Friday, April 1, 2016

வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவை?


என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் இன்னும் இரண்டு வருடங்களில் தான் ரிடையர் ஆக போவதாக கூறினார். அவருக்கு ஒரு  பையன் கல்லூரியில் இருக்கிறார்,  ஒரு 50-55 வயது இருக்கும் அவருக்கு (இங்கு பலரின் வயதை கணிக்க முடியாது). அவரும், மனைவியும் வேலை பார்த்து நிறைய சேர்த்து வைத்து இருப்பதாகவும், ரிடையர்மென்ட் இல் ஐரோப்பா  முழுதும் சுற்ற போவதாகவும் சொன்னார்.

இங்கெல்லாம் நிறைய பேர் வேலை பார்க்கும் போதே 401K எனப்படும் ரிடையர்மென்ட்க்கு பணம் சேர்ப்பதை பார்க்கலாம். இது கிட்ட தட்ட நம்ம ஊரு பென்ஷன் போன்றது.  அதே போல, இங்கு இருக்கும் மக்கள் பலர் உலகத்தை சுற்றி பார்க்க ஊரை சுற்றி பார்க்க என்று நிறைய பணம் சேமிப்பார்கள். ஏதேனும் விடுமுறை என்றாலோ அல்லது வெகேசன் என்றாலோ குடும்பத்துடன் வெளியே கிளம்பி விடுவார்கள்.

இவர் இப்படி சொன்னதை கேட்ட பிறகு, எனக்குள்  சில கேள்விகள். இதே போல இந்தியாவில் இருக்கும் ஒருவர் 50-55 வயதில் நான் ரிடையர் ஆக போகிறேன் என்று சொல்ல முடியுமா?. அவரின் குடும்ப ரியாக்சன் என்னவாக இருக்கும்.

ஏனெலில், எனக்கு தெரிந்த ஒரு அம்மா, அவரின் கணவர் உடல் நிலைக்காக வோலேன்டறி ரிடையர்மென்ட் கொடுத்த பிறகு அவரை கரித்து கொட்டி கொண்டு இருந்ததை  பார்த்து இருக்கிறேன். இன்னும் 6 வருஷம் சர்வீஸ் இருக்கு ஆனா இப்படி வீட்டுல உக்கார்ந்துட்டு என் உயிரை வாங்குறீங்க என்று சொல்லி சொல்லி மாய்ந்து போவார். இத்தனைக்கும் அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை. நிறைய உண்டு. ஆனாலும் அதனை செலவு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட எண்ணம் இருக்காது. சரியான கஞ்சன் அம்மா.  எச்சில் கையால் கூட காக்கை ஓட்ட மாட்டார் அந்த அம்மா. அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒன்று தோன்றும், இப்படி பணம் சேர்த்து வைத்து எங்கு கொண்டு செல்ல போகிறார் என்று. தானும் அனுபவிக்காமல், மற்றவருக்கும் கொடுக்காமல் என்ன மக்களோ என்று நான் நினைப்பது உண்டு.

இது ஒரு வகை மக்கள் என்றால் இன்னொரு எக்ஸ்ட்ரீம் ஒருவரையும் பார்த்து இருக்கிறேன்.
 அவர் கவர்மெண்ட் சம்பளம் இல்லை, பிரைவேட் கம்பனியில் வேலை. தனது 40 களில் இருக்கும் அவருக்கு சேவிங் என்று எதுவும் இல்லை. வீட்டு லோன் வாங்கி அதற்க்கு EMI கட்டி கொண்டு இருக்கிறார்.  ஒவ்வொரு வீகெண்ட்ம் வெளியே கிளம்பி விடுவார். கையில் இருக்கும் எல்லாத்தையும் செலவழித்து விடுவார். நிறைய அனாவசிய செலவுகள் இருக்கும். இரண்டு குழந்தைகள், ஆனாலும் அவர்களுக்கு என்று எதுவும் சேமிக்க இல்லை என்று அவரின் மனைவி மாய்ந்து மாய்ந்து புலம்புவார். இவரின் நோக்கம் இறக்கும் வரை ஏதாவது வேலை செய்து கொண்டு இருக்கவேண்டும். வாழ்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே.


உண்மையில் ரிடையர் ஆக வேண்டும் என்றால் எவ்வளவு பணம் தேவை. இந்தியாவில் அல்லது  அமெரிக்காவில் என்று எனக்கு அடிக்கடி தோன்றுவது உண்டு. வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவை? ஆனால் இது ஒரு மாறி வரும் இலக்கு. உதாரணமாக நான் ஸ்டுடென்ட் ஆக இருந்த போது கிடைத்த சொற்ப  ஸ்டைபெண்டு இல் வாழ்கை வாழ்ந்து இருக்கிறேன். பின்னர் வேலை கிடைத்த பிறகு வந்த சம்பளமும் சரியாக போய் இருக்கிறது. பின்னர் வேறு வேலை கொஞ்சம் அதிகம் சம்பளம் என்று எல்லாமே மாறினாலும் அப்பொழுதும் வரும் சம்பளம் சரியாக மாறி இருக்கிறது. என் அம்மா ஒன்று சொல்லுவார்கள், வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறது என்று. அதே போல, நம் சம்பளம் உயர உயர வாழ்க்கை தேவையும் உயருகிறது. தற்போது நாம் வாழ பழகி கொண்ட வாழ்க்கையை எடுத்து விட்டு 11 வருடத்திற்கு முன் இருந்த ஸ்டுடென்ட் வாழ்க்கை வாழு என்று சொன்னால் கஷ்டமாக இருக்கும்.

