எங்க ஊரில ஒரு ஒரு டாலர் தியேட்டர் இருக்குதுங்க. அந்த தியேட்டர் நம்ம ஊரு டூரிங் தியேட்டர் மாதிரிங்க. அதாவது எப்போ புது படம் வந்தாலும் அந்த தியேட்டர் ல ரிலீஸ் ஆகிறதுக்கு மூணு மாசமாவது ஆகும். அதே போல எப்போ அந்த தியேட்டர் போனாலும் கொசு, பூச்சி கடி கிடைக்கும். அந்த தியேட்டர்ல படம் பார்க்க டிக்கெட் விலை ரொம்ப கம்மிங்க. எப்பவுமே எந்த படம் பார்கனும்னாலும் நாலு டாலர் தான் ஆகும். அதுவும் செவ்வாய் கிழமைன்னா எந்த படம்னாலும் ஒரு டாலர் தான்.
அப்படி இருந்த அந்த தியேட்டர் க்கு இந்த வாரம் வந்தது பாருங்க ஒரு மவுசு. ஒரு படம் பார்க்க இருவது டாலர் ஆம். அதுவும் preview ஷோன்னா 35 டாலராம். என்ன படத்துக்கு இப்படி மவுசுன்னு நீங்க யூகிச்சு இருப்பீங்களே. நம்ம எந்திரன் படத்துக்கு தாங்க.
ரஜினி ய எவ்வளவு காசு கொடுத்தும் பார்க்க மக்கள் ரெடி ஆ இருக்காங்கப்பா. யாரை பார்த்தாலும் கேட்குற முதல் கேள்வி "எந்திரன் பார்த்தாச்சா" அப்படின்னு தான். "இல்ல நாங்க இன்னும் பாக்கல அப்படின்னு சொன்னா" ஒரு மாதிரி பார்க்குறாங்க. அப்படி ஒரு எந்திரன் மாயை உருவாக்கப்பட்டு இருக்கு.
அதை விட கொடுமை என்னன்னா, எல்லா டிக்கெட் ம் படம் போடப்படுற எல்லா நாளும் booked. இங்க இந்திய அல்லது மற்ற மொழிப்படம் எல்லாம் ஒரு வாரம் தான் போடுவாங்க
ஒரு படம் வெளியிட அதிகப்படியா ஒரு 200-300 டாலர் அந்த தியேட்டர் வாடகை கொடுக்க வேண்டி வரும்ங்க. ஒரு நாள் மூணு ஷோ ஓட்டுறாங்க. எல்லா நாளும் டிக்கெட் booked ன்னா , 150 சீட்டிங் கபாசிட்டி இருக்கிற ஒரு தியேட்டர் ல எவ்வளவு லாபம் வரும்ன்னு நீங்களே கணக்கு போட்டுகோங்க.
ஒரு டிக்கெட் இருவது டாலர் விக்கிறாங்கன்னா எவ்வளவு டாலர் கொடுத்து அந்த படத்தை வாங்கி இருப்பாங்க. இது எங்க ஊரில மட்டும் தான். அமெரிக்கா புல்லா யோசித்து பாருங்க. இதில இன்னொரு விஷயம் என்னன்னா எவ்வளவு பேமஸ் ஆன ஆங்கில படமா இருந்தாலும் சரி, டிக்கெட் விலை பத்து முதல் பதினஞ்சு டாலர் தாங்க.
என்ன தான் இருந்தாலும் தலைவர் மதிப்பே தனி தான். ஆனா என்ன, பந்திக்கு முந்துன்னு சொல்லுவாங்க, இனிமே தலைவர் படத்துக்கு புக் பண்ண முந்துன்னு மாத்தணும் போல.

5 comments:
இன்னும் எந்திரன் பார்க்கலியா நீங்க? என்ன கொடுமை இது? :-)
பந்திக்கு முந்துன்னு சொல்லுவாங்க, இனிமே தலைவர் படத்துக்கு புக் பண்ண முந்துன்னு மாத்தணும் போல.///
புது மொழி சூப்பர்.
:)) நம்ப முடியுதா, காலையில எட்டு மணிக்கு சினிமா பார்க்கிறது. இந்தக் கொடுமையெல்லாம் நடக்கிது. இங்கே ஜியார்ஜியாவில நாலு நாளக்கி 70தடவைக்கு மேலே படம் காட்டுறாங்களாம்.
பொழுது போக்குக்கு படம் பார்க்கிறது போயி இன்னிக்கு ‘புனித யாத்திரை’ போற ரேஞ்சிற்கு ஆயிப்போச்சு. இதில பேசிக்க ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிஷம் நீ எந்திரன் பார்த்தியா ---டாய்ய்ய்ன்னு வருது.
ஹ்ம்ம்
என்ன இப்பிடி கூத்து நடக்குது
எனக்கு ரஜினி அவ்ளோவா பிடிக்காது .நா தப்பிச்சேன்
யூ டூ சேட்டைக்கார அண்ணாச்சி, வெரி பேட். நன்றி
நன்றி தமிழ் உதயம்.
உன்மை தெகா, உங்க உருல சூடம் ஏத்தி எல்லாம் சாமி மாதிரி எந்திரன் போஸ்டருக்கு சுத்துராங்க போல, இப்பொ தான் செய்தி,படங்கள் பார்த்தேன். என்ன கொடுமை சாமி இது.
உன்மை தான் பத்மா, இந்தியாவில மட்டும் இல்ல இங்கயும் அங்க நடக்கிற எல்லா கூத்தும் நடக்குது. நீங்க நல்ல வேள தப்பிச்சிடீங்க.
Post a Comment