Thursday, March 25, 2010

போட்டி மனப்பான்மை நல்லதா?

சமீபத்தில் இங்குள்ள ஒரு மருத்துவ மனைக்கு வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருந்த போது அங்கு இருந்த நர்ஸ் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

"How come Indian students excel in Science and Math but not in Arts" என்று.

நான் இதை பற்றி இதுநாள் வரை யோசித்ததில்லை என்பதால் அவர்கள் கேட்ட பின் அந்த கேள்வி சரி என்றே தோன்றியது.

இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் அறிவியலிலும், கணக்கிலும் நன்றாக score செய்கிறார்கள். Reading, Art இவைகள் பக்கம் அவர்கள் அதிகம் செல்வதில்லை. ஆனால் அமெரிக்க மாணவர்களோ நெறைய Reading, Art போன்றவற்றை பாடமாக எடுக்கிறார்கள்.

இங்கு இருக்கும் பள்ளிகள் அனைத்தும் public schools, அதாவது நம்மூர் அரசு பள்ளிகள் போன்றவை. இங்கு பள்ளி படிப்பு இலவசம் என்பதால் பெரும்பாலோனோர் தங்கள் பிள்ளைகளை இதில் தான் சேர்க்கிறார்கள். இங்கு இருக்கும் private schools எல்லாம் அதிக கட்டணம் வசூலிப்பவை என்பதால் அங்கு பிள்ளைகளை அனுப்புவது குறைவு.

மேலும் இங்குள்ள பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு எல்லாம் demand அதிகம் இருக்கும். பள்ளி Admission அவரவர் இருக்கும் இடத்தை பொறுத்தது. ஒருவர் நல்ல பள்ளி இருக்கும் area வில் உள்ளார் என்றால் அவர்களுக்கு அந்த பள்ளியில் admission உண்டு. அதனால் நல்ல பள்ளி உள்ள area களில் எல்லாம் வீடு வாங்குவது, அல்லது வீடு வாடகைக்கு எடுப்பதற்கு அதிகம் செலவாகும்.

இங்குள்ள இந்தியர்களில் பெரும்பாலோனோர் நல்ல பள்ளிகள் இருக்கும் பகுதியில் வாழ்வதால், இந்திய சூழ்நிலை போல அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்குள் போட்டி மனப்பான்மை உருவாக்கபடுகிறது .

இந்தியாவில் நெறைய வீடுகளில் அடுத்த வீட்டு பிள்ளைகளை காட்டி ஒரு comparision நடக்கும். அதே போல இங்கும் நெறைய வீடுகளில் நடக்கிறது.

"அடுத்த வீட்டு பிள்ளை மியூசிக் கிளாஸ் போகுது, நீயும் போ"

"அந்த பிள்ளை western டான்ஸ் கிளாஸ் போகுது, உன்னையும் அதில சேர்த்து விடுறேன்"

என இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை நெறைய extra classes க்கு அனுப்புகிறார்கள். இதனால் நம்மூரில் உள்ள குழந்தைகளை போலவே இங்குள்ள குழந்தைகளுக்கு நேரம் இருப்பதில்லை. எப்போதும் எதாவது ஒரு class இக்கு செல்கிறார்கள். இதில் parents க்கும் வேலை அதிகம். ஒவ்வொரு class க்கும் அவர்கள் குழந்தைகளை கொண்டு விடவேண்டும்.

மியூசிக், டான்ஸ், பியோனோ, ஸ்விம்மிங், கராத்தே, கிடார் என்று நெறைய classes உண்டு, ஆனாலும் அதனையே ஒரு career ஆக குழந்தைகளை எடுக்க நெறைய பெற்றோர் விடுவதில்லை. பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவ (அல்லது மருத்துவம் சார்ந்த) அல்லது இன்ஜினியரிங் படிப்புக்கு போவதையே விரும்புகிறார்கள்.

இதற்கெல்லாம் பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை போல தம் தம் பிள்ளைகளையும் வளர்க்க நினைப்பது தான் காரணம் என்று நினைக்கிறன். இது ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்தாலும், ஒரு ஊரில் அனைவருமே மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக நினைத்தால் என்ன ஆகும்? குழந்தைகளின் விருப்பப்படி அவர்களை படிக்க வைப்பது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் என்பது என் கருத்து.

