Wednesday, July 6, 2016

8 ஆம் வகுப்பில் IIT -JEE கோச்சிங்ம் CBSE ம் சமச்சீர் பள்ளிகளும்!

படிப்பது என்பது என்ன?, எந்த வயதில் படிக்க வேண்டும். இந்த கேள்வி எனக்கு அடிக்கடி தோன்றும். அதுவும் தற்போது இந்தியாவில் இருக்கும் குழந்தைகளை பார்த்த பிறகு இன்னும் அதிகமாக இந்த கேள்வி மனதில் ஓடி கொண்டு இருக்கிறது.

உதாரணமாக என்னுடைய தோழியின் மகள்  இந்த வருடம் 8 ஆவது படிக்கிறார். மதுரையின் சிறந்த பள்ளி ஒன்றில் படிக்கிறார். CBSE பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி அது. இருப்பினும், பள்ளி விட்டு வந்தவுடன் கிட்ட தட்ட எல்லா பாடத்திற்கும் வெளியிலே டியூசன் செல்கிறார். இது போக IIT -JEE க்கு என்று ட்யூசன். அதாவது 8 ஆம் வகுப்பில் இருந்தே 12 ஆம் வகுப்பு முடிந்த பிறகு எஞ்சினீரிங் படிக்க வேண்டும் அதுவும் IIT யில் மட்டுமே படிக்க வேண்டும்  என்று அவளின் பெற்றோர் முடிவு செய்து அவளை கோச்சிங் சேர்த்து இருக்கிறார்கள். 

அதாவது, கணக்கு, பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி கேள்விகளை  8 ஆவதில் இருந்து திரும்ப திரும்ப 4 வருடங்களாக படித்து படித்து...ஒரு வழியாக மனப்பாடம் செய்து..மார்க் எடுக்க வேண்டும்  என்று தயார் செய்ய படுகிறார்கள். 

எனக்கு தெரிந்து 10 ஆவது படிக்கும் போது அல்லது 12 ஆவது படிக்கும் போது ட்யூசன் படித்து பார்த்து இருக்கிறேன்..ஏன் இந்த வயதில் கோச்சிங் என்று என் தோழியிடம் கேட்க அவளோ..IIT யில் சேர பயங்கர போட்டி காம்பெடிஷன், எல்லாரும் தற்போது தங்களின் பிள்ளைகளை IIT  யில் படிக்க வைக்க நினைக்கிறாங்க..அதனால பயங்கர போட்டி. மத்த எஞ்சினீரிங் காலேஜ் எல்லாம் ஸ்டாண்டர்ட் இல்லை..IIT மட்டுமே தரம். அதனால தான் பயங்கர போட்டி. அதில வெற்றி பெறணும்னா இப்போ இருந்த கோச்சிங்  ஆரம்பிக்கணும். என்று சொன்னாள். 

அதுவும் தவிர..நான் அவளிடம் கேட்டது இது தான். CBSE சிலபஸ் நல்லா இருக்கு, நல்ல டாப் ஸ்கூல்ல பொண்ணு படிக்கிறான்னு சொல்லுறியே அப்போ எதுக்கு மத்த ட்யூசன். எல்லா சப்ஜெக்ட் க்கும் ட்யூசன். அப்போ டீச்சர் என்ன சொல்லி தர்றாங்க?. சொல்லி தர்ற அளவுக்கு அவங்களுக்கு ஸ்டப்  இருக்குன்னா எதுக்கு வெளியில ட்யூசன். 


ஏன் ஸ்டேட் போர்ட்ல சேக்கல்ல? என்ன பிரச்சனை? என்று கேட்டதற்கு, சமசீர் கல்வி ஆரம்பிச்சு பிறகு ஸ்டாண்டர்ட் ஏ இல்லை,  ..எல்லாமே மனப்பாடம் தான்.. இப்போ எல்லாம் எங்க பார்த்தாலும் 100- பேர் ஸ்டேட் பிரஸ்ட் 1000 பேர் 100 க்கு 100 அப்படின்னு போகுது. CBSE ல தான் கொஞ்சமாவது சிலபஸ் நல்லா இருக்கு, அதனால தான் அங்க சேர்த்திருக்கோம்..என்றாள். 

