வீட்டு வேலை அவசரமாக முடிக்க வேண்டும், சமைக்கணும், பிள்ளைகள் வேற ஸ்கூல் ல இருந்து வந்துட்டாங்க, என்ன செய்ய , சரி டிவில கார்டூன் போட்டு விட்டுடலாம்.
பிள்ளைகள் ரொம்ப அடம் பிடிக்கிறாங்களா?, சரி கார்டூன் போட்டுடலாம், பேசாம இருப்பாங்க.
குழந்தைங்களுக்கு சாப்பாடு ஊட்டணுமா? சரி கார்டூன் போட்டுடலாம்.
நம்ம டிவில சீரியல் பாக்கணுமா?, சரி பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் ல கேம்ஸ் விளையாட கொடுத்துடலாம்.
....இப்படி கிட்ட தட்ட பெற்றோர்களுக்கு ஏதாவது வேலை ஆக வேண்டும் என்றால் இப்போது பிள்ளைகளுக்கு நாம கொடுப்பது ஸ்க்ரீன் டைம்...அது டிவி, கம்ப்யூட்டர், ipad, வீடியோ கேம்ஸ்...etc
கூட்டு குடித்தனம் சிதைந்து தனிக்குடித்தனம் என்றன பின், குழந்தைகளை பார்த்துக்கொள்ள என்று பெரியவர்களும் இல்லாத நிலையில், சிறு வயதில் இருந்து இப்படி எல்லாவற்றிற்கும் டிவி என்பது ஒரு குழந்தைகளை கவனிக்கும் ஒரு ஆயா போல ஆகிவிட்டது.
நாம் சுவிட்ச் ஆன் செய்ய மாட்டேன் என்று சொன்னாலும் தானாகவே டிவி சுவிட்ச் ஆன் செய்து தனக்கு வேண்டிய கார்டூன் சேனல் போட்டு கொள்ள 4-5 குழந்தைகள் கூட தற்போது அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இப்படி எப்போதும் டிவி பார்க்கும் குழந்தைகள் தங்களை அந்த கார்டூன் கேரக்டர்களை போலவே நினைத்து கொள்வது எல்லா வீடுகளிலும் தற்போது பார்க்க முடிகிறது. எனக்கு தெரிந்து சோட்டா பீம் பார்த்து விட்டு பெரியவர்களை போட்டு குத்து குத்து என்றும் குத்தும் பிள்ளைகளை அதிகம் பார்த்து இருக்கிறேன். நான் நின்ஜா, என்னால் மேலிருந்து கீழே குதிக்க முடியும் என்று குதித்து அடி வாங்கிய சிறுவர்களை காட்ட முடியும். பார்பி பொம்மைகளையும், டிஸ்னி கார்டூன் களையும் பார்த்து விட்டு தன்னை இளவரசியாக நினைத்து அதற்கு ஏற்றார் போல நடை உடை பாவனைகள் மாற்றி கொள்ளும் அனேக பெண் குழந்தைகள் பார்த்து இருக்கிறேன்.
இப்படி தனக்கு முன்னால் விரியும் ஒரு உலகத்தில் வாழ ஆரம்பிக்கும் பல குழந்தைகள் தங்களால் நிஜ உலகுக்கு வர முடியாமல் எதற்கு எடுத்தாலும் கோபப்படுவது, கத்துவது, அடிப்பது போன்ற மன மாற்றங்கள் அடைந்து . பொறுமை என்பது நிறைய குழந்தைகளுக்கு இருப்பதில்லை. தனக்கு வேண்டியது உடனே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைய தோன்றுவதையும் பார்த்து இருக்கிறேன். இப்படி நிறைய குழந்தைகள் பள்ளி சென்றாலும் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவதை தற்போது attention deficient disorder என்று அழைக்கிறார்கள் . அதாவது கவன பற்றாகுறை நோய். தற்போது ஒரு ஆராய்ச்சியில் இந்த நோய்க்கு டிவி யின் பங்கு எவ்வளவு என்பதை நிருபித்து இருக்கிறார்கள். http://www.additudemag.com/adhd/article/826.html
இதனை தவிர்க்க வேண்டுமாயின், குழந்தைகளுக்கு வெளியில் சென்று விளையாட நிறைய நேரம் கொடுக்கவும், டிவி யை, ஒரு ஆயா போல பயன் படுத்தாமல் ஒரு மணி நேரம் மட்டுமே டிவி நேரம் என்று நேர எல்லை வகுக்கலாம். இதனால் எப்போதும் டிவி ஏ கதி என்று குழந்தைகள் இல்லாமல் இருக்கும்.
புத்தகங்கள் வாசித்து காட்டலாம். புதிய இசை, பாட்டு, நடனம் போன்ற விசயங்களில் குழந்தைகளை செலுத்தலாம்.
குழந்தைகள் களிமண் போன்றவர்கள், அவர்களை நன்வகையில் வளர்ப்பது பெற்றோர்களான நம் கையில் மட்டுமே இருக்கிறது.
நன்றி.
2 comments:
பெரும்பாலான குழந்தைகள் தொலைக்காட்சிக்கு அடிமையாகி விட்டனர். பெரியவர்களும் தொடர்களுக்கு....
நீங்கள் சொல்வது போல ஒரு நாளைக்கு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ பார்க்க அனுமதித்து, மற்ற நேரங்களில் விளையாட வைப்பது நல்லது தான்.
நல்ல பகிர்வு.
நல்ல பதிவு முகுந்த் அம்மா. டிவி - இண்டெர்நெட் - கேம்ஸ் பாதிப்பு பெரிய அளவில் இருக்கிறது இன்று.
ஒரு தாயாக - (இந்தியச் சூழலில்) குறிப்பாக வேலைக்குச் செல்லும் தாயாக - இதை எப்படிச் சமாளிப்பது (அல்லது நீங்க எப்படிச் சமாளிச்சீங்க என்று) என்றும் விளக்கமாகச் சொல்லுங்க முகுந்த் அம்மா.
Post a Comment