Thursday, December 10, 2015

நம்பிக்கை துரோகிகள்!


எல்லா இடங்களிலும் இவர்கள் நிறைந்து இருப்பார்கள். இதில் பலரும் உங்களுடன் நெருங்கி பழகி உங்களை பற்றி நன்கு தெரிந்து இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில், நண்பர்கள் வட்டத்தில், வேலையில் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பார்கள். சரியான சுயநல வாதிகள் இவர்கள். இவர்களை நம்பி இருப்போம், எல்லாவற்றையும் சொல்லி இருப்போம், இவர்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்று மனதார நம்பி இருப்போம். ஆனால் இவர்கள், உங்களை நம்ப வைத்து கழுத்தறுத்து இருப்பார்கள். உங்களிடம் நல்லவர் போல நடித்து உங்களை பற்றி பின்னால் பேசி, கிண்டல் அடித்து இருப்பார்கள் அல்லது நீங்கள் பூரணமாக நம்பி இருந்தவர் உங்களை நற்றாற்றில் விட்டு விட்டு தன் சுயநலத்திற்க்காக சென்று இருப்பார். அதில் ஒரு சந்தோசம் அவர்களுக்கு.

நிறைய நம்பிக்கை துரோகிகளை நான் கண்டு இருக்கின்றேன் என்றாலும், சமீபத்தில் ஒருவரை காண நேர்ந்தது. என்னுடைய mentor என்று நான் நினைத்த ஒருவர் நன்றாக என்னை முதுகில் குத்தி விட்டு சென்றதால் வேலை மாற்றம் நேரப்போகிறது. இனிமேல் பதிவு எழுத நேரம் கிடைக்காது என்பது திண்ணம். அதனால் சிறிது காலம் பதிவிற்கு ஓய்வு கொடுத்து விட்டு, வேலையை கவனிக்க போகிறேன்.

இந்த வருடம் என்னுடைய பதிவுலக வாழ்கையை பொருத்தவரை மிக நல்ல ஒன்று, பதிவு ஆரம்பித்ததில் இருந்து நான்கு வருடங்களில் நான் எழுதிய மொத்த பதிவுகளை விடவும் இந்த வருடம் நிறைய எழுதி இருக்கிறேன். நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருந்து இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.

நன்றி.


6 comments:

Avargal Unmaigal said...

துரோகிகள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் உலகம்தான் நாம்தான் மிக அலர்ட்டாக இருக்கவேண்டும். நடந்தது நடந்தாக இருக்கட்டும் வரும் ஆண்டில் எல்லாம் மிக நல்லபடியாக அமைய எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் வாழ்க வளமுடன்

Deiva said...

I learnt more lessons in this way when people stab on our back at work or home. In this world, we can't trust even our shadow :( This is a sad truth.

அன்பே சிவம் said...

என் வாழ்விலும் இதே போன்ற சோதனைகள்
கடந்த காலங்களில் நடந்தது.
கசப்பான அந்த அனுபவத்தின் மூலம்
பின் பல்வேறு நல்ல அனுபவங்களும் கிடைத்தன.
வேதனை நீங்கிடும் காத்திருங்கள்.

ஆரூர் பாஸ்கர் said...

பயனுள்ளதாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டோம். Happy New Year 2016!!

? said...

இந்த மெண்டோர் வகையறாக்கள்தான் கவிழ்த்துவிடுவதில் முக்கிய இடம் வகிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதற்கு அவர்களை விட நம் இந்திய மனோநிலைதான் ஒரு காரணம் என நினைக்கிறேன். நமக்கு மேல இந்த குரு அல்லது பாஸ் லெவலில் இருப்போரை ரொம்பவும் நம்பி எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம் கூடவே லாயலாகவும் மாறிப்போகிறோம். இவர்களிடம் பிற நாட்டுக்காரர் போல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.நீங்க உங்க பதிவில் குறிப்பிட்ட 48 laws of power மற்றும் ஆர்ட் ஆஃப் வார் போன்ற புத்ததகங்கள் இவர்களை டீல் பண்ண மிகவும் உதவும்.

வேகநரி said...

துன்பத்தில் இருந்து மீண்டு வருவீர்கள்.
வாழ்த்துக்கள்.