Sunday, April 4, 2010

வால்மார்ட்டும், ரங்கநாதன் தெருவில் இருக்கும் கடைகளும்

இது ஒரு சின்ன ஒப்பீடு.

வால்மார்ட்: Electronics, பாத்திரங்கள், துணிமணிகள், மளிகை, சாப்பாடு, பொம்மை, வீட்டுஉபயோக பொருட்கள்.... உலகத்தில் உள்ள அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் வால்மார்ட்.
ரங்கநாதன் தெரு கடைகள்: பாத்திரங்கள், துணிமணிகள், மளிகை, சாப்பாடு, பொம்மை, வீட்டுஉபயோக பொருட்கள், நகைகள் (ஜொலிக்குதே, ஜொலி ஜொலிக்குதே). அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் ரங்கநாதன் தெரு.

வால்மார்ட்: இங்கு வாங்கும் துணி மணிகள் நன்றாக உழைப்பதில்லை என்றாலும் விலை குறைவாக இருப்பதால் அங்கு தான் நாம் வாங்குவோம்.
ரங்கநாதன் தெரு கடைகள்: இங்கு வாங்கும் துணி மணிகள் என்னதான் மட்டம் என்றாலும் அங்கு தான் நாம் வாங்குவோம்.

வால்மார்ட்: டீன் ஏஜ் பசங்கள் படிப்பு செலவுக்காக இங்கே வந்து வேலை பார்க்கின்றனர்.
ரங்கநாதன் தெரு கடைகள்: நெறைய டீன் ஏஜ் பசங்கள், குழந்தைகள் இங்கு வயிற்றுக்காக வேலை பார்க்கின்றனர்.

வால்மார்ட்: இங்கு வேலை பார்பவர்களுக்கு சம்பளம் என்று அவர்கள் கொடுப்பது மிக சொற்பம் (மணிக்கு $8), அவர்களுக்கு கிடைக்கும் benifits ம் மிக குறைவு. வேலை அதிகம்.
ரங்கநாதன் தெரு கடைகள்: இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு சோறு போட்டு தங்க இடம் கொடுத்து எவ்வளவு சம்பளமாக கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. மிக மிக சொற்பம் என்பது மட்டும் உண்மை. வேலை அதிகம்.

வால்மார்ட்: இங்கு வேலை பார்ப்பவர்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று கூறப்படுவதுண்டு. அப்படி மீறப்படும் போதெல்லாம் பிரச்சனையை தவிர்க்க அந்த ஸ்டோர் ஐ மூட முயற்சிப்பார்கள்.
ரங்கநாதன் தெரு கடைகள்: மனித உரிமைகளா அப்படின்னா?


இந்த பதிவு நேற்று நான் பார்த்த அங்காடித் தெரு படத்தின் பாதிப்பு.

23 comments:

padma said...

சரி தான் நாட்டுக்கு நாடு வாசப்படி

சேட்டைக்காரன் said...

ரங்கநாதன் தெருவின் கருப்பான பக்கங்களின் சில துளிகளை மட்டுமே அங்காடித்தெருவில் காட்டியிருக்கிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து வரும் சமூகவிரோதிகள் ரங்கநாதன் தெருவில் மிக அதிகம். வால்மார்ட் பற்றி எனக்குத் தெரியாது.

ராம்ஜி_யாஹூ said...

how about carrefour

Chitra said...

அங்காடி தெரு படத்துக்கும் வால் மார்ட்க்கும் முடிச்சு போட எப்படி தோணியது? ரூம் போட்டு யோசிச்சீங்களோ? ஹா,ஹா,ஹா,ஹா.....

அஹமது இர்ஷாத் said...

Nice

அநன்யா மஹாதேவன் said...

ஓ, நீங்க அங்காடித்தெரு பார்த்தாச்சா? இங்கே இன்னும் பார்க்கலை. காத்துண்டு இருக்கேன். சீக்கிரமே பார்க்கணும். நிறைய கேள்விப்படறேன். ஆனாலும் வால்மார்ட்டை கம்பேர் பண்ணினது ரொம்ப வித்தியாசமான முயற்சி தான்!

அநன்யா மஹாதேவன் said...

உங்களை ச்சீயர் அப் பண்ணத்தான் இந்த என்னோட அடுத்த கமெண்டு.

இன்னொரு ஒற்றுமையும் இருக்கே, வால்மார்ட்டிலும் சரி, ரங்கு தெருவிலும் சரி, நடந்து நடந்து கால் வலிக்கும்!