எனக்கு மறுபடியும் சந்தேகம்.. இவங்க என்ன சொல்ல வராங்க.. CBSE ல மனப்பாடம் இல்லைன்னு சொல்லுறாங்களா?.மத்த எஞ்சினீரிங் படிச்சா தேற மாட்டாங்க..IIT ல படிச்ச மட்டுமே தேறுவாங்க அப்படின்னு சொல்லுறாங்களா?..இல்லை நிறைய பேர் ஸ்டேட் பிரஸ்ட் வர்றது தப்புன்னு சொல்லுறாங்களா? ஒண்ணுமே புரியல உலகத்துல...

இப்பெல்லாம் புது வகை நோய் தொத்தி இருக்கு மக்கள் கிட்ட..அது CBSE பள்ளியில தன் பிள்ளை படிக்குது...சமசீர் கல்வி பள்ளியில இல்லை..என்று சொல்லுவது. அதற்காக எவ்வளவ் பணமும் கொடுக்க தயாரா இருக்கிறாங்க. அந்த பள்ளியில் என்ன சொல்லி தர்ராங்க..அதன் ஆசிரியர்கள் சொல்லி தரும் திறன் உள்ளவர்களா..என்றெல்லாம் எந்த பெற்றோரும் யோசிப்பதில்லை. இது ஒரு பிரெஸ்டிஜ் விஷயமாகி விட்டது. CBSE யில் படிக்க வைப்பது. IIT - JEE கோச்சிங் எடுப்பது..இதெல்லாம் பிரெஸ்டிஜ் விஷயங்கள். 

.ஆன ஒன்னு மட்டும் நிச்சயம்..7, 8 ஆவது படிக்கும் குழந்தைகளை ட்யூசன் மேல ட்யூசன் சேர்த்து..படிப்பின் மீது வெறுப்படைய செய்வது மட்டும் அல்லாமல்..அவர்களின் சொந்த திறமையை வளர்க்காமல் இப்படி செய்வது அந்த குழந்தைகளின் எதிர் காலத்தை வெகுவாக பாதிக்கும் என்று எப்போது இந்த பெற்றோர் உணர்வார்களா...

டிஸ்கி 
இந்த பதிவில் குறிப்பிட்டு உள்ள விஷயங்கள் என்னுடைய கருத்து மட்டுமே.. எந்த பாட திட்டத்தையும் குறித்தோ அல்லது பள்ளிகள் குறித்தோ  குறை சொல்லவில்லை 








3 comments:

வேகநரி said...

//இப்பெல்லாம் புது வகை நோய் தொத்தி இருக்கு மக்கள் கிட்ட..அது CBSE பள்ளியில தன் பிள்ளை படிக்குது...சமசீர் கல்வி பள்ளியில இல்லை..என்று சொல்லுவது. //

அப்படி சொல்வது தாங்க பெருமைக்குரிய தகுதியில் தாங்கள் உள்ளதாக தெரிவிக்கும் பாஷன்.

Unknown said...

Cannot talk about any specific IIT coaching, but in general IIT coaching is about understanding the concepts. Most school teachers I have come across do not understand the fundamentals themselves. Makes sense to start the IIT preparation from 8th. It has nothing to do with memorizing

Should the parent decide what kids should study is a different topic altogether, do not want to get into that

ஆரூர் பாஸ்கர் said...

என்னுடைய உறவினர் வீட்டில் ஆறாம் வகுப்பிலிருந்து அந்த IIT கோச்சிங்கை தொடங்கி விட்டனர்.

critical thinking எனும் விசயம் மாணவர்களுக்கு எப்படியோ CBSE ல்சொல்லிதரப்படுகிறது அல்லது கற்றுக்கொள்கிறார்கள் எனத் தோன்றுகிறது.