Thursday, November 12, 2015

இன்றைக்கு இந்தியாவின் ஸ்டைல்ம், வெர்சுவல் எச்செர்சைசும் !

இரண்டு செய்திகள் கேட்க, பார்க்க நேர்ந்தது.ஒன்று இந்தியாவின் தற்போதைய ஸ்டைல் என்ன என்பதை பற்றியது. அடுத்தது எப்படி மக்கள் தற்போது வெர்ச்சுவல் உடல்பயிற்சி செய்கிறார்கள் என்பதனை பற்றியது.

தீபாவளியை ஒட்டி, இந்தியாவில் இருக்கும் சொந்தம் மற்றும் தோழிகளிடம் பேசி கொண்டு இருந்த போது...என்ன டிரஸ் இப்போ ஸ்பெஷல் என்று கேட்டேன். அவர்கள் சொன்ன ஒவ்வொரு ஸ்டைலும் எதோ முந்தைய ஸ்டைல் ரிபீட் ஆவது போல இருந்தது. அதேபோல, இப்பொழுதெல்லாம் டிரஸ் வாங்கும் தேர்வை வைத்து எந்த தலை முறையை சேர்ந்தவர்கள், எந்த ஊரில் இருக்கிறார்கள் என்பது கூட  என்று கணிக்க முடிகிறது.  மெட்ரோ நகர பெண்கள் சேலையை விட்டு அதிக தூரம் சென்று விட்டதையும் காண முடிகிறது. இளவயது பெண்களிடையே ஓரிரண்டு சேலை வைத்து இருப்பவர்கள் மிக மிக  குறைவு என்று ஆகி விட்டது. சேலை என்பது ஒரு பெஸ்டிவல் டிரஸ் அல்லது விசேசங்களுக்கு மட்டுமே உபயோகிப்பது என்பது இளவயது மட்டும் அல்ல மிடில் ஏஜ் மக்களிடமும் இருக்கிறது. எல்லாரும் தற்போது சுடிதாருக்கு அல்லது குர்தா வுக்கு மாறி விட்டனர்.  வயதானவர்கள் கூட இப்பொழுதெல்லாம் கன்வீநியன்ட் ஆக இருக்ககிறது என்று சுடிதார் அல்லது குர்தா வுக்கு மாறி இருப்பதை சென்னையில் அதிகம் காண முடிகிறது.

ஆனால் இன்னும் மதுரை, திருச்சி போன்ற நகர் புறங்களில் மிடில் ஏஜ் மக்கள் சேலையில் தான் இருக்கிறார்கள் அல்லது விரும்புகிறார்கள் என்றாலும் சுடிதார் போட்டால் யாரும் வேடிக்கை பார்ப்பதில்லை என்பதால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால் சேலை உடுத்தும் மக்களிடையே இருக்கும்தற்போதைய ட்ரென்ட் பார்க்க கேட்க சிரிப்பாக இருந்தது.
தற்போது சோசியல் மீடியா சேலை பேஷன் போல. நிறைய பெண்கள் எடுத்து இருப்பதாக சொன்னார்கள். FB, Whatsapp மற்றும் யாகூ போன்ற தேடு தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் சிம்பல் கொண்ட புடவைகள் அவை. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பா, என்று பார்க்க சிரிப்பாக இருந்தது.


இதே போல, இன்னொரு டிசைன் என்னவென்றால், பாவாடை தாவணி போல இருக்கும் டபுள் டிசைன் அல்லது டபுள் கலர் ஒன்று.
 



முன்பே நான் குறிப்பிட்ட படி, நிறைய மக்கள் இதனை அடுத்தவர்கள் உடுத்தி இருக்கிறார்கள் அதனால் நமக்கும் நன்றாக இருக்கும் என்று நினைத்து வாங்குகிறார்கள். தங்களின் உடலமைப்புக்கு இது நன்றாக இருக்குமா என்று தெரியாமல் இதனை வாங்குவதால் பல நேரங்களில் அசிங்கமாக இருக்கிறது. எது உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அதனை மட்டுமே வாங்குங்கள் உடுத்துங்கள். அப்போதைய trend என்று எதையாவது பொறுத்தமில்லாமல் வாங்கி பின்னர் அந்த பேஷன் முடிந்தவுடன் உடுத்தாமல் வீட்டுக்குள் பூட்டி வைப்பதில் என்ன பயன்?.

அடுத்த செய்தி வெர்ச்சுவல் உடற்பயிற்சி குறித்தது. தற்போது குளிர் ஆரம்பித்து விட்டதால் மக்கள் பெரும்பாலும் வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்று நான் புலம்பிய போது என்னுடன் வேலை பார்க்கும் சிலர்,  வீட்டில் இருந்தே எப்படியாவது வொர்கவுட்  செய்ய என்று "WII-fit" வாங்கியதாக சொன்னார்கள். என்னது அது என்று கேட்டபோது. WII வீடியோ கேமிலேயே ஜாக்கிங், ஸ்கியிங், ஆப்ச்டகுள் கோர்ஸ், யோகா போன்றவை வந்து இருப்பதாகவும். வீடியோ கேமுக்கு வீடியோ கேம் உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சி ஆயிற்று என்றும் சொன்னார்கள். அட, இது நல்ல ஐடியாவாக இருக்கே என்று நினைத்தேன். ஆனாலும் இது எவ்வளவு தூரம் உண்மையில் உடற்பயிற்சி செய்வதற்கு ஒப்பாகும், இயற்க்கை சூழல், காற்று என்று எதுவும் இல்லாமல் ஒரு வெர்ச்சுவல் உலகில் வாழ முடியும் என்று யோசிக்க தோன்றியது. யாராவது, WII-fit எப்படி இருக்கிறது என்று சொன்னால் black friday விற்பனையில் வாங்குவதை குறித்து யோசிக்கலாம் என்று இருக்கிறேன். தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி.

1 comment:

Packirisamy N said...

சிறிது காலம் பொறுத்திருங்கள்.
மாத்திரை சாப்பிட்டாலே போதும்!

http://time.com/4061511/exercise-pills/