ரங்கு தெரு பத்தி எனக்கு வந்த ஒரு ஃபார்வார்டட் ஈமெயிலை போஸ்ட்டா போட்டு இருக்கேன் இங்கே இதோ:http://ananyathinks.blogspot.com/2010/03/blog-post.html

ச.சங்கர் said...

customer treatment பற்றி ஒரு ஒப்பீடு செய்யுங்களேன்.ஏனென்றால் வால்மார்ட் பற்றி எனக்கு ஒன்றும் தெரியது :(

Geetha Achal said...

மிகவும் உண்மையான உண்மை...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)) அட எப்படிங்க இப்படி ..

மங்குனி அமைச்சர் said...

கரட் மேடம் (அங்க வால்மார்ட்டும் இப்படிதானா ?)

அமைதி அப்பா said...

//ரங்கநாதன் தெரு கடைகள்: மனித உரிமைகளா அப்படின்னா?//

வசந்தபாலனுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

எந்த ஊரானாலும், எந்தத் தெருவானாலும், வாடிக்கையாளர்களையும் வகை பிரித்து (வெளிநாட்டினர், வசதியானவர்), அதற்கேற்றார்ப் போல சேவையும் வகைப்படும்.

முகுந்த் அம்மா said...

@பத்மா
கரெக்ட், எல்லா நாட்டுலயும் இப்படி சில உண்டு

@சேட்டைக்காரன்
//ரங்கநாதன் தெருவின் கருப்பான பக்கங்களின் சில துளிகளை மட்டுமே அங்காடித்தெருவில் காட்டியிருக்கிறார்கள்//
அப்படித்தான் தோன்றுகிறது எனக்கும். இன்னும் சொல்லப்படாத கதைகள் ஆயிரம் இருக்கும்.

//கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து வரும் சமூகவிரோதிகள் ரங்கநாதன் தெருவில் மிக அதிகம்.//
உண்மை, ஒருமுறை என்கணவர் பர்ஸ் பறிகொடுத்தது உண்டு.

நன்றிங்க

முகுந்த் அம்மா said...

@ராம்ஜி- யாஹூ
//how about carrefour //

நான் carrefour சென்றதில்லை, ஆனால் அதுவும் ஒரு chain stores என்று அறிகிறேன். அனைத்து chain stores ம் இப்படி தான் என்று கூற இயலாது என்பதால், அதில் அனுபவமுள்ளவர்களிடம் இதனை பற்றி மேலும் கேட்கலாம்.
நன்றிங்க

@சித்ரா
//அங்காடி தெரு படத்துக்கும் வால் மார்ட்க்கும் முடிச்சு போட எப்படி தோணியது? ரூம் போட்டு யோசிச்சீங்களோ?//

ஆமாம்பா ரெண்டு நாளா ஹில்டன் ஹோட்டல் ல ரூம் போட்டு உக்கார்ந்து உக்கார்ந்து யோசிச்சது :))
நன்றிங்க சித்ரா.

முகுந்த் அம்மா said...

@அஹமது இர்ஷாத்

நன்றிங்க

@அனன்யா
//நீங்க அங்காடித்தெரு பார்த்தாச்சா?//
ஆமாம், என் பையன் அருள் கொடுத்ததாலே ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போ தான் ஒரு தமிழ் படம் பார்க்க முடிந்தது. எனக்கு பிடிச்சிருந்ததுப்பா.

//வால்மார்ட்டை கம்பேர் பண்ணினது ரொம்ப வித்தியாசமான முயற்சி தான்//

நன்றி அனன்யா, உங்களோட cheerup இக்கு danku .

//வால்மார்ட்டிலும் சரி, ரங்கு தெருவிலும் சரி, நடந்து நடந்து கால் வலிக்கும்! //
நீங்க சொன்ன ஒற்றுமை கூட கரெக்டு தான். உங்களோட ஃபார்வார்டட் ஈமெயிலை போஸ்ட் சூப்பர்ப்பா

முகுந்த் அம்மா said...

@ச.சங்கர்

நன்றிங்க

//customer treatment பற்றி ஒரு ஒப்பீடு செய்யுங்களேன்.ஏனென்றால் வால்மார்ட் பற்றி எனக்கு ஒன்றும் தெரியது//

வால்மார்ட் ஐ பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் (poor neighborhood) உள்ள கடைகளில் customer treatment மோசம் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். மத்தபடி நன்றாகவே உள்ளது. நீங்கள் மூன்று மாதத்திற்குள் ஒரு வாங்கிய பொருளை திருப்பி கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்கள். பணத்தையும் refund செய்து விடுவார்கள்.

