இந்த பதிவுக்கு ஆடு வெட்டாம ஆட்டுக்கறியும், ஹீலா செல்களும்!! என்று தான் தலைப்பு வைக்கணும்னு நினைச்சேன், ஆனா, ஹீலா செல்கள் "கான்செர் பேஷண்ட்" என்பதால் நெகடிவ் பதம் வந்து விடும் என்று மாற்றி வைத்து விட்டேன்.
இதென்ன!!,மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதா? என்ன சொல்லுறாங்க! என்றுகேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்
"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".
எப்படி செய்கிறார்கள்
"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது
எதற்க்காக செய்கிறார்கள்
மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோ, மனிதர்களிடமோ செய்வதற்கு முன், உயிரின செல்களிடம் செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்றுகாண்பர். இதனை போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும்பரிசோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர் ஒருவரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்
இதனை சார்ந்த புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது "கிளீன் மீட்" எப்படி இனிமேல், ஆட்டுக்கறி மாட்டு கறி உற்பத்தி இருக்க போகிறது என்பது குறித்த விளக்கம் இதில் இருக்கிறது.
"என்ன தலையும் புரியல வாலும் புரியல ?"என்பவர்களுக்கு, என்னுடைய முந்தைய பதிவான "
ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்" இல் இருந்து சில பகுதிகள்.
"மருத்துவ ஆராய்ச்சி உலகில் இருக்கும் அனைவருக்கும் HeLa என்ற பெயர் மிகவும் பரிச்சயமாகஇருக்கும். HeLa என்பது அழியாத மனித செல் லைன் என்று சொல்வார்கள். பொதுவாக மனிதசெல்கள் உடம்புக்கு வெளியே வளர்ப்பது 1951 வரை மிக மிக கடினமானது என்று கருதப்பட்டது. அவற்றை எல்லாம் முறியடித்து உடம்புக்கு வெளியேயும் செல்கள் வளர முடியும் என்று நிரூபித்ததுHeLa செல்கள் மட்டுமே.
இதென்ன!!,மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதா? என்ன சொல்லுறாங்க! என்றுகேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால்
"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".
எப்படி செய்கிறார்கள்
"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது
எதற்க்காக செய்கிறார்கள்
மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோ, மனிதர்களிடமோ செய்வதற்கு முன், உயிரின செல்களிடம் செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்றுகாண்பர். இதனை போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும்பரிசோதனை என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர் ஒருவரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்
முதன் முதலில் ஆராய்ச்சி துறைக்கு நான் வந்த பொழுதெல்லாம் HeLa செல்களில் இந்த ஆராய்ச்சி நடந்தது, அந்த ஆராய்ச்சி நடந்தது என்றெல்லாம் பலர் கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் HeLa செல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் "HeLa is a immortal cell line" அதனை தவிர வேறொன்றும் யாருக்கும் தெரியாது.
சமீபத்தில் "The immortal life of Henrietta Lacks" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.
ஹீலா என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர்செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.

போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை மருந்துகளும் முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில் தான். சொல்லப் போனால் ஒருபுது மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள்உருவாக்கி இருக்கின்றன. இன்னும் கூட பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...
ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய்புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடையஉடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரியஇண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும்அறிந்திருக்க வில்லை.

"
நிற்க, சரி இப்பொழுது எதற்கு ஹீலா செல்களை பற்றியும், ஆட்டு கறி பற்றியும் குறிப்பிடுகின்றேன் என்றால், எப்படி ஹீலா செல்களை பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்தார்களோ, அதே போல, மற்ற விலங்குகள் செல்களையும் பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்து ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், ஏன் இதை பிசினெஸ் ஆக செய்ய கூடாது என்று பிசினெஸ் முதலாளிகள் நினைத்ததன் விளைவாக, தற்போது பல பல கம்பெனிகள் இதனை ஒரு பிசினிஸ் ஆக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் "க்ளீன் மீட்". "மெம்பிஸ் மீட், சூப்பர் மீட்" என்று பல பல கம்பெனிகள் இந்த பிசினெஸ் இல் இருக்கிறார்கள்.
அதாவது சின்ன பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்ப்பதற்கு பதில், பெரிய, அல்லது இண்டஸ்ட்ரி லெவல் உற்பத்தி செய்வது. இதன் மூலம், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி அனைத்தும் லேபில் உற்பத்தி செய்யப்படும். அதன் சுவை மாறி இருக்கிறதா என்று நிறைய டேஸ்ட் டெஸ்ட் நடத்தி இருக்கிறார்கள்.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இனிமேல் கடைக்கு சென்று கறி வாங்கும் போது அது உண்மையிலேயே ஒரு ஆடு மாடு வெட்டி வர்ற கறியா, இல்லை லாபில் வளர்த்த கறியா என்று தெரியாது என்பது உண்மை.
நன்றி.
2 comments:
Thanks for sharing. Very interesting information.
//Just as we need clean energy to compete with fossil fuels, clean meat is poised to become a competitor of factory farms// See their marketing strategy. :)
இப்போ தான் ஹீலா ஹீலா செத்தும் கொடுத்தார் என்ற உங்க பதிவை படித்தேன். மிகவும் தகவல்கள் கொண்ட பதிவு.
மாட்டு இறைச்சி என்று அழுகிய இறைச்சியை அயல் மானிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விற்பனை செய்கிறார்கள் என்ற செய்திகளே அதிகம் வருகிறது.அதில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கு இந்ததிட்டம் உதவி செய்யலாம்.
தமிழகத்தில் மாட்டுகறி திருவிழா நடத்துபவர்களுக்கும் ஒரு அருமையான நல்ல செய்தி.
Post a Comment