38 comments:

இராகவன் நைஜிரியா said...

// குழந்தைகளின் விருப்பப்படி அவர்களை படிக்க வைப்பது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் என்பது என் கருத்து. //

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் எத்தனை பெற்றோர் இதனை ஏற்பார்கள் எனத் தெரியவில்லை..

இராகவன் நைஜிரியா said...

// "அடுத்த வீட்டு பிள்ளை மியூசிக் கிளாஸ் போகுது, நீயும் போ"

"அந்த பிள்ளை western டான்ஸ் கிளாஸ் போகுது, உன்னையும் அதில சேர்த்து விடுறேன்" //

அது ரத்தத்தில் ஊறி போயிடுச்சுன்னு நினைக்கிறேன். அது எங்க பயக்க வயக்கம் மாதிரி..

V.Radhakrishnan said...

மிகவும் நல்ல கருத்துதான், ஆனால் பணம் என்கிற பிரச்சினை ஒன்று இருக்கிறது அல்லவா? அதோடு மட்டுமில்லாமல் கெளரவம் வேறு நமக்கெல்லாம் வந்து விடுகிறது.

பழமைபேசி said...

ஆமாங்க... அப்புறம் அந்த Kumon?

துளசி கோபால் said...

இந்தியக் கல்வி முறையில் ஞாபகசக்தி அதிகம் உள்ள பிள்ளைகள் நிறைய மதிப்பெண் பெற்று ஜெயிக்கும். தேர்வு சமயங்களில் ஞாபகசக்தி பெருக வல்லாரைக்கீரை மாத்திரைகள் விளம்பரம் தினசரிகளிலும் மற்ற வாரப்பத்திரிகைகளிலும் வருவதைக் கவனிச்சீங்களா?

இந்த நெட்டுரு போடும் பழக்கத்தில் ஆர்ட், ரீடிங் எல்லாம் எப்படி மனப்பாடம் செய்வது?

Robin said...

பெற்றோர்கள் அளவுக்கு அதிகமான சுமையை பிள்ளைகள்மேல் சுமத்திவிடுகிறார்கள். எதிர்பார்ப்பும் அதிகம். தன் குழந்தையின் வயது என்ன, இந்த வயதில் இதை செய்ய முடியுமா என்று கூட பல பெற்றோர்களும் யோசிப்பதில்லை.

Chitra said...

I was thinking of writing a post on similar line. As you said:

"இதற்கெல்லாம் பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை போல தம் தம் பிள்ளைகளையும் வளர்க்க நினைப்பது தான் காரணம் என்று நினைக்கிறன்" - :-)

You have written it well.

ராம்ஜி_யாஹூ said...

but what is answer for that question

Tulasi teacher one cannot excel in maths just by memorising or mug up

I dont know what is Art as per that Nurse, there are numerous artists in India.

பழமைபேசி said...

ART

தலைவா, அது ஓவியம், ஆடல், பாடல் மட்டுமே அல்ல!

Creativity, Innovative, Research and Improvementனு நிறைய சின்ன வயசுல இருந்தே வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி ஏத்துறாங்கள்ல?

Thekkikattan|தெகா said...

//ஒரு ஊரில் அனைவருமே மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக நினைத்தால் என்ன ஆகும்? //

உயிரியலில் நம்ம படித்த inbreedingல என்னாகும் பல்லூயிர் ஏற்றம் இல்லைன்னா அது போலத்தான், diversity இல்லாம ஏதாவது ஒண்ணுன்னா எல்லாமே சேர்ந்து போகும்... இங்கே வேலை வாய்ப்பு வறட்சியா எல்லாரும் சேர்ந்தே முழ்கணும்.

//இதற்கெல்லாம் பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை போல தம் தம் பிள்ளைகளையும் வளர்க்க நினைப்பது தான் காரணம் என்று நினைக்கிறன்.//

கீழே இணைத்துள்ள சுட்டியில நீங்க கருதின விசயத்தை வைச்சி பிரிச்சு மேஞ்சிருப்போம் பாருங்க...

குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்...

நல்ல கட்டுரை! இங்க வைச்சது ரொம்ப நல்லது.

முகுந்த் அம்மா said...

