வேலை விசயமாக குடிப்பழக்கம் பற்றிய ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதில் இந்தியாவில் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் குடிப்பழக்கம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தது. மேலும் அறிந்து கொள்ள கூகுளை தோண்டியபோது கிடைத்த தகவல்கள் மன வருத்தம் தந்தன.
India alcohol policy alliance, என்றழக்கப்படும் இயக்கத்தில் இருந்து வந்த கட்டுரை தந்த தகவல்கள் இவை.
பதினைந்து வருட இடைவெளியில் இளைஞர்களிடம் குடிப்பழக்கம் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக அது தெரிவிக்கிறது. அருகில் இருக்கும் அட்டவணையில் அது தெளிவாக கட்டப்படுகிறது. தொன்னூறுகளில் இரண்டு சதவீதமாக இளைஞர்களிடம் இருந்த குடிப்பழக்கம் தற்போது பதினான்கு சதவீதமாக மாறி இருக்கிறது.
அதே போல, எந்த வயதில் இளைஞர்கள் குடிப்பழக்கத்தை ஆரம்பிக்கிறார்கள், என்று பார்த்தபோது எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.
தொன்னூறுகளில் பத்தொன்பது வயதாக ஆரம்பித்த குடிப்பழக்கம், தற்போது பதிமூன்று வயதாக குறைந்து இருக்கிறது. இளமை காலம் ஆரம்பிக்கும் போதே குடிப்பழக்கமும் இளைஞர்கள் /குழந்தைகளிடம் வர ஆரம்பிக்கிறது என்று தெரிவிக்கிறது.
இப்படி சிறுவயதில் குடிப்பழக்கத்தை ஆரம்பிப்பவர்கள் வளர வளர நிரந்தர குடிகாரர்கள் ஆக மாறிவிடுகிறார்கள். இருபதுகளில் இருபத்தி ஏழு வயதில் நிரந்தர குடிகாரர்கள் ஆனவர்கள், தற்போது பத்தொன்பது வயதிலேயே அன்றாட குடிகாரர்கள் ஆவதாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால், சீக்கிரமே இந்தியா ஒரு குடிகார, பொறுப்பற்ற நாடாக மாறும் என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது.
தமிழக அரசு எல்லா ஊர்களிலும், சந்து பொந்துகளிலும் கூட டாஸ்மாக் கடை திறந்து இது போன்ற நிலையை ஊக்குவிப்பது போல இருக்கிறது. என்ன ஆகுமோ!
13 comments:
நிச்சயம், குடிப்பவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமே குடிப்பவர்களால் கேள்விகுறியாகும் அபாயம் உள்ளது.
//சீக்கிரமே இந்தியா ஒரு குடிகார, பொறுப்பற்ற நாடாக மாறும் என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது.
//
என்றோ இந்நிலையை எட்டியதை, இருட்டடிப்புச் செய்வதை.... இஃகிஃகி... கண்டிக்கவெல்லாம் இல்லை.... சுட்டிக் காட்டுறேன்.... இஃகிஃகி!!!
இது தவறான பழக்கம் என்ற எண்ணமே இல்லை. ஃபேஷன், ஜாலி என்றாகி விட்டது.
'குடிக்காமலே' பொறுப்பற்ற நாடாகத்தான் இந்தியா இருக்கிறது. குடிக்கதாவர்கள் பலரும் பொறுப்பு அற்றவர்களாக வாழ்கிறார்கள். மேலை நாடுகளில் குடிக்காதவர்கள் மிகவும் குறைவு.
//இது தவறான பழக்கம் என்ற எண்ணமே இல்லை//
இஃகி... நாட்டுல, தவறான பழக்கம் என்ற ஒன்றே இல்லைங்றேன்... இஃகிஃகி!!!
பொறுப்பான பதிவு. நினைத்தால் மனது வலிக்கத்தான் செய்கிறது.
இந்தியா முழுக்க எப்படீன்னு தெரியாதுங்க, கண்டிப்பா தமிழ்நாடு மப்பும் மந்தாரமுமாத் தானிருக்கு! சிரிக்கவா அழவா தெரியலீங்க! விதி!!
இந்த பதிவை வாசிக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருக்கிறது மனசு . எப்பொழுதுதான் மாறுமோ இந்த நிலைமை . பல தகவல்களுடன் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் சிறந்தப் பதிவு பகிர்வுக்கு நன்றி
இது மிகவும் கவலை அளிக்கும் போக்குதான். இதை ஒட்டியே நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.
இதே நிலை தொடர்ந்தால், சீக்கிரமே இந்தியா ஒரு குடிகார, பொறுப்பற்ற நாடாக மாறும் என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது.
தமிழக அரசு எல்லா ஊர்களிலும், சந்து பொந்துகளிலும் கூட டாஸ்மாக் கடை திறந்து இது போன்ற நிலையை ஊக்குவிப்பது போல இருக்கிறது. என்ன ஆகுமோ!
...... ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அரசே வியாபாரத்தில் குறியாக இருக்கும் போது, இது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
இதற்க்கு அரசாங்கமும் தனியார் அலுவலகங்களும் ஒரு காரணம். இப்பொழுது ஒரு கிளையன்ட் மீட்டிங் என்றல் இரண்டு நாள் மீட்டிங்கிர்க்குப் பிறகு கண்டிப்பாக ஒரு சிறிய டின்னர் இருக்கும். அதில் கண்டிப்பா ட்ரிங்க்ஸ் இருக்கும். கிளைண்டுக்கு கம்பெனி குடுக்கனும்னு ஆரம்பிக்கிறப் பழக்கம் பின்னாடி :(
ம்.. எத்தனை எத்தனை காரணங்கள்.. க்ளையண்ட் மீட்டிங் டாஸ்மாக்.. இன்னும் இளைஞர்கள் மதிக்கும் ரோல்மாட்லகளாக நினைக்கும் பெரியமனிதர்களின் போக்கும் கூடத்தான்.. நா ன் அந்தகாலத்துல அப்படி தண்ணி அடிச்சிட்டு நண்பர்களோடு
என்று எழுத்தாளர்கள் பெருமையாக
எழுதும் போது ஆகா.. என்ன ஒரு பெருமைங்கறீங்க..
இந்தியால தண்ணிய கரெக்டா மிக்ஸ் செய்து குடுக்கிற வேலையை குடிக்கறதுக்கு பார் வர வயசுக்கு முன்னாலயே செய்யலாம்ன்னா
ஏன்
குடிக்கக்கூடாதுன்னு கேக்கறாங்க..ம் :)
ம்ம்... பதிவுலகில் பொறுப்பாக எழுதும் சிலரேகூட இதைத் தவறு என்று எண்ணாமல், குடித்ததைப் பற்றி எழுதி பகிர்ந்துகொள்கிறார்கள்!!
Post a Comment