Tuesday, February 3, 2015

எப்படி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி தருவது? ஒரு அமெரிக்க கதை



இங்கு இருக்கும் தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக தன்னார்வ பணி செய்து கொண்டு இருக்கிறேன்.   நாங்கள் இருக்கும் ஜியார்ஜியா மாகணத்தில் வேற்று மொழி பாடமாக தமிழ் அங்கிகரிக்க பட்டு இருப்பதால், நமது மொழியும் கலாச்சாரமும் வளர வேண்டும் என்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ் படிக்க தமிழ் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். கிட்டத்தட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்கள் பள்ளியில் படிகிறார்கள். அங்கு ஆசிரியர்/ஆசிரியையாக வேலை பார்பவர்கள் அனைவரும் தன்னார்வ தொண்டர்கள் தாம். வாரத்தில் ஒரு நாள் ஒன்றரை மணி முதல் இரண்டு மணிநேரம் மட்டுமே தமிழ் பள்ளி நடக்கும். கலிபோர்னியா தமிழ் அகாடமி யின் பாடத்திட்டத்தை பயன்படுத்தி பாடம் நடத்துகிறோம். தமிழ் நாட்டு தமிழ் பாடத்திட்டத்திற்கு இணையான அனைத்து பகுதிகளையும் கொண்டது எங்கள் பாட திட்டம்.  மழலையர் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடம் நடத்தப் படுகிறது. வீட்டுப்பாடம் , மாததேர்வு, மாதம் ஒரு  ப்ராஜெக்ட்,  ரிவிசன் டெஸ்ட், வருட தேர்வு என்று அனைத்தும் உண்டு.


தமிழும் கலாச்சாரமும் வளரவேண்டும் என்ற எண்ணத்துடன் இப்படி நாங்கள்  அனைவரும் எந்த பிரதிபலனும் இன்றி உயிரை கொடுத்து உழைத்தாலும், ஆங்கிலம் மட்டுமே முதல் மொழியாக வளரும் இங்கு பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் படிப்பது என்பது மியூசிக், Kumon , Soccer , டென்னிஸ், பியானோ  போல "இன்னொரு கிளாஸ்" அவ்வளவு தான். ஆர்வத்துடன் படிக்கும் சில குழந்தைகளும் இருக் கிறார்கள் என்றாலும் பெற்றோர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் தமிழ் பள்ளி வரும் குழந்தைகள் தாம் அதிகம்.

இங்கு இருக்கும் ஆசியர்கள் முறையாக ஆசிரிய பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்றாலும் மிக சிறந்த முறையில் ஆர்வத்துடன் பாடம் நடத்துகிறார்கள். அதனால் பல நேரங்களில் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள முடிவதில்லை. தப்பித்தவறி ஒரு சில நேரங்களில் கண்டிப்பாக நடந்தால் என்னென்ன நேர்கிறது கேளுங்கள்.

ஒரு ஆசிரியர் பாடம் கவனிக்காத ஒரு பையனை கூப்பிட்டு கவனியாமல் இருந்தால் கிள்ளு வாங்குவாய் என்று சொல்லி இருக்கிறார். அவன் தன பெற்றோரிடம் சென்று என் தமிழ் ஆசிரியர் என்னை கொன்று (Kill )விடுவேன் என்கிறார் என்று முறையிட்டு இருக்கிறான்.

இன்னொரு ஆசிரியர் பாடம் கவனிக்காத ஒரு ஆறாம் வகுப்பு மாணவனை "நீ பாடம் கவனிக்காவிட்டால் நிறைய கற்று கொள்வதை lose செய்வாய்" என்று சொல்லி இருக்கிறார். உடனே அவன் அதனை பெரிய பிரச்னை ஆக்கிவிட்டான் . "எப்படி என்னை loser என்று அந்த ஆசிரியர் கூறலாம். என் வாழ்கையில் நான் loser ஆவேன் என்று எப்படி  சொல்கிறார், நான் இனிமேல் இந்த பள்ளிக்கு செல்வதில்லை "என்று ஒரு டிராமா செய்து விட்டான்.

நான் பாடம்  எடுக்கும் 1ஆம் வகுப்பு பையன் வகுப்பில் சரியாய் கவனிக்கவில்லை என்று அவன் பெற்றோரிடம் முறையிட்டேன். அதற்க்கு அவன், தன்னை பற்றி அனைவர் முன்னமும் ஆசிரியை குறை சொல்லி விட்டார், அதனால் இமேஜ் பாதிக்கப்பட்டு விட்டது எனவே நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து இருக்கிறான். அவன் வயது 5-6 அதற்குள் இவர்களுக்கு எல்லாம் என்ன இமேஜ்ஓ தெரியவில்லை.

ஒன்றுக்கு இரண்டு பக்கம் இவர்களை எழுத சொன்னாலோ அல்லது கவனிக்க சொன்னாலே உடனே ஒரு அங்கலாய்ப்பு வந்து விடுகிறது. "You are giving us lots of stuff to write" அல்லது "Why should we write the same stuff again and again" அல்லது "I am bored" இவை எல்லாம் நான் சாதரணமாக வகுப்பில் கேட்க்கும் அங்கலாய்ப்புகள்.