//சரியாகச் சொன்னீர்கள். ஆனால் எத்தனை பெற்றோர் இதனை ஏற்பார்கள் எனத் தெரியவில்லை//

உண்மைதானுங்க, வேற எங்கயும் போக வேணாம், என் வீட்டுக்காரரே அப்போ நீ முகுந்த் ஐ எந்த class க்கும் அனுப்ப போறதில்லையான்னு கேக்குறாரு :((

//அது ரத்தத்தில் ஊறி போயிடுச்சுன்னு நினைக்கிறேன். அது எங்க பயக்க வயக்கம் மாதிரி//

கரெக்ட், போட்டி போட்டாதான் பிழைக்க முடியும்னு சொல்லி சொல்லிதான நாமள வளர்கிறாங்க.

முகுந்த் அம்மா said...

//ஆனால் பணம் என்கிற பிரச்சினை ஒன்று இருக்கிறது அல்லவா?//

ஒவ்வொரு class ம் பயங்கர expensive ங்க, பியானோ class என் friend பொண்ணு படிக்கிறா, வாரம் ஒரு கிளாஸ் அதுவும் 45 mins கிளாஸ் மாதம் fees $120.

அதோடு மட்டுமில்லாமல் கெளரவம் வேறு நமக்கெல்லாம் வந்து விடுகிறது//

இதுவும் உண்மை தான், நாம குழந்தை பியானோ படிக்குதுன்னு சொல்லிகிறது பெருமை தானுங்க.

முகுந்த் அம்மா said...

//ஆமாங்க... அப்புறம் அந்த Kumon?//

KUMON ஐ மறந்துட்டேன் பாருங்க. ஒரு default கிளாஸ் ஆகிடுச்சுங்க இந்த KUMON கிளாஸ். KUMON கிளாஸ் ல பாத்தீங்கன்ன நெறைய இந்திய குழந்தைகள் தான் இருக்கும்.

முகுந்த் அம்மா said...

//தேர்வு சமயங்களில் ஞாபகசக்தி பெருக வல்லாரைக்கீரை மாத்திரைகள் விளம்பரம் தினசரிகளிலும் மற்ற வாரப்பத்திரிகைகளிலும் வருவதைக் கவனிச்சீங்களா?//

நான் ஸ்கூல் ல படிக்கும் போது கூட என் கூட படிச்ச நிறைய பொண்ணுங்க இந்த மாதிரி மாத்திரை சாப்பிடறேன்னு சொல்லுவாங்க.

//இந்த நெட்டுரு போடும் பழக்கத்தில் ஆர்ட், ரீடிங் எல்லாம் எப்படி மனப்பாடம் செய்வது?//

சரியாய் சொன்னீங்க. ART ம் சரி Reading ம் சரி, ரெண்டுக்குமே பழைமைபேசி அவர்கள் சொன்னது போல creative thinking வேணுங்க. அது இருந்தா தான் வேலை நடக்கும்.

முகுந்த் அம்மா said...

//I was thinking of writing a post on similar line//

எழுதுங்க சித்ரா , இன்னும் நெறைய விஷயம் இந்த மாதிரி இருக்கு.

//You have written it Well//

ரொம்ப நன்றிங்க

முகுந்த் அம்மா said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராபின் அவர்களே.

//பெற்றோர்கள் அளவுக்கு அதிகமான சுமையை பிள்ளைகள்மேல் சுமத்திவிடுகிறார்கள். எதிர்பார்ப்பும் அதிகம். தன் குழந்தையின் வயது என்ன, இந்த வயதில் இதை செய்ய முடியுமா என்று கூட பல பெற்றோர்களும் யோசிப்பதில்லை//

உண்மைங்க, ,கரெக்ட் ஆ சொன்னிங்க அதிக சுமை ஆபத்து தாங்க.

முகுந்த் அம்மா said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராம்ஜி அவர்களே

//I dont know what is Art as per that Nurse, there are numerous artists in India.//

பழைமைபேசி அவர்கள் சரியான பதில் இதுக்கு சொல்லி இருக்காங்க.

முகுந்த் அம்மா said...

//Creativity, Innovative, Research and Improvementனு நிறைய சின்ன வயசுல இருந்தே வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி ஏத்துறாங்கள்ல?//

கரெக்ட் ஆ சொன்னிங்க. நன்றிங்க.போன் ல பேசினது ரொம்ப சந்தோசம்.

முகுந்த் அம்மா said...

