எல்லா இடங்களிலும் இவர்கள் நிறைந்து இருப்பார்கள். இதில் பலரும் உங்களுடன் நெருங்கி பழகி உங்களை பற்றி நன்கு தெரிந்து இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில், நண்பர்கள் வட்டத்தில், வேலையில் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பார்கள். சரியான சுயநல வாதிகள் இவர்கள். இவர்களை நம்பி இருப்போம், எல்லாவற்றையும் சொல்லி இருப்போம், இவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்று மனதார நம்பி இருப்போம். ஆனால் இவர்கள், உங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து இருப்பார்கள். உங்களிடம் நல்லவர் போல நடித்து உங்களை பற்றி பின்னால் பேசி, கிண்டல் அடித்து இருப்பார்கள் அல்லது நீங்கள் பூரணமாக நம்பி இருந்தவர் உங்களை நற்றாற்றில் விட்டு விட்டு தன் சுயநலத்திற்க்காக சென்று இருப்பார். அதில் ஒரு சந்தோசம் அவர்களுக்கு.
நிறைய நம்பிக்கை துரோகிகளை நான் கண்டு இருக்கின்றேன் என்றாலும், சமீபத்தில் ஒருவரை காண நேர்ந்தது. என்னுடைய mentor என்று நான் நினைத்த ஒருவர் நன்றாக என்னை முதுகில் குத்தி விட்டு சென்றதால் வேலை மாற்றம் நேரப்போகிறது. இனிமேல் பதிவு எழுத நேரம் கிடைக்காது என்பது திண்ணம். அதனால் சிறிது காலம் பதிவிற்கு ஓய்வு கொடுத்து விட்டு, வேலையை கவனிக்க போகிறேன்.
இந்த வருடம் என்னுடைய பதிவுலக வாழ்கையை பொருத்தவரை மிக நல்ல ஒன்று, பதிவு ஆரம்பித்ததில் இருந்து நான்கு வருடங்களில் நான் எழுதிய மொத்த பதிவுகளை விடவும் இந்த வருடம் நிறைய எழுதி இருக்கிறேன். நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.
நன்றி.