Friday, December 2, 2016

கலவை- ரசித்த, படித்த, பார்த்த, நொந்த நிகழ்வுகள்

நிறைய ரசித்த சின்ன சின்ன விஷயங்கள் நிறைய உண்டு, அவற்றை எல்லாம் தனித்தனி பதிவுகளாக எழுத முடியாது என்பதால், கலவையாக தொகுத்து வழங்கலாம் என்ற சிறு எண்ணம் வந்ததால் இது ஒரு கலவை பதிவு.

முதலில் சில  பாசிட்டிவ் விஷயங்கள்

மேற்கோள்  (quote)


“Think of it this way: There are two kinds of failure. The first comes from never trying out your ideas because you are afraid, or because you are waiting for the perfect time. This kind of failure you can never learn from, and such timidity will destroy you. The second kind comes from a bold and venturesome spirit. If you fail in this way, the hit that you take to your reputation is greatly outweighed by what you learn. Repeated failure will toughen your spirit and show you with absolute clarity how things must be done.” 
― Robert GreeneMastery


எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர் ராபர்ட் கிறீன் அவர்களின் மேற்கோள் இது. தமிழாக்கம் செய்ய வேண்டும் என்றால், இதோ.

வாழ்க்கையில்இரண்டு வகையான தோல்விகள் உண்டு. முதல் தோல்வி பயம் காரணமாக ஒரு செயலை செய்யாமலே ,எங்கே செய்தால் தோல்வி வந்து விடுமோ,  என்று பயந்து நல்ல நேரம் பார்த்து காத்திருக்கும் மக்கள் சந்திக்கும் தோல்வி.

இரண்டாவது தோல்வி, துணிவுடன் ஒரு செயலை செய்து அந்த செயல் கொடுத்த தோல்வி. இந்த வகை தோல்வியில் நீங்கள் கற்றது அதிகம் இருக்கும் , அடுத்தடுத்த  முறை தவறு செய்து  தோல்வியில் முடிந்தாலும், திரும்ப முயற்சி செய்ய தெம்பு வரும்.

இதே "முயற்சி திருவினையாக்கும்" என்ற சொற்பதம்.

 இதனை தற்போது ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு தெரிந்தே பலர் நல்ல பிளான் செய்து வைத்திருந்தும், நேரம் காலம் சரியில்லை, இது சரி இல்லை அது சரியில்லை என்று சொல்லி சொல்லியே பல விஷயங்களை தள்ளி போட்டு கொண்டே இருப்பதை காண்கிறேன்.  என்னுடைய நெருங்கிய சொந்தத்தில் கூட இது நிறைய நடக்கிறது. எதற்கெடுத்தாலும் ஜாதகத்தை தூக்கி கொண்டு ஜோசியரிடம் சென்று, அல்லது தானே ஜோசியம் பார்த்து கொண்டு, "எனக்கு இன்னும் நல்ல நேரம் வர நாளாகும். அப்ப பாருங்க நான் எவ்வளவு பெரிய ஆளா வர்றேன்னு" என்று சொல்லி கொண்டு சிலர் திரிகிறார்கள். ஒரு விஷயத்தை தொடங்காமலே எங்கே தோற்று விடுவோமோ என்று பயந்து தள்ளி போடுதல், எல்லாமே இருந்தும் எங்கே செத்து போய் விடுவோமோ என்று பயந்து சாப்பிடாமல் இருக்கும் ஒருத்தனை போன்றது.

இதற்காக எந்த பிளானும்  செய்யாமல் விஷயங்கள் செய்வது என்று அர்த்தம் இல்லை. ஏனெனில் இன்னொரு  எஸ்ட்ரீம் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் பிளான் செய்யாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்கிறவர்கள். இந்த வகை மக்கள் முதல் வகை மக்களுக்கு நேர் எதிர்.

சரி அடுத்த விஷயம்

கேட்டது

நிறைய பாடல்கள் கேட்பது பிடிக்கும் என்றாலும், எப்போதும் காலையில் ஆபீஸ் போவதற்குள் கேட்பது லங்காஸ்ரீ FM . UK வில் இருந்து ஒலிபரப்பாவதால் எங்கள் காலை நேரம் என்பது கூல் 7 பாடல்கள் என்ற நிகழ்ச்சி கேட்க சரியாக இருக்கும். 8கே ரேடியோ, தமிழ் குயில் இப்படி பல பல தமிழ் ரேடியோக்கள் வந்தாலும் எனக்கென்னவோ காலையில் எழுந்தவுடன் கேட்க இந்த ரேடியோ பிடித்திருக்கிறது. அதற்காக மற்றவை நல்லா இல்லை என்று சொல்லவில்லை. ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மணித்தியாலத்தின் முதல் பாடல், மணித்தியாலத்தின் காதல் கீதம். என்று மிக சுவாரசியமாக நகர்த்தி கொண்டு போகிறார்கள். காலையில் நான் கேட்பது 1-2 மணி மட்டுமே, அந்த நேரமும் மிக சுவாரசியம் ஆக இருக்கிறது.


 படித்தது, பார்த்தது 


முகுந்த் பள்ளியில் ப்ராஜெக்ட் ஒன்றுக்காக கடலின் பல அடுக்குகள் பற்றி தேட படிக்க நேர்ந்தது. படிக்க படிக்க மிக மிக சுவாரசியமான அது, நம்முடைய பூமியின் அற்புதத்தை எண்ணி வியக்க வைத்தது.  சிறு அதனை குறித்த சிறு தொகுப்பு இங்கே.

