முட்டாள் என்பவர் யார். விஷயம் தெரியாதவர்களே முட்டாள் என்று ஒரு விளக்கம் சொல்லுவார்கள். பள்ளியை எடுத்து கொள்ளுங்கள், ஆசிரியர் ஏதாவது எளிய கேள்வி கேட்டு, அதற்கு நமக்கு பதில் தெரியவில்லை எனில், சரியான முட்டாள் என்று திட்டுவார். அதே போல நண்பர்களுடன் இருக்கும் போதும் சரி அலுவலகத்திலும் சரி, எப்போதும் யாரும் நம்மை முட்டாள் விஷயம் தெரியாதவன் என்று எண்ணி விடக்கூடாது என்று நினைத்து நினைத்தே நாம் செயல்படுவோம்.
இந்த குணம் இந்தியர்களிடம் அதிகம் இருப்பதாய் உணர்கிறேன். அதாவது, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை எனில் எனக்கு தெரியாது என்று ஒத்து கொள்ளுவது. அதற்கு பதில், அதனை பற்றி தெரிந்தது போல காட்டி கொள்ளுவது. உதாரணமாக, நீங்கள் ஒரு ஆபீஸ் மீட்டிங்இல் இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அங்கு ஒரு விஷயம் குறித்து விவாதிக்க பேசுகிறார்கள் என்று வைத்து கொள்ளுவவோம், அந்த மீட்டிங்கில் நிறைய இந்தியர்கள் இருப்பின், நீங்ககவனித்து பாருங்கள், அதில் இருக்கும் எத்தனை இந்தியர்கள் தனக்கு விஷயம் தெரியாது இனிமே தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்று உண்மையை ஒத்து கொள்ளுகிறார்கள். மிக மிக சொற்பனமானவர்கள் மட்டுமே.. பலர், அதனை பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும், எனக்கும் ஏதோ தெரியும் நானும் முட்டாள் இல்லை என்று காட்டி கொள்ளுவார்கள்.
சொல்லப்போனால், நானும் கூட எங்கே நமக்கு விஷயம் தெரியாது என்று நினைத்து மட்டம் தட்டி விடுவார்களோ என்று பயந்து தெரியாத விஷயத்தையும் தெறி தெரிந்தது போல சில நேரங்களில் முன்பு நடந்ததுண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் யாராவது நேரடியாகவே என்னை முட்டாள் என்று திட்டினால் கூட அப்படியா, நன்றி என்று சொல்லி விடுகிறேன் என்பது வேறு கதை.
சரி என்னுடைய கதை இருக்கட்டும். என்னுடன் வேலை பார்க்கும் சிலர் தனக்கு தெரியாமல் ஏதாவது இருந்தாலும் என்ன எது என்று கேள்வி கேட்டு பதில் தெரிந்து கொள்ளாமல், தனக்கு அதனை பற்றி தெரியும் என்று கதை விடுவதை பார்த்து இருக்கிறேன். அதுவும் நிறைய இந்தியர்கள் இதனை போல செய்வதை கண்டு இருக்கிறேன்.
எனக்கு சமீபத்தில் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது. புது ப்ராஜெக்ட் ஒன்றில் வேலை செய்ய நேர்ந்தது. அந்த ப்ராஜெக்ட் குறித்து தெரிந்த சிலரிடம் இருந்து தெரியாத சிலர் KT செய்ய வேண்டும். அறிவு பரிமாற்றம், என்பது தெரியாத விசயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுவது. ஆனால், நடந்தது காண சிரிப்பாக இருந்தது. ப்ராஜெக்ட் குறித்து தெரியாத ஒரு சிலர், எதோ தனக்கு எல்லாம் தெரியும் என்று பயங்கர சீன் போட்டு தான் பெரிய அறிவாளி என்று பாஸ் முன்பு படம் காட்டி கொண்டு இருந்தனர். பின்னர் மீட்டிங் முடிந்தவுடன், அதாவது பாஸ் யாரும் அருகில் இல்லாத போது , என்னிடம் வந்து இதனை எப்படி செயல் படுத்துவது என்று ரொம்ப ரொம்ப பேசிக் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர். "நீ வாங்குற அஞ்சு பத்து காசுக்கு எதுக்கு இந்த விளம்பரம்" என்ற கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வந்தது.
சரி எதுக்கு இப்போ இதை பத்தி எழுதுறேன் அப்படின்னா, இரண்டு காரணம். முதல் காரணம் இது தான். சிறு வயதில் நிறைய கார்ட்டூன் புத்தகங்கள் படிப்பதுண்டு. இப்பொழுது கூட ஒரு சில காமிக் ஸ்ட்ரிப் படிப்பது பிடிக்கும். அதுவும் அன்றாட ஆபீஸ் விஷயங்களை நக்கல் அடிப்பதில் பெஸ்ட் ஆக
இருக்கும் "DILBERT" கார்ட்டூன் ரொம்ப இஷ்டம். அவரின் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. "The Dilbert Principle" என்ற புத்தகம். அதுவும் அதன் கதாசிரியர் Scott Adams பப்லிக் ஆக "நான் ஒரு முட்டாள் எனக்கு கார்ட்டூன் மட்டுமே வரைய தெரியும், ஆனால் என்னையும் நம்பி ஒருத்தர் புக் பப்லிஷ் செய்திருக்கிறார். அதனால் ஏதானும் தவறாய் இருந்தால் சாரி " என்று தன்னை பற்றி அறிமுகம் செய்கிறார். இவரே முட்டாள்னா, நானெல்லாம் அடி,அடி,அடி முட்டாளுங்கோ..
Photo from Google images
இரண்டாவது விஷயம், ஹி, ஹி,ஹி.. நிறைய அறிவு ஜீவிங்க படம் பார்த்துட்டு இது சரியான பப்படம் பா.. அப்படின்னு விமரிசனம் செய்த "கபாலி" நான் பார்த்துட்டேங்க.. குட் பெலோஸ், காங்ஸ் ஆப் நியூயார்க் போல ஒரு காங்ஸ்டர் படம் பார்த்த திருப்தி. ரொம்ப சாதாரணமா கதைக்கு தகுந்தாற் போல பொருந்தி ரஜினி. டூயட் பாடாமல், அதிகம் பஞ்சு டயாலக் பேசாமல் நல்லா நடித்த ரஜினி பார்க்க நேர்ந்தது. முதல் நாள் முதல் ஷோ என்று சென்று 25$ செலவழிக்காமல் 4 நாட்கள் கழித்து சென்றதால் 10 $ சேமிக்க நேர்ந்தது. அதோடு, கூட்டமும் அதிகம் இல்லாமல் காண நேர்ந்தது.
அதனால், நானும் ஒரு முட்டாள் தானுங்கோ!
டிஸ்கி
இன்னைக்கு டிஸ்கிக்கி லீவு..
யாரும் வந்து படம் நல்ல இல்லைன்னு திட்டாதீங்கப்பா.. இது என்னோட வியு மட்டுமே.

1 comment:
Thanks for introducting the book The Dilbert Principle. Surprised you liked the movie completely. :)
Post a Comment