Wednesday, May 12, 2010

சுறாவும் எங்க வீட்டு ரங்கமணியும்

"தீதும், நன்றும், பிறர் தர வாரா" கணியன் பூங்குன்றனார் எப்போதோ சொல்லி வைத்த பொன்மொழி. ஆனாலும் எங்களை போல எத்தனை பேர் தெரிந்தே குழியில் விழுபவர்கள்.

வலையுலகத்தில் கிழித்து தொங்க விடப்பட்ட சுறா படத்தை நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பார்த்தே ஆவது என்று முடிவு கட்டி விட்டார் எங்க வீட்டு ரங்கமணி(வீட்டுகாரரை அப்படி தானே சொல்லணும்?).

படத்தை வீட்டுல உட்கார்ந்து பார்ப்பதில் ஒரு சௌகரியம் உண்டு, பிடிக்காத சீன்கள், பாடல்கள் எல்லாவற்றையும் பாஸ்ட் பார்வர்ட் செய்து விடலாம். அப்படி ஓட்டி ஓட்டி சுறாவை பார்த்த போது மிஞ்சியது என்றால் ஒரு பத்து நிமிட படம் என்று நினைக்கிறேன்.

படத்தில் எல்லாமே யூகிக்க கூடியாதாக இருந்தது, இதுல எங்க வீடு ரங்கமணி செய்த டார்ச்சர் இருக்கு பாருங்க அது சொல்லி மாளாது.

முதலில் ஹீரோ அறிமுக காட்சி வந்ததும் ரங்கமணி

"இப்போ சும்மா குத்து சாங் ஒன்னு வரணுமே",

அப்புறம் சிறிது நேரம் கழித்து

"காமெடியன் எல்லாம் அறிமுகம் செய்துட்டாங்க எங்கப்பா கனவு தேவதை தமன்னா" என்று ஒரே வருத்தம்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவரே கதை சொல்ல ஆரம்பித்து விட்டார்

"பாரு இப்போ எழுந்திருச்சு வருவான் பாரு"

"அடுத்த சீன் ல அந்த பொண்ணு வரும் பாரு"

"இப்போ அந்த அம்மா அழுவாங்க பாரு"

அவர் நேரம், எல்லாம் அவர் சொன்னது போலவே வந்தது.

உடனே "நான் சொன்னேன் இல்ல" என்று பெருமை வேறு.

ஐயோ சாமி தாங்க முடியல, சுறா கொத்து பெரும் கொத்துன்னா இவர் கொத்து அதை விட பெருசா இருந்தது.

ஒரு டிஸ்கி: தமிழ் சினிமாவுக்கு கதை வேணும்னா எங்க வீட்டு ரங்கமணியை தொடர்பு கொள்ளுங்கள்.

முடிவாக படம் பார்த்து முடித்த பிறகு இருவருமே சேர்ந்து சொன்னது

"வீட்டுல உட்கார்ந்து ஓட்டி ஓட்டி பார்த்தப்போவே நம்மால் பார்க்க முடியலையே, எப்படி தான் இதுக்கு பொறுமையா ரெண்டரை மணிநேரம் தியேட்டர் ல உட்கார்ந்து பார்க்கிறார்களோ ".

பிளேடு கூட சீக்கிரம் அறுத்துரும், இந்த படம் மழுங்கடிக்கப்பட்ட ஆக்சா பிளேடு.

யாரெல்லாம் இந்த படத்தை தியேட்டர்ல போய் பார்த்தார்களோ அவர்களுக்கு "உலகின் மிகச்சிறந்த பொறுமை சாலிகள்" என்ற பட்டம் கொடுக்கிறேன்.

8 comments:

அநன்யா மஹாதேவன் said...

//எங்க வீட்டு ரங்கமணி(வீட்டுகாரரை அப்படி தானே சொல்லணும்?)// ரங்கமணின்னு சொன்னாலே அது அவங்க அவங்க வீட்டு ரங்குன்னு அண்டர்ஸ்டுட்.

தியேட்டர்ல போய் படம் பாத்தவங்களுக்கெல்லாம் மெகா பல்புன்னு கேள்விப்பட்டேன்.நீங்க என்னமோ செண்டிமெண்டா பொறுமையின் சிகரம்ன்னு எல்லாம் எழுதிட்டீங்க?

padma said...

சூப்பர் விமர்சனம் முகுந்த் அம்மா .பயங்கர சிரிப்பு தான் போங்க .உங்க ரங்கமணிக்கு demand ஜாஸ்தியா ஆக போது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

அமைதிச்சாரல் said...

ஆனாலும் உங்க ரங்க்ஸுக்கு அசாத்திய பொறுமை. சார் தமன்னா ரசிகரோ :-))))

தமிழ் உதயம் said...

வருங்கால அரசியல் தலைவர் படத்தை பத்தி இப்படி எல்லாம் பேசலாம்மா.

அப்பாவி தங்கமணி said...

பாத்துங்க.... உங்க ரங்க்ஸ்ஐ தமிழ் கூறும் நல்லுலகம் கடத்திட போறாங்க... இப்படி விசிறிகள் நாடி பிடிச்சு சொல்றாரே... இந்த படம் theatre ல வேற ரிலீஸ் ஆச்சா....? சொல்லவே இல்ல................

Seemachu said...

//என்ன ஆட்டோ அனுப்ப போறீங்களா, அனுப்புங்க//

என்ன அவ்வளோ தில்லா? உங்களுக்கு மெட்ராஸ் எக்மோரிலேருந்து டாக்ஸி அனுப்பச் சொல்றேன்....

அப்ப நீங்க நிச்சயம் பயப்படுவீங்கன்ன்னு தெரியும் !!!

ஹுஸைனம்மா said...

//சுறாவும் எங்க வீட்டு ரங்கமணியும்//னு தலைப்பப் பாத்துட்டு உங்க ரங்ஸ் சுறாமீன் பிடிச்ச கதையா, இல்ல சுறா(உங்க)கிட்ட மாட்டின கதயா, இல்ல சுறா சமைச்ச கதயா, சாப்பிட்ட கதயான்னு ஓடோடி வந்த என்ன இப்பிடி ஏமாத்திட்டீங்களே!!

தெரிஞ்சே படுகுழில நீங்க மட்டுமா விழுந்தீங்க, இந்தப் பதிவப் படிச்ச நானும்ல!! ;-)))