ஆனால், எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது என்னவென்றால், அமெரிக்காவுக்கு வந்த இந்தியர்கள், இந்தியா செல்லும் போது காசு விசயத்தில் கொஞ்சம் கட்டு பெட்டியாக எண்ணி எண்ணி செலவழிப்பது போலவும், இந்தியாவில் இருப்பவர்கள் கொஞ்சம் தாராளமாக செலவழிப்பது போலவும் தோன்றுகிறது. இது எனக்கு மட்டும் தோன்றும் ஒன்றா என்று தெரியவில்லை. நிறைய நகரத்தில் இருக்கும்  இளைய தலைமுறை முதல் மிடில் கிளாஸ் மக்கள் கூட தற்போது அதிகம் செலவழிக்கிறார்கள். வாழ்க்கை சந்தோசமாக அனுபவிக்க வேண்டும் என்று நினைகிறார்கள். ஆனால், இன்னும் சிறு நகரங்கள் போல இருக்கும் மதுரை, திருச்சி போன்ற மக்கள் நிறைய சேமிக்க வேண்டும் என்று நினைகிறார்கள் என்று நினைக்கிறன்.

மறுபடியும் தொடங்கிய பிரச்சனைக்கு வருகிறேன். வாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவை? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

நன்றி.



8 comments:

ப.கந்தசாமி said...

இதற்கு standard ஆக பதில் சொல்வது மிகவும் கடினம். எனக்கு 65 k பென்ஷன் வருகிறது. 40 L சேமிப்பு இருக்கிறது. ஆனாலும் சிறு வயது முதல் பழகிவிட்ட பழக்கங்களால் இன்னும் சேமிக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறதே தவிர போதும் என்று தோணவில்லை.

அமெரிக்கர்கள் மாதிரி ஊர் சுற்றிப்பார்க்கலாம் என்று தோன்றுவதில்லை.

யூர்கன் க்ருகியர் said...

வnழ்வதற்கு "தேவையான" அளவு இருந்தால் போதும்

Unknown said...

நீங்க சொல்றது கிட்டதட்ட எனக்கு ஒத்து வருது, இந்தியா போகும்போது, ரூபாய்ல செலவழிக்க கொஞ்சம் தயக்கமா இருக்கும், அதே சமயம் நம்ம ஆளுங்க (அங்கயே இருக்குறவங்க) செய்யுற செலவு எல்லாம் பார்த்தா கெதக்னு இருக்கும், இத்தனைக்கும் 8 வருஷம் முன்னாடி இந்தியால வேலை செஞ்சுட்டு இருந்தப்போ செலவு பண்ணதுக்கும்,இப்போ நான் செலவு பண்றதுக்கும் ஏகப்பட்ட வித்யாசம் (especially in Metros)


ஆனந்த்,
சன்னிவேல்

ஆரூர் பாஸ்கர் said...

நல்லதோரு பதிவு. உங்களின் பதிவிலே பதிலிருக்கிறதே.

நம்முடைய வாழ்க்கை தரத்தை எந்த நிலையில் வைத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்த்து.

இந்தியாவில் மாதம் ஓரு லட்சம் வாங்குபவர் புலம்பிக் கொண்டிருப்பதும். இருபதாயிரம் வாங்குபவர் மகிழ்ச்சியாக இருப்பதையும் பார்கிறோமே.

முகுந்த்; Amma said...

"@பழனி.கந்தசாமி said...
இதற்கு standard ஆக பதில் சொல்வது மிகவும் கடினம். எனக்கு 65 k பென்ஷன் வருகிறது. 40 L சேமிப்பு இருக்கிறது. ஆனாலும் சிறு வயது முதல் பழகிவிட்ட பழக்கங்களால் இன்னும் சேமிக்கவேண்டும் என்றுதான் தோன்றுகிறதே தவிர போதும் என்று தோணவில்லை.

அமெரிக்கர்கள் மாதிரி ஊர் சுற்றிப்பார்க்கலாம் என்று தோன்றுவதில்லை."

Thanks for the comment. I belive this is the trait of many Gen X and Gen Y indians. Gen Zs are the ones would like to enjoy life no matter what.

முகுந்த்; Amma said...

@யூர்கன் க்ருகியர் said...
"வnழ்வதற்கு "தேவையான" அளவு இருந்தால் போதும்"

THanks for the comment

முகுந்த்; Amma said...

"Ananth Kaliannan said...
நீங்க சொல்றது கிட்டதட்ட எனக்கு ஒத்து வருது, இந்தியா போகும்போது, ரூபாய்ல செலவழிக்க கொஞ்சம் தயக்கமா இருக்கும், அதே சமயம் நம்ம ஆளுங்க (அங்கயே இருக்குறவங்க) செய்யுற செலவு எல்லாம் பார்த்தா கெதக்னு இருக்கும், இத்தனைக்கும் 8 வருஷம் முன்னாடி இந்தியால வேலை செஞ்சுட்டு இருந்தப்போ செலவு பண்ணதுக்கும்,இப்போ நான் செலவு பண்றதுக்கும் ஏகப்பட்ட வித்யாசம் (especially in Metros)"

YEp, I felt the same. They spend like crazy. especially people in Metros. True.

thanks for the comment

முகுந்த்; Amma said...

@ஆரூர் பாஸ்கர் said...
"நல்லதோரு பதிவு. உங்களின் பதிவிலே பதிலிருக்கிறதே.

நம்முடைய வாழ்க்கை தரத்தை எந்த நிலையில் வைத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்த்து.

இந்தியாவில் மாதம் ஓரு லட்சம் வாங்குபவர் புலம்பிக் கொண்டிருப்பதும். இருபதாயிரம் வாங்குபவர் மகிழ்ச்சியாக இருப்பதையும் பார்கிறோமே."


Yes, True. Could be, mind is the limit, If you think you can survive with this money you can. But, the spendthrifts indirectly affect the cost of living and make for other people impossible to live.

thanks for the comment.