என்று நினைத்தார்களோ, அதுவே நிம்மதியானது, அழகானது என்று மூளையில் பதியப்பட்டு இருக்கிறது. உதாரணமாக, பரந்து விரிந்த நிலப்பரப்பு, அங்கு ஒரு நதி/குளம்/ஏரி போன்ற நிலப்பரப்பு, அங்கங்கு சில, ஆடு,மாடு, முயல் போன்ற மேயும் மிருகங்கள். நிறைய மரங்கள். இவை போன்ற ஒரு காட்சி, கற்கால மனிதனை பொறுத்தவரை, ஒரு பாதுகாப்பான இடம். ஏனென்னில், அவனுக்கு, உணவு, குடிக்க தண்ணீர், எந்த கொடிய மிருகங்களும் இல்லாத சூழல், என்பது ஒரு பாதுகாப்பை தந்து இருக்கிறது. அதுவே மனித மூளையில், அழகென்பது பதிவாகி இருக்கிறது.

அந்த பரிணாம தோற்றம் பதியப்பட்ட காரணத்தாலே, தற்கால மனித மனதிலும் பரந்து விரிந்த நிலப்பரப்பை நீர்.நிலம், மரங்கள், விலங்குகள் நிறைந்த இடப்பரப்பு அழகாக தெரிகிறது.


"சரி, நிலப்பரப்பை  விடுங்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் எல்லாம் அழகாக தெரிவதன் பின்னணி என்ன?". அதற்க்கு டெனிஸ் அவர்கள், நம்மை அதே கற்கால மனிதர்கள் காலத்துக்கு முன்னெடுத்து செல்கிறார். மயில் றெக்கை உதாரணமும் நமக்கு தருகிறார். மயில்கள் எதற்கு றெக்கை வைத்து இருக்கின்றன. அதனால் அவைகளுக்கு எந்த பிரயோஜனம் இல்லை. ஆனால், அவைகள், தன் துணையை வசீகரிக்க தம் இறக்கையை உபயோகிக்கின்றன. அதே போல, கற்கால சுவர் ஓவியங்கள், கற்களால் செய்த சிறு சிறு கலை பொருட்கள் அனைத்தும் இணையை வசீகரிக்க என்று மனிதர்களுக்கு உதவி இருக்கின்றன.  அதே எண்ணங்கள்  படிமங்கள் ஆக மூளையில் படித்ததன் விளைவு மனித மூளைக்கு கலைப்பொருட்கள், ஓவியங்கள், இசை என்று பல பல விஷயங்களை பார்க்கும் போதும் கேட்கும் போதும் மனதுக்கு சந்தோசம் தருகிறது.  அந்த நேரங்களில் மூளையில் சந்தோச தரும் ஹார்மோன் ஆன டோபோமின் சுரப்பு அதிகம் இருக்கிறது. இது அழகானது, என்று பல விஷயங்களை மனதுக்கு மகிழ்ச்சியும் தருகிறது.


ரொம்ப நாளைக்கு பிறகு என்னுடைய போனில் ரிப்பீட் மோடில் நான் கேட்டு கொண்டிருக்கும் பாடல்கள், "96" பட பாடல்கள். என்ன ஒரு மெஸ்மெரைசிங். அதுவும் "வசந்த காலங்கள்" பாட்டுநான் எப்பொழுதும் முணுமுணுக்கும் ஒன்றாகி விட்டது.  வெல்டன் இசையமைப்பாளர் "கோவிந்த் வசந்தா"




மனதுக்கு நிம்மதி தரும், சந்தோசம் தரும் எல்லாம் அழகு தான்!, அது புகைப்படம், பாடல், கலைப்பொருள், இயற்க்கை காட்சி, ஒரு குழந்தையின் சிரிப்பு. என்று எதுவானாலும் இருக்கலாம்.


நன்றி.


2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

//அழகென்பது என்ன? , என்று பலமுறை யோசித்தது உண்டு.//
சுவாரசியமான கேள்விதான். இங்கே கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விசயம். Subjectivity. இதுதான் அழகு என யாராலும் எதையும் சொல்லிவிட இயலாது.

(எ.டு)ஆப்ரிக்காவில் அழகி எனத் தேர்தேடுக்கப்படும் ஒரு பெண்னை இந்தியர்கள் அழகு என ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லையே.

வேகநரி said...

//வெல்டன் இசையமைப்பாளர் "கோவிந்த் வசந்தா"/
நீங்க சொன்னபடியா 96 பட பாடல்களை நேரம் கிடைக்கும்போது அமைதியாக கேட்டு பார்க்க தான் வேண்டும் நன்றி.
//ஆரூர் பாஸ்கர் said...
(எ.டு)ஆப்ரிக்காவில் அழகி எனத் தேர்தேடுக்கப்படும் ஒரு பெண்னை இந்தியர்கள் அழகு என ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லையே.//
உண்மை தான் தமிழகத்திற்கு எமி ஜாக்சன் தான் அழகி.