Saturday, October 15, 2011

எடிசன் என்ற ஒரு திருடரும், டெஸ்லா என்ற மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானியும்


முதலில் ஒரு டெஸ்டு
"Everyone steals in commerce and industry. I've stolen a lot, myself. But I know how to steal! They don't know how to steal!
இதை சொல்லியது யார்.

அடுத்து உங்களுக்கு சில காம்பெடிஷன் கேள்விகள்..

  1. ரேடியோவை கண்டுபிடித்தவர் யார்?
  2. X-Ray யை கண்டுபிடித்தவர் யார்?
  3. Vaccum tube கண்டுபிடித்தவர் யார்?
  4. நியான் பல்பை கண்டுபிடித்தவர் யார்?
  5. Speedometer, Auto ignition system  ஆகியவற்றை கண்டுபிடித்தவர் யார்?

சரி இப்போ ஒரு கதை..

                                                                                         
”ஒரு ஊரில டெஸ்லான்னு ஒருத்தர் இருந்தாராம். அவரு கொஞ்சம் ஆர்வக்கோளாராம்.. சரியா!!, எப்பயும் எதையாவது ஒன்னை நோண்டிட்டே இருப்பாராம். இதை களட்டி அதில மாட்டுறது, அதை களட்டி இதில மாட்டுறதுன்னு எப்பயுமே செய்துட்டு இருப்பாராம்....இவரோட ஆர்வக்கோளாற பாத்த அவர் ஃப்ரெண்டு..ஏன்டா இவனே..இங்க ஒக்காந்து எல்லாத்தயும் நோண்டிட்டு ஆர்வக்கோளாறா இருக்கியே.. ஒன்ன மாதிரி ஆட்களை எல்லாம் அமெரிக்கால தேடுராங்களாம்.. நீ ஏன் அங்க போயி இதை எல்லாம் செய்யகூடாதுன்னு சொன்னாராம்”

”சரி, நம்ம அருமை நண்பன் சொல்லுறானேன்னு, இந்த..ஆர்வக்கோளாறும் அமெரிக்காவில அப்போ பேமஸா இருந்த எடிசன் லாப்ல அப்ளை பண்ணி எடிசன் கிட்ட அஸிஸ்டெண்ட் ஆ சேர்ந்தாராம்..”

“அங்க போயி நைட்டும் பகலும் வேலை பார்த்து பல புது புது கண்டுபிடிப்பா கண்டுபிடிச்சாராம்...ஆனா என்ன பிரச்சனைனா...டெஸ்லா ஒரு கேனையாம்...அதாவது இவரு கண்டுபிடிக்கிறதை எடிசன் நைசா எடுத்து எல்லாத்தையும் பேடண்டு செஞ்சு நிறைய பணம் சம்பாதிச்சாராம்..ஆனா ரொம்ப கவனமா, நம்ம டெஸ்லாவோட பெயரை எதிலையுமே சேக்கலையாம்..சரியா..”

”இதை கொஞ்ச நாள் கழிச்சு தெரிஞ்சு கிட்ட டெஸ்லா...எடிசன் கம்பெனிக்கு போட்டி கம்பெனியா இருந்த Westing house ங்கிற கம்பெனிக்கு போனாராம் நம்ம டெஸ்லா..”

“இவரு..சரியான ஜீனியஸ்(ஆனா கேனை) ன்னு தெரிஞ்ச அந்த கம்பெனிக்காரனுகளும் இவரு கண்டுபிடிச்ச பல கண்டுபிடிப்புகளுக்கும் நான் நீன்னு போட்டி போட்டு பேட்டெண்டு வாங்கிட்டாங்களாம்..ரொம்ப ரொம்ப சொற்ப பணத்தை ராயல்டியா இவருக்கு கொடுத்துட்டு...கோடி கோடியா அவங்க சுருட்டி இருக்காங்க...இதெப்படி இருக்கு”

”கடைசியில காசும் இல்லாமா சொத்தும் இல்லாம வறுமையில வாடி இறந்துட்டார் நம்ம டெஸ்லா..” அவரு இறந்து போறதுக்கு முன்னால American Institute of Electrical Engineers ஒரு ஹாரனரி மெடல் கொடுக்க அவரை கூப்பிட்டாங்களாம்..அங்க போன அவரு சொன்னதை பாருங்க..
"You Propose, to honor me with a medal which I could pin upon my coat and strut for a vain hour before the members of your institute. You would decorate my body and continue to let it starve, for failure to supply recognition, my mind and its creative products, which have supplied the foundation upon which the major portion of your institute exists"
முதல்ல இருக்கும் quote ஐ சொன்னது தாமஸ் ஆல்வா எடிசன். அடுத்து நான் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் தான்...அது

டெஸ்லா- ஒர் மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானி.

12 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_15.html

தருமி said...

shocking!!!

வருண் said...

I agree that most of the times the "powerful" and "rich" gets the credit. Tesla seems like an immigrant and edison was a rich businessman rather than scientist in America. How will you do science without money? I mean Tesla's ideas may have died with him as he was not recognized/appreciated in Europe either. Only America and Edison gave him the opportunity and a "PRICE" as well of course.