//உயிரியலில் நம்ம படித்த inbreedingல என்னாகும் பல்லூயிர் ஏற்றம் இல்லைன்னா அது
போலத்தான், diversity இல்லாம ஏதாவது ஒண்ணுன்னா எல்லாமே சேர்ந்து போகும். வேலை வாய்ப்பு வறட்சியா எல்லாரும் சேர்ந்தே முழ்கணும்//

சரியாய் சொன்னிங்க தெகா, inbreeding பிரச்சனை நெறைய நோய்களை உருவாக்குவதை
போல இதுவும் வேலை வாய்ப்பு வறட்சி போன்ற சமுதாய நோய்களை உருவாக்கும்.

//குழந்தைகளும் தனித்துவத்தன்மை பேணலும்... //

ரொம்ப நல்ல பதிவுங்க, அதில இருக்கும் சுட்டிகளும் இந்த விஷயத்தை அருமையா விளக்கி இருக்குங்க. நன்றி தெகா.

பி.கு: பழைமை பேசி அவர்களிடம் போனில் பேசும் போது தங்களை பற்றி மேலும் தெரிந்து கொண்டேன்.

துளசி கோபால் said...

வாய்பாடு, ஃபார்முலா எல்லாம் மனப்பாடத்துலே வராதா:(

padma said...

இதெல்லாம் வர குழந்தைய அனுப்பலாம் .வராத பசங்கள கஷ்டபடுத்தகூடாது.தெளிவா சிந்திக்க சொல்லிதறதே போதும். பட் அது நமக்கே வசப்பட மாட்டேங்குது .
நல்ல பதிவு முகுந்த்தம்மா .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்கீங்க..எங்கபோனாலும் இண்டியனாவே இந்த விசயத்துல மட்டும் இருக்காங்க போல..:)

போரடிக்குதுன்னு ரெண்டு க்ளாஸ் போறான் என் பையன் .. அந்த டேன்ஸ் டீச்சர் ..லிட்டரேச்சர் படிச்சிட்டு தன் ஹாபியான டேன்ஸை சொல்லிக்கொடுக்க ஒரு வகுப்பு தொடங்கி இருக்கா.. அதுக்குன்னு ஒரு அறைவாடகைக்கு எடுத்துன்னு.. பட் அவ அம்மாவைப்போல அவளோட உண்மையான ஆர்வத்தை வழிப்படுத்தி எத்தன பெற்றோர் உதவி செயய்ராங்கன்னு நானும் ஆச்சரியப்பட்டிருக்கேன்.

சேட்டைக்காரன் said...

ஹூம்! இதெல்லாம் நடுத்தர மற்றும் பெரிய குடும்பத்துப் பெற்றோர்களுக்கு இருக்கிற கவலை போலும். நல்ல வேளை, என் பெற்றோர்களுக்கு அந்த அளவு கல்வியில்லாததால் அதிக அழுத்தம் தரவில்லை என்று தோன்றுகிறது. அருமையான பதிவு!

Anonymous said...

There should be competition in every thing but too some extent. Good Post.

முகுந்த் அம்மா said...

//வாய்பாடு, ஃபார்முலா எல்லாம் மனப்பாடத்துலே வராதா:(//

கரெக்ட் ஆ சொன்னிங்க டீச்சர். நெட்டுரூ போட்டு தான் நான் ஃபார்முலா, equation எல்லாம் மனப்பாடம் பண்ணி இருக்கேன், எல்லாரும் அப்படி தான் பண்ணி இருக்கோம்.

ராம்ஜி அவர்கள் சொல்வது போல மனப்பாடமே பண்ணாமல் கணக்கு போட முடியாது.

முகுந்த் அம்மா said...

//இதெல்லாம் வர குழந்தைய அனுப்பலாம் .வராத பசங்கள கஷ்டபடுத்தகூடாது. தெளிவா சிந்திக்க சொல்லிதறதே போதும்//

அதுதாங்க சரி, ஆனா எல்லாரும் "குழந்தைகள் முதலில் தடுமாறினாலும் பின் சீக்கிரம் கிரகித்து கொள்ளும்" என்று சொல்லி அனுப்புறாங்க.

//அது நமக்கே வசப்பட மாட்டேங்குது //

நாமளே எல்லாத்தையும் Trial and error ல தான செய்துட்டு இருக்கோம் :((

தேங்க்ஸ் பத்மா

முகுந்த் அம்மா said...

