கடந்த வாரம் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையில் என்னுடைய பழைய கணினியை format செய்து, புது லினக்ஸ் OS போடலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கி ஆகி விட்டது. அப்பொழுது, பழைய பைல்கள் தேடி கொண்டு இருந்த போது..எப்பொழுதோ தரவிறக்கிய "கில்லி" படம் இருந்தது. அந்த படம் பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்ட படியால் படத்தை ஓட விட்டேன். எத்தனையோ தடவை பார்த்தது தான் என்றாலும் இன்னும் பார்க்கும் போது மனிதரை என்கேஜ் செய்வது இந்த படத்தின் சிறப்பு. இன்னும் கூட மீனாக்ஷி அம்மன் கோயில் முன் இருக்கும் சீன் மற்றும் த்ரிஷா கழுத்தில் கத்தி வைக்கும் சீன். பிரகாஷ்ராஜ் நடிப்பு என்று, படம் எப்பொழுது பார்த்தாலும் ஒரு கம்ப்ளீட் பக்கேஜ். ஏற்கனவே தெலுகு ஒக்கடுவில் வந்த காட்சிகள் தாம் என்றாலும் கர்னூலுக்கு பதில் மதுரை, பழக்கவழக்கங்கள், செல்லம் ஐ லவ் யு என்று கலக்கல் விகிதமாக இருந்தது.
நிற்க, சென்ற சனிக்கிழமை விஜயின் "தெறி" பார்க்கலாம் என்று தோழிகளுடன் சினிமா பிளான். பலரும் கழுவி ஊற்றியாயிற்று. அதனால் வேண்டாம் என்று சொன்னாலும்,, விஜயின் தீவிர ரசிகர்கள் எங்கள் தோழிகள் லிஸ்டில் இருப்பதால், போயே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்தாலும் சென்றாயிற்று. நிறைய கழுவி ஊற்றியதால் நான் எந்த விமரிசனமும் செய்ய போவதில்லை. மாறாக எனக்கு அந்த படம் பார்க்கும் போது என்ன தோன்றியது என்று மட்டுமே சொல்ல போகிறேன்.
மிக அறுவை காட்சிகள், மகேந்திரன் என்னும் அருமை டைரக்டர் ஐ ஒரு கொடுமை வில்லனாக சித்தரிக்க செய்ய முயற்சிகள் காண சகிக்காத கொடுமை. தன் மகன் செத்ததுக்கு ஒரு வருடம் கழித்து? விஜய் குடும்பத்தை பழி வாங்க வரும் கொடுமை. பின்னர் போன் செய்து "நீ இன்னும் உயிருடன் இருக்கியாமே?" என்று நம்மை டார்ச்சர் செய்வது.. பின்னர் பேய் போல விஜய் வருவது. பின்னர் கட்டி வைத்து அடிப்பது..."சாவை விட அதிக கஷ்டம் தரும் ஒன்னை தர்றேன்" என்று காசு கொடுத்து படம் பார்க்க வந்த நம்மை "படுத்தோ படுத்துன்னு கொன்னுர்றாங்கபா". எனக்கு ஒரு விஷயம் விளங்கவே இல்லை. இவங்க படம் எடுத்தது விஜயோட ரசிகருக்காக மட்டும் தான் அப்படினா, அவங்க ரசிகர் மன்ற மக்களுக்கு மட்டும் போட்டு காட்டி இருக்காலாமே. எதுக்கு இப்படி பெரிய பில்ட் அப் கொடுத்து இப்படி ஒரு கொடுமையை நமக்கு கொடுக்கணும்.
இரண்டு படங்களுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அதன் ஹீரோக்கள் "ஆங்ரி யங் மேன்", கொடுமையை கண்டு சகிக்காத கொதித்தெழும் ஒரு ஆள். தமிழில் 70 -80 களில் வந்த படங்கள் முதல் இன்று வரை வரும் பல ஆக்சன் படங்களின் ஹீரோ "ஆங்ரி யங் மேன்" தான். இன்னும் சொல்ல போனால்..ஏன் இந்திய படங்களின் கதாநாயகர்களும் ஆங்ரி யங் மேன் தான். அதுவும் தெலுங்கு படங்களில் எல்லாம் ஹீரோ ஒரு அடி விட்டால் அடியாட்கள் 50 அடி தூரம் பறந்து விழுவார்கள். அதுவே வீரம் என்று படங்களில் சொல்லபடுகிறது. அறிவுறுத்த படுகிறது. ஆனால் உண்மையில் ஒருவன் எப்பொழுது பார்த்தாலும் ரத்தம் கொதிக்க இப்படி சண்டை போட்டு கொண்டு இருக்க முடியுமா..இது சாத்தியமா?.. ஏனெனில், ஆபிஸ் பாலிடிக்ஸ் சமாளிப்பது எப்படி என்பது குறித்த ஒரு கோர்ஸ் எடுக்க நேர்ந்தது அது "emotional inteligence" சார்ந்தது. ஏனெனில் ஒருவர் நல்ல லீடர் அல்லது தலைவர் ஆக வேண்டும் என்றால் முதல் தகுதி அவர் தன்னுடைய உணர்ச்சிகளை வெளி காட்டி கொள்ள கூடாது என்பதே. உங்கள் முன்னிலையில் அநியாயமே நடந்தாலும் அதனை பகுத்து ஆய்ந்து எந்த முடிவு சரியானதாக இருக்கும் என்று முடிவு செய்து அதற்க்கு ஏற்றார்போல மட்டுமே பதில் வினை யாற்ற வேண்டும். இதனை சார்ந்த ஒரு வீடியோ காண நேர்ந்தது. எப்படி இதனை உபயோகித்து சிறந்த தலைவர் ஆவது என்பது குறித்த வீடியோ அது.
தலைவர்கள் யாவரும் "ஆங்ரி யங் மேன்" அல்லர், மாறாக ராஜ தந்திரம் தெரிந்த அரசியல் செய்ய உகந்த உணர்சிகளை கட்டுபடுத்தும் வித்தை கைவரபற்றவர்கள். அதனால் எனக்கு தெரிந்தவரை, படங்களில் காட்டும் ஹீரோக்கள் நிஜ வாழ்கையை பொருத்தவரை ஜீரோக்கள் மட்டுமே.அதனால் தொண்டரைடிகள் இதுவே வாழ்க்கை என்று நினைத்து ஏமாறாமல் இருக்க வேண்டும்.
டிஸ்கி
இது திரைப்படம் குறித்த என்னுடைய கண்ணோட்டம் மட்டுமே, விமரிசனம் அல்ல.
நன்றி.

1 comment:
வெளிநாட்டில் ஒரே தெறியை பற்றியே பேசுறாங்க!
தெறி பற்றி உங்க கண்ணோட்டமோ , விமரிசனமோ மிகவும் ரசித்தேன்.
ஆனா தெறியை பற்றி இவ்வளவும் எழுதிவிட்டு தமிழர்களின் எமி ஜாக்ஸனை பற்றி நீங்க ஒரு வார்த்தை சொல்லாதது வேதனை :)
Post a Comment