There were some other problems US gave Tesla due to the consequence of having a Tower during the war-time. So, Marconi somehow won the battle.

I am not sure Tesla's financial problems are only due to Edison. Both were not awarded Nobel Prize because of their "animosity" to each other. It is was only a lose-lose situation! Edison did not win either.

Here are few references:

Tesla

Tesla biography

விஜயன் said...

i am terribly shocked. very good info. let me dig further

மகேந்திரன் said...

அதிர்ச்சி தரக்கூடிய செய்தி...

வருண் said...

For some reason the links dont show up when I click them!! I am giving them again.

Telsla biography

http://www.teslasociety.com/biography.htm

Tesla

http://en.wikipedia.org/wiki/Nikola_Tesla

Avargal Unmaigal said...

காப்பி அடிச்சு பரிட்சையில் பாஸானவன். அதனால உங்கள் கேள்விகளுக்கு என்னால் இப்போது பதில் தரமுடியவில்லை. யாரவது உங்கள் 5 கேள்விகளுக்கு பதில் அளித்தாள் அதை அப்படியே காபி பேஸ்ட் பண்ணாலாம் என்று நிணைக்கிறேன். ஆனால் இங்கு வருபவர்கள் எல்லோரும் என்ன மாதிரி ஆட்கள் போல யாரும் இன்னும் பதி போடல உங்கள் கேள்விகளுக்கு.. ஹீ..ஹீ

Sri said...

True... and it is equally shocking to know that Tesla's far superior AC model got pushed out favoring Edison's DC model for power transmission. Edison spread so many rumors/misinformation regarding AC to win the battle.

ஹுஸைனம்மா said...

ம்ம்... வரலாற்றில் இப்படி மறைக்கப்பட்டவர்கள் அநேகர்; அநேக உண்மைகளும் திரிக்கப்பட்டிருக்கின்றன.

முன்னர் ஒரு பதிவில் நாம் பேசிக்கொண்ட “ஜீனியஸ்”, “ஸ்ட்ரீட் ஸ்மார்ட்” விஷயங்கள் ஞாபகம் வருகின்றன!!

Unknown said...

Good blog & informative post.
A suggestion - Add Google Translate app/plugin to your blog.
All the Best.

Poriyaalan said...

Interesting...

VarahaMihira Gopu said...

ஆர்வக்கோளாரும் இல்லை, நண்பனும் இல்லை. நிக்கோலா டெஸ்லா, பாரிஸ் நகரிலுள்ள (பிரெஞ்சு நாட்டு) எடிசன் மின்சார கம்பெனியின் கிளையில் வேலைக்கு சேர்ந்தார். டெஸ்லா மின்சாரம் கற்கும் முன்னரே, எடிசன் தன் சொந்த திறமையால் ஒலிபதிக்கும் கிராமபோன் கருவியையும், மின்விளக்கையும், மின்சார உற்பத்தி வினியோக அமைப்பையும் படைத்து, உலக மாமேதை என்று பெயர் பெற்றவர்.

டெஸ்லாவின் ஆற்றலை கண்டு வியந்த அக்கிளை தலைவர், அமெரிக்காவிற்கு சென்று எடிசனை சந்திக்க டெஸ்லாவிற்கு ஏற்பாடு செய்தார். அவர் டெஸ்லாவை அறிமுகம் செய்ய எடிசனுக்கு எழுதிய சிபாரிசு கடிதத்தில் “எனக்கு இரண்டு மாமேதைகளை தெரியும். ஒன்று நீங்கள். இன்னொன்று இந்த இளைஞன்,” என்று மெய்சிலிர்த்தார்.

டெஸ்லாவை எடிசன் வரவேற்றார், வேலைக்கு சேர்த்துக்கொண்டார். ஆனால் டெஸ்லாவை எடிசன் ஏமாற்றியது உண்மையே. ஏமாந்த டெஸ்லா வெஸ்டின்கவுஸ் கம்பெனியில் சேர்ந்து நல்ல பணம் பெற்றார். ஆனால் பின்னால் பலரிடம் சண்டைப்போட்டுக்கொண்டு பலவிதத்தில் ஏமாந்தார். தன்னை ஏமாற்றிக்கொண்டார்.

டெஸ்லா அறிவியல் மேதை, ஆனால் யதார்த்தமற்ற அசமஞ்சம். பொருளாதார கொள்கைகள் புரிந்துகொள்ளாதவர். நீடுடி வாழ்ந்தார். அபார சாதனைகள் செய்து உலகப்புகழ் பெற்றார்.

எடிசனை தவறுகள் செய்தாலும், திருடனாய் சித்தரிப்பதும், அவர் மேதைமையை மட்டம் தட்டுவதும் ஏற்கத்தக்கதல்ல.

எடிசனை பற்றி பேராசிரியர் வஷ்லவ் ஸ்மில் சொல்லும் தகவல்களை நான் எழுதியுள்ளேன். இங்கே படிக்கலாம்
http://varahamihiragopu.blogspot.com/2014/03/blog-post_18.html