//எங்கபோனாலும் இண்டியனாவே இந்த விசயத்துல மட்டும் இருக்காங்க போல//

100% உண்மைங்க

//அவ அம்மாவைப்போல அவளோட உண்மையான ஆர்வத்தை வழிப்படுத்தி எத்தன பெற்றோர் உதவி செயய்ராங்கன்னு நானும் ஆச்சரியப்பட்டிருக்கேன்//

அந்த டான்ஸ் டீச்சர் அம்மா கிரேட் ங்க, தனி வீடு எடுத்து கொடுத்து encourage பண்ணுறது சாதாரண விஷயம் இல்ல.

நன்றிங்க

முகுந்த் அம்மா said...

//இதெல்லாம் நடுத்தர மற்றும் பெரிய குடும்பத்துப் பெற்றோர்களுக்கு இருக்கிற கவலை போலும்.//

இங்க இருக்கிற இந்தியன்ஸ், முக்கால்வாசி இந்தியாவில இருக்கிற நடுத்தர குடும்பத்தில இருந்து வந்தவங்க, அதனால தான் வளர்ந்த சூழ்நிலை போல தம் பிள்ளைங்களுக்கும் கொடுக்க நினைக்கிறாங்க.

//பெற்றோர்களுக்கு அந்த அளவு கல்வியில்லாததால் அதிக அழுத்தம் தரவில்லை என்று தோன்றுகிறது//

பெற்றோர் கல்வியறிவை விட, அவங்க கிட்ட இருக்கிற பணம் தான் இதில பிரதானாமா பங்கு வகிக்குதுன்கிறது என்னோட தாழ்மையான கருத்து. எனக்கு தெரிஞ்ச ரொம்ப கல்வியறிவு இல்லாத சில பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பெருமைக்காக இந்த மாதிரி கிளாஸ் ல சேர்த்து விடறத நான் பார்த்து இருக்கேன்.

நன்றிங்க சேட்டை.

முகுந்த் அம்மா said...

//There should be competition in every thing but too some extent. //

கரெக்ட்ங்க, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் னு எழுதி வச்சு இருக்காங்க நம்ம முன்னோர்.

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி Nanrasitha அவர்களே

அமைதி அப்பா said...

நல்ல பதிவு நன்றி.
என் கதையையும் கொஞ்சம் கேளுங்க..

//ஒரு ஊரில் அனைவருமே மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக நினைத்தால் என்ன ஆகும்?//

இதை நினைத்துதான் எனது ஒரே மகனை மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க வாய்ப்புக் கிடைத்தும், அதில் சேர்க்காமல் வக்கிலுக்கு (B.A.,B.L.(HONS).) சேர்த்துள்ளேன். ஆனால் கற்றது தமிழ் ஹீரோ கதையா "இவ்வளவு மார்க் வாங்கின உன்ன ஏன் இந்தப் படிப்பில் சேர்த்தார் உங்க அப்பா" என்று அவனை படிக்க ஆர்வம இல்லாமல் செய்துவிட்டனர். தற்பொழு வக்கீல் படிப்பு குறித்து அவனுக்கு எடுத்துச் சொல்லி ஒருவாறு சமாளித்துள்ளேன்.
நிரம்ப பொறுமையாக இந்த விஷயத்தை அனுகியதால் இன்று எனது மகன் அந்தப்படிப்பை தொடர்கிறான்.
நான் அனுபவித்த வேதனையை சொல்ல இங்கு இடமில்லை.
எல்லோரும் செல்லும் வழியில் செல்லும்போது நமக்கு ஒரு பாதுகாப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.
என்னுடைய முழு கருத்தையும் இங்கு சொல்லவில்லை.
மொத்தத்தில் விசித்திரமான உலகம் இது.

ராமலக்ஷ்மி said...

அழகான அலசல் முகுந்த் அம்மா.

ராமலக்ஷ்மி said...

@ அமைதி அப்பா,

//எல்லோரும் செல்லும் வழியில் செல்லும்போது நமக்கு ஒரு பாதுகாப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.//

மிகச் சரி. அந்த உணர்வினாலேயே பலரும் செலுத்தப் படுகிறார்கள். மருத்துவம், பொறியியல் இவற்றை மட்டுமே சுற்றிதான் உலகம் இயங்குகிறதா? இன்னும் பரவலாக எத்தனை படிப்புகள் வாய்ப்புகள் என எவரும் சிந்திப்பதில்லை.