இன்னும் சில பெரிய குழந்தைகளின் பெற்றோர் தம் பிள்ளைகள் எப்படி எல்லாம் தமிழ் படிப்பதில் இருந்து தப்பிக்க நினைகிறார்கள் என்று கூறுவதை கேட்கும் போது தமிழை எப்படி வளர்க்க போகிறோம் என்று சற்று பயமாகவே இருக்கிறது.

இங்கு இருக்கும் குழந்தைகள் சிறு வயது முதலே தர்க்கம் செய்ய நன்கு அறிந்து இருக் கிறார்கள்.ஏன்  நான் இதனை செய்ய வேண்டும்?. இதனை செய்வதால் என்ன பயன்?, செய்யாமல் விட்டால் என்ன நடக்கும்? அதனை எப்படி சமாளிப்பது? போன்ற பல கேள்விகள் கேட்கிறார்கள்.

ஒரு பெற்றோர் சொன்னது, தமிழ் படி என்று சொன்னபோது நடந்த உரையாடல்

அப்பா : தமிழ் வீட்டுபாடம் படிடா?
பையன் "Why should I do it ?"
அப்பா: அப்பொழுதான் உனக்கு எழுத படிக்க  பேச வரும்.
பையன்: I can learn that by watching tamil channels
 அப்பா: உன் குழந்தைகளுக்கு நம் மொழி கலாச்சாரம்  சொல்லி தரனும் இல்ல.
பையன்: You are there dad, you will teach them
அப்பா: ???


எப்படி இவர்களுக்கு தமிழ் படிக்கும் எண்ணத்தை தூண்டுவது? இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு தமிழின் நிலை இங்கு என்னாகும்? நினைக்கும் போதே மனம் பதைக்கிறது.


17 comments:

கீதா லட்சுமி said...

Vilaiyattai solli tharalam.. news paper headlines'il words/letters kandu pidippathu, Bingo type word games etc.. they want time pass or game in everything.. so you can follow this type of games to teach them.

ஹுஸைனம்மா said...

பாவம் ஆசிரியர்கள்!!!

வீட்டில் தமிழ் மட்டுமே பேசினாலும் (வெளிநாட்டில் இருப்பதால்) பள்ளியில் தமிழ்ப் பாடம் கிடையாது. எனவே வீட்டில் வைத்துச் சொல்லித் தர விரும்பி, என் மகன்களுக்கு கற்றுத் தர முயன்றபோது, ஆரம்பத்தில் ஆர்வமாக வந்த சின்ன மகன், பின்னர் மறுத்து விடான். அவன் சொல்லும் காரணம், ”நாம பேசுற தமிழைவிட, புக்கில் இருக்கும் தமிழ் ரொம்பக் கஷ்டமா இருக்கு, ஏன்?”

சில நாட்கள்முன், ஒருவரின் உரையை கேட்க சென்றிருந்தபோது, தமிழில் பேசியதை என் மகனுக்கு நான் மீண்டும் ”தமிழில்” மொழிபெயர்க்க வேண்டியிருந்தது.

ஹுஸைனம்மா said...

//வயது 5-6 அதற்குள் இவர்களுக்கு எல்லாம் என்ன இமேஜ்//

ரொம்பப் பொறுமைங்க உங்களுக்கு!!

//இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு தமிழின் நிலை இங்கு என்னாகும்?//

தமிழ்நாட்டில் உருது பேசுபவர்கள் நிறைய உண்டு என்றாலும், பள்ளியில் தமிழ் மட்டுமே படிப்பதாலும், இன்னும் சில காரணங்களாலும், அவர்களுக்கு (அநேகமாக) உருது பேசத் தெரிந்தாலும் எழுத, வாசிக்கத் தெரியாது!! (இது இந்தியா முழுமைக்கும் உள்ள உருது முஸ்லிம்களுக்கும் பொருந்தும். மற்றும், தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு, சௌராஷ்ட்ரா, துளு போன்ற பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் இதுதான் நிலைமை என நினைக்கிறேன்)

ஏன் சொல்லுகிறேன் என்றால், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நிலையும் இப்படி ஆகிவிட்டது. பேசத் தெரிந்தாலும், எழுத வாசிக்கத் தெரியவில்லை.

என்றாலும், தமிழ்நாடு உள்ளவரை (அங்கு மட்டுமாவது) தமிழ் செத்துவிடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. :-)

Dhiyana said...

நான் கலிபோர்னியாவில் வசிக்கிறேன். நீங்கள் சொல்லும் கலிபோர்னியா தமிழ் அகாடமி பாடத்திட்டத்தைப் பயன்படுத்தி நானும் தமிழ்ப்பள்ளியில் தன்னார்வ பணி செய்து வருகிறேன். அதே 1.5 மணி நேரம். நீங்கள் சொல்லும் அதே சூழ்நிலை தான் இங்கும் நிலவுகிறது. ஒரு மொழியைக் கற்கிறோம் என்ற ஆவல் குழந்தைகளுக்கு இல்லையே என்று எனக்கும் வருத்தமாக இருக்கிறது. என் எட்டு வயது மகளும் அப்படித்தான் இருக்கிறாள் :-(

வருண் said...

