Saturday, April 24, 2010

வலி

"தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்", என்பார்கள். இது பழைய பழமொழி. "எந்த வலி வந்தாலும் அமெரிக்காவில இருக்குறவங்களுக்கு சனி, ஞாயிறு வரவேண்டாம்". இது தான் நான் கண்டுபிடிச்ச புது மொழி.

ரெண்டு நாளா பல்லு வலியில நான் பட்ட அவஸ்தையும் அதற்காக ஒரு on the counter மருந்து ஒன்று வாங்கி சாப்பிட்டு அது hives எனப்படும் அலேர்ஜி ஆனதும், அதற்காக எமெர்ஜென்சி செல்ல நான் பட்ட அவஸ்தையும் என்னோட எதிரிக்கு கூட வரவேண்டாம்.

நான் என்ன சொல்லுறேன்னு அமெரிக்காவில இருக்குறவங்களுக்கு புரிந்து இருக்கும். இங்கே weekend எந்த கிளினிக்கும் திறந்து இருக்காது, அந்த கிளினிக் ல இருக்கிற டாக்டரும் வேலை பார்க்க மாட்டாங்க. அதனால சனி, ஞாயிறு உடம்புக்கு முடியாம போனா பெரிய ஆஸ்பத்திரியில இருக்கிற எமெர்ஜென்சி ரூம் எனப்படும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தான் போகணும்.

Weekend இந்த ஒரே வழி தான் இருக்கிறதால சனி ஞாயிறு உடம்புக்கு முடியாம போகிற எல்லாரும் அங்க உக்கார்ந்து இருப்பாங்க. அதனால எமெர்ஜென்சி ரூம் போனா உங்களை எப்போ மருத்துவம் பார்க்க கூப்பிடுவாங்கன்னு தெரியாது. முதல்ல முடியாம இருக்கிற குழந்தைகள், அக்சிடென்ட் கேஸ், வயசானவங்க, இவங்களுக்கு தான் முதல்ல மருத்துவம் பார்ப்பாங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் குறைஞ்சது இரண்டு முதல் மூணு மணி நேரம் காத்து இருக்கணும்.

தாங்க முடியாத பல்லு வலியோட அலேர்ஜி ஆகி நேற்று இரவு முழுதும் எமெர்ஜென்சி ரூம் ல , ஒன்பது மாத கைக்குழந்தை முகுந்த் ஓட நானும் என்னோட வீட்டுக்காரரும் பட்ட பாடு சொல்லி மாளாது. நான் பிரசவத்தின் போது கூட இந்த அவஸ்தை படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலநேரங்களில் நான் இந்தியாவை மிஸ் செய்தாலும் நேற்று போல நான்
இந்தியாவை என்றும் மிஸ் செய்யவில்லை என்று தான் சொல்லவேண்டும்.


பி.கு: வலி சரியாகும்வரை நோ இன்டர்நெட், நோ பதிவு. நன்றி

16 comments:

அநன்யா மஹாதேவன் said...

OMG!
கொஞ்சம் இவங்க ரூல்ஸ் எல்லாம் தளர்த்தக்கூடாதா பா? வீக்கெண்டு க்ளினிக் இல்லைங்கறது ரொம்ப மோசம். இங்கே நான் அதிகம் போனதில்லை. வீக்கெண்டு இங்கேயும் அதே பாலிஸி தான் போல இருக்கு. ஆனா சனி வேலை செய்வாங்க. ஒரு நாள் தான் லீவு. வெள்ளி. பெரிய ஆஸ்பத்திரி எல்லாம் திறந்து தான் இருக்கும்.
இருந்தாலும் இது ரொம்பவே அநியாயம்!

Dr.P.Kandaswamy said...

இல்கேயும் அப்படித்தான் ஆயிட்டு வருது. என்ன, சனிக்கிழமை இந்த வம்பு இல்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று அதே நிலைமைதான்.

அமைதி அப்பா said...

வலியை படித்தவுடன் மனதில் வலிதான் வருகிறது.

//நான் என்ன சொல்லுறேன்னு அமெரிக்காவில இருக்குறவங்களுக்கு புரிந்து இருக்கும்//

அங்குள்ள நிலைமையை நன்றாக எடுத்துக் கூறுகிறீர்கள் , நன்றி.


ஆமாம், தெரியாமத்தான் கேட்கிறேன்,on the counter-ல் avil மாத்திரை கிடைக்காதா?

கடைசியா, பல் வலி போய் அலர்ஜி வந்ததா, அல்லது இரண்டுமா?

எம்.எம்.அப்துல்லா said...

பூரண குணமடைய வேண்டுகின்றேன்.


//அமெரிக்காவில இருக்குறவங்களுக்கு சனி, ஞாயிறு வரவேண்டாம்". இது தான் நான் கண்டுபிடிச்ச புது மொழி //

சனி,ஞாயிறு அன்று வரவேண்டாம் என்று இருக்க வேண்டும். நீங்கள் எழுதியபடி பார்த்தால் சனி,ஞாயிறு கிழமைகளே வர வேண்டாம் என்று அர்த்தம் வருகின்றது :)

தமிழ் உதயம் said...