கடல் மொத்தம் 4 அடுக்குகள் கொண்டது. 1. sunlight zone , 2. twilight zone , 3. midnight zone கடைசியாக 4. The Abyss கடைசி லேயர் என்பது சூரிய ஒளி சுத்தமும் இல்லாத ஒரு அடுக்கு. அங்கே வாழும் உயிரினங்கள் சூரிய ஒளி இல்லாமல் வாழ தகவமைத்து கொண்டிருக்கின்றன.
தானாக ஒளியை உண்டாக்கும் சில உயிரினங்கள் இருக்கின்றன. இன்னும் சில அங்கே இருக்கும் வெந்நீர் நீர் ஊற்றுக்கள் அல்லது கடலடியில் இருக்கும் எரிமலைகளில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை வைத்து உயிர்வாழ்கின்றன.

Abyss அடுக்கில் இருக்கும் விலங்குகள் குறித்த ஒரு வீடியோ காண நேர்ந்தது.



என்ன ஒரு அற்புதமான மாடல் இது. இது என்னை பொறுத்த வரை மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில், ஜுபிடர் /வியாழன் கிரகத்தின் நிலவான ஐரோப்பா வில், நீர் ஊற்றுக்கள் இருப்பதை படம் பிடித்து இருக்கிறது ஹபிப்ல் தொலைநோக்கி. அப்படி கடலடி நீர் ஊற்றுக்கள் இருப்பின், பூமியில் இருக்கும் கடலடி உயிரினங்கள் போல அங்கேயும் இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.



photo from https://www.nasa.gov/press-release/nasa-s-hubble-spots-possible-water-plumes-erupting-on-jupiters-moon-europa


நொந்தது

ஏற்கனவே நான் அமெரிக்க தேர்தல் குறித்து அதன் முடிவு குறித்த என்னுடைய பயத்தை எழுதி இருந்தேன், "God save us" என்று. நான் என்ன நினைத்து பயந்தேனோ அது நடக்க ஆரம்பித்து இருக்கிறது. ஏற்கனவே, வெள்ளை மக்கள் மற்ற மக்களை விட தங்கள் உசத்தி என்ற எண்ணம் பரவலாக உண்டு இங்கே. அது வெளியே தெரியாமல் இது வரை இருந்திருக்கிறது என்று தற்போது எண்ண  தோன்றுகிறது. டிரம்ப் அவர்களின் செலக்ஷன்க்கு பிறகு, "நான் வெள்ளை" நான் உசத்தி என்ற எண்ணத்தை மக்கள் அப்பட்டமாக வெளிக்கொணர ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்க்கு சமீபத்திய உதாரணம். ஒரு வெள்ளை அம்மா, தான் கறுப்பின பெண்ணால் அவமானப்படுத்த பட்டதாக ஒரு கடையில் நின்று பெரிய கூச்சல்  போட்டு, தேவையே இல்லாமல் " நான் டிரம்ப் க்கு ஓட்டு போட்டேன், அதனால் உனக்கு என்ன போச்சு" என்பது போல பல கீழ்த்தரமான வார்த்தைகள் பேசி சண்டை போடும் ஒரு வீடியோ காண நேர்ந்தது.


மண்ணின் மைந்தன் நான் என்ற கொள்கை எல்லாம் அமெரிக்காவை பொறுத்தவரை கிடையாது. ஏனெனில் அமெரிக்காவின் உண்மையான மண்ணின் மைந்தர் எல்லாம் "சீரோக்கீ, க்ரீக்  போன்ற பூர்வாங்க குடி மக்கள்" அவர்களை எல்லாம் கொன்று, நாடுகடத்தி எல்லா கஷ்டங்களையும் கொடுத்து வெளியேற்றிய பிறகு, இங்கே வந்து குடியேறிய ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்கள், தாங்கள் மண்ணின் மைந்தன் என்று சொந்தம் கொண்டாடுவது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.

God save us


டிஸ்கி
இது நான் ரசித்த விஷயங்களை கோர்த்து எழுதியது மட்டுமே. யாரையும் குறிப்பிடவில்லை. யாரையும் , எதையும் சப்போர்ட் செய்யவில்லை.

நன்றி.

2 comments:

Avargal Unmaigal said...



இந்த வீடியோவில் உள்ள சண்டை போடுவது போல எல்லா இடங்களிலும் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன வெள்ளை இனத்தவர்கள் மட்டுமல்ல கருப்பு இனத்தவர்கள் ஏன் இந்திய பெண்மணிகள் கூட இப்படிதான் சண்டை போடுவார்கள் தாங்கள் எதிர்பார்த்த டிஸ்கவும்ட் கிடைக்கவில்லை என்றால் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் அதிலும் விற்பனையாளர் வேறு இனத்தவராக இருந்துவிட்டால் இப்படிதான் சண்டைகள் நடக்கும் இப்படிபட்ட கஸ்டமர்கள் கார்பொரேட் ஆபீலில் புகார் கொடுத்தாலும் வேலைபார்ப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள் காரணம் கஸ்டமர் சைக்லாஜி தெரிந்தவர்கள் அனைவரும் அதனால் அப்படியா நாங்க்ள் ஆகக்ஷன் எடுக்கிறோம் என்று சொல்லி வழக்கமான வேலையை பார்க்க போய்விடுவார்கள் இப்படிபட்ட நிகழ்வுகள் தினம் தினம் நடக்க கூடியதுதான்

Unknown said...

Most OF THE Ladies throughout the world often undergo depression in one form or other So such incidents are not uncommon.. husbands children old parents/inlawas
do undergo the outbursts of their ladies silently...
all shopkeepers know about women... they silently ignore their complaints....