உங்கள் அனுபவத்தில் எனக்கொரு சிறிய கேள்வி. பதில் சொல்ல விருப்பமில்லையெனில் வேண்டாம். உங்கள் ப்ரொஃபைலிலேயே சொல்லி விட்டீர்கள் ‘வேலை’ என்னவென கேட்க ‘வேணாமே’யென. ஆனால் சில சமயங்களில் பிள்ளைகளுக்கு வேறுதுறையில் விருப்பும் ஆர்வமும் இருப்பினும், அவர்கள் தேர்ந்தெடுத்த துறை எதிர்கால பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதாயும் இருந்தால் கூட, பெற்றோர் தங்கள் துறையிலேயே படிக்க நிர்ப்பந்திப்பதும் நடக்கின்றனவே. குறிப்பாக மருத்துவர்களும், வக்கீல்களும் இதில் அதிகமென்பது என் கருத்து.

ராமலக்ஷ்மி said...

@ அமைதி அப்பா,

தங்கள் தளத்தை இப்போதுதான் முழுமையாகப் பார்த்தேன். http://amaithiappa.blogspot.com/2009/10/2.html இந்தப் பதிவு விளக்கியது ஏன் நீங்கள் உங்கள் மகனை வக்கீலுக்குப் படிக்க வைத்தீர்கள் என்பதை. அவன் நன்கு படித்து தேறி மக்களுக்கு நல்லது செய்ய என் வாழ்த்துக்கள்!

அமைதி அப்பா said...

@ராமலக்ஷ்மி

எனக்கும் வக்கீலுக்கும் சம்பந்தம் கிடையாது. மேலும் என்னை யாரென்று வெளிபடுத்திக் கொள்வதில் சில சங்கடங்கள் உள்ளன. மற்றபடி மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

//அவன் நன்கு படித்து தேறி மக்களுக்கு நல்லது செய்ய என் வாழ்த்துக்கள்!//

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

@ அமைதி அப்பா,

பொதுவில் பிள்ளைகளின் விருப்பத்தையும் பார்க்க வேண்டும் எனும் கருத்துக்காக சொன்னதே. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தங்கள் வலைப்பூவினை படித்ததுமே ஓரளவு உங்களைப் பற்றிப் புரிந்து கொண்டும் விட்டேன்.

முகுந்த் அம்மா said...

தங்களின் பின்னூட்டம் படித்த பிறகு, தங்களை பற்றி என்னுள் எழுந்த உணர்வு விவரிக்க இயலாது. ராமலெட்சுமி அவர்கள் மூலமாக தங்கள் பையனை வக்கீலுக்கு படிக்க வைக்க விரும்பும் தங்களின் நோக்கத்தை அறிந்தேன்.

தங்களின் மகன் ஒரு பெரிய lawyer ஆகா ஜொலிக்க எங்களின் வாழ்த்துக்கள் அய்யா. கட்டாயம் ஒரு நாள் அது நடக்கும்.

முகுந்த் அம்மா said...

@ராமலெட்சுமி அவர்களே

அமைதி அப்பா போன்றவர்கள் நல்ல நோக்கத்துடன் செய்யும் நல்ல காரியங்களும், பொதுமக்களால் தவறாக சில சமயம் புரிந்து கொள்ளப்படுகின்றன. தங்கள் அமைதி அப்பா அவர்களின் தளத்தில் இருந்து கொடுத்த சுட்டி படித்த பிறகு எனக்கும் மனது நெகிழ்ந்தது.

தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

அமைதி அப்பா said...

வணக்கம் முகுந்த் அம்மா, எதையோ தேடும் பொழுது, இன்று இந்தப் பதிவு கண்ணில் பட்டது.

//தங்களின் மகன் ஒரு பெரிய lawyer ஆகா ஜொலிக்க எங்களின் வாழ்த்துக்கள் அய்யா. கட்டாயம் ஒரு நாள் அது நடக்கும்//

தங்களின் வாழ்த்துகளைப் படித்ததும் 'அமைதி விரும்பி' யின் தற்போதைய நிலைக் குறித்து தங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.


இந்த வருடம் படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் சட்ட நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணி புரிகிறார்.

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்..