சில வருடங்களுக்கு முன்பு, சோசியல் மீடியா குறித்தும், பிரைவசி குறித்தும் அது எப்படி நம்முடைய பர்சனல் வாழ்வில் தலையிடலாம் என்பது குறித்தும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்.
நான் என்னென்ன குறிப்பிட்டேனோ அது நடந்து விட்டிருக்கிறது. முகநூலில் உங்களை குறித்த விஷயங்களை சேகரித்து, உங்களுடைய பர்சனல் விஷயங்களை வேறொரு கம்பெனியிடம் விற்று, உங்களையே டார்கெட் செய்து மார்க்கெட் செய்து இருக்கிறார்கள். அதுவும் அமெரிக்க தேர்தலில் இது ஒரு பெரிய வித மார்க்கெட்டிங் உத்தியாக உபயோகப்படுத்த பட்டு இருக்கிறது. நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று மார்க் ஸுகேர்பேர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் போனது போனது தானே.
இதனால் என்னங்க பிரச்னை என்று கேட்பவர்களுக்கு.. நீங்கள் என்ன சாப்பிடுவது, என்ன பார்பது என்ன உடை அணிவது, என்ன கேட்பது, என்ன என்ன செயல்கள் செய்வது, என்று ஒன்று விடாமல் உங்களை குறித்த ப்ரொபைலிங் நடக்கிறது. உங்களை குறித்து அறிந்தபிறகு, உங்களுக்கு தேவையான பொருட்கள், வீட்டிற்கே வந்து மார்க்கெட்டிங் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங் இப்போது எல்லா இடங்களிலும் கொடி கட்டி பறக்கிறது. உங்களுக்கு தேவையானதை, மற்றொருவர் முடிவு செய்வார். உங்களுக்கு என்று சுயம் ஓன்று இல்லாமல் போகும்
இப்பொது, கூகிள் ஹோம், அலெக்சா, சிறி என்று பல பர்சனல் அசிஸ்டென்ட் ஆப் கள் இருக்கின்றன. அதுவும் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொரு நிமிடமும், உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று டேட்டா கலெக்ட் செய்து அனுப்புகின்றன. இதனால், நீங்கள் பொது வெளியில் என்ன செய்கிறீர்கள் என்பதை விட, வீட்டில் என்ன என்ன செய்கிறீர்கள் என்று உங்களை முழுக்க ப்ரொபைல் செய்கிறார்கள்.
அப்படி செஞ்சா என்ன பிரச்னை ஆகப்போகுது..விடுங்க என்பவர்களுக்கு, இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் எப்படி ரோபோக்கள் பல வேலைகளுக்கு மனிதர்களை விட பயன்படுத்த பட்டிருக்கும் என்ற மார்க்கெட் வாட்ச் செய்தி மற்றும் படம் இங்கே.
இதில் என்ன குறிப்பிட படுகிறது என்றால், மூளையை உயோகிக்காமல் செய்யப்படும் பல வேலைகளை ஆட்டோமேஷன் செய்து விடுவார்கள். முதல் உதாரணமாக, சூப்பர்மார்கெட் செல்கிறீர்கள் என்றால், அங்கே பில் போட என்று இருக்கும் மக்கள் இனிமேல் இருக்க மாட்டார்கள். அதற்க்கு பதில் ஆட்டோமேட்டிக் ஆக நீங்கள் பில் போடா முடியும். ஏற்கனவே, ஆட்டோமேட்டிக் செக்கின் என்று பல கடைகள் வந்துவிட்டன, இன்னும் சில வருடங்களில் இந்த வேலை எல்லாமே இருக்காது. அந்த வேலை மட்டுமே செய்த தெரிந்த பலருக்கு வேலை இழப்பு ஏற்படும்.
சரி இதற்கும் உங்களை பற்றிய ப்ரொபைலிங் என்பதற்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு? ப்ரொபைலிங் செய்வதன் மூலம் உங்களுடைய முழு விவரமும் அவர்களுக்கு தெரியும். அந்த விவரங்களை ஒரு AI /அர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு படிமுறை மூலம் படிப்படியாக கம்ப்யூட்டர் உங்களை பற்றி கற்றுக்கொள்ளும்.
இது எப்படி ஒரு குழந்தை சிறுவயதில் இருந்து கற்றுக்கொள்கிறதோ, அதனை ஒத்தது. சரி கற்று கொண்டு என்ன ஆகபோகிறது, என்றால். நீங்கள் செய்யும் வேலையும் கம்ப்யூட்டர் செய்கிறது எனில் அதுவும் நீங்கள் செய்யும் வேலை வெறும் உடல் உழைப்பு சார்ந்தது எனில், மனிதர்கள் வேலைக்கு எடுக்க மாட்டார்கள், பதிலாக, கம்ப்யூட்டர் அல்லது ரோபோக்கள் வேலைக்கு எடுக்கப்படும்.
இப்படி மனிதர்கள் அல்லாத ரோபோக்களை வேலைக்கு வைப்பது அவர்களுக்கு சௌகரியம். PF,பஞ்சபடி, மாதாமாதம் சம்பளம், இன்சூரன்ஸ், என்று எதுவும் கொடுக்க தேவை இல்லை. வேலையில் நேரும் குற்றங்கள் நிறைய இருக்காது. சப்போர்ட் வேலைகள் எல்லாமே கம்ப்யூட்டர் செய்துவிடும். ஆட்டோமேட்டிக் மெஸேஜ் போல, தற்போது ஆட்டோமேட்டிக் டெல்லர் வந்து விட்டது. இதனால் BP வேலை செய்யும் பலருடைய வேலை போகும்.
உங்களை பற்றி தெரிந்து கொண்டு உங்களையே வேலையை விட்டு தூக்கலாம், அதற்க்கு உங்களுடைய ப்ரொபைல் பயன்படுத்தலாம். உங்களுடைய கிரெடிட் கார்டு, SSN போன்றவற்றையே சேகரித்து உங்கள் பெயரில் வேறொருவர் லோன் வாங்கலாம். இல்லை பொருட்கள் வாங்கலாம். எங்கும் டேட்டா செக்யூரிட்டி என்று எதுவும் இருக்க போவதில்லை. இவர்கள் சேகரிக்கும் டேட்டா பாதுகாக்கப்படும் என்று யாரும் உறுதி கொடுக்க போவதில்லை. நாமே சென்று எதிர் இந்த நிலைக்குள் விழ வேண்டும். சிந்திப்போம்.
நன்றி.
References
http://www.foxnews.com/tech/2018/03/21/facebook-ceo-zuckerberg-breaks-silence-on-data-scandal-dont-deserve-to-serve-without-security.html
https://www.marketwatch.com/story/this-chart-spells-out-in-black-and-white-just-how-many-jobs-will-be-lost-to-robots-2017-05-31
- உங்களை சுற்றி பின்னப்படும் பரிந்துரை என்னும் மாயவலை!
- Facebook ம் ப்ரைவசியும் பெண்களும்
- காசு, பணம் துட்டு, மணி மணி !

3 comments:
உண்மை தான். நீங்க சொன்னது நடந்திருக்கிறது.
//உங்களை பற்றி தெரிந்து கொண்டு உங்களையே வேலையை விட்டு தூக்கலாம்// Yes, these are happening very quickly..
மிக நன்றி
affiliate marketing
Post a Comment