My observation is that the kids who just moved from TN India usually excel. Kids who grew up here come to school because their parents asked them to. They do do well when they are very young and "ignorant" and the parents have much control over them. Once they go to middle school, they show little interest and once they get into high school, they forget what they learned too. This is the general trend. :)

The only advantage of this Tamil schooling is some kind of socializing with Tamil families and Kids and get to know each other.

Unknown said...

என்னுடைய தமிழ்ப் பள்ளி ஆசிரியர் அனுபவத்தில் நான் கண்டது, எந்தப் பெற்றோரும் வீட்டில் கூட தங்களது குழந்தைகளிடம் தமிழில் பேசுவதில்லை.. அப்படியிருக்கும்போது குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை..

வெங்கட் நாகராஜ் said...

இந்தியாவிலேயே கூட வெளி மாநிலங்களில் இருப்பவர்களின் குழந்தைகளை தமிழ் படிக்கச் சொன்னால் எட்டிக்காய் கசப்பு அவர்களுக்கு....

கொஞ்சம் கடினமான வேலை தான் இவர்களுக்கு தமிழ் கற்பிப்பது.

வெங்கட் நாகராஜ் said...

இந்தியாவிலேயே கூட வெளி மாநிலங்களில் இருப்பவர்களின் குழந்தைகளை தமிழ் படிக்கச் சொன்னால் எட்டிக்காய் கசப்பு அவர்களுக்கு....

கொஞ்சம் கடினமான வேலை தான் இவர்களுக்கு தமிழ் கற்பிப்பது.

Avargal Unmaigal said...

இந்த வருடம்தான் நான் என் பெண்ணை எழுதப்படிக்க தமிழ் கற்க அனுப்பித்துள்ளேன் ,தமிழ் படங்கள் பார்ப்பதால் தமிழை புரிந்து கொண்டு கொஞ்ச்சி பேசுவது போல பேசுவாள். அதே நேரத்தில் அவள் ஹிந்தி கற்றுக் கொண்டு அதை அதே ஸ்கூலில் சிறு குழந்தைகளுக்கு சொல்லி தருகிறாள்

துபாய் ராஜா said...


//எப்படி இவர்களுக்கு தமிழ் படிக்கும் எண்ணத்தை தூண்டுவது? இன்னும் இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு தமிழின் நிலை இங்கு என்னாகும்? நினைக்கும் போதே மனம் பதைக்கிறது.//

நியாயமான கவலைதான். என் மகள் ஆங்கிலத்தில் கதை கூட எழுதுகிறாள்.தமிழைப் பொறுத்த வரை பேசுகிறாள். வார்த்தைகளை எழுத்து கூட்டி படித்து விடுகிறாள். ஆனால் எண்களை தமிழில் சொன்னால் புரிவதில்லை. நேரத்தை கூட ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரிகிறது. ச்:((

முகுந்த்; Amma said...

Sorry for writing in English about learning tamil language.

முகுந்த்; Amma said...

@geetha laksmi,
Thanks for the tips, but as a teacher who has limited time at tamil school, we are trying our best to include as many games as possible. But we are also bound to finish the syllabus. Parents need to cooperate and show interest and enthusiasm in teaching kids tamil at home.

முகுந்த்; Amma said...

@hussainamma,

True, most kids speak Tamil in a broken form, after my recent trip to India,even Mukund is speaking Tamil at home but obviously in a broken form. But making him sit and do the Tamil homework or alphabets is pain in the neck :(

முகுந்த்; Amma said...

My concern now is even kids in India are not speaking in Tamil at home, I saw that when Mukund plays with his cousins they all speak in English. Instead of mukund learning Tamil from them, the opposite happend.

முகுந்த்; Amma said...

@Dhiyana,

Thanks for the information. Seems Iike it's universal problem

@saran vel

Yes, I also seen that. Unless Tamil is not spoken at home kids cannot speak or understand.

But I saw in many cases even when u speak with the kids in Tamil, they reply back in English to you.

முகுந்த்; Amma said...

@varun,

Yes, your observation is correct. Even in our school there are many sections for lower grades but in higher grade only a few or only one. As you mentioned forcing older kids towards learning is not possible. But I saw many parents do that.

Your observation about socialization is also true. Thanks for the comment

முகுந்த்; Amma said...

@venkat nagaraj, @avargal unmaigal, @dubai raja

After reading all the comments it seems like teaching Tamil to kids or making them or motivating them to learn Tamil is a big challenge when you are outside tamilnadu.

In USA, We are trying our best to make it alive by running Tamil schools and motivating kids to learn, write and participate in Tamil culturals etc. but as many said, parents need to cooperate also.