கடந்த வருடம் பெரும்பாலும் நன்றாக சென்றது என்றாலும் கடைசி இரண்டு மாதங்கள், நிறைய ஸ்ட்ரெஸ் கொடுத்தன. அதிலும் நடந்த சில விஷயங்கள் மனதை பெரிதும் பாதித்தன. முதல் விஷயமாக எங்கள் தோழிகள் குரூப்பில் நடந்த மரணம். அதுவும் சிறுவயது பெண்ணின் மரணம், எங்கள் அனைவரையும் உலுக்கிய ஒரு சம்பவம் அது. எவ்வளவு தூரம் பிடிவாதமாக இருக்கவேண்டும் அல்லது இருக்க கூடாது என்று எங்கள் அனைவருக்கும் செக் வைத்தது அந்த நிகழ்வு.
வாட்ஸாப் முகநூல் என்று எது திறந்தாலும் உங்களுக்கு நிறைய பாரம்பரிய மருத்துவம், உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் தான் சிறந்தது, மற்றவை எல்லாம் கார்பொரேட் சதி என்று செய்திகள், பிரச்சாரங்கள் காணலாம். இது போன்ற பிரச்சாரங்கள் எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு ஜோடிக்கப்பட்ட பிரச்சாரங்கள். இந்த கேள்வி எனக்குள் அடிக்கடி
எவ்வளவு தூரம் ஒருவர் நம் மருத்துவ முறை தான் சிறந்தது, பாரம்பரியம், இயற்க்கை மருத்துவம், மூலிகை, ஆயுர்வேதம் தான் உண்மையான மருத்துவம் மற்ற ஆங்கில மருத்துவம் எல்லாம் டுபாக்கூர் என்று இருக்கலாம்.
அப்படி ஒருவர் இருந்து, ஆங்கில மருத்துவத்தில் சாதாரணமாக தீர்க்க கூடிய ஒரு வியாதியை கவனிக்காமல், முற்றவைத்து, பாரம்பரிய மருத்துவத்தை நாடி எந்த பயனும் இல்லாமல் இறந்த ஒரு நிகழ்வே அந்த தோழியின் மரணம். தினசரி நான் அறிவுரை கூறினாலும், எதனையும் அவள் காது கொடுத்து கேட்கவில்லை. அட்வைஸ், பிரீ அட்வைஸ் என்று ஒதுக்கி விட்டு இருக்கிறார்கள். அந்த தோழியை நினைத்து நினைத்து நாங்கள் வருந்த மட்டுமே முடிந்தது. ஓரளவுக்கு மேல் எவருக்கும் அறிவுரை கூற இயலாது, என்று நான் கற்று கொண்டது அந்த நிகழ்வில் நடந்தது.
இரண்டாவது நிகழ்வு, ஒரு தோழியின் மிட் லைப் மெனோபாஸ் வாழ்வில் இருந்த டெப்ரேசன் கவனிக்கப்படாமல் விடப்பட்டு அவள் எஸ்ட்ரீம் எல்லைக்கு சென்ற நிகழ்வு அவளின் வாழ்க்கையில் பல கசப்பான நிகழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை போன்ற நேரங்களில் கணவன் மற்றும் சொந்தங்களின் அரவணைப்பு மிக தேவை. அது இல்லாமல் அவர்களே எதிரியாக இருந்தால் என்ன நடக்கும் என்று நான் கண்டது. இங்கும், எதுவும் செய்ய முடியாமல், நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் சில விஷயங்கள் நடந்தே தீரும் என்று நான் கண்டது.
எவ்வளவு முயன்றாலும் சில விஷயங்கள் நடக்கும் என்றால் நடந்தே தீரும் என்று கடந்த வருடம் காட்டி சென்று இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போது, இந்த வருடம் அது செய்ய வேண்டும் இது செய்யவேண்டும் என்று நினைப்பதுண்டு. அது ரெசொலூஷன் என்றெல்லாம் இல்லை, மாறாக ஒரு டுடூ லிஸ்ட் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அப்படி இந்த வருடம், ஸ்ட்ரெஸ் கண்ட்ரோல் செய்வது, அல்லது ஸ்ட்ரெஸ் வந்தால் எப்படி சமாளிப்பது, என்னுடைய டு டூ லிஸ்டில் முதலில் இருக்கிறது. , முடிந்தவரை மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும், தியானம் செய்ய வேண்டும், என்பன ஒரு சில டு டூ ஐட்டங்கள். அதில் , முகுந்தின் இண்டெர்ஸ்ட் களை பப்லிஷ் செய்வது என்பதும் ஒன்று. அதன் விளைவே முகுந்தின் பெர்சனல் ப்ளாக்
முகுந்த் அவனுடைய பள்ளி ப்ராஜெக்ட் காக ஒரு கதை எழுதி அதில் சில பல படங்களையும் வரைந்து இருந்தான். அவனை உற்சாகப்படுத்த நான் ஒரு ப்ளாக் உருவாக்கி அதில் அவனுடைய கதையை வெளியிட்டு இருக்கிறேன். நிறைய இலக்கண பிழைகள்/எழுத்து பிழைகள் அதில் இருக்கலாம்.
முடிந்தால் படித்து கருத்திடவும். நன்றி.
எல்லோருக்கும் எல்லா வளமும் கிடைத்திட இந்த புது வருடத்தில் எல்லா வல்ல இறைவன்/இயற்கை அருள்புரியட்டும்!!
Happy New Year 2019.
1 comment:
புது வருட வாழ்த்துக்கள்.
பயனுள்ள பதிவு ஆனா எந்த அளவுக்க பயன்படுத்துவார்கள் என்பது தெரியவில்லை. எனது அனுபவபடி அங்கே கார்பொரேட் என்றாலே ஒரு கொலை வெறி. ஆங்கில மருத்துவம் என்றால் அது அந்த கார்பொரேட்டகளின் சதி திட்டம் கடவுள் இருக்கார், ஜாதிகள் உண்டு என்பது போல் இதுவும் அவர்கள் நம்பிக்கையாக வந்துவிட்டது. தமிழகத்திலிருந்து ஒரு தானியத்தை மிகவும் குறைந்த விலையில் வாங்கி அமெரிக்காவில் கார்பொரேட்டுகள் கான்ஸருக்கு மாத்திரை தயாரித்து கோடி டாலர்கள் சம்பாதிக்கிறார்களாம்! சொன்னவர் வங்கியில் வேலை செய்யும் ஒரு பட்டதாரி.அமெரிக்காவில் கான்ஸருக்கு மாத்திரை எல்லாம் தாயாரிக்க தொடங்கிவிட்டார்கள்!
Post a Comment