பல் வலிய போல் கொடூரமான வலி ஏதும் கிடையாது.

சேட்டைக்காரன் said...

அங்கேயும் ஆஸ்பத்திரிகளில் இதே அவஸ்தை தானா? அட பாவமே!

பாச மலர் / Paasa Malar said...

வலியிலே கொடுமை பல்வலிதான்...அதும் வார இறுதில பல்வலின்னா...அய்யோ...அவஸ்தைதான்..இப்ப் சரியாய்ருச்ச்சா..

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////"தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்", என்பார்கள். இது பழைய பழமொழி. "எந்த வலி வந்தாலும் அமெரிக்காவில இருக்குறவங்களுக்கு சனி, ஞாயிறு வரவேண்டாம்". இது தான் நான் கண்டுபிடிச்ச புது மொழி.

ரெண்டு நாளா பல்லு வலியில நான் பட்ட அவஸ்தையும் அதற்காக ஒரு on the counter மருந்து ஒன்று வாங்கி சாப்பிட்டு அது hives எனப்படும் அலேர்ஜி ஆனதும், அதற்காக எமெர்ஜென்சி செல்ல நான் பட்ட அவஸ்தையும் என்னோட எதிரிக்கு கூட வரவேண்டாம்.

நான் என்ன சொல்லுறேன்னு அமெரிக்காவில இருக்குறவங்களுக்கு புரிந்து இருக்கும். இங்கே weekend எந்த கிளினிக்கும் திறந்து இருக்காது, அந்த கிளினிக் ல இருக்கிற டாக்டரும் வேலை பார்க்க மாட்டாங்க. அதனால சனி, ஞாயிறு உடம்புக்கு முடியாம போனா பெரிய ஆஸ்பத்திரியில இருக்கிற எமெர்ஜென்சி ரூம் எனப்படும் அவசர சிகிச்சை பிரிவுக்கு தான் போகணும்.

Weekend இந்த ஒரே வழி தான் இருக்கிறதால சனி ஞாயிறு உடம்புக்கு முடியாம போகிற எல்லாரும் அங்க உக்கார்ந்து இருப்பாங்க. அதனால எமெர்ஜென்சி ரூம் போனா உங்களை எப்போ மருத்துவம் பார்க்க கூப்பிடுவாங்கன்னு தெரியாது. முதல்ல முடியாம இருக்கிற குழந்தைகள், அக்சிடென்ட் கேஸ், வயசானவங்க, இவங்களுக்கு தான் முதல்ல மருத்துவம் பார்ப்பாங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் குறைஞ்சது இரண்டு முதல் மூணு மணி நேரம் காத்து இருக்கணும். /////


சிரிக்கவேண்டிய விசயம்தான் . இதுபோன்று வளர்ச்சி அடைந்த நாடுகளில் அடிப்படை தேவைகள் இன்னும் கேள்விக்குரியாகத்தான் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள் மீண்டும் வருவேன் .

இராகவன் நைஜிரியா said...

சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா?

ஹுஸைனம்மா said...

உண்மைதாங்க!! இங்கயும் வீக்கெண்ட்ல இதே நிலைதான்! வீ டேஸ்லயும் கிட்டத்தட்ட இப்படித்தான் அப்பாயிண்ட்மெண்ட் இல்லைனா!!

இந்தியாவிலும் ஓரளவு இதே நிலை வர ஆரம்பிச்சுடுச்சு!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ பாத்துக்குங்க ..

பல்வலி எப்படி இருக்கும் பல் டாக்டர் கிட்ட போனா எப்படி இருக்கும்ன்னு நானும் இந்த மாசம் தான் பாத்தேன்.. ;(

padma said...

முகுந்த் அம்மா internet பதிவெல்லாம் கிடக்கட்டும் கழுத !நீங்க உடம்ப பாத்துகோங்க .hives கொஞ்சம் irritatinga ஆ தான் இருக்கும். குழந்த வேற இருக்கான் . take care ma

ராமலக்ஷ்மி said...

சீக்கிரமே சரியாகட்டும். Take care.

மங்குனி அமைச்சர் said...

//இங்கே weekend எந்த கிளினிக்கும் திறந்து இருக்காது, அந்த கிளினிக் ல இருக்கிற டாக்டரும் வேலை பார்க்க மாட்டாங்க.///


ஆச்சரியாமா இருக்கு மேடம்

Chitra said...

Get well soon. How do you feel now?

அமைதி அப்பா said...

என்ன மேடம், இன்னும் உங்களுக்கு பல்வலி சரியாகலையா?
சரியானவுடன் விரிவான பகிர்வை எதிர்பார்க்கிறேன்.
தாங்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று விரும்புகிறேன்.