@Geetha Achal
நன்றிங்க

@முத்துலெட்சுமி

நன்றிங்க

ராமலக்ஷ்மி said...

நல்ல ஒப்பீடு முகுந்த் அம்மா.

முகுந்த் அம்மா said...

@மங்குனி அமைச்சர்

//கரட் மேடம் (அங்க வால்மார்ட்டும் இப்படிதானா ?)//

காசு கம்மியா கொடுத்து ஆப்பு வைக்கிறது கிட்ட தட்ட எல்லா நாடுகள்லயும் நடக்குது.

நன்றிங்க

@அமைதி அப்பா
//வசந்தபாலனுக்கு நன்றி//

சென்ற முறை இந்தியா வந்திருந்த போது சரவணா ஸ்டோர்ஸ் சென்று இருந்தேன். அங்கு இருந்த ஒரு பணிப்பெண்னிடம் எவ்வளவுமா உனக்கு சம்பளம் அப்படின்னு கேட்டுட்டேன். அந்த பொண்ணு பயந்து நடுங்கி, அக்கா அதெல்லாம் நான் சொல்ல கூடாது, எங்க மேனேஜர் திட்டுவாரு. உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கிறதை பார்த்தாலே அவரு திட்டுவாரு. அப்படின்னு சொன்னாள். அப்போதே எனக்கு எதோ செய்தது. ஆனால் அங்காடித்தெரு பார்த்த பிறகு செவிட்டில் அறைந்தது போல இருந்தது. இனி அங்கு செல்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

நன்றி வசந்த பாலன்
நன்றி அமைதி அப்பா

முகுந்த் அம்மா said...

//எந்த ஊரானாலும், எந்தத் தெருவானாலும், வாடிக்கையாளர்களையும் வகை பிரித்து (வெளிநாட்டினர், வசதியானவர்), அதற்கேற்றார்ப் போல சேவையும் வகைப்படும்//

உண்மைங்க, இங்க வால்மார்ட் போலவே Target அப்படின்னு ஒரு கடை இருக்கு. அது கொஞ்சம் high end மக்களுக்காக. நெறைய வெள்ளைகாரவங்க அங்க தான் வாங்குவாங்க.

நன்றிங்க

முகுந்த் அம்மா said...

//நல்ல ஒப்பீடு முகுந்த் அம்மா//

நன்றிங்க ராமலக்ஷ்மி

K.R.அதியமான் said...

பதிவிற்க்கு நன்றி. வால்மார்ட் பற்றி ஒப்பிட்டு எழுத நினைத்திருந்தேன். ஆனால் தகவல்கள் அதிகம் தெரியவில்லை. (இன்னும் அமெரிக்க சென்றதில்லை !).

வால்மார்ட்டில் சம்பளம் குறைவு, benefits குறைவு என்பது உண்மைதான். ஆனால் இங்கு போல் அங்கு வாங்கும் சம்பளம் மிக மிக குறைவாக இருக்காது. Purchasing power parity யில் வால்மார்ட் ஊழியர்கள் பரவாயில்லைதான்.

வால்மார்டின் நிகர லாபம் மிக குறைவுதான். 3 % வரைதான். போட்டியாளர்கள் அனைவரையும் விட மிக குறைந்த லாபம். Razor thin margins thru highly efficient supply chain management, logistics, etc. அதனால் அமெரிக்கர்கள் உணவு மற்றும் பல இதர பொருட்களை வால்மார்ட்டில் குறைந்த விலையில் வாங்கி, பணத்தை மிச்சப்படுத முடிகிறது. முக்கியமாக அமெரிக்க ஏழைகள் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கும் பெரிய நன்மை.

லாபம் குறைவாக இருப்பதால், சம்பளமும் அதற்க்கு ஏற்ப குறைவாகதான் இருக்கும்.

அங்காடி தெரு படம் பிடித்திருக்கிறது. ஆனால் மிகை படுத்துதல் நிறைய உண்டு. நிஜத்தில் அத்தனை கொடுரமான ‘முதலாளி’ மற்றும் மேனேஜர்கள் அதிகம் இல்லை. அந்த கடையில் வேலை போனால், வேறு பல இடங்களில் வேலை கிடைக்கும். படத்தில் காட்டப்பட்டது போல இல்லை. பல இடங்களில் labour shortages. உணவு உண்ணும் இடம் மற்றும் தங்கும் இட நெருக்கடிகள் மிகை. நிஜத்தில் அத்தனை மோசமா என்ன ?

வறுமை இந்தியாவில் அதிகம் தான். ஜனத்தொகையும் தான்.

padma said...

how do i join in makalir sakthi?